17
சிறிது நேரம் கடந்த பின் பேருந்திலிருந்து இறங்கிய நண்பனை கண்டுகொண்டவன் இது வரை இருந்த சஞ்சலங்களை மறந்து புன்னகையோடு அணைத்துக்கொண்டான்.
"எப்படி டா இருக்க?" என்று நண்பனிடம் நலம் விசாரிக்க.
"நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க?" என்றான் முகம் மலர்ந்து.
"நல்லா இருக்கேன்." என்றான் சிரித்தபடி.
"சரி வா. வீட்டுக்கு போகலாம். இல்லடா ரெண்டு நாள் இங்க தான் இருக்க போறேன். ஆபிஸ் வேலை முடிஞ்சவுடன் நாளைக்கு வரேன்." என்றான் உடனே.
"சரிடா. நம்ம வீடலயே தங்கிகலாம் வாடா." என்றான் ஷிவா.
"ஆபிஸ்லேயே ரூம் புக் பண்ணிருக்காங்கடா. வா போகலாம்." என்று நண்பனையும் அழைத்து சென்றான்.
நீண்ட நாட்களுக்கு பின் நண்பனுடன் பேசி களித்ததில் மனைவியை அழைத்துவர நேரமாகியதை மறந்துவிட்டான்.
ஒரு மணி நேரம் காத்திருந்தவள் பின் பேருந்தில் செல்ல பேருந்து நிலையம் வந்தும் அரைமணி நேரம் கடந்தும் பேருந்து வராததால் தன் அண்ணனிற்கு அழைத்தாள்.
"என்னடா இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு. வீட்டுக்கு யார் கூட்டிட்டு வந்தா?" என்று கண்ணன் கேட்டதும் விழிகளில் கண்ணீர் வர தொடங்கியது.
"அண்ணா அவர் வரல. அவருக்கு போனும் போகலை. அதான் பஸ்ல போகலாம்னு பஸ் ஸ்டாண்ட் வந்தேன். பஸ்சும் வரல. நீ கொஞ்சம் வரியாண்ணா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. பயமா இருக்கு." என்றாள்.
"என்னடா இன்னும் வீட்டுக்கு வரலையா? எங்க போனான் அவன்..? நான் உடனே வரேன். நீ அங்கயே இரு அண்ணன் வந்துடறேன்." என்றான் பதட்டமாக.
"அண்ணா ரிலாக்ஸ். பொறுமையா பார்த்து பத்திரமா வா. நான் இங்கேயே இருக்கேன்." என்றாள் லேசாக புன்னகைத்து.
கண்ணன் ஷிவாவிற்கு அழைக்க உடனே எடுத்த ஷிவாவை.
"ஏன்டா என் தங்கச்சி அங்க தனியா பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருக்கா. நீ ஏன் போய் கூப்பிடலை? உன்னால போக முடியலைன்னா என்கிட்ட சொல்லிருக்கலாம்ல?" என்றான் கோபமாக.
"டேய் போதும் நிறுத்து. நான் உன் தங்கச்சி இருக்க இடத்துல தான் இருக்கேன். கொஞ்சம் தூரமா இருக்கேன். நான் சொன்ன டைம் வந்துருச்சு. நீயும் சீக்கிரம் இங்க வந்துரு." என்று வைத்தான்.
பதற்றம் பற்றிக்கொள்ள, "மவனே இன்னைக்கு செத்த.. பாப்பாவை வச்சா நேரம் வந்துருச்சுன்னான். முன்னாடியே சொல்லிருந்தா புள்ளைய சேப் பண்ணிருப்பேனே." என்று புலம்பியபடி தங்கையிருக்குமிடம் பறந்தான்.
மணி ஐந்தரை ஆகியும் அண்ணனை காணவில்லையே பேசாமல் ஆட்டோவில் சென்று விடலாம் என்று முடிவெடுத்தவள் தன்னை கடந்து சென்ற ஆட்டோவை நிறுத்தகொஞ்சம் முன்னே சென்று நின்றது ஆட்டோ.
"எங்கம்மா போகணும்." என்று ஆட்டோ ஓட்டுனர் கேட்கவும், தான் செல்ல வேண்டிய பகுதியை கூறவும்..
