4
"என்னடா எதுக்கு நிறுத்தின?" என்று புரியாமல் அவசரமாய் கேட்டான் கண்ணன்.
"ஒரு நிமிஷம் டா..." என்றவன் மூச்சை உள்ளிழுத்து விட்டபின்.
“கண்ணா! உனக்கே தெரியும் நான் உன் தங்கையை ரெண்டு வருஷமா விரும்புறேன்னு. அவ படிப்பு முடியற வரைக்கும் நான் காத்திருக்கணும்னு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக அவகிட்ட என் காதலை சொல்லாமயே தள்ளியிருந்து அவளுக்கு தெரியாம பார்த்துட்டு இருக்கேன்.
உனக்கு புரியுதா இல்லையா? சாய்ந்திரத்துல இருந்து அறிவை காணாம ரோட் ரோடா நாய் மாதிரி ரெண்டு பேரும் தேடிருக்கோம். அவளை மிஸ் பண்ணிட்டேனனோன்னு ஒவ்வொரு நிமிஷமும் உள்ளுக்குள்ள செத்துட்டு இருந்தேன்.
அவ குரலை கேட்ட பின்னாடி தான் உயிரே வந்துச்சு. இனி எந்த காரணத்துக்காகவும் நான் அவளை இழக்க விரும்பலை. இவ்ளோ நேரம் நா அமைதியா இருக்கிறதே பெருசா இருக்கு. இப்பவும் என்னால அவளை பார்க்காம சும்மா இங்கயே நின்னுட்டு இருக்க முடியாதுடா... ப்ளீஸ் நானும் வரேன்.” என்ற கண்ணீருடன் கூறிய நண்பனை கண் கலங்க கட்டிக்கொண்டான் கண்ணன்.
“வா டா...” என்று உள்ளே இழுத்து சென்றான்.
இருவரும் பதைபதைப்போடு உள்ளே சென்றனர்.
எல்லா அறைகளிலும் தேடிய பின்னும் அறிவை காணாததால் இன்னும் பதற்றம் தொற்றி கொண்டது. "என்னடா எங்கயுமே காணோம்?" என்று கடைசி அறையில் அவர்கள் கண்ட காட்சி இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.
கண்ணன் அதிர்ச்சியில் ஒரு நொடி உறைந்து நிற்க, வேகமாக விழிகளை திருப்பிய ஷிவா, தன் சட்டையை கழட்டி அறிவழகியின் அருகில் வீசினான்.
என்ன? ஏது? யார்? என்றெல்லாம் தெரியாது அவள் மேனியையும் மானத்தையும் காப்பாற்ற உடை கிடைத்ததும் அவள் வேகமாக எடுத்து போட்டு கொள்ள,
அதிர்ச்சியிலிருந்தாலும் மீண்டவன், “அறிவு! என்னடா ஆச்சு? இது என்ன இடம்? நீ எப்படி இங்க வந்த?” என்று அறிவழகியை கட்டிக்கொண்டான் கண்ணன்.
மேலாடை ஆங்காகே கிழிக்க பட்டு தலைவிரி கோலமாய் அலங்கோலமாய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் அறிவழகி.
“அண்ணா” என்று பெருங்குரலெடுத்து அழுதாள்.
“ஷ்ஷ.. இங்க பாருடா அழகி... அண்ணா தான் வந்துட்டேன்ல? ஒன்னும் ஆகாது... அழக்கூடாது...” என்று விழிகளில் நீர் வழிந்தாலும் தங்கையின் தலையை கோதி விட்டான்.
“நீ எப்படி இங்க வந்த? என்ன ஆச்சு?” என்று ஷிவா கோபமாய் கேட்டான்.
அவன் யாரென்று தெரியாததால் அவனை சட்டை செய்யாது தன் அண்ணனிடம் நெருங்கி, “அண்ணா” என்றாள் அறிவு.
“என் ஃப்ரெண்ட் தான்மா. என்கூட தான் உன்னை தேடிட்டு இருக்கான். பயப்படாத.” என்றான் கண்ணன்.
