14
அழும் குழந்தைக்கு வானத்து விண்மின்களை காட்டி கதை கூறியவள் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே வந்தாள்.
'என்ன பார்க்கிறா? அங்க இங்க பார்த்துட்டே இருக்கா... ஆனா எங்கிருந்து தான் இந்த குழந்தைகள் எடுத்துட்டுவராளோ தெரியலை. பார்க்க ரெண்டு குழந்தை மாதிரி தான் இருக்கு... ஆனா மனசு ஏத்துக்க மாட்டேங்குதே..' என்று பெருமூச்சு விட்டவன் அவள் நெருங்கி வரவும் உள்ளுக்குள் ஆனந்தமடைந்தான்.
அவனிடம் வந்தவள், "இன்னொன்னு குடுங்கண்ணா பாப்பாக்கு." என்றாள் சிரித்துக்கொண்டே.
இதயம் காத்திறங்கிய பாலூனாய் சுருங்க, 'என்னாது அண்ணனா... நோ...நோ இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது...' என்று அலறினான்.
"இந்தாங்க" என்றவனிடம் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நகர்ந்தாள்.
தன் அன்னையிடம் மீதி பிரசாதத்தை தர சொல்லிவிட்டு அவளறியாமல் பின் தொடர்ந்தான்.
குழந்தைக்கு பிராசதத்தை ஊட்டி விட்டு விளையாடி கொண்டே குழந்தை இருந்த இடத்திலேயே நின்றாள்.
சில நிமிடங்கள் கடந்த பின் குழந்தையின் பெற்றோர் அழுது கொண்டே தேடியபடி வந்தனர்.
குழந்தையை பார்த்ததும் என ஏதென்று விசாரிக்காமல் வெடுக்கென்று பிடுங்கி முத்தம் கொடுத்து கண்ணீரில் கரைந்தனர்.
"யாரும்மா நீ? குழந்தை திருடியா? அறிவில்ல உனக்கு கோவில்ல போய் குழந்தையை திருட வந்துருக்க? பார்க்க சின்ன பொண்ணு மாதர் இருக்க... இதான் தொழிலா உனக்கு...? உன்னை மாதிரி ஆளுங்கல்லாம் போலீஸ் ல புடிச்சு கொடுக்கணும்." என்று பேசி கொண்டே போக, அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
அழகியை அப்படி பேசுவதை கேட்டு ஷிவாவிற்கு கோபம் அளவுக்கதிகமாக வர, நடந்ததை கூற அவர்களிடம் நெருங்கி போனான்.
அதற்கு முன்னே, "ஒரு நிமிஷம்" என்றாள் அழகி.
'என்ன?' என்பது பார்க்கவும்..
"என்ன விட்டா பேசிட்டு போறீங்க? நான் குழந்தையை திருடினதை நீங்க பார்த்தீங்களா? சரி நீங்க சொல்ற மாதிரி குழந்தை திருடினேன்னே வச்சுக்குவோம்... நீங்க குழந்தையை எந்த இடத்துல தொலைச்சீங்க நான் திருடிட்டு எங்க ஓடினேன்?" என்றாள் நிமிர்வாக.
அவர்கள் யோசித்து பார்க்கவும்...
"என்ன? பதிலையே காணோம்...
பெத்தவங்க தானே நீங்க ரெண்டு பேரும்... சின்ன குழந்தையை பத்திரமா கூட்டத்தில் கூட்டிட்டு போகணும்னு கூட தெரியாது? கொஞ்ச நேரத்துக்கு முன்ன இதே இடத்துல குழந்தை அழுதேன்னு தூக்கி பிரஸாதம் ஊட்டிட்டு நீங்க தேடி இங்க தான் மறுபடியும் வருவிங்கன்னு இங்கயே நிக்குறேன் என்னை பார்த்தா திருடி மாதிரி இருக்கா?" என்றாள் கோபமாக.
எதுவும் பேசாமல் அவர்கள் அமைதியாக இருக்கவும் "யார் மேலயும் எடுத்தோம் கவுத்தோம்னு பழி சொல்ற வேலை வச்சுக்காதீங்க." என்று குழந்தையை கொஞ்சி, "குழந்தை பத்திரம்" என்று நிமிர்வாய் அங்கிருந்து நகர்ந்தாள்.
'ப்பா... என்னடா இவ இப்படி இருக்கா... குழந்தைன்னு நினைச்சா பேச்ச பாரு... பட்டு பட்டுன்னு எப்படி பேசுதுன்னு... ஒரே நாள்ல மனசுக்குள்ள ஏறிட்டு போக மாட்டா போல இருக்கே...?' என்று நினைத்தபடி வெளியே சென்று அவளை தேட, அதிர்ச்சியானான்.
