29


தேய்ந்திட்ட தேகமே சொல்கிறது
வாட்டிடும் வறுமையின் நிலையை !
வளைந்திட்ட எலும்புகள் சொல்கிறது
வாழ்ந்திடும் வாழ்வின் நிலையை !

மண்ணிலே ஏனிந்த மாறுபாடு
கண்ணிலே தெரியுதே வேறுபாடு !
ஏழ்மையே காணாதவர் ஒருபுறம்
ஏங்கிடும் உணவிற்கோ மறுபுறம் !

உடுத்திட துணியில்லை இவர்களுக்கு
கொடுத்திட மனமில்லை காண்போர்க்கு !
தடுத்திட வழியில்லை தரணியில்தான்
தாங்கிட இதயமுமில்லை நமக்குத்தான் !

வறுமையை ஒழிக்க வழிவகுக்கவில்லை
வாங்கிய சுதந்திரமும் பயன்படவில்லை !
முனைந்தோர் பலரும் முடங்கிவிட்ட்டனர்
முழங்கியோர் மூச்சின்றி அடங்கிவிட்டனர் !

பாடசாலை செல்வோர் சாலையோரத்தில்
பாதையறியா பாலகர் வாழ்வின்ஓரத்தில் !
வறுமையின் விளிம்போ வீதியோரத்தில்
வழிந்தோடுது வருத்தம் விழியோரத்தில் !

இணையுங்கள் இதயங்களே இதற்காகவே
வழிகாணுங்கள் வறுமையை ஒழித்திட !
சிந்தியுங்கள் நிந்திக்காமல் எவரையும்
ஏழ்மையை நிரந்தரமாய் அழித்திடவே !   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top