21
அன்று முழுவதும் அதற்கு பிறகு ஜீவா எதுவும் பேசவில்லை. அவன் பேசாமல் இருப்பதே நிம்மதி, 'விட்டது தொல்லை.' என்று எதுவும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை கவனித்து கொண்டிருந்தாள்.
மாலை வீட்டிற்கு வந்தவுடன் படிப்பதற்கு தோட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
இருள் சூழ்வதை கூட பொருட்படுத்தாமல் தன் படிப்பில் கவனம் செலுத்த, பின்னால் இருந்து செருமும் சத்தம் வரவே ஒரு நொடி திக் என்று பயந்து சடாரென திரும்பினாள்.
கையில் பால் தம்ளருடன் அழகாய் புன்னகைத்து நின்றிருந்தான் ஷிவா.
"நீங்க தானா பயந்தே போய்ட்டேன்." என்று லேசாய் சிரித்தாள்.
"நம்ம வீட்ல வேற யார் இருக்க போறாங்க? ரொம்ப நேரமா இங்கயே படிச்சுட்டு இருக்க... எதுவும் சாப்பிட கூட இல்லைன்னு அம்மா சொன்னாங்க. இந்தா இதை குடிச்சுட்டு படி. நாளைக்கு எக்ஸாம் ஏதாவது இருக்கா?" என்றான்.
"அதெல்லாம் இல்ல... டெஸ்ட் இருக்கு... பைனல் இயர்ல இன்டெர்னல் மார்க்ஸ் எடுப்பாங்க. அதான் படிச்சுட்டு இருக்கேன்." என்றாள்.
"முடிச்சுட்டியா?"
"எல்லாம் முடிஞ்சுது. இந்த கேள்வி மட்டும் கொஞ்சம் குழப்பமா இருக்கு. நாளைக்கு தான் பிரென்ட்கிட்ட கேட்கணும்."
'ஹுக்கும் பிரென்ட் தான் யாரும் இல்லையே? யாருக்கிட்ட கேட்ப?' என்றது மனம்.
"இதை முதல்ல குடி." என்று பால் டம்ளரை அவளிடம் திணித்து விட்டு "என்ன கேள்வி?" என்று அவளிடம் இருந்த புத்தகத்தை வாங்கி பார்க்க தொடங்கினான்.
அவளும் ஆர்வமாக சந்தேகமாக இருக்கும் கேள்வியை கூறவும் சிறிது நேரம் பார்த்தவன்.
"இது ரொம்ப ஈஸி. இங்க பாரு." என்று கேள்வியை விளக்க தொடங்கினான்.
பத்து நிமிடங்களுக்கு பின், "புரிஞ்சுதா?" என்று கேட்க, "சூப்பர். எங்க அண்ணா கூட இப்படி தான் சொல்லி தரும்." என்றவள் நினைவு வந்தவளாய், "அண்ணன் காலைலயே வரேன்னு சொல்லிச்சே வந்ததா?" என்றாள்.
மெலிதாக புன்னகைத்தவன்.
"வேற எதாவதுன்னா அமைதியா இருந்திருப்பேன். உன்னை கூப்பிட்டு போவேன்னு சொல்லிட்டானே அப்புறம் எப்படி வர விடுவேன்?" என்று கேட்டதும் அதிர்ச்சியில் விழி விரித்து, "என்ன பண்ணிங்க?" என்றாள்.
"அதெல்லாம் சீக்ரெட்" என்று சிரித்தான்.
'ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க' அப்டின்னு கேட்டா அது அழகி இல்லையே ..
"அப்போ சொல்ல மாட்டிங்க? பரவால்ல நான் அண்ணகிட்டயே கேட்டுக்குறேன்." என்று தன் போனை எடுக்கவும் அவள் கரத்தை பிடித்து தடுத்தவன், "அதெல்லாம் அவன்கிட்ட கேட்காத." என்றான் முறுக்கி கொண்டு.
