6

"ஏம்மா என்ன நடந்ததுன்னு ஒரு வார்த்தை விசாரிக்க முடியாதா? அவ்ளோ என்ன ஆத்திரம் கண்ணை மறைக்குது உங்களுக்கு? உங்க பசங்க தானே நாங்க என்ன சொல்ல வறோம்னு கூட கேட்க தோணலையா? உங்க இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டிங்க முதல்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா?" என்று நடந்தவைகளை கூறினான் கண்ணன்.

"அயோ என் பொண்ணை நம்பாம நானே ஏதேதோ பேசிட்டேனே?" என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

அறிவோ அவர் ஒருவர் அங்கே இருக்கிறார் என்பதையே கண்டு கொள்ளவில்லை.

“தம்பி மன்னிச்சுருங்க ஆத்திரத்தில் என்ன பேசுறோம்னு புரியாம பேசிட்டேன்.” கமலி என்று கைகள் கூப்பி கண்ணீருடன் அழைக்க.

“அத்தை! சரி விடுங்க. ஏதோ கோவம் பேசிட்டிங்க. நீங்க எதுவும் பயபடாதிங்க. எங்க வீட்ல எல்லோருக்கும் நான் அறிவை விரும்புறேன்னு தெரியும். எப்போ இங்க வந்து பேச சொல்வேன்னு எதிர் பார்த்துட்டு இருக்காங்க. அதனால் நான் பேசிக்கிறேன். அப்புறம் கண்ணன் சொன்ன மாதிரி அறிவு படிப்பு முடியற வரைக்கும் இங்கயே இருக்கட்டும். முறையா வந்து கூட்டிட்டு போறேன். ஏதோ தெரியாம நடந்துருச்சு. அவளை எதுவும் திட்டாதீங்க.” என்று அனைவரையும் ஒரு  முறை பார்த்துவிட்டு வெளியேற போனான் ஷிவா.

"ஒரு நிமிஷம்" என்றாள் அறிவழகி.

அப்படியே நின்றவன் திரும்பி அறிவழகியை பார்க்க, அவளும் அவனை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

என்ன செய்ய போகிறாள் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் யோசித்தபடி நின்றனர்.

உள்ளே சென்றவள், வேகமாக ஒரு பையை எடுத்து தன் புத்தகங்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

தன் கழுத்தில் காதில் இருந்த தங்க நகைகளை கழட்டி தந்தையின் கரத்தில் கொடுத்தவள்.

திரும்ப, "என்னடா இது? எதுக்கு என்கிட்ட தர?" என்றார் அவளின் தந்தை.

நேராக சிவாவின் முன் வந்து நின்றவள்,   "நீங்க என்னை விரும்புறதா சொன்னிங்க இல்ல?" என்றாள்.

எதுவும் பேசாமல் ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தான் ஷிவா.

"சரி. நான் இப்போ உங்க மனைவி தானே? இனி இங்க இருக்க எனக்கு விருப்பம் இல்லை... அதே போல் நீங்க வாங்கிக்கொடுத்த இந்த ட்ரெஸ மட்டும் தான் போட்டுட்டு வரேன். என்கூட வேரா எதுவும் எடுத்துட்டு வர முடியாது. ஒகேன்னா வரேன்.  உங்க வீட்டுக்கு இப்போ கூட்டிட்டு போக முடியாதுன்னாலும் பரவால்ல நல்ல ஹாஸ்டலா பார்த்து சேர்த்து விடுங்க. படிப்பு முடிய வரைக்கும் அங்க இருக்கேன்." என்றாள் முடிவாக.

அனைவருமே அவளின் ஒரு அதிர்ந்து நின்றனர்.

"அறிவு என்னடா பேசுற? நீ எதுக்கு போகணும்? நான் இருக்கேன்டா." என்றான் கண்ணன்.

"இல்லைன்னா என்னால உனக்கும் கெட்ட பேர். போதும். " என்றாள்.

"குட்டிமா. அப்பானான் இருக்கேன்டா. பீ எதுக்குடா வீட்டை விட்டு போகணும்?" என்று கேட்ட தந்தையிடம் வேற்று புன்னகையை உதிர்த்தவள்.

