53 புதுமண தம்பதியினர்

53 புதுமண தம்பதியினர்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்...! கர்மாவுக்கு கருணை எல்லாம் கிடையாது. யாருக்கு எது போய் சேர வேண்டுமோ, அதை தவறாமல் கொண்டு சேர்த்து விடுகிறது. நாம் அடுத்தவருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ, அது நமக்கே திரும்பி விடுகிறது. நல்லது நினைத்தால் நல்லதையும், கெட்டது நினைத்தால் கெட்டதையும் திருப்பித் தருகிறது. குறைவு இல்லை, நிறைவும் இல்லை, நம் செயலுக்கு ஏற்றபடி நம்மை திருப்பி அடிக்கிறது.

அது தான் இப்பொழுது சஞ்சனாவுக்கு நடந்திருக்கிறது. திமிர் பிடித்த, சுயநலவாதியான, இரக்கமற்ற, தனக்கு மட்டுமே எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மற்றவரை பற்றி கவலைப்படாமல் இருந்த அந்த பெண்ணுக்கு, தன் அண்ணனாகவே இருந்தாலும் அவன் இதயத்தை உடைக்க தயங்காத அவளுக்கு வேறு என்ன கிடைத்து விடப் போகிறது?

எப்பொழுது வேண்டுமானாலும் செத்து விடக்கூடிய ஒரு கிழவனை திருமணம் செய்து கொள்வது என்பது எந்த ஒரு பெண்ணுக்கும் கிடைக்கக் கூடாத தண்டனை. ஆனால், பவித்ராவுக்கு நடக்க வேண்டும் என்று விரும்பினாள். அவள் தூயவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பவித்ராவின் வாழ்க்கை நாசமாவதை பற்றிய அவள் கவலைப்படவில்லை. இத்தனைக்கும், தூயவன் பவித்ராவின் மீது காதல் கொண்டிருக்கிறானா என்பது கூட அப்போது அவளுக்கு தெரியாது. அப்படி இருந்தும் கூட, அந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க அவள் தயங்கவில்லை. அவள் தன் வாழ்க்கைக்கு ஒரு முட்டுக்கட்டையாய் வந்துவிடக் கூடாது என்று நினைத்தாள். அப்படி இருக்கும்போது, அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?

அதேநேரம், நாம் இன்னொரு விஷயத்தையும் மறந்து விடக்கூடாது. சஞ்சனா தன் கணவனை ஆராதிக்க கூடியவளோ, தன் உறவுக்கு மரியாதை செலுத்தக்கூடியவளோ அல்ல! அழுமூஞ்சியும் அல்ல! இந்த சூழ்நிலையையும் அவளது புது கணவனையும் அவள் எப்படி கையாளுகிறாள் என்பதை நாம் பார்க்கத்தானே போகிறோம்...!
......

சஞ்சனா கைது செய்யப்பட்ட விஷயத்தையும், அவளை சின்னசாமி காப்பாற்றிய விஷயத்தையும் கூற வேண்டும் என்று மாதேஷுக்கு ஃபோன் செய்தான் சந்தோஷ்.

"சொல்லு" என்று விருப்பமில்லாமல் கேட்டார் மாதேஷ்.

"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல ஃபோன் பண்ணேன்"

"நாளைக்கு நீ ஃபிரான்ஸ்க்கு போற. என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நீ நடிக்க வேண்டிய அவசியம் இல்ல. நீ எங்க வேணாலும் போகலாம். அதுக்கு உனக்கு என் ஆசீர்வாதம் தேவையில்ல. அதைப்பத்தி நீ கவலைப்படுவும் மாட்டேன்னு எனக்கு தெரியும்"

"நான் என்ன சொல்ல வரேன்னு தயவு செஞ்சி கொஞ்சம் கேக்குறீங்களா?"

மாதேஷ் அமைதியானார்.

"சஞ்சனாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க"

"என்னது?" என்றார் அதிர்ச்சியோடு.

"தூயவனை அட்டாக் பண்ண, அவ தான் சின்ன சாமிக்கு ஹெல்ப் பண்ணி இருக்கா. சின்ன சாமியோட ஃபோனை ட்ராக் பண்ணி போலீஸ் அதை கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால அவளை அரெஸ்ட் பண்ணிட்டாங்க"

"ஒரு அண்ணனா அவளை வெளியில எடுக்கறதை விட்டுட்டு, அதை என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கியா? இப்படித்தான் ஒரு அண்ணன் நடந்துக்குவானா?"