"போகும் ஏறுமா." என்றார்.
உள்ளே ஏறி உட்கார்ந்தவளின் கவனம் வேறு எதையோ யோசித்துக் கொண்டிருக்க, ஆட்டோ செல்லும் வழியையும் வழியில் ஏறியவர்களையும் கவனிக்க தவறினாள்.
திடீரென்று வெளியே பார்த்தவள் இது தான் வீட்டிற்கு செல்லும் வழி இல்லையே என்று பதற்றம் கொள்ளவும், "அண்ணா! இது வேற வழி மாதிரி இருக்கே?" என்றதும்..
"ஏம்மா இவ்ளோ நேரம் போலீஸ்காரன் அந்த பக்கமா போக முடியாதுன்னு ரூட்ட மாத்திவிட்டானே கவனிக்கலையா அதான் சுற்றி போறேன்." என்றான்.
"ஒஹ் சரிண்ணா." என்றவள் ஆட்டோவில் தன்னுடன் இருப்பவர்கள் அனைவரையும் கண்டவுடன் மீண்டும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
"அண்ணா கொஞ்சம் முன்னாடி தள்ளி நிறுத்திக்கோங்க. இங்க ஒரு வேலை இருக்கு. இறங்கிக்கிறேன்." என்றாள்.
எதுவும் பேசாமல் ஆட்டோ டிரைவர் வண்டியை ஓட்ட, "அண்ணா நிறுத்துங்க." என்றாள் பயத்துடன்.
"அவர் தான் வண்டி ஓட்டுறார்ல சும்மா எதுக்கு நிறுத்துங்க நிறுத்துங்கன்னு சொல்லிட்டு இருக்க?" என்றான் அருகில் இருந்தவன்.
"ஹலோ! உங்களுக்கென்ன? நான் இறங்கனும் அதனால நிறுத்த சொல்றேன்." என்றாள் பயத்தை மறைத்து கோபமாக.
"தோடா... வண்டிய லாம் நிறுத்த முடியாது. நீ எங்க இறங்கனும்னு நாங்க தான் சொல்வோம். அதுவரைக்கும் அமைதியா வரணும். இல்ல சொருகிருவேன்.. " என்று கத்தியை காட்டவும் உதறல் எடுத்துக்கொண்டது அழகிக்கு.
"யார் நீங்க எல்லாம்? எதுக்கு என்னை கடத்துறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?" என்றாள் அழகி பயத்தோடு.
"இங்க பாரு உன் மேல ஒரே ஒரு நகக்கீறல் கூட படக்கூடாதுன்னு ஆர்டர் இல்ல.. இப்போவே போற்றுவேன்.. வாய மூடு. சத்தம் வரக்கூடாது." என்றான் இன்னொருவன்.
ஷிவாவோ அழகியை நினைத்து உள்ளுக்குள் பயமிருந்தாலும் இவர்களை பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.
"டேய் எங்க இருக்க?" என்றான் கண்ணன் எரிச்சலாக.
தான் செல்லும் வழியை கூறியவன் பின்தொடர்ந்து வருமாறு கூறினான்.
பத்து நிமிடம் கடந்த பின் வீடுகளற்ற யாருமற்ற சாலையில் ஆட்டோ பயணித்தது.
இதுக்கு மேல இவங்களை பாலோ பண்ணா கண்டு புடிச்சிருவானுங்க... என்ன பண்றது?" என்று ஆட்டோ செல்லும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடன் கண்ணனும் சேர்ந்து கொண்டான்.
எதுவுமே பேசாமல் நண்பனை பார்த்த பார்வையில் புரிந்து கொண்டான் ஷிவா.
எவ்வளவு கோபமாக இருக்கிறானென்று.
அதே தெருவில் நீண்ட தூரம் சென்ற பின் அந்த ஆட்டோ நிற்கவும் இருவரும் அழகியை காண பார்த்து கொண்டிருந்தனர்.
வரமாட்டேன் என்ற அழகியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர் இருவர்.
ஷிவா உடனே அலைபேசியில், "நா அனுப்பிருக்க லொகேஷன்னுக்கு எல்லோரும் சீக்கிரம் வந்துருங்க." என்று அலைபேசியை சைலேண்ட் மோடில் போட்டான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top