37 (இறுதி பாகம்)
அவனின் அகி என்ற சொல்லில் அதிர்ச்சியடைந்து திரும்பி பார்க்க, அங்கே கண்ட காட்சியில் ஆணியடித்தார் போல உறைந்து நின்றாள்.
ஆசையாய் கணவன் வாங்கி கொடுத்த முதல் பரிசு வண்டியென்பதால் ஓரமாய் நிறுத்தி விட்டு அவனிடம் ஓடினாள்.
அதற்குள் அங்கே கூட்டம் கூடிவிட, வேகமாய் ஓடியவள் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடக்கும் கணவன் சிவாவை கண்டதும், "ஷிவா" என்று பேரதிர்ச்சியில் மயங்கி சரிந்தாள்.
அங்கிருந்தவர்கள் அவசரமாய் இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றி அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வெறும் மயக்கமென்பதால் அறிவழகிக்கு உடனே விழிப்பு வந்துவிட, "ஷிவா" என்று கதறியபடி கணவனை தேட, ஐ.சி.யூ வில் ஸ்வாசத்திற்கு போராடி கொண்டிருப்பவனை கண்டதும் தன் உயிர் உடலில் இருந்து பிரிவது போல் ஓர் வலி.
அருகில் இருந்த ஒருவரின் மொபைலில் வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் வந்துவிட்டனர்.
சுபா எடுத்து வந்த போனில் தன் அண்ணனுக்கு போன் செய்தவள்.
"அண்ணா!" என்று தேம்பி தேம்பி அழவும் பதறிய கண்ணன்.
"அறிவும்மா என்னடா? ஏன் அழுகுற? உன் புருஷன் ஏதாவது திட்டினானா?" என்றதும் இன்னும் அழுகை கூட்டவும், "என்னன்னு சொல்றா தங்கம்?" என்றான் பயத்துடன்.
பேசமுடியாமல் அழுகையில் கரைந்தவளிடம் போனை வாங்கி, "மாமா! அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிருச்சு. இங்க தான் மலர் ஹாஸ்ப்பிட்டால்ல சேர்த்துருக்கு. அண்ணி ரொம்ப பயத்துல இருக்காங்க. அழுதுட்டே இருக்காங்க. சீக்கிரம் வாங்க." என்றாள் சுபா.
ஷிவாவிற்கு அடிபட்டது என்று கூறியவுடன் அதிர்ச்சியடைந்தவன் வேகமாய் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
மருத்துவமனைக்குள் நுழைந்தவன் தங்கையின் நிலையை கண்டு அதிர்ந்து, "அழகிம்மா" என்றதும் தாமதமில்லாமல் தாயை கண்ட சேய் போல் தாவி அணைத்து கொண்டவள்,
"அண்ணா எனக்கு பயமா இருக்குண்ணா. யாரும் எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க. அவர் பாவம்ணா. அவருக்கு ஒன்னும் ஆகாது இல்லண்ணா. அவர் இல்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிரோட இருக்க முடியாது. சீக்கிரம் எழுந்து வர சொல்லுண்ணா... அவர் நல்லபடியா வேணும்னா. நான் அவரை ரொம்ப விரும்புறேன்னு சொல்லணும்ணா. வர சொல்லுண்ணா." என்று ஓயாமல் அழுது அரற்றியபடி மீண்டும் மயங்கி சரிந்தாள்.
"அறிவு" என்று பயத்தில் பதறியவன் அங்கிருந்த பெஞ்சில் தூக்கி படுக்க வைக்க, ரெஸ்ட் தேவை என்று மயக்க ஊசி செலுத்தி தூங்க வைத்தனர்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கண் விழித்தவள் கணவனை நினைத்து அழுது கரைந்தாள்.
விஷயம் அழகியின் பெற்றோருக்கும் சொல்ல பட அவர்களும் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
அம்மாவை கண்டதும் ஓடி சென்று கட்டி கொண்டு கதறியவளை கண்டு கலங்கிய பெற்றோர் மெதுவாக சமாதானம் செய்தனர்.
"அறிவு மாப்பிள்ளைக்கு ஒன்னும் ஆகாதுடா. நீ இப்படி அழுதன்னு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவார். அழக்கூடாது. தைரியமா இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் நல்லா இருப்பிங்க. கடவுள்கிட்ட பிராத்தனை வைப்போம்." என்று தேற்றினார்.