"ஒரு அண்ணன் எப்படி இருக்கணும்னு டிஸ்கஸ் பண்றத நிறுத்துங்க. அவர் எப்படிப்பட்ட பொண்ணா இருக்கணும்னு நீங்க அவளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தா, அவ இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை ஃபேஸ் பண்ணி இருக்க மாட்டா.  ஒரு அப்பா எப்படி தன் மகளை வளர்க்கணும்னு உங்களுக்கு தெரிஞ்சிருந்தா, அவ நல்ல பொண்ணா இருந்திருப்பா"

"இதை சொல்லத்தான் எனக்கு ஃபோன் பண்ணியா? இது தான் உன் அப்பாவுக்கு அட்வைஸ் பண்ற நேரமா?"

"நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ண ஃபோன் பண்ணல. ஏன்னா அது வேஸ்ட் ஆஃப் டைம்னு எனக்கு தெரியும்."

"அப்புறம் எதுக்கு எனக்கு கால் பண்ண?"

"சஞ்சனா இப்ப போலீஸ் கஸ்டடியில இல்ல. சின்னசாமி அவளை போலீஸ் கஸ்டடியில் இருந்து காப்பாத்தி கூட்ட்டிகிட்டு போயிட்டான்"

"என் பொண்ண பத்தி கவலைப்பட யாரோ ஒருத்தன் இருக்கானே" என்றார் பெருமையாக.

"உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா? அவளை காப்பாத்தினது ஒரு கிரிமினல். போலீஸ் அவனை தேடிக்கிட்டு இருக்காங்க. அவனை போலீஸ் புடிச்சுட்டா, உங்க பொண்ணு ஜெயில்ல இருந்து வாழ்க்கை முழுக்க வெளியே வரவே முடியாது"

"என் பெண்ணை பத்தி நீ கவலைப்பட வேண்டியது இல்ல. உன் வேலையை பாரு"

"தேங்க்ஸ்" என்று அழைப்பை துண்டித்து, கைபேசியை கட்டிலின் மீது விட்டெறிந்தான் சந்தோஷ்.

அதை பார்த்து பின்வாங்கினாள் வெண்மதி.

"இதுக்கு தான் அவருக்கு நான் கால் பண்ண மாட்டேன்னு சொன்னேன்" என்றான் எரிச்சலோடு.

"என்ன ஆச்சு?"

"ஒரு அப்பா மாதிரியா பேசுறாரு? அறிவு கெட்ட மனுஷன்..." என்றான்.

"முதல்ல அவர் என்ன சொன்னார்னு சொல்லுங்க. அதுக்கப்புறம் அவர் மேல கோபப்படுங்க"

"சின்னசாமி அவளை காப்பாத்தினதை நினைச்சு சந்தோஷப்படுறாரு"

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெண்மதி, எதுவும் கூறுவதற்கு முன்,

"என்ன்னனது?" என்ற அதிர்ச்சியான தூயவனின் குரலை அவர்கள் கேட்டார்கள்.

பவித்ராவின் வாழ்க்கையை கெடுக்க சஞ்சனா நினைத்த போதும், அவளுக்காக ஏதாவது செய்ய நினைத்தான் தூயவன். நிச்சயம் அது சந்தோஷுக்காகவும், தன் அக்காவின் சந்தோஷத்திற்காகவும் மட்டும் தான். ஆனால், அதை குறித்து மாதேஷ் நடந்து கொண்ட விதம், அவர்கள் அனைவருக்கும் எதிர்பாராதது.

கட்டிலில் அமர்ந்து தன் முகத்தை மூடினான் சந்தோஷ்.

"அவர் எந்த மாதிரி அப்பான்னு எனக்கு புரியல" என்றான்.

"உண்மையிலேயே அவர் அப்படியா சொன்னாரு?"

ஆம் என்று தலையசைத்தான்.

"திஸ் இஸ் ரெடிகுலஸ்" என்றான் தூயவன்.

