22
"அவன் செகண்ட் இயர் காலேஜ் படிக்கும் போது அவங்க ஜூனியர் பெண்ணே இவனை விரும்புறதா சொல்லி பின்னாடியே துரத்தி துரத்தி லவ் பண்ணா... முதல்ல இவன் வேண்டாம்னு சொன்னாலும் கொஞ்ச நாள் கழிச்சு இவனும் விரும்ப ஆரம்பிச்சிட்டான்." என்றான் அமைதியா.
"அப்புறம்" என்றாள் ஆர்வமாக.
அவளின் முக பாவனைகளை ரசித்தபடியே மெதுவாய் அவள் கரம் பற்றி அவள் உணரும் முன்னே தன்னை நோக்கி இழுக்க, அவன் நெஞ்சிலே அழகாய் சாய்ந்தாள்.
ஒரு நொடி என்ன நடந்தது என்று புரியாமல் பின் பதறி விலக போக, "ப்ளீஸ் அகி... கொஞ்ச நேரம். அசையாம இப்படியே இரு. நான் கதை சொல்றேன்." என்று மீண்டும் தொடர்ந்தான்.
"அப்புறமென்ன ரெண்டு வருஷம் ரெண்டு பேரும் ரொம்ப லவ் பண்ணாங்க. சேர்ந்து சுற்றாத இடமில்லை. போகாத சினிமா இல்ல. கோவில், பார்க், பீச் இல்ல. அவ்ளோ ஆசையா காதலிச்சாங்க. நகமும் சதையுமா இருந்தாங்க." என்று நிறுத்தினான்.
"இவ்ளோ நெருங்கி பழகிட்டு எப்படி பிரிஞ்சாங்க?" என்றாள் நம்ப முடியாமல்.
"அது என்ன காரணம்னு தெரியலை. திடீர்னு ஒரு நாள் அவ இவன்கூட பெரிய சண்டை போட்டுட்டு இனி உனக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு சொல்லிட்டு பிரிஞ்சு போய்ட்டா. இவனும் எவ்ளோவோ பேசி சமாதானம் செய்ய முயற்சி பண்ணான். ஆனா முடியலை. ரொம்ப சோர்ந்து போய்ட்டான்.
திடீர்னு ஒரு நாள் வந்து ரொம்ப அழுதான். பயந்து போய் என்னடான்னு கேட்டேன். அவ என்னை வேண்டாம்னு முடிவு பண்ணி வெளிநாட்டுக்கே போய்ட்டா டா. இனி அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு ஆளே தேவதாஸை விட ரொம்ப மோசமாகிட்டான். அந்த மோசமான நிகழுவுலர்ந்து வெளிய வர முழுசா ஆறு மாசம் ஆச்சு அவனுக்கு. கிட்டத்தட்ட ஒரு பைத்தியகாரன் மாதரி ஆகிட்டான்.
நான் தான் இங்கே கூட்டிட்டு வந்து கொஞ்சம் கொஞ்சமா பேசி சரி பண்ண ட்ரை பண்ணேன். ஏதோ கொஞ்சம் தெளிஞ்சான்." என்று நிறுத்தி புன்னகைத்தான்.
"வேலையில சேர்ந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா அவங்க பிரிவை வெளி உலகத்துக்காகவாவது ஏற்றுக்க முயற்சி செஞ்சு வேலையில கவனத்தை திருப்பினான். ஆறு மாசம் கழிச்சு பொண்ணு பார்க்க அவங்க அப்பா ஏற்பாடு செஞ்சார். லவ் பண்றேன்னு போய் சொல்லவும் முடியாது வேண்டாம்னு மறுக்க வேலிட் ரீசனும் இல்ல. நமக்கு தான் நம்ம காதல் கை கூடல. அட்லீஸ்ட் அப்பா நிம்மதிக்காகவாவது போகலாம்னு போய் பொண்ணு பார்த்தான். அவங்க அப்பா விருப்பப்படியே கல்யாணம் செஞ்சுகிட்டான்.
