35
"என்ன நடந்துச்சு? ஏன் என் ட்ரெஸ் மாறிருக்கு? இவரும் இப்படி தூங்குறாரு. இவ்ளோ அசதியா தூங்கிற ஆள் இல்லையே?" என்று தனக்குள் கூறியவள் எழுந்து காலை கடன்களை முடித்து குளித்து வந்தாள்.
அவள் வரும் முன்னரே விழித்திருந்த ஷிவா தன் போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தான்.
அவனிடம் என்ன நடந்ததுன்னு எப்படி கேட்பது என்று தயங்கியபடி கண்ணாடி முன் நிற்க, அவளின் ஒவ்வொரு அசைவையும் ஓரவிழியால் பார்த்து கொண்டிருந்தாலும் எதையும் கவனிக்காதவன் போல் இருந்தான்.
"என்னங்க" என்று அழகி மெதுவாய் கூப்பிடவும் எதுவும் பேசாமல் சட்டென்று எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
'என்னங்கவாம் என்னங்க... மண்ணாங்கட்டி... இப்போ தான் இந்த என்னங்க ஞாபகத்துக்கு வரேனா? நீ நேத்து என்னை படுத்தின பாட்டுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து தரேன்டி.' என்று திட்டியபடி குளித்து வந்தவன் அவள் ஒருவள் இருக்கிறாள் என்பதை கண்டுகொள்ளாமல் தயாராகி கொண்டிருத்தான்.
"என்னாச்சு ஏன் எதுவும் பேச மாட்டேன்றிங்க?" என்றாள் சிவாவின் அருகில் நின்று.
அவள் பேசுவது கேட்டாலும் முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தான்.
"என் மேல கோபமா?" என்றாள் மெதுவாய்.
அப்பொழுதும் மௌனம்.
"ப்ளீஸ் சாரி. நேத்து என்ன நடந்ததுன்னு எதுவும் ஞாபகம் இல்லை..." என்றாள் விழிகளில் கண்ணீரோடு.
அவளின் கண்ணீரை கண்டு மனம் வலித்தாலும் அதை காட்டாமல், கதவை நோக்கி சென்றான்.
"நான் இவ்ளோ தூரம் கேட்கிறேன் ஏன் எதுவும் சொல்ல மாட்டேன்றிங்க?" அவரின் கரத்தை பற்றி நிறுத்தினாள் கலக்கமாய்.
"அப்படியா மேடம்கு இப்போ என்ன சொல்லணும்?" என்றான் கோபமாய்.
எப்பொழுதும் அன்பாய் பார்த்தவனின் ரௌத்திரம் தாள முடியாமல் அழகி அமைதியாய் நிற்க, "நான் அன்னைக்கே சொன்னேன். நீ இதுல தலையிடாதேன்னு. நான் அவ்ளோ தோத்திரம் சொன்ன பிறகும் அவ்ளோ பயங்கரமான இடத்துக்கு என்கிட்ட கூட சொல்லாம போயிருக்க... ஒஹ் எதுவும் ஆகாதுன்னு நினைப்பு..? நீங்க போனதால என் மனைவி நீங்க தான்னு தெரிஞ்சுருச்சு. அடுத்து என்ன என்னை பழிவாங்கணும்னு காத்திட்டு இருந்தவனுக்கு நாமே முன்னாடி போய் நின்னா என்ன பண்ணுவான்? உன்னை காலம் முழுக்க அவன் ..... உபயோக படுத்த முடிவு பண்ணி அவனோட போதை ஊசியை போட்டு கடத்தினாங்க.
உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா உயிரை கொடுக்க முட்டாளுங்க நாங்க ரெண்டு பேர் இருக்கோமே பிறகென்ன... எங்க உயிர் போனாலும் பரவாலன்னு மேடமை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தேன். அதோட நின்னுச்சா?" என்று அவளை முறைத்தான்.
"அடுத்து தான் ட்விஸ்ட்டிங் பார்ட்டே... என் பொண்டாட்டிக்கு இன்னும் என் மேல லவ் வரலைன்னு முட்டாள் மாதிரி காத்திட்டு இருந்தேன்ல... அதுக்கு தண்டனையா தான் ரெண்டு பேரும் அன்பா காதலா ஆசையா ஆரம்பிக்க வேண்டிய வாழ்க்கையை ஏதோ ஒரு ஊசினால..." என்று அதற்கு மேல் பேசாமல் வேகமாய் வெளியேறினான்.
அவனின் வார்த்தைகள் இதயத்தில் விழுந்து ரணம் ஏற்படுத்தினாலும் கடைசியாய் கூறி சென்ற செய்தியில் திகைத்து வேரூன்றி நின்றாள்.
அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவள் எங்கோ வெறிக்க தொடங்கினாள்.
தான் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்துவிட்டோம் என்று புரிந்தாலும் இனி எதையும் மாற்ற முடியாதென்று உணர்ந்து திக்கபரம்மை பிடித்தது போல் வெறித்திருந்தாள்.
சிறிது நேரம் அமர்ந்திருந்தவளின் கவனத்தை மிகவும் சிரமப்பட்டு தன் புறம் திருப்பியது அவளின் அலைபேசி.
எடுத்து பார்க்க ஜீவா தான் அழைத்திருந்தான் இல்லை அழகியின் கணவன் அழைக்க வைத்திருந்தான்.
