26
தன் வகுப்பறைக்குள் நுழைந்த அழகியின் பார்வை தன் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவனை கண்டு ஒரு நொடி கோபம் ஏற்பட்டாலும் தன்னை அமைதி படுத்தி கொண்டு சென்று அமர்ந்தாள்.
வகுப்பறைக்குள் வந்த பேராசிரியை பாடம் நடத்தி முடித்த பின், "நாளைக்கு எல்லோரும் ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும் ஞாபகம் இருக்குல்ல? இதுக்கு இன்டெர்னல் மார்க் இருக்கு. சோ எல்லோரும் முடிச்சுருங்க." என்று வெளியேறினார்.
அழகி தான் இன்னும் ப்ராஜெக்ட்டை செய்யாததை நினைத்து தலையில் அடித்து கொண்டாள்.
"மறந்தே போய்ட்டேன்." என்று யோசிக்க.
"இந்தாங்க." என்று அவள் முன் ஒரு பைலை நீட்டினான் ஜீவா.
' என்னதிது?' என்பதை போல் அவனையும் பைலையும் மாறி மாறி பார்த்தாள்.
"ரெண்டு பேரும் சேர்ந்து தான் ப்ராஜெக்ட் முடிக்கனும். நான் பாதி முடிச்சுட்டேன். மீதியை நீங்க முடிச்சுருங்க." என்றான்.
வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தாள் அழகி.
"ரொம்ப யோசிக்காதிங்க. இது ப்ரொஜெக்ட். இதை வச்சு பிரென்ட்ஷிப் லாம் கேட்க மாட்டேன்." என்றான் ஜீவா.
எதுவும் பேசாமல் வாங்கி கொண்டவள் தன் புத்தகத்தை திறந்து வைத்து கொண்டாள்.
அந்த நாள் கடந்து போக,
வீட்டில் எழுத வேண்டிய ப்ராஜெக்ட்டை சாப்பிட இரவு போகாமல் கூட எழுதிக் கொண்டிருந்தாள்.
ஷிவாவே அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வந்து அவள் வேண்டாம் என்று கூறியதை கேட்காமல் மிரட்டி ஊட்டி விட்டான்.
எழுதி முடிக்கவும் அவளை தன் மடியில் அமர்த்தி கொள்ள, சிவாவை முறைத்தாள் அழகி.
"ப்ளீஸ்டி. கொஞ்ச நேரம்." என்று அழகியை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். அந்த நேரம் அழகியை அழைத்தாள் தோழி.
"ஹலோ சொல்லுடி." என்றாள் அழகி.
"அறிவு எப்படி மா இருக்க?" என்றார் அ தோழியின் அண்ணன்.
"அண்ணா நல்லா இருக்கேன் அண்ணா. என்னண்ணா இந்த நேரத்துக்கு போன் பண்ணிருக்கிங்க?" என்றாள் அழகி பதட்டமாய்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை. உன் வீட்டுக்காரு இருக்காரா?" என்றார்.
"இருக்காருண்ணா. இருங்க தரேன்." என்று ஷிவாவிடம் தந்தாள்.
"சொல்லுங்க சர்." என்றான் ஷிவா.
"வணக்கம் தம்பி. நான் எங்க வீட்ல பெரியவங்கிட்ட பேசிட்டேன். அடுத்த வாரத்துல என் குழந்தைக்கு குல தெய்வம் கோவில்ல மொட்டை போட்டு காது குத்துறோம். அன்னைக்கே கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பேசிருக்காங்க." என்றார்.
"அப்படியா ரொம்ப சந்தோஷம். ஆனா உங்க தங்கச்சியை பத்தி மாப்பிள்ளைகிட்ட பேசிட்டிங்களா?" என்றான்.
"நான் தனியா கூப்பிட்டு பேசினேன். அவனுக்கு அவ லவ் பண்ணதும் தெரியும் பிரேக் அப்பாகி வெளி நாடு போனதும் தெரியுமாம். இருந்தும் எனக்கு அவளை பிடிச்சுருக்கு. கல்யாணம் நல்ல படியா முடியட்டும். கொஞ்சம் கொஞ்சமா பேசி என்னால அவளை சரி செய்துக்க முடியும். நீங்க கவலை படாதீங்கன்னு சொல்றான்." என்றார்.