"சரி. நீ எப்படி டா இங்க வந்த?" என்றான் மெதுவாய்.
“அண்ணா! உனக்கு பரிசு வாங்க என் பிரென்ட கூப்பிட்டேன், அவ வரலை. அதான் ரொம்ப நாள் பழக்கமான என் முகநூல் பிரெண்ட் கவிதாவை கூப்பிட்டேன். பார்த்தா... இவங்க வந்து... என்னை இங்க... தூக்கிட்டு வந்துட்டாங்க...” என்றாள் கண்ணிரோடு.
அவர்களை ஷிவாவும் கண்ணனும் ஆத்திரத்துடன் பார்த்தனர்.
“இவனுங்க தான் என்கூட பேஸ்புக்ல என் பிரெண்டா பேசிருக்காங்கன்னு எனக்கு தெரியலை அண்ணா.” என்றாள் அறிவு பாவமாய்.
“படிச்ச பொண்ணு தான நீ? இப்படி முன்ன பின்ன தெரியாதவங்களை முதல்ல பார்க்க வரதே தப்பு. அதுவும் வீட்ல இருக்கவங்கிட்ட பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்ல மாட்ட...” என்று ஷிவா கோபமாய் கேட்க, “ஷிவா” என்று அதட்டினான் கண்ணன்.
“உனக்கு ஒண்ணுமில்லை இல்லடா...” என்று அவளின் உடலில் காயங்களை பார்த்து கேட்டான்.
“இல்லண்ணா. என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. எப்படியாவது நான் தப்பிக்கணும் இல்ல உயிரை விடணும்... அதான் எப்படியோ தைரியத்தை வரவெச்சுக்கிட்டு என்கிட்ட இருந்த ஸிப்ரெயை எடுத்து இவங்க முகத்துல அடிச்சு, உடனே அங்க இருந்த கட்டைய வச்சி நல்லா மண்டைய உடைச்சிட்டேன்.” என்றாள் அறிவு.
அங்கே இருந்த இருவரின் மூச்சை சோதித்த ஷிவா, “உயிர் இருக்கு. நாம இங்க இருக்க வேணாம். போலாம் வாங்க.” என்று தன் போலீஸ் நண்பனுக்கு விஷயத்தை கூறி இவர்களை வேறு ஏதாவது கேசில் அரெஸ்ட் பண்ணுமாறு கூறி வெளியேறினான்.
“அண்ணா! என்னை மன்னிசிடுண்ணா. நீ ஆரம்பத்துலையே சொன்ன. இதுல ரொம்ப கவனமா இருக்கணும்னு. எனக்கு இப்படி நடக்கும்னு தெரியலை. இதை என்னால வாழ்க்கை முழுக்க மறக்க முடியாது.
எப்படி இதையெல்லாம் கடந்து வெளிய வரபோறேன்னு தெரியலை. இன்னைக்கு இல்லன்னாலும் எண்னைகாவது ஒரு நாள் என்னை கல்யாணம் பண்ணிக்க போறவர்கிட்ட சொல்லித்தானே ஆகணும்... இந்த விஷயத்தை போய் எப்படி சொல்வேன்? இதெல்லாத்தையும் மறைச்சுட்டு இன்னொருத்தர்கூட என்னால நிச்சயமா வாழ முடியாதுண்ணா. எனக்கு நீங்க மட்டும் போதும்ண்ணா. கடைசி வரைக்கும் நான் உன்கூடவே உன் தங்கச்சியாவே இருந்திடறேன் அண்ணா. எனக்கு கல்யாணமே வேணாம்.” என்றாள் அழகி கண்ணீருடன்.
அவளின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு கொண்டிருந்த ஷிவாவிற்கு இதற்கு மேல் முடியாதென்று தோன்ற, வேகமாய் அவளை நெருங்கி யாருமே எதிர் பார்க்கா வண்ணம், அறிவு பேசி முடிக்கும் முன் அவளின் கழுத்தில் மஞ்சள் கயிரை கட்டி இருந்தான் ஷிவா.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top