"நான் தான் சந்தோஷை கம்பல் பண்ணி அங்கிள்கிட்ட பேச சொன்னேன். அவரு ஏதாவது ஆக்ஷன் எடுப்பார்னு நினைச்சேன்" என்றாள் வெண்மதி இயலாமையுடன்.

"நான் கூட இதைப்பத்தி கமிஷனர் கிட்ட பேசலாம்னு நினைச்சேன்" என்றான் தூயவன்.

"வேணாம் தூயவன். தேவையில்ல. இதை அப்படியே விட்டுடுங்க. அவளைப் பத்தி யோசிக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல" என்றான் கோபமாய்.

"ரிலாக்ஸா இருங்க. நான் இருக்கேன். என்ன செய்யணுமோ நான் பார்த்துக்கிறேன்"

சந்தோஷ் ஏதோ சொல்ல முயன்ற போது,

"தேவைப்பட்டா மட்டும் தான்" என்றான் தூயவன்.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எங்க அப்பாவோட மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்க முடியல. போலீஸ் சஞ்சனாவை பிடிச்சிட்டா எவ்வளவு பிரச்சனை ஆகும்னு அவர் யோசிக்க மாட்டேங்கிறாரு. அவளோட குற்றம் அதிகரிச்சிக்கிட்டே போகுது. அவ போலீஸ் கஸ்டடியில் இருந்து காப்பாத்தப்பட்டு இருக்கா. அவர் ஏன் அதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரு?"

"விடுங்க, நமக்கு தெரியாதா அவரைப் பத்தி? அவர் எப்பவுமே இப்படித்தானே?" என்றாள் வெண்மதி.

"அதை விடு, நம்ம சாப்பிட போகலாம். காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்" என்றான் சந்தோஷ் பேச்சை மாற்றி.

அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டார்கள். தனது எரிச்சல் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொண்டான் சந்தோஷ்.

"பவித்ரா, நீங்க எங்களை மறந்துட மாட்டீங்களே..." என்றான் சந்தோஷ் நிலைமையை சகஜமாக மாற்ற முயன்று.

"நான் உங்களை எப்படி அண்ணா மறப்பேன்?"

"நான் தினமும் தூயவனுக்கு ஃபோன் பண்ணி, ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு இருக்கேன்"

"எதைப்பத்தி?"

"பொன்னம்மா அத்தை கதையை மாதிரி..."

அதைக் கேட்டு உதடு சுழித்த பவித்ரா, தலை குனிந்து கொண்டாள்.

"கவலைப்படாதீங்க. ஏதாவது இன்ட்ரஸ்டிங்கான கதை கிடைச்சா, நான் உங்களுக்கு மெயில் அனுப்புறேன்" என்றான் தூயவன்.

"ரெண்டு பேரும் நிறுத்துங்க. எதுக்காக சும்மா அவங்களை தொல்லை படுத்துறீங்க?" என்று அவர்களை கண்டித்த வெண்மதி பவித்ராவை பார்த்து,

"நீங்க எனக்கு நேரடியா ஃபோன்ல சொல்லிடுங்க" பவித்ரா என்றார்.

"ஏன் எல்லாரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்றீங்க?"

"ஏன்னா, நாளைல இருந்து அதை சேர்ந்து பண்ண முடியாதே..." என்று சிரித்தாள் வெண்மதி.

"ஏன் மதி அப்படி சொல்ற? நம்ம ஆன்லைன்  குரூப் சாட்டீங்ல பேசலாம். என்ன சொல்றீங்க?"

தூயவனை பார்த்து முறைத்தாள் பவித்ரா.

"நீங்க எல்லாரும் ஏன் என் பொண்டாட்டியை கிண்டல் பண்றீங்க? பாருங்க அவ மூக்கு எப்படி சிவந்துடுச்சு..."

"எல்லாம் உங்களால தான்..."

"என்னாலயா நான் என்ன பண்ணேன்?"

"நீங்க பொன்னம்மா அத்தையை பத்தி அவங்க கிட்ட சொல்லாம இருந்திருந்தா, அவங்க இப்படி என்னை டீஸ் பண்ண மாட்டாங்க"

"நீ சொன்ன கதை அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருந்தா, நான் என்ன செய்றது?"

பவித்ரா சிணுங்கினாள்.

பல விஷயங்களை சகஜமாய் பேசியபடி சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்கு திரும்பினார்கள் அவர்கள்.

