56 திட்டத்தில் மாற்றம்

56 திட்டத்தில் மாற்றம்

மாதேஷுக்கு சஞ்சனா ஃபோன் செய்ய நினைத்த போது, கதவு திறக்கும் சத்தம் கேட்டு தன் கையில் இருந்த கைபேசியை ஒளித்துக் கொண்டாள். உள்ளே வந்தவன் சின்னசாமி தான். அவனை ஒன்றும் அறியாதவளை போல் பார்த்தாள் சஞ்சனா.

"உனக்கு நான் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தா, நீ உன்னை நிரூபிச்சி காட்டுவேன்னு சொன்னல்ல? அப்படின்னா, பவித்ராவை அவங்க வீட்டை விட்டு உன்னால வெளியில கொண்டு வர முடியுமா?" என்றான் சின்னசாமி.

"பவித்ராவையா?"

"ஆமாம். எங்க ஜோசியர் சொன்ன மாதிரியே எங்க அப்பா இப்போ ஆபத்தான நிலைமையில இருக்காரு. அதுக்காக தான், நாங்க அவர் சொன்ன மாதிரி இருக்கிற ஒரு ஜாதகத்தோட இருக்கிற பெண்ணை தேடிக்கிட்டு இருந்தோம். ஒருவேளை அவர் பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த ஆபத்தில் இருந்து மீண்டு வந்துடுவாரோ என்னவோ..."

"ஆனா, பவித்ராவுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே"

"அது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல. தேவைப்பட்டா அவ புருஷனை நான் கொன்னு போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன். ஒரு தடவை அதை முயற்சி பண்ணி பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு?"

"உண்மையை சொல்றேன்... என்னால பவித்ராவை அங்கிருந்து கொண்டு வர முடியும்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல. ஆனா, உன்னை அவங்க வீட்டுக்குள்ள என்னால கொண்டு போக முடியும். உனக்கு தைரியம் இருந்தா நீ அங்கிருந்து அவளை கூட்டிக்கிட்டு வந்துக்கோ"

"எனக்கு தைரியம் இல்லையா?" என்றான் நக்கலாக.

"நிச்சயமா இருக்கு. அந்த வீட்டுக்குள்ள வர நீ தயாரா இருந்தா, நான் உன்னை அங்க கூட்டிக்கிட்டு போறேன். அதுக்குப் பிறகு நீயாச்சு, அவங்களாச்சு"

"அது போதும் எனக்கு. என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போ. ஆனா அதுக்கு முன்னாடி, நான் சொல்றதை நீ செஞ்சாகணும்"

"நான் என்ன செய்யணும்?"

"உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அவரை என்கிட்ட கொண்டு வந்து ஒப்படைச்சிட்டு அதுக்கு பிறகு தான் நீ எங்ககிட்ட இருந்து வெளியே போக முடியும்"

"சரி, நான் எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்றேன்"

"உங்க அப்பாவுக்கு நம்ம திட்டம் எதுவும் தெரியக்கூடாது."

"நான் அவர்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்"

"ஏதாவது நீ செஞ்சு இங்க இருந்து தப்பிக்க நினைச்சா, உன்னை கொல்ல நான் தயங்க மாட்டேன்"

"எனக்கு தெரியும். ஆனா, பவித்ராவை நான் கொண்டு வந்து சேர்த்த பிறகு, நீ என்னை இதுல இருந்து விடுவிச்சிடணும்"

"பவித்ரா எங்களுக்கு கிடைச்சதுக்கு அப்புறம் உன்கிட்ட எங்களுக்கு என்ன வேலை?"

"சரி"

தனது கைபேசியை சஞ்சனாவிடம் கொடுத்தான் சின்னசாமி. அவள் மாதேஷுக்கு ஃபோன் செய்தாள்.  அவர் அந்த அழைப்பை ஏற்றார்.

"டாட்..." என்று பலவீனமான குரலில் பேசி, சின்னசாமியை திகைப்படையச் செய்தாள் சஞ்சனா.

"சஞ்சு, நீ எங்க இருக்க? எப்படி இருக்க? நான் உன்னை பத்தி கேள்விப்பட்டதெல்லாம் உண்மை தானா? நீயும் சின்னசாமியும் கூட்டாளிங்கன்னு போலீஸ் சந்தேகப்படுறாங்க"

"இல்ல டாட். அப்படியெல்லாம் இல்ல. அவன் என்னை போலீஸ்கிட்ட இருந்து கிட்னாப் பண்ணிக்கிட்டு வந்துட்டான்"

"அவன் ஏன் அப்படி செஞ்சான்?"

"நான் தூயவனோட சேர்ந்துக்கிட்டு வேணுமின்னே அவனை போலீஸ்ல மாட்டி விட்டதா அவன் நினைக்கிறான்"

"என்ன முட்டாள் தனம் இது? இப்போ நீ எங்க இருக்க?"