"நீங்களும் சொல்லமாட்டீங்க.. நானும் கேட்க கூடாதுன்னா எப்படி? நான் கேட்பேன்." என்றாள்.
"அய்யோ அழகி... சரி இப்போ என்ன உனக்கு தெரியணும் அவ்ளோ தானே நானே சொல்றேன்." என்றான் வெட்கம் கலந்த புன்னகையோடு.
'அண்ணன் கிட்ட என்ன பேசுனாருன்னு தானே கேட்டோம் அதுக்கு ஏன் இவ்ளோ வெட்கம்?' என்று நினைத்தவள்.
"சரி சொல்லுங்க." என்றாள்.
"நான்... நான்.." என்று திணறியபடி பார்வையை வேறெங்கோ பதித்து தலையை அழுந்த கோதியவன்.
"நீங்க எல்லோரும் தூங்கின பிறகு உங்க அண்ணனை பார்க்க போனேன்." என்றான்.
"எப்போ நேத்து நைட்டா? அந்நேரத்துக்கு எதுக்கு போனீங்க?" என்றாள் கோபமாய்.
"பின்ன காலைல உங்க அண்ணன் வந்து வீட்ல சொன்னா எங்க அம்மா உன்னை வீட்ல வச்சுட்டு என்னை வெளிய துரத்திருவாங்க." என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற பக்கென்று புன்னகைத்து விட்டாள்
அவள் அழகாய் சிரிப்பதையே சில விநாடிகள் பார்த்தவன்.
"அதுமட்டுமில்ல இதுக்கு முன்ன எப்படியோ இப்போ நீ இல்லாம என்னால இருக்க முடியாது... அதான் உங்க அண்ணன் சொன்ன மாதிரி வந்து கூட்டிட்டு போய்ட்டான்னா பயமா இருந்தது." என்றான் ஷிவா.
சிரிப்பை நிறுத்தியவன் சிவாவின் முகத்தை சில நொடிகள் பார்த்த பின் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவள் முகத்தில் வெட்கத்தை கண்டு கொண்டவன் உள்ளுக்குள் சிரித்து கொண்டு அவளையே பார்த்தான்.
"என்ன சொன்னாரு?" என்றாள் அழகி.
"ஹ்ம்ம்... ஏற்கனவே கோபத்துல இருந்தவன் கொஞ்சவா செய்வான். நான் போன் பண்ணி வீட்டுக்கு வெளிய தான் நிக்குறேன்னு சொன்னேன். வெளிய வந்து முறைச்சுட்டு மாடிக்கு போ வரேன்னான். மேல வந்தவன் விட்டான் ஒரு அரை." என்றான் கன்னத்தை தொட்டு பார்த்தபடி.
"உனக்கு எவ்ளோ திமிர்னு ரெண்டு சாத்து சாத்தின பிறகு தான் சமாதானமாகி... பாப்பா படிக்கிற வரைக்கும் இந்த கேஸ் முடிக்குற வரைக்கும் நான் வேணா கூட்டிட்டு வந்துடறேன்னான். அதெல்லாம் முடியவே முடியாது அவா என்கூட தான் இருப்பானேன். கொஞ்சம் நேரம் நல்லா முறைச்சுட்டு... இன்னொரு முறை இப்படி ஏதாவது பண்ண, நிரந்தரமா என் தங்கச்சியை கூட்டிட்டு வந்துருவேன்னு மிரட்டி அனுப்பிட்டான்." என்று சிரித்தான்.
அவளும் சிரிக்க, "அண்ணன் அப்படித்தான். இதுல வேணாலும் சமாதானம் ஆகும். என் விஷயம் மட்டும் யாரு சொன்னாலும் கேட்க மாட்டான்." என்றாள்.
"சரி ரொம்ப இருட்டிடுச்சு உள்ள போலாமா?" என்றான் ஷிவா.
"ஹ்ம் போலாம்." என்று இருவரும் நடக்க, வாசலில் கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் இருவரும் திரும்பினர்.
அங்கே சிவாவின் நண்பன் வந்து கொண்டு இருந்தான்.
