உணர்வுகள்


பல நேரங்களில்
கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாக
வெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ...
கவிதையாய் உணர்வுகள்.....!

உணர்வுகளின் உச்சத்தில்
கண்மணிகள் தாரைவார்க்கும்
முத்துக்களே கண்ணீர்!!!!  

அதீத இன்ப துன்பத்தில்
வார்த்தை குவியா இதழ்களுக்குப்பதில் ....
விடை சொன்னனது
வெள்ளமாய் விழி வழி பாய்ந்த கண்ணீர் !!!!!!!!

நேசமான உள்ளத்தில் சிந்தும் கண்ணீர் கூட எம்மை கொல்லும்...! 

நீ என் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாய்..

நான் உன் கை கோர்த்து ஆறுதல் உரைத்தேன்!
உன் தோளை தட்டி கொடுத்தேன்!
நீ என்னை திரும்பி கூட பார்க்க வில்லை

நான் உன் அழுகையை நிறுத்த என்ன செய்யலாம் என யோசித்த
நிமிடம்.. நீ எழுந்து போன போது தான் தெரிந்தது

"நீ இருந்தது என் கல்லறை அருகில் என்று "

நம்புகிறேன் கடைசி தாண்டியும் 

நீ நம் நினைவுகளுடன் இருப்பாய் என்று......!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #poetry