25
அதுவொரு புழுதிக்காடு அசுரப்பலத்தோடு சுழன்றுவரும் காற்றுக்குள்
சிக்கிய உயிராய் சிதறுகிறது அவள் வாழ்வும்...!
கள்ளிச் செடிகளில் முள்ளைக் கிள்ளிவிட்டு பிள்ளையவனுக்கு
செழித்தபழம் தின்றகதை மொழிவாளவள்...!
பொட்டல் காட்டில் மழைவேண்டி நடக்கும் பூஜைகளில் பூசாரியின் முகம்கண்டு புதைந்து கொள்வான், அவள் சேலைக்குள் பலநேரம்
அச்சிறுவன்...!
மண்ணை நம்பி புண்ணியமில்லையென அயல்நாடு சென்று புயலான வாழ்விற்குள் கொஞ்சம் பணமோடு மிஞ்சி வந்தான், அவள் கணவன்...!
"கண்ணுக்குள் ஏதோ மின்னுகின்ற வெளிச்சத்தால்" ஆழ்துளை கிணறு தோண்டி கீழ்நிலை கடந்தேற சூழ்நிலை உருவாக்கி உழவுக்குள் மீண்டும்
உழல முயன்றானவன்...!
வட்டுருட்டித் திரியும் வயதில் சுட்டிப் பயலவன் எட்டிப்பார்க்க முயன்று
சட்டெனக் குழிக்குள் விழ...!
ஆழ்துளைக் கிணறே அச்சிறுவனுக்கு மரணக்குழியாயிற்று...?
மூடப்படாத குழி மூடியது, ஏழையின் வாழ்வை...?
கண்கெட்டபின் சூரியபார்வைத் தேடி சுழலுகிறது அரசும்...?
ஆனாலும் ஆங்காங்கே தோண்டப்படுகின்றன சவக்குழிகள்,
தொடர்கின்றன மரணங்கள்...?
எப்போதும் போல் எள்ளி நகைக்கும் எமனின் ஏளனத்தை
எவர் மாற்ற......!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top