"டேய்... வா டா. வா டா... உன்னை எப்போ வர சொன்னா இப்போ வர?" என்று நண்பனை அனைத்து கொண்டான்.
பின் பிரிந்து, "அழகி இவன் என் பிரென்ட் ராஜ்." என்றான்.
"டேய்! இவங்க என் மனைவி அறிவழகி."
"ஹாய் மா" என்றான் ராஜ்.
"வணக்கம் அண்ணா. உள்ள வாங்க." என்று புன்னகைத்தபடி உள்ளே சென்றாள்.
"சரி மா." உள்ளே நுழைந்தபடி, "வேலை முடிய லேட் ஆகிட்டு டா. நாளைக்கு காலைல கிளம்புறேன். அதான் உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்துட்டேன்." என்றான் ராஜ்.
"அடடே வா வா ராஜா.. என்னடா இந்த பக்கமே வரதில்லை?" என்று வந்தார் சிவாவின் அம்மா.
"ஆன்ட்டி நல்லா இருக்கீங்களா?" என்று அமர்ந்தான் ராஜ்.
"நல்லா இருக்கேன். மருமக எப்படி இருக்கா? என் பேத்தி எப்படி இருக்கா?" என்றார்.
"இந்தாங்கண்ணா." என்று காபியை நீட்டினாள் அழகி.
"அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க ஆன்ட்டி." என்று அழகி தந்த காப்பியை வாங்கி கொண்டான்.
"நீ மட்டுமா வந்துருக்க? அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?" என்று உரிமையாய் திட்டவும்.
"ஆண்ட்டி இப்போ ஆபிஸ் விஷயமா வந்துருக்கேன். அடுத்த முறை எல்லோரும் கண்டிப்பா வந்து தங்கிட்டு போறோம்." என்றான் ராஜ்.
"சரிப்பா. " என்றார்.
பின் நண்பர்களுக்குள் கடந்த கால விஷயங்களை பற்றி மகிழ்ச்சியாய் பேசினர்.
"சரி வாங்க சாப்பிடலாம்." என்று அழைக்கவும் அனைவரும் அமர்ந்து கேலி கிண்டலுடன் சாப்பிட்டு முடித்தனர்.
"சரி ஆன்ட்டி. நான் கிளம்புறேன்." என்றான் ராஜ்.
"என்னது கிளம்புறியா? அதெல்லாம் முடியாது இருந்துட்டு போ." என்றார் ஷிவாவின் அம்மா.
"நாளைக்கு பத்து மணிக்கு ட்ரெயின் எனக்கு... " என்றான் ராஜ்.
"பரவால்ல அப்போ காலைல போ." என்று பிடிவாதமாக நிறுத்தி கொண்டார்.
சரி என்று அவனும் சம்மதித்தான்.
நண்பர்கள் இருவரும் தனியே சென்று விட பெண்கள் பேசி கொண்டிருந்தனர்.
"மாமா எப்போ வராங்க அத்தை?" என்றாள் அழகி.
"அவர் வேலை எல்லாம் முடிச்சுட்டு வர, நாளைக்கு நைட்டாகிடும்டா." என்றார்.
"பாவம் இந்த புள்ள ரொம்ப நல்ல பையன். அவன் பத்தாவது படிக்கும் போதே இறந்துட்டாங்க. நிறைய நாள் ஷிவாகூட தான் இருப்பான்." என்றார் சிவாவின் அம்மா.
இரவு அனைவரும் படுக்க சென்ற பின் தங்கள் அறையின் பால்கனியில் நின்று நிலவை வெறித்தபடி எதையோ யோசித்து கொண்டிருந்தாள் அழகி.
பின்னால் வந்து நின்ற ஷிவா...
"என்ன அவ்ளோ பெரிய யோசனை?" என்றான்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை. அண்ணன் தூங்கிட்டாங்களா?" என்றாள்.
