13

"மா ஏம்மா என் உயிரை எடுக்கிற? " என்று போனில் அம்மாவிடம் பேசிக்கொண்டே சாலையின் எதிர்ப்புறத்தில் பார்வையை சுழலவிட, விழிகள் வேறுப்புறம் திரும்ப மறுத்தது.

அங்கே, அம்மாவின் கரங்கிளில் இருக்க முடியாமல் திமிறிக்கொண்டு அழுதிருந்த குழந்தையை கவனிக்க மனம் பதறியது.

'என்ன ஆச்சு ஏன் குழந்தை இப்படி அழுகுது. எவ்ளோ அழகா இருக்கு. என்ன ஆச்சு தெரியலையே... கிட்ட போய் கேட்போமா?' என்று பைக்கை சற்று தள்ளி ஓரம்கட்டி இறங்க போக...

அந்த குழந்தையின் அருகில் இருந்த பள்ளிக்கூட மாணவிகளின் கூட்டத்திக் சிறு சலசலப்பு... "ஏய் வேணாமடி..." என்று பெண்கள் கூக்குரலிட.. குழந்தையிடம் நெருங்கியிருந்த பெண்ணொருத்தி... சட்டென திரும்பி, இடையில் கரம் வைத்து அவர்களை முறைத்து... "இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு...? நான் என்ன பாம்பையா பிடிக்க போறேன்? இந்த கத்து கத்துறீங்க?  பாப்பாவை தானே சமாதானம்  செய்ய போறேன். வாய மூடுங்கடி..." என்று விழிகளை உருட்டி ரெட்டை பின்னல் அசைந்தாட மிரட்டிக் கொண்டிருந்தாள் இளம் பெண்ணொருத்தி.

அழகு தான் யாரையும் உறுத்தாத எளிமையான அழகு. ஆனால் அதில் ஒரு நிமிர்வு இருந்தது.

மீண்டும் குழந்தையிடம் நெருங்கியவள் குழந்தையின் அம்மாவிடம் பேச்சு கொடுத்தாள்.

குழந்தையை அப்படியே கொஞ்ச தொடங்கினாள். குழந்தை மொழி பேசி இயல்பாக தலையாட்டி சிரித்து விளையாடும் இன்னொரு குழந்தை போல் தோன்ற அவளை ரசிக்க தொடங்கினான்.

சில நொடி விளையாடினாலும் மீண்டும் அவளிடம் உதட்டை பிதுக்கி பிள்ளை மொழியில் பேசி அழும் குழத்தையை பார்த்து தானும் உதட்டை பிதுக்கி அழ தயாரானவள் குழந்தையை வாங்கி கொண்டு அதன் உடம்பில் சோதனை செய்தாள்.

குழந்தையின் முட்டி மடங்கும் இடத்தில் இரண்டு எறும்புகள் கடித்து கொண்டிருக்க, பிள்ளை மொழியில் அதை கூறியது போலும் குழந்தை.

எறும்புகளை தட்டி விட்டவள் குழந்தையை அதற்கும் சேர்த்து சமாதானம் செய்ய வலி மறைந்ததும் பொக்கை வாய் திறந்து சிரித்தது..

தோழிகள் பேருந்து வருவதை உணர்த்த குழந்தையை கொடுத்துவிட்டு வேகமாய் ஓடி போய் எறிக்கொண்டாள்.

கனவிலிருந்து யாரோ எழுப்பியது போல் இருந்தது ஷிவாவிற்கு.

எதிரில் அவனின் அம்மா போனில் கத்தி கொண்டிருந்தார்.

"டேய் ஷிவா..."

"அய்யோ ஏன் மா இப்படி காத்துறீங்க?" என்றான் ஷிவா.

"என்னது கத்துறேனா? ஏன்டா அறிவுகெட்டவனே இவ்ளோ நேரமா கூப்பிட்டு இருக்கேன்... கத்துறேன்னு சொல்ற?" என்றார்.

"இப்போ என்ன உங்கக்கூட வரணும் அவ்ளோ தான வரேன். போதுமா?" என்றான் ஷிவா.

"சரிடா.. சீக்கிரம் வந்துரு" என்ற அம்மாவிடம் "ஹம்" என்று வைத்தான்.

ரெட்டை வால் அழகியின் முகம் ஏனோ மனதில் இருந்து இறங்க மாட்டேன் என முரண்டு பிடிக்க, 'அயோ அந்த பொண்ணு யாருன்னே தெரியலை... அதைவிட ஸ்கூல் பொண்ணு. இந்த மாதிரி மனசை அலைபாயவிடறது தப்பு. உனக்கு கொஞ்ச மாச்சும் அறிவிருக்கா?' என்று தனக்குள் திட்டிக்கொண்டே அவளை நினைக்க கூடாதென்று மனதோடு ஒப்பந்தம் போட்டு கொண்டிருக்க அதற்கும் வந்தது சோதனை.

