1
“இப்போ எழுந்திருக்க போறியா இல்லையா?” என்று ஆறாவது முறையாக தன் அறையில் வந்து முறைக்கும் அண்ணனை சட்டை செய்யாமல் உறங்கி கொண்டிருந்தாள் அறிவழகி.
“அழகி! கடைசியா சொல்றேன் எழுந்திருடா செல்லம்.” என்று கெஞ்சும் அண்ணனை பார்க்க பாவமாய் இருந்தாலும் “போண்ணா!” என்று போர்வையை தலைக்கு மேல் போர்த்திக்கொண்டு படுத்தாள் அறிவழகி.
“இரு உன்னை.. இதோ வரேன்.. இவ்ளோ கெஞ்சுறேன். கொஞ்சமாவது கேக்குறியா?” என்று ஒரு சொம்பு தண்ணியை அவளின் மேல் ஊற்றினான் கண்ணன்.
என்ன நடந்தது என்று தண்ணீர் தன் மேல் விழுந்து மொத்தமாய் நனைந்த பின் தெரிய வேகமாய் எழுந்தாள் அறிவழகி.
“அண்ணா!” என்று கத்த.
“என் தப்பு இல்லடா. நானும் அரைமணி நேரமா எழுப்புறேன் நீ தான் எழலை. அதான் கொஞ்சமா ஒரே ஒரு சொட்டு தான் ஊத்தனும்னு தான் நினைச்சேன். ஆனா, என் கை என் பேச்சே கேக்கலைடா.” என்று ஒன்றும் தெரியாதவன் போல உள்ளுக்குள் சிரித்து பாவமாய் பார்த்தான்.
“உன்னை இன்னைக்கு விட போறதில்ல நான்” என்று மெத்தையில் இருந்து எழுந்து அண்ணனை துரத்த அவனும் அவளுக்கு போக்கு காட்டி வீடு முழுவதும் ஓடினான்.
“அம்மா! இங்க ஒருத்தி இந்த அப்பாவி புள்ளைய கொல்ல வரா. சீக்கிரம் வந்து என்னை காப்பாத்துங்க.” என்று கத்திக்கொண்டே ஓடினான்.
“நீ என்ன கத்தினாலும் உன்னை இன்னைக்கு நான் விடறதா இல்லைடா” என்று கூறியபடியே கையில் கட்டையுடன் துரத்தினாள் அறிவழகி.
“யாருடா அது? என் புள்ளைய அடிக்க துரத்திறது?” என்று கேட்டு கொண்டே வந்தவர் இவர்கள் இருவரையும் பார்த்து.
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா? எருமைமாடு கணக்கா வளர்ந்துட்டு இப்படி சின்ன புள்ளைங்க மாதிரி வீட்டுக்குள்ள ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருக்கீங்க?” என்றார் கமலி.
“யாரு? எனக்கு? நான் ஒழுங்கா தூங்கிட்டு தான் இருந்தேன். இங்க பாருங்க உங்க புள்ளை பண்ண வேலைய? என் மேல முழுதும் தனி ஊத்திட்டான். இவனை..” என்று மீண்டும் அறிவழகி துரத்தினாள்.
“போதும் நிறுத்துடி. இன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள். நீ வராம அவன் என்னைக்காவது சாப்பிட்டிருக்கானா? அது தெரியாம இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க?” என்று முறைத்தார்.
“ஆமால்ல? இன்னைக்கு அண்ணனுக்கு பிறந்தநாள் இல்ல. நான் மறந்தே போயிட்டேன்” என்றாள் தலையை சொறிந்தபடி.
“யாரு நீ மறந்துட்ட?” இடையில் கரம் வைத்து முறைத்தவர்.
“ஏன்டி நேத்து முழுக்க எங்கண்ணனுக்கு பிறந்தநாள்ன்னு போஸ்டர் மட்டும் தான் அடிக்கலை. ஊரு பூரா சொல்லிட்டு வந்தல்ல? அப்புறம் ஒரே ராத்திரில மறந்துடுமா? நான் நம்பிட்டேன்” என்று உள்ளே சென்றார்.
“மறியாதையா ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்று குரல் கொடுத்தார் கமலி.
“ஏய் வாலு! நீ என் பிறந்தநாள மறந்துட்ட. நான் அதை நம்பனுமா? இன்னைக்கு என்ன பண்ணி வச்சிருக்க?” என்று கண்ணன் காதை பிடித்து திருகினான்.
“ஆ... அண்ணா! விடுண்ணா வலிக்குது.” என்று துள்ளினாள்.
“சார்! இங்க கண்ணன் யாருங்க?’ என்று வாசலில் குரல் கேட்க, ”உன்னை வந்து பேசிக்கிறேன்” வெளியே சென்றான்.