"என்னை என்ன வேணா திட்டிருக்கலாம் ரெண்டு அடிகூட அடிச்சுருக்கலாம். ஆனா, எப்போ பெத்த பொண்ணு மேலயே நம்பிக்கை இல்லாம பேச்சு வந்துச்சோ அப்போவே நான் இந்த வீட்டை பொறுத்த வரைக்கும் இறந்தவ தான். இவர் இல்லன்னாலும் நா வெளிய போய் ஹாஸ்டல்ல தங்கிருப்பேன். இப்போ எனக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சு. தடுகிற உரிமை யாருக்கும் இல்லை. என்ன, இப்போ என் புருஷன் இருக்கார் அதான் அங்க போகணும்னு சொல்றேன். நான் எங்க தங்கணும்னு முடிவு அவர் தான் எடுக்கணும்." என்று சிவாவை பார்த்தாள்.

"என்னடா பெரிய மனுஷி மாதிரி பேசுற? நீ எப்பவும் எனக்கு குழந்தை தான்டா."  என்றார் அவளின் தந்தை.

"உங்களுக்கு மட்டும் குழந்தையா இருந்தா போதுமா பா?" என்றாள்.

"அறிவு மா! அம்மாவ மன்னிச்சுடுடா... ஏதோ கோவத்துல பேசிட்டேன்." என்றார் அவளின் அம்மா.

"நா வெளிய வெய்ட் பண்றேன்." என்று சிவாவை பார்த்து சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள்.

எல்லோரும் பலத்த அதிர்ச்சியில் இருக்க ஷிவா தான்.

"கண்ணா அவ வெளில நிக்குறாடா. நா போய்ட்டு வரேன். கோபம் கொஞ்சம் குறைஞ்ச உடனே கூட்டிட்டு வந்து விடறேன். வரேன் டா." என்று வெளியேறினான் ஷிவா.

எதுவும் பேசாமல் கீழே அமர்ந்த அறிவின் அம்மாவை, "இப்போ உனக்கு திருப்த்தியாடி? காலைல நல்லா பேசிட்டு போன புள்ளை. இப்போ இனி இந்த வீட்ல இருக்க மாட்டேன்னு போய்ட்டா... அவளை இத்தனை வருஷம் வளர்த்துருக்கியே அவளை பத்தி உனக்கு தெரியாதா? எந்த ஒரு சின்ன விஷயத்தையாவது நம்மகிட்ட சொல்லாம செஞ்சுருக்காளா? அப்படி பட்டவ இப்படி செஞ்சுருப்பாளான்னு ஒரு நொடி கூடவா உன் மனசுக்கு தோணலை? எல்லாத்துக்கும் மேல அவ செய்யாத தப்புக்கு யாராவது பழிபோட்டா அவளுக்கு பிடிக்காது. அவங்க முகத்தைக்கூட திரும்பி பார்க்க மாட்டா. உனக்கு இது தெரியாதா? எதுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டு இப்படி என் பொண்ணை வீட்டை விட்டு துரத்திட்டயே? " என்று தன்னறைக்குள் நுழைந்து கொண்டார்.

எதுவும் பேசாமல் தனதறைக்குள் நுழைந்து கொண்டான் கண்ணன்.

என்ன செய்வது? எதை நினைத்து கவலை படுவது என தெரியாமல் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டசர் அவளின் அம்மா.

வெளியே வந்த ஷிவா அறிவை ஓரக்கண்ணால் பார்த்தபடி வண்டியை உயிர்பித்தான்.

எதுவும் பேசாமல் அமைதியாக ஏறி அவனின் மீது படாமல் கவனமாக அமர்ந்துகொண்டாள் அறிவு.

ஆழ்ந்த யோசனையில் வண்டியை செலுத்தியவன் ஒரு கோவில் முன் நிறுத்தி இறங்கினான்.

"வா" என்று உள் நுழைய அசையாமல் அதே இடத்தில் நின்றாள் அறிவு.

அவள் வராததை கண்டவன் அவள் கரத்தினை பிடிக்க போக, வேகமாக விலகி முறைத்தவள்.

"உன்கூட வந்துட்டா நீ சொல்றதுக்கெல்லாம் அடிபணிவேன்னு நினைக்காத. எல்லாத்துக்கும் மேல என் கிட்ட வரணும்னு நினைக்காத அது தான் ரெண்டு பேருக்கும் நல்லது." என்றாள் அறிவு தீயாய் முறைத்து.

அவளை அமைதியாய் பார்த்தவன்.
எதுவும் பேசாமல் கோவிலின் உள் செல்லவும் சில நொடிகள் கழுத்து அறிவும் உள்ளே சென்றாள்.

அவள் வருவதை பார்த்தவன், 'இதை தானே நானும் சொன்னேன். உள்ள வான்னு... ஒவர் திமிருடி உனக்கு..' என்றவன் மனதுக்குள் வசைபாட எதுவும் நடகாதது போல் விழிமூடி பிராதித்தாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love