கட்டிலில் படுத்த தூயவன் எதையோ சீரியஸாய் யோசித்துக் கொண்டிருந்தான்.

"அவங்க ஃபிரான்ஸ்க்கு போனதுக்கு பிறகு என்னை எப்படி கிண்டல் பண்றதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா?" என்றாள் அவன் பக்கத்தில் அமர்ந்த பவித்ரா.

"சந்தோஷ் அப்செட்டா இருக்காரு"

"ஏன்? என்ன ஆச்சு?"

"அவங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணி இருக்காரு. அந்த ஆள் அறிவுகெட்ட தனமா பேசியிருக்காரு" அது பற்றி அவன் பவித்ராவிடம் கூறினான்

"சின்னசாமி எவ்வளவு ஆபத்தானவன்னு அவருக்கு தெரிஞ்சிருக்காது. அதனால் தான் அவர் அப்படி பேசி இருக்கணும்"

"எது எப்படியோ... அவரை நான் ஒரு மனுஷனாவே மதிக்கிறதில்ல" என்றான் தூயவன் எரிச்சலோடு.

"சஞ்சனாவை திருப்பிக் கொண்டு வர நீங்க எதுவும் செய்ய முடியாதா?"

புன்னகை புரிந்த தூயவன்,

"பவி, உன்னோட அக்கரைக்கு அவ தகுதியானவ இல்ல. நானும் கூட ஏதாவது செய்யணும்னு தான் நினைச்சேன். ஆனா இதுக்கப்புறம் நான் அதைப் பத்தி யோசிக்கிறதா இல்ல. செய்ய வேண்டியதை மாதேஷ் அங்கிள் செய்யட்டும்"

"அவர் அவங்களை எங்க போய் தேடுவாரு?"

"நான் போய் அவளை தேடணும்னு நினைக்கிறியா?" என்று சிரித்தான் தூயவன்.

"இல்ல. ஆனா உங்க பவரை யூஸ் பண்ணி நீங்க தேடலாம்ல?

"அதை செய்ய சொல்லி சந்தோஷ் சொல்லியிருந்தா நான் நிச்சயம் செஞ்சிருப்பேன். ஆனா இதுக்கப்புறம் நான் அதைப் பத்தி யோசிக்கிறதா இல்ல" என்றான் உறுதியோடு.

மதுரை

மறுநாள் காலை

மெல்ல கண்விழித்த சஞ்சனா, ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தாள். ஏதோ அல்ல, மொத்தமும் வித்தியாசமாய் தான் இருந்தது. அவள் உடம்பு வலித்தது. அரைகுறை ஆடையுடன் அவள் ஒரு கட்டிலில் படித்திருந்தாள். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த அவள், தன் பக்கத்தில் ஒருவன் திறந்த மார்போடும், கீழ் உடலை போர்வையால் போர்த்தியும் படுத்திருந்தான். அதிர்ச்சியோடு கட்டிலை விட்டு கீழே இறங்கினாள்.

இந்த மனிதன் அவளை என்ன செய்தான்? அவள் அமர்ந்திருந்த கட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவள் கழுத்தில் ஏதோ இருப்பது போல் உணர்ந்தாள். அவள் அதை தொட்டுப் பார்க்க, அது தாலி என்பதை புரிந்து கொண்டாள். உண்மையிலேயே சின்னசாமி அவளது தந்தைக்கு அவளை மணம் முடித்து விட்டானா? அதை நினைத்து அவள் திகிலும் கோபமும் கொண்டாள். இந்த அப்பாவுக்கும் பிள்ளைக்கும் தான் எவ்வளவு தைரியம்! அவள் வாழ்க்கையோடு விளையாடியதற்காக அவர்கள் பதில் கூறியாக வேண்டும். கோபமாய் பல்லை கடித்தாள். ஓடி சென்று கதவை திறக்க முயன்ற போது, அவளால் அது இயலவில்லை. அந்த கதவு வெளிப்புறம் இருந்து பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியபடி அவள் கத்த, அது உறங்கிக் கொண்டிருந்த பெரியசாமியை கண்விழிக்க செய்தது. கண்களை திறந்த அவன், பதற்றத்துடன் காணப்பட்ட சஞ்சனாவை பார்த்து ஒரு கேலி புன்னகையை உதிர்த்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top