"பரவால்லங்க. இனி அவங்க நல்லா இருப்பாங்க." என்றான் ஷிவா.
"எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணனும்." என்று தயங்கினார்.
"என்ன உதவி வேணாலும் செய்றேன். தயங்கமா கேளுங்க." என்றான் ஷிவா புன்னகைத்து.
"அது கோவிலுக்கு போறதுக்கு ரெண்டு நாள் முன்ன தான் இதை பத்தி அவகிட்ட பேச போறோம். அதனால உங்க பிரண்ட்டை இந்த ஒரு வாரம் மட்டும் எப்படியாவது போன்ல பேசாத மாதிரி பார்த்துக்க சொல்லுங்க." என்றார்.
"சரிங்க நீங்க கல்யாண வேலையை பாருங்க. நான் இங்க பார்த்துக்குறேன்." என்றான் ஷிவா.
பேசிவிட்டு போனை வைக்க, என்ன என்பது போல் பார்த்து கொண்டிருந்தாள் அழகி.
அவர் கூறியதை சொல்லி என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
"இப்படி செய்ங்க." என்று அழகி கூறவும்.
"எப்படி?" என்றான்.
"அண்ணனை ஒரு வாரம் ஆபிஸ் லீவ் போட்டுட்டு போனை சுவிட்ச் ஆப் செஞ்சுட்டு யாருக்கும் சொல்லாம நிம்மதியா ஒரு பேமிலி டூர் போய்ட்டு வர சொல்லுங்க." என்றாள் அழகி.
"ஹ் சரி சொல்லி பார்ப்போம்." என்று ராஜேஷ்கு போன் செய்து நடந்த அனைத்தையும் கூறி என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினான்.
"ரொம்ப தேங்க்ஸ் டா. நீய மலரும் எனக்காக எவ்ளோ செஞ்சுருக்கிங்க. கண்டிப்பா நான் எங்கேயாவது போய்ட்டு வரேண்டா. எனக்கும் வேலை வேலைன்னு ஓட்றது கஷ்டமா தான் இருக்கு. மைன்ட் ரிலாக்ஸ் ஆகும். நல்ல பொண்ணு தாண்டா அவ. அவ என்னை மறந்துட்டு நல்லா இருக்கணும். அவ திரும்பி வந்த நாள்ல இருந்து கில்டியா பீல் பண்றேன். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எல்லாம் சரியாகிடும்." என்று பேசிட்டு வைத்தான்.
அதற்குள் அழகி சிவாவின் நெஞ்சில் சாய்ந்தபடியே உறங்கி போயிருந்தாள்.
"நான் சிட்டிங் பெட்டா டி உனக்கு?" என்று நெற்றியில் ஒரு முத்தம் வைத்து தன் மேலே சாய்த்து அவனும் உறங்கி போனான்.
மறுநாள் கல்லூரிக்கு வந்தவுடன் ஜீவாவின் பைலை கொடுத்தவள். தன் பைலையும் நீட்டினாள்.
"தேங்க்ஸ்." என்று ஒற்றை வரியில் முடித்து கொண்டு அமர்ந்தாள்.
ஜீவாவும் இதுவே போதும் என்று நினைத்து அவள் எழுதியதை படித்து கொண்டிருந்தான்.
வகுப்பாசரியை உள்ளே நுழைந்ததும், "இன்னைக்கு ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும். சோ உங்க டீம்லர்ந்து ஒருத்தர் வந்து உங்க ப்ராஜெக்ட்டை எக்ஸ்ப்லைன் பண்ணிட்டு சப்மிட் பண்ணிட்டு போங்க." என்றார்.
நான்கு பேர் முடித்திருக்க ஐந்தாவது அழகி ஜீவா தான். ஆனால் ஜீவா இன்னும் முழுதாக படிக்கவில்லை. என்ன செய்வது என்று முழித்து கொண்டிருக்க, "ஏங்க நான் இன்னும் முடிக்கலைங்க." என்று கூறினான்.
அவன் கூறியது கேட்காதது போல, இருவரின் பைலையும் எடுத்து கொண்டு முன்னே சென்றாள்.