"நான் இப்போ சென்னைல தான் இருக்கேன். எனக்கு ஒரு ஃபோன் கிடைச்சது. அதனால தான் உங்களுக்கு பேசுறேன்.

"நீ எங்க இருக்கேன்னு எனக்கு க்ளூ குடுத்தா, நான் அங்க வரேன்"

"அதை உங்களால தனியா செய்ய முடியாது. தூயவனையும் கூட்டிக்கிட்டு வாங்க"

"தூயவனயா? எதுக்கு?"

"அவனைப் பத்தி உங்களுக்கு தெரியாதா? அவன் நினைச்சா எதை வேணும்னாலும் செஞ்சி காட்டுவான். உங்க ஈகோவை தள்ளி வச்சிட்டு, தயவு செஞ்சி அவனை கூட்டிக்கிட்டு வாங்க. போலீசுக்கு மட்டும் போய்டாதீங்க. இவங்க என்னை கொன்னுடுவாங்க"

"சரி. நான் போலீசுக்கு போக மாட்டேன். நான் தூயவனோட பேசுறேன். நாங்க எங்க வரணும்?"

"டாட், யாரோ வரா மாதிரி தெரியுது. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன். தயவு செஞ்சி நீங்க எனக்கு ஃபோன் பண்ணாதீங்க. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நானே உங்களுக்கு ஃபோன் பண்றேன்" என்று அழைப்பை துண்டித்து சின்னசாமியை ஏறிட்டாள்.

"எதுக்காக தூயவனை வர சொன்ன?" என்றான் சின்னசாமி.

"பவித்ரா கூடட தூயவன் இருக்கிற வரைக்கும் அவளை உங்களால நெருங்க முடியாது. அவனை வெளியில கொண்டு வந்து எங்கையாவது பிடிச்சி வையுங்க.  அப்ப தான் உங்களால பவித்ராவை நெருங்க முடியும்" என்றாள் சஞ்சனா.

"இதுவும் நல்ல ஐடியா தான்"

"தூயவனை குறைச்சி எடை போடாதீங்க. அவன் ரொம்ப ஆபத்தானவன்"

"என்னை விட ஒன்னும் இல்ல"
என்றான்.

ஆம் என்று தலையசைத்தாள் சஞ்சனா.

"சென்னைக்கு போய் சேர்ந்ததுக்கு பிறகு, நான் எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி உங்க இடத்துக்கு வர சொல்றேன்"

"சரி வா போகலாம்"

தான் ஒளித்து வைத்திருந்த கைபேசியை எடுத்து, தனது உடைக்குள் மறைத்துக் கொண்டு அவனுடன் சென்றாள் சஞ்சனா.

சின்னசாமி தன் ஆட்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்தான். அங்கு ஒரு பேருந்து தயார் நிலையில் இருந்தது. சின்னசாமியின் ஆட்கள் பர்தா அணிந்து கொண்டு அதில் ஏறிக்கொண்டார்கள். சஞ்சனாவுக்கும் ஒன்று கொடுத்தான் சின்னசாமி.

"இதை போட்டுக்கோ. அப்ப தான் நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வராது"

"சரி" என்று தலையசைத்துவிட்டு அதை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள் சஞ்சனா.

தூயவன் இல்லம்

தன் முகத்தை துடைத்த படி  குளியலறையை விட்டு வெளியே வந்தாள் பவித்ரா. தன் மடிக்கணினியில் மின்னஞ்சல்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான் தூயவன். பவித்ரா அவனை கடந்து சென்ற போது, அவளது சேலை தலைப்பை பற்றி தன் கையில் சுருட்டி கொண்டான். பின்னால் இழுக்கப்பட்ட பவித்ரா, திரும்பி பார்க்க அவளது சேலை முந்தானை அவன் கையில் இருந்ததை கண்டு,

"என்ன பண்றீங்க நீங்க? விடுங்க" என்றாள். 

"இங்க பாரு பவித்ரா, இந்த விஷயத்துல நீ தலையிடாத. இது எனக்கும் என் எதிரிக்கும் இடையில இருக்குற பிரச்சனை" என்றான்.

"எதிரியா? நீங்க யாரை பத்தி பேசுறீங்க?" என்றாள் அவளது முகத்தை சுருக்கி.

அவள் முந்தானை பிடித்து லேசாய் இழுக்க, அவளை நோக்கி ஓடிய பவித்ரா, அவன் மீது விழுந்தாள். 

"இந்த புடவை தான் என் எதிரி. எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல இது தான் பெரிய தடை" என்று அவள் காதில் ரகசியமாய் கூறி, அவளை வெட்கப்பட செய்தான்.

"உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்காக இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?"

"எப்படி? பைத்தியக்காரன் மாதிரியா...? என்னை இப்படி மாத்தினதே நீ தான்... ஆனா ஒன்னும் தெரியாத மாதிரி பேசிக்கிட்டு இருக்க..."