ஆனாலும் சேர்ந்து வாழ முடியலை தவிச்சு அந்த பொண்ணுகிட்ட இருந்து தள்ளி இருந்தான். மூணு மாசம் இப்படியே தான் இருந்தது. வேலை பிரெஸ்ஸுர்... மேரேஜ் தான் திடீர்னு பிக்ஸ் ஆகிட்டு கொஞ்சம் நாள் போகட்டம்னு சொல்லி ஒதுங்கி இருந்தான்.
ஆனா அந்த பிள்ளை ஜெம் தான். அவனை கேள்வி கேட்டு டிஸ்டர்ப் பண்ணாம அவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செஞ்சு அவன் மனசுல இடம் பிடிச்சா. கொஞ்சம் கொஞ்சமா பேசி பழகின்னு அவங்க வாழ்க்கையை ஆறு மாசத்துக்கு பிறகு ஆரம்பிச்சாங்க. இப்போ ஆறு மாசத்துல ஒரு பொண்ணு இருக்கா. ரெண்டு பேரும் அவ்ளோ சந்தோஷமா இருக்காங்க." என்று முடித்தான்.
"ப்பா. ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ தான் சரியாகிருக்காங்க. இப்போ என்ன பிரச்சனை?" என்றாள் கதை கேட்கும் ஆர்வத்தில் அவன் மேல் இன்னும் வாகாக சாய்ந்துகொண்டு. அவளை மறந்து செய்யும் செயல்களை குறித்து கொண்டு உள்ளுக்குள் நகைத்தபடி தொடர்ந்தான்.
"இப்போ அந்த பொண்ணு ஒரு மாசத்துக்கு முன்ன வெளிநாட்டில் இருந்து வந்துருக்கா. இவனை தேடி நேர்ல போய் பேசிருக்கா. 'என்னை மன்னிச்சுரு ப்பா. அன்னைக்கு கோபத்துல என்ன பேசுறோம்னு தெரியாம ஏதேதோ பேசிட்டு போய்ட்டேன். அங்க போய் எவ்வளவு முயற்சி செய்தும் என்னால உன்னை மறக்க முடியலை. உனக்கும் என்னை போல தானே ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்'னு பேசிருக்கா." என்றான் கோபமாய்.
"ஐயையோ... இதென்ன கொடுமை. என்ன சண்டை வந்திருந்தாலும் பிரிஞ்சு வெளிநாடு போகாம இருந்திருக்கனும் அதுவும் மூணு வருஷம் போய்ட்டு .வந்து ஒரு வார்த்தை சாரி சொல்லிட்டா முடிஞ்சுதா? அப்போ சொல்லாம கொள்ளாம போய்ட்டு, இப்போ வந்து இப்படி பேசினா என்ன அர்த்தம்?" இவளும் கோபமாக.
"அவ திரும்பி இவனை தேடி வந்ததே பெரிய அதிர்ச்சி அவனுக்கு. இதுல ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்லவும் ரொம்ப ஷாக் ஆகிட்டான். இருந்தாலும் பேஸ் பண்ணி தானே ஆகணும்னு பொறுமையா நடந்ததை எடுத்து சொல்லி... இனி ரெண்டு பேரும் சந்திக்காம இருக்கிறது தான் நல்லது. அதனால் நாம சந்திக்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும்னு போய்ட்டான். இவளும் எதுவும் பேசாம போய்ட்டா." என்று முடித்தான்.
"பரவால்ல அதான் போய்ட்டாங்களே அப்புறம் என்ன?" என்றாள்.
"இதுக்கு பிறகு தான் பிரச்சனையே.." என்று தலையிலடித்து கொண்டான் ஷிவா.
"என்ன பண்ணாங்க?"
"என்ன பண்ணலைன்னு கேளு... ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணிருக்கா. நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன். நாம நேர்ல மீட் பண்ணலாம்னு சொல்லிருக்கா. இல்ல என்னால வர முடியாதுன்னு சொல்லிருக்கான். சரி நீ வரலைன்னா நானே வரேன்னு சொல்லவும் டென்சன் ஆகி நான் வரேன்னு போய் பார்த்துருக்கான்." என்று நிறுத்தி அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து அழகியிடம் கொடுத்தான்.
"இந்தா கொஞ்சம் தண்ணீர் குடி." என்றான் ஷிவா.