"ம்ம்... இன்னும் இல்ல... அவன் வைப் போன் பண்ணிருக்காங்க. அதான் பேசிட்டு இருக்கான். அது இருக்கட்டும் நாசன் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே?" என்றான் ஷிவா.
'என்ன கேள்வி?' என்பது போல பார்க்க,
"என்ன யோசனை?" என்றான் மீண்டும்.
"அது... அந்த அண்ணனுக்கு ஏதோ பிரச்சனை போல..." என்றாள் அழகி.
"யாருக்கு ராஜ் கா? அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்போ தான் பார்த்துட்டு வரேன். நல்லா பேசிட்டு இருக்கான். " என்றான் ஷிவா.
"அதில்லை... அவர் யார்கூடவோ போன்ல ரொம்ப டிஸ்டர்ப்ட்டா கோவமா பேசிட்டு இருந்தார். அதான் சொன்னேன்." என்றவளை முறைத்தான்.
"அவன் பேசுறதை ஒட்டு கேட்டியா?" என்றான் முறைத்துக்கொண்டே.
முடிந்த வரை நன்கு முறைத்தவள், "உங்களை என் அண்ணன் அடிச்சதுல தப்பே இல்ல... இன்னும் ரெண்டு சேர்த்து கொடுத்திருக்கணும்." என்றவள், "நான் என் போனை தோட்டத்துலர்ந்து எடுத்துட்டு வரலை. அதது எடுக்க போனப்ப அவர் யார்கூடவோ ரொம்ப கோபமா பேசிட்டு இருந்தார். அதை தான் சொன்னேன். ஹ்ம்ம்.. எனக்கு யார் பேசுறதையும் ஒட்டு கேட்கணும்னு அவசியம் இல்லை." என்று அமைதியாக படுத்து கொண்டாள்.
"அய்யோ சாரி டி. கோவிச்சுக்காத... இரு வரேன்." என்று வேகமாய் வெளியேறினான்.
"எங்க போறார் இவரு?" என்று எழுந்து அமர்ந்தாள்.
அரைமணி நேரம் கழித்து உள்ளே வரவும் அவனை முறைத்தவள் மீண்டும் படுத்து கொண்டாள்.
"ஏய் அழகிம்மா. கோச்சுக்காத... ஏதோ கோபத்துல தெரியாம கேட்டுட்டேன். சாரி." என்றான் மீண்டும்.
"அதெப்படி அவ்ளோ கோபம் வரும்? பேசறதுக்கு முன்ன என்ன பேசுறோம்னு யோசிக்க மாட்டிங்களா?" என்றாள் அழகியும் விடாமல் கோபமாக.
"சரி சரி... சாரி. என் மேல தான் தப்பு. இனி இப்படி உன்கிட்ட கோபப்பட மாட்டேன். போதுமா? நீ இப்படி கோபமா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கும்." என்றான் ஷிவா வருத்தமாக.
எழுந்து அமர்ந்தவள்.
"இப்போ எங்க போனீங்க?" என்றாள்.
"ராஜ்கிட்ட பேசத்தான். அவனுக்கு ப்ராப்ளம்னு சொன்ன பிறகு எப்படி சும்மா இருக்க முடியும்?" என்றான் ஷிவா.
"என்ன சொன்னார்?" என்றாள்.
"நீ சொன்னது உண்மை தான். அவன் ரொம்ப பெரிய பிரச்னைல தான் இருக்கான்." என்றான் ஷிவா.
"என்னாச்சு?" என்றாள் அழகி பதட்டமாய்.
"எல்லாம் லவ் தான்." என்றான் கோபமாய்.
"என்ன சொல்றிங்க? அந்த அண்ணனுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே?" என்றாள் அழகி ஒன்றும் புரியாமல்.
"இது பாஸ்ட் லவ். இப்போ வந்து அவனை டிஸ்டர்ப் பண்ணுது." என்றான்.
"எனக்கு ஒன்னும் புரியலை. தெளிவா சொல்லுங்க." என்றதும் அவள் அருகில் அமர்ந்தவன் கூற தொடங்கினான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top