"இப்போ உங்களுக்கு என்ன வேணும்?"

"ஒரு லிப் லாக்... அட்லீஸ்ட், லவ் மேக்கிங்..."

"என்னது? அட்லீஸ்ட் லவ் மேகிங்கா? அதுவே அட்லீஸ்ட் ஆன விஷயமா இருந்தா, அதைவிட பெருசா வேற என்ன இருக்கு?"

"அதெல்லாம் லவ் மேக்கிங்கை ஸ்பெஷலா மாத்துற விஷயம். நீ எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தா அத எல்லாம், செயல் முறை மூலமா உனக்கு புரிய வைப்பேன்"

"இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?"

"இதெல்லாம் உன்னால தான்... அடிக்கடி நீ என்னை கவனிச்சுக்கிட்டே இருந்தா நான் ஏன் இப்படி எல்லாம் இருக்க போறேன்?"

"நீங்க வர வர மோசமாக்கிட்டே போறீங்க" என்று அவள் அங்கிருந்து செல்ல முயல, மீண்டும் அவளை தன்னை நோக்கி இழுத்தான். அவளது சேலை முந்தானை இன்னும் அவன் கையில் தான் இருந்தது.

"இன்னும் நீங்க இதை விடலயா?" என்றாள்.

இல்லை என்று தலையசைத்தான்.

"விடுங்க"

முடியாது என்று தலையசைத்தான்.
அவள் அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட, அவன் அதில் முழ்கி திளைத்தான். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவன் கையில் இருந்த தன் சேலை முந்தானையை இழுத்து, அங்கிருந்து ஓட முயன்றாள்.  அவளை துரத்திக் கொண்டு ஓடிய தூயவன், பின்னால் இருந்து அவள் இடுப்பை வளைத்து தூக்கிக் கொண்டான்.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தூயவன் தன் கண்களை சுழற்ற, அவனைப் பார்த்து புன்னகை சிரித்தாள் பவித்ரா.

"என்னை விடுங்க"

"முடியாது" என்று அவளை தூக்கி படி நடந்தான்.

மாயவன் சென்று கதவை திறந்தார். அங்கு மாதேஷ் நின்று கொண்டிருப்பதை பார்த்து முகம் சுருக்கினார். அவர் ஏன் அங்கு வந்திருக்கிறார் என்று மாயவனுக்கு புரியவில்லை. ஏனென்றால் சந்தோஷும் அங்கு இல்லை. அப்படி இருக்க அவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார்?

"நான் தூயவனை பார்க்கணும்" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் மாதேஷ்.

"அவன் ரூம்ல இருக்கான். என்ன விஷயமா வந்த?"

"ரொம்ப அர்ஜென்ட். நான் அவனை அவசரமா பாக்கணும்."

"விஷயம் என்னென்ன முதல்ல சொல்லு."

"சஞ்சனாவை சின்னசாமி கடத்திக்கிட்டு போயிட்டான்"

"என்னது? கடத்திக்கிட்டு போயிட்டானா? அவ அவனோட பார்ட்னர்"

"இல்ல. அது உண்மை இல்ல. தயவு செஞ்சி தூயவனை கூப்பிடு. அவனால தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்"

"அதெல்லாம் நடக்காது. அவன் எதுக்கு உனக்கு ஹெல்ப் பண்ணணும்? தேவையில்லாம எதுக்கு இந்த விஷயத்துல அவனை நீ இழுத்து விடுற?"

"ஏன்னா, தூயவனுக்கு மட்டும் தான் சின்னசாமியை பத்தி தெரியும்"

"நீ போலீஸ்ல போக வேண்டியது தானே?"

"போலீசுக்கு போனா அவங்க சஞ்சனாவை கொன்னுடுவாங்க"

"தூயா உனக்கு ஹெல்ப் பண்ணா, அவங்க அவனை கொன்னுடுவாங்க"

"நான் தூயவன்கிட்ட பேசுறேன். எனக்கு உதவறதா வேணாமான்னு அவன் முடிவு பண்ணட்டும்"

"இல்ல. அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்"

"என் பொண்ணோட வாழ்க்கை ரொம்ப ஆபத்தில் இருக்கு..."

"சின்னசாமி மாதிரி ஒரு ஆள் கூட சேர்ந்தா வேற என்ன நடக்கும்?"

"அவள் அவன் கூட இல்ல"

"அதை பத்தி எல்லாம் எனக்கு அக்கறை இல்ல. எனக்கு என்னோட குடும்பம் தான் முக்கியம். இங்கிருந்து கிளம்பு"

மாயவனை பிடித்து தள்ளி விட்டு, உள்ளே நுழைந்த மாதேஷ்,

"தூ...யா..." என்று கத்த, பவித்ராவை முத்தமிட குனிந்த தூயவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top