மாலை, தன் தாய் கூறிய கோவிலின் முன் காரை நிறுத்தியவன் இறங்க போக, "ஷிவா கண்ணா! அம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்ல..." என்றார்.

"போதும்மா... எனக்கு கேட்டு கேட்டு காது புண்ணாகிருச்சு." என்றான் அலுப்பாக.

அன்னையின் முகம் சுருங்கிவிட, "சரி சரி முகத்தை இப்படி வைக்காதீங்க. இப்போ என்ன? எனக்கு இப்போ நேரம் சரியில்லை... ஜாதகத்துல கண்டமுன்னு ஜோசியர் சொல்லிட்டார். அதனால அவர் சொன்ன பரிகாரத்தை பண்ணனும். அவ்ளோ தான... பண்ணிடலாம்." என்றான் ஒரே மூச்சாய்.

"சரி டா." என்றார் முகம் முழுக்க மகிழ்ச்சியில்.

மாலை ஏழு மணி, சிவாவின் குடும்பத்துடன் முருகர் கோவிலிற்கு வந்து இருந்தனர். கோவிலில் வெள்ளிக்கிழமை என்பதால் மிகவும் கூட்டமாக இருந்தது. எவ்வளவு கூப்பிட்டும் கோவிலின் கருவறைக்கு வர முடியாது என்று பிடிவாதமாக வெளியே நின்றுவிட்டான் ஷிவா.

'பா.. இவ்ளோ கூட்டமா இருக்கு? இந்த அம்மா வேற சொன்னா கேட்கிறதே இல்ல... இந்த உலகத்துல எத்தனையோ கோடி பேர் இருக்காங்க... எத்தனையோ மதம் இருக்கு. எல்லோருக்குமே ராசி இருக்காதா..? மனுஷங்க மனசுல சஞ்சலத்தை உண்டாக்குறது தான் ஈஸியான வேலைன்னு எவனோ ஜோசியமன்ற பேரில் ஏமாத்துறான்... அந்த ஜோசிய காரன் மட்டும் என்கிட்ட கிடைச்சான் அவனுக்கு வலம்புரி சங்கு தான். என் உயிரை இப்படி எடுக்கிக்கிறாய்ங்களே' என்று தலையில் அடித்து கொண்டான்.

அர்ச்சனை முடிந்து வெளியே வந்தவர்களிடம், "முடிஞ்சுதா போலாமா?" என்று கேட்கவும்.

"டேய் இருடா" என்றதும், "இன்னும் என்னம்மா?" என்றான்.

"அதோ அங்க நின்னு, சாமி கும்பிட்டு வரவங்களுக்கு இந்த பிராசதத்தை கொடு." என்றார் அவனின் தாய்.

"மா.." என்று முறைத்தவனை இவர் முறைக்க,

கோபமாய் பிரசாதத்தை பிடுங்கி கொண்டு போய் கொடுக்க ஆரம்பித்தான்.

பத்து பேருக்கு கொடுத்த பின், "மா நீங்களே கொடுங்க" என்று போக எத்தனிதவனின் பார்வையில் விழுந்தாள் வரிசையில் நின்ற ரெட்டை வால் அழகி.

"ரொம்ப தான்டா பண்ற.. சரி போ." என்றவரிடம்...

"சரி விடுங்க. நானே தரேன்." மீண்டும் கொடுக்க.

அவன் பார்வைகள் அவ்வப்பொழுது அழகியை முழுதாய் உள்வாங்குவதில் இருந்தது.

பள்ளி உடையில் பார்த்திருக்கும் இந்த உடையில் பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் ஏராளம்.

ஆகாய நீல வண்ணத்தில் சிறு பட்டை வைத்து அளவெடுத்து செய்தது போல் மேல் சட்டையும் அதே நிறத்தில் சிறு சிறு பூக்கள் இருந்த பாவாடையும் ரெட்டை சடையும் அதில் தவழ்ந்த மல்லிகை சரமும் அவனை பித்தனாக்கியது.

'எப்பா... ஏன்னா அழகு... யூனிஃபாரம்ல விட இதுல அழகு அள்ளுதே... என் மனசை என்னாயே கண்ட்ரோல் பண்ண முடியலையே..' என்று மனம் அடித்துக்கொள்ள, 'டேய்... அது ஸ்கூல் போற குழந்தை டா... அசிங்கமா இல்ல உனக்கு.. போடா. போய் வேலையை பாரு.' என்று மூளை காரி துப்பியது.

இருந்தும் ஒரு முறை விழுந்த மனது எழ மறுத்து முரண்டு பிடித்தது.

நான்காவது ஆளாய் நின்ற பொழுது வேகமாய் அங்கிருந்து ஓட, 'அய்யய்யோ எங்க போறா... அவளுக்காக தானே நான் இங்கே நின்னேன்.' என்று தேட... தூரத்தில் அழும் குழந்தையை தூக்கி கொண்டு வந்தாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love