20
மேலே வந்தவனின் விழிகள் அங்கும் இங்கும் அலைப்பாய்ந்து தன் உயிர் இருக்கும் இடத்தில் நிலைகுத்தி நின்றது.
மெல்ல அவளிடம் நகர்ந்து சென்றவன் அழகியின் யோசனை படர்ந்த முகத்தை கூர்ந்து நோக்கினான்.
"என்னாச்சு இவ்வளவு ஆழ்ந்த யோசனை?" என்றான் ஷிவா அங்கிருந்த கம்பியில் சாய்ந்து நின்றபடி.
"அது ... ஒன்னுமில்லை.. சும்மா தான்." என்றாள் நிலவிடமிருந்து விழி பிரிக்காமல்.
"அவ்வளவு தீவிரமான சிந்தனைக்கு காரணமென்னன்னு சொன்னா நானும் கொஞ்சம் யோசிப்பேன்ல?" என்றான் மீண்டும் விடாமல்.
"இல்ல நடந்ததை நினைச்சிட்டு இருந்தேன்... ஒரு வேளை நீங்க இல்லைன்னா என்னோட நிலைமை..." லேசாய் விழிகள் கலங்கியது அழகி.
அவளை நெருங்கியவன் மெல்ல தன் தோளோடு அணைத்து கொண்டு... மூணு வருஷத்துக்கு முன்ன இருந்து உன்னோட நிழலா நான் இருக்கேன். என்னை மீறி நடந்தே ஒரே விஷயம் அன்னைக்கு நீ பிறந்தநாள் பரிசு வாங்க தனியா போனது தான்." என்றான் ஷிவா வருத்தமாக.
"நீங்களும் அண்ணனும் எப்படி இப்படி?" என்றாள்.
"எப்படி?"
"ரெண்டு பேரும் வேற வேற வேலை தானே பார்க்குறிங்க?" என்று கேள்வியை முடிக்காமல் நிறுத்தினாள்.
"அழகி... நானும் கண்ணனும் அண்டர்கவர் ஆபிசர்ஸ்... எங்க டிப்பார்ட்மெண்ட் தவிர வேற யாருக்கும் தெரியாது.. தெரியவும் கூடாது." என்று லேசாய் புன்னகைத்தான்.
"அப்போ என்கிட்ட சொல்லிட்டீங்களே?" என்றாள் பதட்டமாக.
"உன் கிட்ட கூட சொல்ல கூடாது தான். ஆனா எனக்கு நீயும் நானும் வேற வேற இல்ல... அதான் உன்கிட்ட சொன்னேன். நீ தான் இதை யார்க்கும் சொல்லாம பார்த்துக்கணும்." என்றான்.
"கண்டிப்பா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்." என்று இருவிழிகளையும் அழகாய் உருட்டி அப்பாவியாய் கூற ஷிவாவின் மனம் மேலும் மேலும் அவளிடம் மயங்கி கொண்டே இருந்தது.
"ஒரு வேளை நேத்து அந்த போன் கால் எனக்கு வரலைன்னா என்ன பண்ணருப்பிங்க?" என்றாள் அழகி.
"பேஸ்புக், இன்ஸ்ட்டா, ட்விட்டர்... போன்ற சமூக ஊடங்கள்ல பொண்ணுங்களோட பலவீனங்களையும் மனக்குமுறல்களையும் பெண்கள் மாதிரியே நட்பாய் பேசி பழகி தெரிஞ்சுகிட்ட பிறகு அவங்க சீக்ரட்ஸ் வச்சு அவங்களை பலவந்த படுத்தி பாலியல் துன்புறுத்தல் நடக்கிறதா எங்களுக்கு இனபர்மேஷன் வந்தது. இந்த ப்ரொஜெக்ட் நாங்க எடுத்து மூணு மாசம் ஆகுது. ஏ டூ இசட் வரைக்கும் ஒண்ணுவிடாம கண்டுபிடிச்சாச்சு. இதுல ரெண்டு பொண்ணுங்க மனஉளைச்சல்ல சூசைட் பண்ணிக்கிட்டாங்க... இன்னும் ரெண்டு சின்ன பொண்ணுங்க அதிர்ச்சில கோமாக்கு போயிருக்காங்க... நாங்களே எங்களோட ஆப்பரேஷன் ஸ்டார்ட் பண்ண ரெடியா இருந்த டைம் தான் நீ காணாம போய்ட்ட... எங்களுக்கு உயிரே போயிடுச்சு... என் அன்பை உனக்கு புரிய வைக்காம விட்டுட்டேனேன்னு ஒவ்வொரு நிமிஷமும் செத்துட்டு இருந்தேன். உன்னை திரும்பி நல்லபடியா பார்க்கணும்னு வேண்டாத கடவுள் இல்லடி..." என்றான் விழிகள் கரிக்க.