“யாரு நீங்க? நான் தான் கண்ணன்” என்றான் கண்ணன்.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.” என்று ஒரு பார்சலை நீட்டினான் வந்தவன்.
”என்னது இது? யாரு கொடுத்தாங்க?” என்றான் வாங்காமல் கண்ணன்.
“சார்! உங்க பேர்ல இன்னைக்கு விவேக் அனாதை இல்லதுக்கு 100 பேருக்கு சாப்பாடு போட ஏற்பாடு பண்ணிருக்காங்க. அப்படியே இதையும் கொடுக்க சொன்னாங்க. உங்க தங்கச்சி” என்றான் வந்தவன்.
மனம் நிறைய மலர்கள் கொட்டியது போல் இருந்தது கண்ணனுக்கு.
“அழகி! “ என்று குரல் கொடுத்தான் பார்சலை வாங்கி பார்த்துக்கொண்டே.
அதில் அழகிய வேலை பாடுகள் நிறைந்த ஒரு வெள்ளி லாக்கெட் இருந்தது. அதில் இரு பக்கமும் தங்களின் சிறுவயது புகைப்படம் வைத்தது போல் இருந்தது.
“பிடிச்சிருக்கா?” என்றாள் பின்னால் இருந்து அறிவழகி.
“ரொம்ப நல்லா இருக்குடா.” என்று சிரித்தான் கண்ணன்.
உள்ள வா. நானும் உனக்கு ஒரு பரிசு வாங்கி வச்சிருக்கேன். தன் பையிலிருந்த ஒரு கிப்ட் பேகை கொடுத்தான். அதில் ஒரு புத்தம் புதிய போன் இருந்தது. "ஹை! எனக்கா போன் அண்ணா?" என்று குதித்தாள்.
அவளின் சிறு குழந்தை தனத்தை தலையாட்டி சிரித்தவன்.
'இவ்ளோ வளர்ந்தாலும் இன்னும் சின்ன குழந்தையா இருக்காளே? கடவுளே என் தங்கச்கி எப்பவுமே நல்லா இருக்கணும்' என்று மனதிற்குள் வேண்டியவனின் கவனத்தை கலைத்தது.
"ஏன்டி! உங்கண்ணன் நீ தலைதேச்சி விட்டா தான் குளிப்பான் தெரியுமா தெரியாதா? இன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள்டி. ஆஃபிஸ்கு டைம் ஆகலையா அவனுக்கு? உனக்காக எவளோ நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கான்." என்று அம்மா தங்கையை திட்டினார் .
"அம்மா! விடுங்கம்மா. இன்னைக்கு லீவ் போட்டுட்டேன். அவளே என்னைக்காவது ஒரு நாள் தான் இவ்ளோ நேரம் தூங்குறா. அவளை போய் திட்டிட்டு இருக்கீங்க?" என்று தங்கைக்கு பரிந்து பேசினான்.
"ஆமாடா. வந்துட்டியா? இன்னும் எங்க காணொம்னு நினைச்சேன். ஏன்டா! அவதான் ஏதோ அறியாத வயசுல நான் தான் அண்ணனுக்கு தலை தேச்சி விடுவேன்னு சொல்லிட்டா. நீயும் அப்பர்த்துலர்ந்து தங்கச்சி தான் எனக்கு தலை தேய்கணும்னு அடம்பிடிக்கிற. இன்னொருத்தன் வீட்டுக்கு வாழ்போறவடா அவ. அப்போ என்ன பண்ணுவ?' என்று இடையில் கரம் வைத்து முறைத்து கொண்டு நின்றார் கமலி.
"அம்மா! அண்ணனுக்கு இன்னைக்கு பிறந்தநாள். சும்மா ஏன் திட்டிட்டு இருக்க? நான் எங்க இருந்தாலும் என் அண்ணனோட பிறந்தநாளுக்கு நான் தான் தலை தேய்ச்சு விடுவேன்." என்று அண்ணனுக்கு பரிந்து பேசினாள் அறிவழகி .
"எப்படியோ போங்க.." என்று உள்ளே சென்று விட்டார்.
பேப்பர் படித்து கொண்டிருந்த அகிலன், "நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன். அவங்க பேச்சுக்கு நீ போகாதன்னு ? இப்போ பாரு உனக்கு தான் பல்பு.” சிரித்தார்.
"அப்படி இல்லைங்க. எனக்கு இது தான் சந்தோஷம். என்னைக்கும் என் பசங்க ரெண்டு பேரும் இதே மாதிரி இப்படியே இருக்கணும். கடவுல்கிட்ட அதை தான் கேக்றேன் ." என்று உள்ளே சமையலறை சென்றார் கமலி.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top