26


​இதயத்தில் கசிகிறது குருதியும்
இக்காட்சி தனைக் கண்டதும் !
தலைமுறை மூன்றும் இங்கே
தத்தளிக்கும் நிலை வாழ்விலே !

ஏனிந்த பாகுபாடும் பிறப்பினில்
ஏழைகள் எனும் பிரிவுமிங்கே ! ​
பெற்றவளை பெற்றவளே தள்ளிட
பெற்றவை புரியாமல் விழிக்குது !

குறுக்கு வழியில் குவித்திடும்
குறுநில மன்னர்கள் புவியிலே !
ஒருபிடி சோற்றுக்கு தவித்திடும்
ஒடுங்கிய மனிதரும் மண்ணிலே !

அளவிலா செல்வமோ அகிலத்தில்
அன்பிலா மக்களிடம் பெருகுது !
அரைவயிறும் நிரம்பிட வழியிலா
அல்லலுறும் உயிர்களோ வீதியில் !

இன்னலை அறிந்திடும் இதயமுளோர்
இயன்றவரை உதவிடுக உள்ளவரை !
ஏழ்மையெனும் அரக்கனை அழித்திட
ஏதேனும் ஒருவழியினை கண்டிடுக ! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top