ப்ராஜெக்ட்கு தேவையான வர்க்கிங் மாடலை தயாரித்திருந்ததால் தங்களின் ப்ராஜெக்ட்டை அழகாக விளக்கி முடித்து தங்கள் இருப்பிடத்திற்கு வந்து அமர்ந்தாள்.
"ஏங்க சூப்பர்ங்க. ஆனா நான் எழுதவே இல்லையே. எடுத்துட்டு
போய் வச்சுட்டீங்க." என்றான் ஜீவா பாவமாய்.
"உங்களுக்கும் நான் எழுதி தான் வச்சிருக்கேன்." என்று அமைதியாய் முன்னே கவனிக்க தொடங்கினாள்.
ஏற்கனவே தனக்குள் இருந்த அழகியின் மதிப்பு இன்னும் பல மடங்கு அவனுக்குள் பன்மடங்காக அதிகமானது.
மாலை வீட்டிற்கு வந்தவன். அவளிடம் எதுவும் பேசாமல் ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கவும் அவன் முன் வந்தவள், "என்னாச்சு? ஏதாவது பிராப்ளமா?" என்றாள் அழகி.
"இல்ல அதெல்லாம் எதுவுமில்லை." என்றாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
மெதுவாக அவன் நெற்றியில் தைலத்தை தேய்த்து விட்டவள், "கொஞ்ச நேரம் கண்ணை மூடி பொறுமையா யோசிங்க. எதுவா இருந்தாலும் சரியாகும்." என்றாள்.
"புது கேஸா?" என்றாள்.
"ஹ்ம்." என்றான் ஒற்றை வரியில்.
"பொரூமையா யோசிங்க வழி கிடைக்கும். நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?" என்றாள்.
"எதுக்கு உங்க அண்ணன் வந்து உன்ன கையோட கூட்டிட்டு போகவா?" என்று கேட்டவன், "வேணாம்மா நானே பார்த்துகிறேன்." என்றான் ஷிவா.
"சரி இந்த முறை எங்க?" என்றாள்.
எதுவும் பேசாமல் தயங்கவும், "என்ன?" என்றாள்.
"உங்க காலேஜ்." என்று எழுந்து வெளியே சென்றான்.
அவன் பதிலில் அதிர்ச்சியாய் உறைந்து நின்றாள் அழகி.
'என்னது நம்ம காலேஜ்ஜா ங்க என்ன? ஏன் எதுவும் பேசாம போயிட்டாரு. அதுக்காக தான் அங்க எதுவும் சாப்பிட கூடாதுன்னு சொன்னாரா?' என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்.
'இவர் அமைதியா பார்த்தா இப்போ சொல்ல மாட்டார் போல.. நாளைக்கு நம்ம கண்ணுக்கு ஏதாவது மாட்டுதா பார்க்கணும்.' என்று யோசித்து உறங்கி விட்டாள்.
அவள் உறங்கியப்பின் உள்ளே வந்தவன் அவளின் நெற்றியை வருடி, "இந்த முறை மேட்டர் இன்னும் சீரியஸ். நீ இதுல சம்மந்த படக்கூடாது அழகி. உன் உயிருக்கே ஆபத்தாகிடும்." என்றவன் படுத்து கொண்டான்.
மறுநாள் காலை கல்லூரிக்கு கிளம்பியவளை வாசலில் இறக்கி விட்டு, "கண்டதையும் போட்டு இசிச்சு குழப்பிக்காம எக்ஸாம் வர போகுது. அதுல கவனம் செலுத்து. இது என்னோட வேலை நான் பார்த்துக்குறேன்." என்று கிளம்பினான்.
அவன் சென்றதும் பார்வையை சுழல விட்டவள் பார்வையில் எதுவும் சிக்காமல் போக சோர்வாய் நடந்தாள்.
"என்னங்க காலைலயே ஏதோ பலமான யோசனைல இருக்கிங்க போல?" என்று கேட்டு கொண்டே அவளுடன் நடக்க தொடங்கினான் ஜீவா.
'இவன் வேற இப்போ எதுக்கு ராங் டைமிங்ல வந்துருக்காங்க. இவனுக்கு நேரம் சரியில்லை.' என்று புலம்பியபடி அவனிடம் எதுவும் பேசாமல் நடந்தாள் அழகி.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top