43 கொடுத்து வாங்குதல்
43 கொடுத்து வாங்குதல்
பின் வாங்கும் எண்ணமே இல்லை தூயவனுக்கு.
"பவித்ரா..." என்றான் ரகசியமாய்
"நான்... வந்து..."
"நீ... என்ன...?"
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள் பவித்ரா.
"நீ என் கூட கம்ஃபர்டபுலா இல்லயா?"
"இல்ல, அப்படி இல்ல"
"அப்போ எப்படி? நான் உன்னை விட்டு தூரமா போயிடவா? இல்ல, ஆரம்பிச்சதை தொடரவா?"
"நீங்க தொடரலாம்" என்று திடமான பதில் வந்தது பவித்ராவிடமிருந்து.
"நீ என் மேல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரொம்ப அப்செட்டா இருந்தியே..."
"நீங்க என்கிட்ட பொய் சொன்னீங்க. அதனால நான் அப்செட்டா இருந்தேன்"
"அப்படின்னா எனக்கு மன்னிப்பு கிடைச்சிருச்சா? நான் மேற்கொண்டு எதுவும் செய்ய எனக்கு பர்மிஷன் கிடைச்சிடுச்சா?"
"நீங்க உண்மையிலேயே என்னோட பர்மிஷன்காக தான் காத்திருக்கீங்களா?" என்று அவள் கேட்க.
வாய்விட்டு சிரித்தான் தூயவன்.
!நான் ஒரு நல்ல மனுஷனா இல்லயான்னு எனக்கு தெரியாது. ஆனா, ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால எந்த ஒரு முரண்பாடும் இல்லாம என் பொண்டாட்டியோட எந்த முரண்பாடும் இல்லாம என்னோட கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். புரிஞ்சுதா? "
"நான் எப்பவுமே உங்ககிட்ட முரண்பட்டதில்லயே!"
"என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா?"
"என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..."
"இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு, நான் அதுக்கு எதிரா நடந்துக்கிட்டா என்ன செய்வ?"
"நீங்க தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்க, நீங்க ஒரு நல்ல புருஷனா இருக்க விரும்புறதா... நீங்க நல்லதை மட்டுமே செஞ்சா, நிச்சயமா என்கிட்ட இருந்து முரண்பட மாட்டீங்க"
"இது கேக்குறதுக்கு வார்னிங் மாதிரி தெரியுது" என்று சிரித்தான்
"நான் சொன்னதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?"
"நிச்சயமா இல்ல" நான் என்னோட நல்ல பேரை காப்பாத்திக்க நிச்சயம் முயற்சி பண்ணுவேன். நான் ஏற்கனவே உன் கிட்ட நல்ல பேரை எடுத்து இருக்கேன் தானே?"
"அதுல எந்த சந்தேகமும் இல்ல. நான் சந்திச்சதுலயே நீங்க தான் ரொம்ப நல்ல மனுஷன். தேங்க்யூ ஃபார் எவ்ரி திங்"
"நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லுவேன். ஆனா இப்ப இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு"
"கொஞ்ச நேரம் கழிச்சா? எதுக்காக?"
"உன்னை தொட விட்டதுக்காகவும் வாழ்க்கையோட அருமையான பக்கத்தை என்னை உணரவச்சதுக்காகவும்..."
பவித்ரா வெட்கப் புன்னகை பூக்க,
"அப்படி ஒரு சான்சை எனக்கு குடுப்பியா?" என்றான்.
அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
"இது என்னோட உரிமை. இதுக்காக நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டாம்"
"உரிமையா? நிஜமாவா?" என்றான் தன் புருவம் உயர்த்தி.
"உங்களால தொடப்படுறது என்னோட உரிமை தானே?"
"அதுல ஏதாவது சந்தேகம் இருக்கா?"
அவள் இல்லை என்று தலையசைக்க, அவளை முத்தமிட குனிந்தான் தூயவன்.