"சரி எனக்கு ஒரு சந்தேகம்..." என்று அவனுக்கும் தெரியாமல் லேசாய் விலகி நின்றாள்.
"என்ன?" என்றான் உள்ளுக்குள் சிரித்தபடி அவளின் விலகலை கவனித்தாலும் கண்டுகொள்ளாமல்.
"இல்ல நீங்க ரெண்டு பேரும் என்னை காணோம்னு தேடினிங்க சரி... அந்த டைம்ல் உங்க கைல தாலி எப்படி வந்துச்சு?" என்றாள் ஒற்றை புருவம் ஏற்றி...
"அது... உன்னை காணோம்னு சொன்ன உடனே எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை... எப்டியாவது உன்னை கண்டு பிடிக்கணும்னு ஒரு உத்வேகத்துல தேடிட்டு இருந்தப்ப தான் நேரம் நேரம் ஆக பயம் வந்துருச்சு. நீ எப்படி இருந்தாலும் உன்னை அப்படியே என் மனைவியாக்கிகனும்னு தான் தாலி கயிரை வாங்கி வச்சுகிட்டேன். நீ ரொம்ப உறுதியா கல்யாணம் எனக்கு வேணாம்னு சொன்னப்ப எனக்கு வேற வழி தெரியலை. என் வாழ்க்கை நீ இல்லாம நிறைவடையுமான்னு கேட்டா நிச்சயமா இல்ல. அதான் எதுவுமே யோசிக்கலை பட்டுன்னு தாலியை கட்டிட்டேன்." என்று பின்னந்தலையை கோதிக்கொண்டே வெட்க புன்னகையோடு கூறினான்.
அவளும் எதுவும் பேசாமல் இருக்க அந்த மௌனமும் இதமாய் தான் இருந்தது இருவருக்கும்.
"சரி. நாளைக்கு என் நண்பன் வரான் நம்ம வீட்டுக்கு." என்றான்.
"சரி" என்று அமைதியாய் கீழே படுத்து உறங்க தொடங்கினாள்.
அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தவன் அவள் அருகில் வேறொரு போர்வை விரித்து படுத்து கொண்டான்.
மறுநாள் காலை, கல்லூரிக்குள் நுழைந்தவக் தன் க்ளாஸ்ரூமை நோக்கி செல்ல, வேகமாய் ஓடி வந்த ஒருவன் அவளிற்கு இணையாய் மூச்சு வாங்க நடக்க தொடங்கினான்.
அதுவரை ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தவள் தன்னுடன் யாரோ நடப்பது போல் தோன்ற திரும்பி பார்த்தாள்.
அழகாய் குழிவிழ சிரித்தபடி அவளை பார்த்து கொண்டே அவளுடன் நடந்தான் ஒருவன்.
சட்டென்று நின்றவள் அவனை லேசாய் முறைத்து... "யார் நீங்க எதுக்கு என்கூட வரிங்க?" என்றாள்.
"நானும் தேர்ட் இயர் தாங்க.. சும்மா ஹாய் சொல்ல வந்தேன்." என்றான் புன்னகையை தவழவிட்டு.