"கதை சொல்றது நீங்க... தண்ணீர் நான் குடிக்கணுமா?" என்றாள் அழகி குறும்பாய் விழிகளை சுருக்கி.
"ஆமா. நீ முதலில் முடி அப்புறம் நான் குடிக்கிறேன்." என்று புன்னகைத்தான் ஷிவா.
கொஞ்சமாய் தண்ணீரை குடித்து முடிக்கவும் அந்த பாட்டிலை வாங்கி அவளை பார்த்து கொண்டே அவனும் குடித்து முடிக்க, அழகி அழகாய் விழிகளை உருட்டி பார்த்து கொண்டிருந்தாள்.
"அதுக்கு நீங்களே முதல்ல குடிச்சிருக்கலாம்ல?" என்று தலையை குனிந்தபடி முணுமுணுத்தாள்.
"குடிச்சிருக்கலாம் தான். ஆனாலும் இந்த மாதிரி இனிக்காதே எனக்கு இப்படி குடிக்க தான் பிடிச்சுருக்கு." என்றான் ஷிவா லேசாய் புன்னகைத்து.
"ஹ்ம்ம். அப்புறம் என்னாச்சு?" என்று பேச்சை மாற்றினாள்.
"இப்போ எதுக்கு என்னை வர சொன்ன? நான் தான் இனிமேல் பார்க்க வேண்டாம்னு சொன்னேன்ல.. எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. புரிஞ்சுக்கோன்னு கோபத்தில் கத்திருக்கான். ஆனா, அதுக்கு அந்த பொண்ணு இத்தனை வருஷம் வெளிநாட்ல இருந்தாலும் என்னால வேரா ஒருத்தரை நினைச்சு கூட பார்க்க முடியலை. அப்படி இருக்கும் போது நீ எப்படி கல்யாணம் செஞ்சு குழந்தை பெத்துகிட்டேன்னு திட்டிருக்கா. பரவால்ல இப்போ அவளை டைவோர்ஸ் பண்ணிட்டு வா.. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். சந்தோஷமா வாழலாம். என்னால உன்னை மறக்க முடியலைன்னு சொல்றாலாம். கோவம் வந்து இவன் அறைஞ்சுட்டு வந்துருக்கான்." என்று கோபத்தில் முகம் சிவக்க கூறி கொண்டிருந்தான்.
"என்ன இப்படி பேசுறாங்க? அவங்க தான் இவர் வேண்டாம்னு சொல்லாம கொல்லாம போய்ட்டாங்களே? இப்போ வந்து திடீர்னு கூப்பிட்டா உடனே வரனுமா? அதுவும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் இப்படி பேசுறாங்க. இவங்களுக்கு வேணும்னா இவர் வரணும் வேணாம்னு போகனுமா?" என்று திட்டி கொண்டிருந்தாள் அழகி.
"இதுவே பரவால்ல. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன போன் பண்ணி சரி பரவால்ல அவங்களை வெளிய அனுப்ப வேணாம். ஆனா, நாம ரெண்டு பேரும் லீவ் இன் ரிலேஸன் ஷிப்ல இருக்கலாம் என்னை தனியா வீடு பார்த்து வச்சுருனு சொல்றாலாம். இல்லைன்னா நாம லவ் பண்ணும்போது எடுத்த போட்டோஸ், லெட்டர் எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கே வருவேன்னு மிரட்டுறாளாம்... என் சாவுக்கு நீ தான் காரணம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு செத்துருவேன்னு சொல்றாளாம். அதான் ரொம்ப மன உளைச்சல்ல இருக்கான்." என்றான் ஷிவா.
"அவங்க போட்டோ இருந்தா காட்டுங்களேன்." என்று கேட்டாள்.
"இருக்கா தெரியலை. பேஸ்புக்ல இருக்கும்னு நினைக்கிறேன் இரு பார்க்கிறேன்." என்று தான் அலைபேசியில் தேடியபின் காட்டினான்.
"இதோ... இது அவங்க சேர்ந்திருக்கும் போது எடுத்தது." என்று ஒரு புகைப்படத்தை காட்டினான் ஷிவா.
அந்த புகைப்படத்தை சில நிமிடங்கள் உற்று பார்த்தபின் அழகியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
"இது..."
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top