தாம்பத்தியம் என்பது இருமுறை முனை கூர் கொண்ட கத்தி. எவ்வளவு தான் எச்சரிக்கையாக கையாண்டாலும், அது நம்மை நிச்சயம் பாதிக்கத்தான் செய்யும்... ஆழமாக... கூர்மையாக...! அந்தக் கத்தியால், நாம் நம்மை முதலில் பதம் பார்த்துக் கொண்ட பிறகு தான் அது அடுத்தவரை பதம் பார்க்கும். வழக்கமாய் கத்தி என்றாலே மற்றவருக்கு பயம் தான். ஆனால் இந்த கத்தியும், அது கொடுக்கும் வலியும் வித்தியாசமானது. ஒருமுறை அந்த வலியை அனுபவித்து விட்டவன், மறுபடியும் அது வேண்டும் என்று நினைக்கிறாள். வலிய சென்று அந்த வலியில் தன்னை உட்படுத்த விழைகிறான்.
மறுபுறம்...
சின்னசாமி தன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
"அப்பா, தயவு செய்து நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க!
"இன்னும் புரிஞ்சுக்க என்ன இருக்கு? பவித்ராவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இப்போ அவ வேற ஒருத்தனோட பொண்டாட்டி. நம்ம முயற்சி எல்லாம் வீணாயிடுச்சு. நம்ம கைல இருந்து அவ மொத்தமா நழுவி போயிட்டா. இதுக்கு அப்புறம் அவளை நீ இங்க கூட்டிட்டு வந்தாலும் எந்த பிரயோஜனமும் இருக்கப் போறதில்ல. இந்த நேரம் அவ இன்னொருத்தன் படுக்கையில இருப்பா" என்றான் பெரியசாமி சீற்றத்துடன்.
அமைதியாய் நின்றான் சின்னசாமி. அவனது அப்பா கூறுவதில் தவறு இல்லை. இந்த நேரம் பவித்ராவின் முதலிரவு முடிந்திருக்கும். அப்படி இருக்க, அவளை கடத்திச் செல்வதில் என்ன பிரயோஜனம்?
"அவள கல்யாணம் பண்ணிக்காம என்னால எப்படி 100 வருஷம் வாழ முடியும்? இப்போ அவ கன்னி இல்ல. அப்படி இருக்கும்போது, நீ சென்னையில இருந்து என்ன செய்ய போற? எனக்கு சென்னையில வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால தான் நான் இங்க தங்கி இருக்கேன்"
"நீ என்ன பண்ண போற? நீ அவ புருஷன கொல்ல போறியா?"
"அதை செய்ற அளவுக்கு எனக்கு திறமை இருக்கு. அது உங்களுக்கும் தெரியும். அவனை மட்டுமில்ல, அவனுக்கு உதவி செஞ்ச எல்லாரையுமே என்னால போட்டுத் தள்ள முடியும்"
"அவங்களைப் பழிவாங்குறேன்னு நீ உன்னை இழந்திடாத. நீ மதுரையில இருந்து எவ்வளவு சண்டை போட்டாலும் அதைப்பத்தி நான் கவலைப்பட மாட்டேன். ஆனா சென்னை வித்தியாசமானது. அது அவங்க இடம். அதை நீ மறந்துடாத"
"ஆனா எல்லாருமே மனுஷங்க தானே? கத்தியில குத்தினா சாகதானே செய்வாங்க? அதுல சென்னை காரனுக்கும் மதுர காரனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?" என்றான் சின்னசாமி கோபமாய்.
அதை கேட்ட பெரியசாமிக்கு திருப்தியாய் இருந்தது. ஏனென்றால், அவருக்கும் கூட பவித்ராவையும் அவளது கணவனையும் கொல்ல வேண்டும் என்ற அளவிற்கு கோபம் இருந்தது.
"நான் சீக்கிரமாகவே மதுரைக்கு வரேன்" என்று அழைப்பை துண்டித்தான் சின்னசாமி.
........
வெண்மதியை நெருங்கவே தயங்கினான் சந்தோஷ். ஏனென்றால், அவர்களது கதை தான் வித்தியாசமானது ஆயிற்றே!
"எனக்கு கொஞ்சம் டைம் கொடுப்பீங்களா, சந்தோஷ்?" என்றாள் வெண்மதி.