"நீங்க என்ன வேணா படிங்க. பட் என்னை தொந்தரவு பண்ணாதீங்க." என்று முகத்திலடித்தார் போல் கூறிவிட்டு வேகமாய் தங்களின் வகுப்பு அறைக்கு சென்று விட்டாள் அழகி.
அவளுக்குள் திடீரென்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தெரிந்தே யாரிடமும் சென்று இந்த முறை மாட்டிக்கொள்ள விருப்பமில்லை அவளுக்கு. ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறால் எல்லோரிடமும் இருந்து விலகும் சூழ்நிலைக்கு தள்ள படுகிறார்கள் சில பெண்கள்.
முதல் வகுப்பு ஆரம்பிக்கவும் தன் அருகில் வந்து அமரும் அவனை முறைத்து கொண்டிருந்தாள் அழகி.
"ஹாய்" என்றான் அழகாய் சிரித்து.
அழகியோ, விட்டால் கொன்று விடுவேன் என்பதை போல கோபமாய் முறைத்து கொண்டிருந்தாள்.
"இப்போ எதுக்கு இங்க வந்து உட்கார்ந்த?" என்றாள் மிகவும் மெதுவான குரலில்.
"இது கிளாஸ்ரூம் . இங்க யாரு வேணா எங்க வேணா உட்காரலாம்." என்றான் அவனும் குறும்பாய்.
இடம்வலமாய் தலையாட்டிக் கொண்டவள்... "திருத்த முடியாது" என்று முணுமுணுக்க,
"அங்க ரெண்டு பேரும் க்ளாஸ் கவனிக்கிறதை விட, அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசுறீங்கன்னு தெரிஞ்சுகலமா?" என்று முறைத்து கொண்டிருந்தார் பேராசிரியர்.
அவனை திரும்பி முறைத்தவள், "சாரி மேம்." என்று தலை கவிழ்ந்தாள்.
"ஓகே. இதான் லாஸ்ட் டைம். க்ளாஸ் கவனிங்க." என்று விட்ட இடத்தில் இருந்து பாடத்தை நடத்த தொடங்கினார்.
மெதுவாய் அழகியின் நோட்டை தன் பக்கம் இழுக்க பார்க்க, கையில் இருந்த பென்சிலால் ஒரு அடி போட்டாள்.
"ஆஹ்" என்று முணுமுணுத்தவன் முகத்தை தொங்க போட்டு கொண்டான்.
"சே இந்த பொண்ணுங்களே இப்படி தான். அழகா இருக்கிங்கன்னு பேச வந்தா ரொம்ப தான் பண்றாங்க." என்று அவளுக்கு மற்றும் கேட்குமாறு முனகினான்.
எதுவும் பேச முடியாததால் முடிந்த வரை முறைத்தவள் மீண்டும் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.
வகுப்பாசிரியர் வெளியே சென்றதும் பக்கவாட்டில் திரும்பி அவனை முறைத்து...
"என் பக்கத்துல உட்காராதிங்க. வேற இடத்துக்கு போங்க." என்றாள்.
"ஹலோ இங்க யாரு வேணா உட்காரலாம். நீங்க ஒன்னும் நான் எங்க உட்காரணும்னு எனக்கு சொல்லித்தர வேண்டாம்." என்று அவனும் திரும்பி கொண்டான்.
அவள் இடம் மாறிவிடலாம் என்று எல்லா பக்கம் விழியை சுழட்ட எதுவும் காலியில்லை என்று பல்லை கடித்து கொண்டு அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.
அடுத்த வகுப்பு ஆரம்பமானதும்... வந்த வகுப்பாசிரியர் பாடம் நடத்தியப்பின்...
"இது கடைசி வருஷம் இல்லையா? சோ அந்த அந்த டேபிள்ல இருக்க ரெண்டு ஸ்டுடெண்ட்ஸும் சேர்ந்து இந்த ப்ரொஜெக்ட்டை முடிச்சு மூணு நாள் கழிச்சு சப்மிட் செய்ங்க." என்று கிளம்பினார்.