"அறிவு கிளம்பிட்டயா பர்ஸ்ட் பீரியட் இன்டெர்னல் டெஸ்ட் இருக்கு." என்றான் அவசர கதியில்.
"நான் வரலை." என்றாள்.
"ஏய் இன்டெர்னல் மார்க்ல கை வச்சுருவாங்க. சீக்கிரம் வா. கண்டிப்பா டெஸ்ட் எழுதணும்." என்றான்.
"நேத்து என்ன நடந்தது?" என்றாள் மெதுவாய்.
அவள் எது பற்றி கேட்கிறாள் என்று தெரிந்தியம், "என்ன நடந்தது?" என்றான் ஜீவா வேண்டுமென்றே.
"டேய்! அடி வாங்காத நானே செம கடுப்பில் இருக்கேன்."என்றதும்.
"சரி சரி. காலைல டென்சன் ஆகாத.போன்ல சொல்ல முடியாது. நேர்ல சொல்றேன். சீக்கிரம் கிளம்பி வா." என்றான் ஜீவா.
"சரி. இதோ கிளம்பிட்டேன் ஜீவா." என்று அவசரமாய் கிளம்ப சென்றாள்.
அவள் பேசுவதை வெளியில் நின்று கேட்ட ஷிவா கீழிறங்கி சென்றான்.
அவசரமாய் கிளம்பி அறிவு கீழே வரவும் அவளை கண்டவுடன் சாப்பிட்டு கொண்டிருந்தவன் எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்று விட, என்ன பேசுவது ஏது பேசுவது அவன் முகத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க, "என்னம்மா அப்டியே நிக்குற? வந்து சாப்பிடு வா. நேரமாகுதுள்ள?" என்று தட்டில் நான்கு இட்லிகளை கொண்டு வந்து கொடுத்தார் சிவாவின் அம்மா.
"அண்ணி இப்போ உடம்பு எப்படி இருக்கு?" என்றாள் சுபா.
அவளின் கேள்வியில் எதுவும் புரியாமல் ஒரு நொடி முழித்தவள் நேற்று தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியுள்ளான் என்பது புரிந்ததும் சிவாவை நோக்கினாள்.
அவனும் இவ்வளவு நேரம் அவளை தான் பார்த்து கொண்டிருந்தவன் அவள் தன்னை பார்க்கவும் கண்டு கொள்ளாதவன் போல் வேறெங்கோ பார்த்து கொண்டிருந்தான்.
"அம்மா! நான் கிளம்புறேன்." என்று வாசலிற்கு சென்றவனிடம், "ஏன்டா அறிவை கூட்டிட்டு போகலையா?" என்றதும் சற்று எரிச்சலாய், "மா நான் இன்னைக்கு வேற ரூட்ல போகணும். இன்னைக்கு ஆட்டோ பிடிச்சு போகட்டும்." என்று ஷூவை மாட்டினான்.
"அவ எப்படிடா தனியா போவா?" என்றதும் அவள் முகத்தை உணர்ச்சியில்லாமல் பார்த்தவன்.
"தனியா போறதெல்லாம் ஒன்னும் புதுசு இல்லையே... இன்னும் சொல்ல போனா தனியா போகத்தான் நிறைய பேர் விரும்புறாங்க. எனக்கு நேரமாச்சு நான் வரேன்." என்று வேகமாய் வெளியேறினான்.
அவனின் இந்த பாராமுகம் ஏனோ மிகவும் வலியை தந்தது அழகிக்கு.
"பரவால்ல அத்தை விடுங்க. நான் போயிடுவேன்." என்றாள் அவரை சமாதானப்படுத்துவது போல்.
சாப்பிட பிடிக்காமல் ஏனோ தானோவென்று பெயருக்கு இரண்டு இட்லிகளை சாப்பிட்டு எழுந்தாள்.
ஒரு ஆட்டோ பிடித்து கல்லூரி வாசலில் வந்து இறங்கியவளை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு ஜீவாவிற்கு அழைத்தான்.
"ஜீவா! அவ ஹெல்த் கண்டிஷன்கு இன்னைக்கு ரெஸ்ட் தான் எடுக்கணும். ஆனா, அவ வீட்ல இருந்தா ஏதாவது யோசிச்சுட்டே இருப்பா. அதான் இங்க கூப்பிட சொன்னேன். நீ இருக்கின்ற தைரியத்துல தான் அனுப்பிருக்கேன். கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ. எதாவதுன்னா உடனே கால் பண்ணு." என்றான்.
"சரிண்ணா. எனக்கும் தெரியும்ணா. நானும் நேத்து உங்க கூட தானே இருந்தேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்குறேன்." என்றான் ஜீவா.
சோர்வாக நடந்து வரும் அறிவழகியின் அருகில் வந்தவன்.
"என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ ஸ்லோவா வர? உடம்பு முடியலையா?" என்று கூட நடந்தான்.
அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் விடுவிடுவென தங்களின் வகுப்பறைக்குள் நுழைந்து தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவளின் பின்னே வந்தவன் அருகில் அமர்ந்து, "இப்போ நான் என்ன பண்ணேன்? எதுக்கு என்னை முறைக்கிற?" என்றான் ஜீவா.
"இன்னைக்கு நமக்கு இன்டெர்னல் இருக்குன்னு சொன்னியே... உனக்கு பொய் கூட ஒழுங்கா சொல்ல வராதா?" என்று முறைத்தாள்.
'அய்யோ மாட்டிக்கிட்டோமோ?' என்று முழித்தான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top