அதைக் கேட்டு புன்னகைத்த சந்தோஷ்,
"நம்ம இன்னும் ரெண்டு நாள்ல ஃபிரான்ஸ் போறோம். அதுவரைக்கும் நீ ரிலாக்ஸா இரு. நம்ம எப்பவும் ஒன்னா தானே இருக்கப் போறோம்? இங்க இருக்கிற இரண்டு நாளும் உங்க பேமிலியோட ஸ்பென்ட் பண்ணு" என்றான்.
தேங்க்யூ சந்தோஷ் என்று கட்டிலில் படுத்துக் கொண்ட வெண்மதி,
"நீங்க உங்க வீட்டுக்கு போக போறதில்லயா?" என்றாள்.
"ஃபிரான்சுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி, வீட்டுக்கு போய் அப்பாகிட்ட சொல்லிட்டு கிளம்புவேன்"
"அப்போ ஊருக்கு போறதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு போறோமா?"
"உனக்கு அங்க என் கூட வர்றதுல எந்த பிரச்சனையும் இல்லனா, நீ என் கூட தாராளமா வரலாம். ஆனா உனக்கு பிடிக்கலன்னா நீ வர வேண்டிய அவசியம் இல்ல"
"நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"நீ அங்க வர வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, எங்க அப்பா கிட்ட இருந்தும் தங்கச்சி கிட்ட இருந்தும் உனக்கு நல்ல வரவேற்பு கிடைக்காது. உன்னை பார்த்த உடனே அவங்களுக்கு கோவம் வரும்... முக்கியமா சஞ்சனாவுக்கு..."
"ஆனா தூயவை இன்சல்ட் பண்ணது அவ தானே?"
"அவர் அதையெல்லாம் யோசிக்க மாட்டா. அவளோட ஏமாற்றம் மட்டும் தான் அவளுக்கு தெரியும். கொஞ்சம் கூட மூளையே இல்லாத பொண்ணு அவ. அதனால தான் நீ அங்க வர வேண்டாம்னு சொல்றேன்"
"சரி, அந்த நேரத்துக்கு என்ன தோணுதோ அதுபடி செஞ்சுக்கலாம்"
"என்னோட முடிவு ஒன்னு தான். அதுல எந்த மாற்றமும் இல்ல"
சரி என்ற தலைகசித்தாள் வெண்மதி.
மறுநாள் காலை
தூக்கத்தில் இருந்து கண் விழித்த தூயவன், ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் அமர்ந்து தலைவாரிக் கொண்டிருந்த பவித்ராவை பார்த்து புன்னகை புரிந்தான்.
தன் கையை நீட்டி அவளை
"என்கிட்ட வா" என்றான்.
"நீங்க குளிச்சதுக்கு பிறகு தான் நான் உங்களை தொட முடியும்"
"ஏன்?" என்றான் புருவத்தை உயர்த்தி.
"நான் ஏற்கனவே குளிச்சிட்டேன். இப்போ போய் பூஜை பண்ண போறேன். அதனால் தான்"
"நான் இப்ப உன்ன கட்டிப்புடிச்சா என்ன ஆகும்?"
"மறுபடியும் நான் குளிக்க வேண்டி இருக்கும்" என்றாள்
"இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?"
"எல்லாருக்கும் தெரியும்... பூஜை செய்யும் போது மனசும் உடம்பும் சுத்தமா இருக்கணும்"
"தினமும் பூஜை செய்றது அவசியமா?"
"அது அவங்க அவங்க மனசை பொருத்தது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம பூஜை பண்றது ஒரு தனி திருப்தி"
"உனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லயா?"
"இல்ல, ஏன்னா எனக்கு இதுவரைக்கும் எல்லாத்தையுமே கடவுள் பெஸ்ட்டா தான் கொடுத்திருக்கிறார்"
"பெரியசாமியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சூழ்நிலை ஏற்பட்டப்போ நீ இப்படித்தான் நெனச்சியா?"