'என்னது இவன்கூட நான் ப்ராஜெக்ட் செய்யணுமா?' என்று கடுப்பானவள் திரும்பி அவனை பார்க்க, அவனோ அவளைதான் புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தான்.
"என்ன?" என்றாள் முறைத்து.
"ஏங்க முறைச்சுட்டே இருக்கிங்க? சிரிக்க தெரியாதா உங்களுக்கு?" என்றான் பாவமாய்.
"ஹ்ம்ம் ஆமா அம்னீஷியா எனக்கு. சிரிக்கிறது மறந்து போச்சு." என்றாள் கோபமாய்.
"ஒஹ்.. அதான் முறைக்க மட்டும் செய்றிங்களா? ஓகே... ஐ ஆம் ஜீவா." என்றான் புன்னகையோடு.
'இவன்கிட்ட பேசுறதே வேஸ்ட்' என்று நினைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்று விட்டாள் அழகி.
அவள் சென்றவுடன், "என்னடா ஒரே நாள்ல உன் பின்னாடி சுத்த வைக்கிறேன்னு சொன்ன?" என்று அருகில் வந்த நண்பனிடம்... "ஆமா டா கொஞ்சம் கஷ்டம் தான் போல... ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு. சீக்கிரமே அவ பிரென்ட் ஆகி காட்றேன் பாரு." என்று சிரித்தான்.
"என்னவோ மச்சி. அவகிட்ட அடிவங்காம பார்த்துக்கோ." என்று சென்றுவிட்டான் நண்பன்.
மதியம் உணவு உண்ணும் பொழுதும் அவளருகில் அமர்ந்து உண்ண கடுப்பானவள் எதுவும் பேசாமல் உண்டு முடித்து தன் இடத்தில் அமர்ந்து புத்தகத்தை விரித்து வைத்து கொண்டாள்.
"ஏங்க சரியா சாப்பிடாம வந்துட்டீங்க?" என்றான் அக்கறையாக.
'இவனுக்கு நேரம் சரியில்லை' என்று கோபத்தை அடக்க விழிமூடி அமர்ந்து கொண்டாள்.
"ஒஹ்.. உங்களுக்கு மெடிட்டேஷன் எல்லாம் தெரியுமா? எனக்கு தெரியாதுங்க." என்றான்.
பொறுமை காற்றில் பறக்க திரும்பி, "ஏய் உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எனக்கு உன்கூட பேச பிடிக்கலை. உன்கூட மட்டுமில்ல இங்க யாருகூடயும் பிரென்ட் ஆகிற எண்ணமும் இல்ல. இஷ்டமும் இல்ல.. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ. இங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கக்கூட பிரெண்ட்ஷிப் வச்சுக்கோ. இன்னொரு முறை என்னை தொந்தரவு செய்யாத. அடுத்த முறை சும்மா இருக்க மாட்டேன்." என்று எச்சரிக்கை செய்தபின் எழுந்து கேண்டினுக்கு சென்றுவிட்டாள்.
"டேய். இந்த பெட் லாம் வேணாம் நீ வா நம்ம ப்லெஸ்ல வந்து உட்காரு." என்ற நண்பனிடம்.
"இல்லடா. இனி நான் இங்கே தான் உட்கார போறேன். நீ போ." என்றான் ஜீவா.
அவள் பேசி சென்றதையே அசை போட்டு கொண்டிருந்தவன், 'என்கூட மட்டும் பேசமாட்டேன்ன்னு சொன்னா பரவாயில்லை. என்னை பிடிக்கலை அதனால பேச மாடறேன்னு சொல்லலாம். ஆனா யாரு கூடயும் பேச மாட்டேன்னு ஏன் சொல்றா? ஏதோ அவ மனசை ரொம்ப பாதிச்சிருக்கு. பெட் லாம் வேணாம் எனக்கு. பட் அவ பிரென்ட்ஷிப் கண்டிப்பா வேணும்.' என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தவன் அருகில் அவள் வந்து உட்கார்ந்த பொழுது எதுவும் பேசாமல் அமைதியாய் தன் வேலையை மட்டும் பார்க்க தொடங்கினான்..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top