தலையில் ஏழு தையலும் வலது காலில் பிராக்ச்சரும் கை கால்களில் பலத்த சீராய்ப்புகளுடன் பிழைத்திருக்க சிகிச்சை முடிந்து நான்கு மணி நேரம் கழித்து சாதாரண வார்டிற்கு மாற்றினர்.
மயக்கத்தில் இருப்பதால் கண்விழிக்க மேலும் இரண்டு மணி நேரம் ஆகும் அதுவரை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்றனர்.
இதற்குள் ஜீவாவும் வந்துவிட அதட்டி உருட்டி அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்ததும் அனைவரும் சிவாவின் கண் திறப்புக்காக காத்திருந்தனர்.
அதிக நேரமில்லாமல் இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தான் ஷிவா.
எல்லோரும் அழுவதை கண்டு வருத்தப்பட்டவன் யாரும் அழக்கூடாது என்று சைகை செய்திட, அனைவரும் அவனுக்காக அமைதியாயினர்.
அனைவரையும் கண்டுவிட்டவனின் விழிகள் தனக்கு சொந்தமானவளை தேடத் தொடங்கியது.
அவளை காணாததால் முகம் வாடிட, "ஷிவா! அறிவு பக்கத்திலிருக்கிற கோவில்ல தான் இருக்கா. இவ்ளோ நேரம் அழுது அடம் பிடிச்சவளை அவ பிரென்ட் தான் கூட்டிட்டு போனான்." என்றார் சிவாவின் அம்மா.
"சரி எல்லோரும் வெளிய இருக்கலாம் கூட்டம் இருக்கிறதை பார்த்தா டாக்டர் என்னை தான் சத்தம் போடுவாங்க."என்றார் நர்ஸ்.
எல்லோரும் வெளியேறவும் கண்ணனை மட்டும் சைகையில் அருகில் வர கூறியவன், அவன் காதில் ஏதோ கூறிட கோபமான கண்ணன்.
"நான் பார்த்துகிறேன். நீ ரெஸ்ட் எடு. அப்புறம் மச்சான். நானே எதிர் பார்க்கல என் தங்கச்சி உனக்காக இவ்ளோ துடிப்பான்னு. அவ்ளோ விரும்புறா உன்னை. ரெண்டு தடவை அழுது மயங்கிட்டா." என்றான் கண்ணன்.
ஷிவா சந்தோசமாக உணர்வதை கண்டவன்.
"சீக்கிரம் சரியாகி வந்து ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்." என்று புன்னகைத்துவிட்டு வெளியேறினான்.
பத்து நிமிடம் கழித்து ஜீவா மட்டும் உள்ளே வரவும் அழகியை எதிர்பார்த்து முகம் வாடிட, "அண்ணா நான் வந்துருக்கேன். இருந்தாலும் வராத உன் பொண்டாட்டியை தான் தேடுற?" என்று வம்பிழுத்தவன்.
"அறிவ எப்போவுமே ஒரு கெத்தா பார்த்துட்டேன். இன்னைக்கு தான் ஆனா உன் மேல எவ்ளோ அன்பு வச்சுருக்கான்னு ப்ராமிப்பா பார்த்தேன். அவ இவ்ளோ அழுது நான் பார்த்ததில்லைண்ணா. பத்திரமா பார்த்துக்கோங்க." என்று புன்னகைத்து வெளியேறினான்.
சிறிது நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் விழிகளை மூடிக்கொண்டவன் தன்னவளின் வருகைக்காக காத்திருந்தான்.
அவள் அருகில் வருவது அவளின் வாசம் உணர்த்தியது.
அவன் நெற்றியில் திருநீறு கீற்றை வைத்து விட்டவள் மெல்ல தன் இதழையும் சேர்த்து அழுத்தமாய் பதித்தாள்.
"ரொம்ப பயமுறுத்திட்டிங்க பா. சீக்கிரம் வந்துருங்க. இந்த கொஞ்ச நேரம் நீங்க இல்லாம என்னால இருக்க முடியலை." என்றாள் மெல்லிய குரலில். அவனின் தலையை கோதிக்கொண்டே அருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
"எனக்கு அடிபட்டால் உனக்கு ஏன் வலிக்குது ஆகி." என்றான் மெதுவாய் கண்திறந்து அழகியை பார்த்து.
அவன் குரலில் திடுகிட்டவள் வேகமாய் தன் கரத்தை இழுக்கவும் ஷிவா பற்றி கொண்டான்.