அங்கே தன் நண்பன் கண்ணனுடன் பைக்கில் ஏறி சென்று கொண்டிருந்தாள் அவனின் ரெட்டை வால் அழகி.
"கண்ணன் கூட போறா? யாரா இருக்கும்?" என்று தனக்குள் பேசியபடியே உள்ளே சென்றான்.
*****
உறங்கும் தன் மனைவியின் முகத்தை பார்த்தவாறே தூங்கி போனான் ஷிவா.
வெயில் முகத்தில் அடிக்க மெதுவாய் எழுந்தவள் தான் எங்கே இருக்கிறோம் என்று முதலில் எதுவும் புரியாமல் முழித்தாள்.
பின் நேற்று நடந்தவைகளை நினைவு வர, சுற்றி முற்றி பார்த்தாள்.
ஷிவா தரையில் படுத்திருக்க, 'இவர் என் பக்கத்துல தான தூங்கிட்டு இருந்தாரு... எப்படி இப்போ கிழ தூங்குறாரு... பாவம் என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்த முதல் நாளே கிழ படுக்க வச்சுட்டேன்.' என்று மெதுவாய் இறங்கி சத்தம் வராமல் குளியரைக்குள் புகுந்து கொண்டாள்.
முகம் கழுவி வந்தவள் சில நொடி நின்று சிவாவின் முகம் பார்க்க, அமைதியான முகத்தில் ஏதோ யோசனை தோன்ற நெற்றி சுருக்கியவனிடம் அமர்ந்து தன் இரு விரல்களால் லேசாக பட்டும் படாமலும் நீவி விட அவள் விரலின் ஸ்பரிசமோ அல்லது அவன் குழப்பத்தின் விடிவோ மெல்லிய புன்னகை இதழில் அரும்பவும் அழகிக்கும் புன்னகை வளர்ந்தது.
"நீங்க என்னை மூணு வருஷமா விரும்பி இருக்கிங்கன்னு அண்ணன் சொன்னாங்க. உங்க மேல எவ்ளோ நம்பிக்கை இருந்திருந்தா என் அண்ணன் என்னை உங்கக்கூட போக சம்மதிருச்சிருப்பான்.
இந்த மூணு வருஷத்துல எனக்கு தெரியாம எத்தனையோ முறை என்னை பார்த்துருப்பிங்க... இருந்தும் ஒரு முறை கூட என்கிட்ட நெருங்கி பேசினதில்லை, என் முன்னாடி வந்ததில்லை... நீங்க விரும்புறிங்கன்னு கூட எனக்கு தெரிவிச்சதில்லை... ஆனா, நான் யாரையும் திருமணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்ன ஒரே வார்த்தைக்காக என் கழுத்துல தாலி கட்டிருக்கிங்கன்னா என் மேல எவ்ளோ அன்பு வச்சுருக்கிங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.
இருந்தாலும் இந்த ஒரு காரணத்துக்காக உடனே உங்களை என் கணவனா என்னால ஏத்துக்க முடியாது. அப்படி ஏத்துகிட்டா அது நல்லாவும் இருக்காது. என் கழுத்துல தாலி கட்டிய நொடிலர்ந்து நீங்க தான் என் வாழ்க்கைன்னு முடிவாகிருச்சு. இருந்தாலும் நீங்க என்னை ஆழமா நேசிக்கிற மாதிரி நானும் உங்களை நேசிக்கனும். நானும் உங்க அன்பை உணரனும். அதுக்கு எவ்ளோ நாள் ஆகும்னு எல்லாம் தெரியாது. ஆனா நடக்கும்.
மெது மெதுவா பேசணும் நீங்க எனக்காக மாறாம அப்டியே இயல்பா இருக்கணும் கொஞ்சம் கொஞ்சமா ரசிச்சு உங்களை புரிஞ்சுக்கனும்... அதுவரைக்கும் நீங்க வெய்ட் பண்ணுவிங்களான்னு கூட தெரியாது. ஆனா எப்பவுமே என்கூட இருப்பிங்கன்னு என் மனசு சொல்லுது. பார்ப்போம்." என்றவள் அசைந்தாடிய அவனின் சிறு முடியை விரல்களால் கோதிவிட்டு எழுந்து வெளி நடந்தாள்.
அவள் வெளியே சென்றதும் கண்களை திறந்தவன்.
"எவ்ளோ பேசுறடி நீ? நீ சொன்ன எல்லாமே நடக்கும். அதுவரைக்கும் இல்ல என் உயிர் இந்த மண்ணுக்குள்ள போற வரைக்கும் காத்துட்டு இருப்பேன்டி பொண்டாட்டி" என்று கூறி சிரித்தான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top