"சொல்லு ஆகி. எனக்கு அடிப்பட்டா உனக்கென்ன? நீ ஏன் பதற்ற? உனக்கு தாலி கட்டிட்டேன்னா? உன்னை நான் உயிருக்குயிரா விரும்புறேன் அதனால உனக்கு ஒண்ணுன்னா தாங்க முடியலை. எனக்கு வலிக்குது. உனக்கு ஏன் வலிக்குது?" என்றான் மெதுவாய் பற்றிய கரத்தை விடாமல்.
"ஏன்னா நானும் உங்களை என் உயிரை விட அதிகமா விரும்புறேன் ஷிவு." என்றாள் கண்கள் பனிக்க மெதுவாய்.
"நேத்து அர்ரெஸ்ட் பண்ணோம்ல அவங்க ஆளுங்க தான் இது செஞ்சது." என்று கூறவும், "அய்யோ!" என்று பதறினாள்.
"பயப்படாத கண்ணன்கிட்ட சொல்லிட்டேன். என்ன பண்ணனும்னு அவன் பார்த்துப்பான். அப்புறம்..." என்று அவள் முகம் பார்க்க அவனின் பார்வையில் லேசான வெட்கம் எட்டி பார்க்க, "உங்களுக்கு உடம்பு முடியலை. கண்ணை மூடி ரெஸ்ட் எடுங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்." என்றாள்.
"ஹுஹும்... என் அழகி என்னை விரும்புறேன்னு சொல்லிட்டா. எனக்கு அப்டியே வானத்துல பறக்கிற மாதிரி இருக்கு. இந்த நிமிஷமே என் உயிர் போய்ட்டா..." என்று முடிக்கும் முன் அவன் வாய் பொத்தியவள், 'வேண்டாம்' என்று தலையசைக்க அதை கண்டு புன்னகைத்தான்.
மெதுவாய் அவன் விழி மேல் முத்தமிட்டவள், "தூங்குங்க." என்றாள்.
இன்னொரு கண்ணையும் காட்ட, அதன் மேலும் இதழ் பதிக்க, குறும்பாய் தன் இதழ் மேல் விரல் வைத்திட, "ஹுஹும்... அதெல்லாம் அப்புறம் தான். முதல்ல ரெஸ்ட் எடுங்க." என்றாள் அழகி.
உடனே அவன் முகம் வாடிட, அதை காண சகியாதவள் மெதுவாய் குனிந்து லேசாய் இதழை ஒற்றிட, இதற்கு மேல் நானிருக்கிறேன் என்று அவனும் குறும்பு செய்திட அவனிடம் இருந்து விலகியவள் சிவாவின் முகம் பார்க்க முடியாமல் நாணத்தால் திரும்பிக் கொண்டாள்.
"அகி! நேத்து எதுவும் நமக்குள்ள நடக்கலை." என்றான் ஷிவா.
"தெரியும்." என்றாள்.
"எப்படி?" என்றான் அதிர்ச்சியாய்.
"இப்போ சொல்ல மாட்டேன். குணமாகி வாங்க சொல்றேன்." என்று குறும்பாய் புன்னகைத்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து ஷிவா வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.
அழகியின் அன்பான கவனிப்பில் சிவாவின் உடல் நலம் சீக்கிரம் தேறிட, கொஞ்ச நாள் கழித்து அவர்களின் இல்லற வாழ்க்கையையும் இனிதாய் தொடங்கினர்.
அதன் பிறகு அறிவழகியும் ஷிவாவும் காதல் பறவைகளாக உலா வந்தனர். அறிவின் படிப்பு முடிந்த பின் பெரியவர்களின் ஆசியோடு ரிசெப்ஷன் நடந்தது.
ஷிவாவின் ஒவ்வொரு அக்கறையான செயலாலும் அவனின் மேல் காதல் கூடிக்கொண்டே போனது அறிவழகிக்கு.
கண்ணனுக்கு தன் தங்கை இன்பமாக இருப்பதை கண்டு மனநிறைவாகவும் இருந்தது.
சிவாவும் கண்ணனும் அவ்வப்பொழுது தொடர்ந்து தங்களின் வேலையை செய்து கொண்டு தான் இருந்தனர்.
💕💕💖💖இனி இவர்களின் வாழ்வு சிறக்கட்டும்.😍💖💖💕💕 மீண்டும் அடுத்த கதையில் உங்களை சந்திக்கிறேன் நன்றி.
உங்கள்,
அன்பு தோழி,
தர்ஷினிசிம்பா.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top