"இல்ல, அப்போ என்னோட மனசு வேற ஒரு டைமென்ஷன்ல இருந்தது"
"என்ன டைமென்ஷன்?"
"நான் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை தான் லீட் பண்ணனுணும்னு கடவுள் நினைக்கிறார்னு நினைச்சேன். ஆனா எங்க அப்பா என்னை ஓடிப் போக சொன்னப்போ, எனக்கு ஆர்வமும் பயமும் ஏற்பட்டுச்சு. ஏன்னா, அதோட விளைவு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும்"
"அப்போ நான் உன்னை காப்பாத்த வந்தப்போ, என்ன நெனச்ச?"
"கடவுள், பெரியசாமியை என் வாழ்க்கையில் கொண்டு வந்ததுக்கு காரணமே, நீங்க என் வாழ்க்கையில வரணும்னு தான். உங்களை மாதிரி ஒரு தேவதையை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்"
தன் கண்களை சுழற்றி சிரித்தான் தூயவன்.
"உங்களால என் ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்கவே முடியாது. ஏன்னா, நான் இருந்த சூழ்நிலையில நீங்க இருந்ததில்ல" என்றாள் பவித்ரா.
"நானும் அந்த சூழ்நிலையில இருந்திருக்கேன்" என்றான்.
"எப்போ?"
"சின்னசாமி உன்னை கடத்திக்கிட்டு போனானே, அப்போ. சூழ்நிலை வேணா வித்தியாசமா இருக்கலாம். ஆனா வலி ஒன்னு தான்"
"ஆமாம், நீங்க தயவு செய்து ஜாக்கிரதையா இருங்க"
"எதுக்கு?"
"சின்னசாமியும் பெரியசாமியும் காட்டுமிராண்டிங்க. அவங்க எதையுமே இதயத்தால யோசிக்க மாட்டாங்க. உண்மையை சொல்லப்போனா, அவங்களுக்கு இதயமே கிடையாது. அடுத்தவங்களை வெட்டி போட கூட அவங்க தயங்க மாட்டாங்க. இரக்கமில்லாதவனுங்க"
சரி என்று யோசனையோடு தலையசைத்தான் தூயவன்.
"நான் கீழ போறேன் நீங்களும் வாங்க"
"எஸ் பாஸ்" என்று கட்டிலை விட்டு குதித்து குளியல் அறைக்கு சென்றான் தூயவன்.
தரைதளம் வந்த பவித்ரா வெண்மதியை பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி நின்றார்கள். பவித்ராவை நோக்கி வந்த வெண்மதி,
"பவித்ரா, எதுக்காக உங்க கண்ணம் இவ்வளவு சிவந்திருக்கு?" என்றாள்.
அவள் கேட்டது தான் தாமதம். உண்மையிலேயே அவளது கன்னங்கள் சிவப்பேறியது.
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள் பவித்ரா.
"என்கிட்ட பொய் சொல்லாதீங்க பவித்ரா. உங்களை கல்யாணம் பண்ணிக்க என் தம்பி எவ்வளவு ஆர்வமா இருந்தான்னு எனக்கு தான் தெரியுமே"
வெட்கம் தாங்காமல் அவளை அணைத்துக் கொண்டாள் பவித்ரா. அப்பொழுது,
"இங்க என்ன நடக்குது?" என்று கேட்டபடி வந்தார் குணமதி.
அவர்கள் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,
"உன் நாத்தனார் உன்கிட்ட என்ன கேட்கிறா பவித்ரா? உன்னை கிண்டல் பண்றாளா?" என்றார்.
அவள் ஆம் என்று உதட்டை அழுத்தி தலையசைத்தாள்.
"மாம், நம்ம தூயா அவங்களை கல்யாணம் பண்ணிக்க எவ்வளவு எக்சைட்டடா இருந்தான்னு உண்மையை தான் சொன்னேன்"
"ஆமாம் அது உண்மை தானே?"
"அப்படி சொல்லுங்க, மாம்"
"ஆனா நம்ம தூயவை விட சந்தோஷ் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க பல வருஷமா அதிக ஆர்வமா இருந்தான். நான் சொல்றது சரி தானே?" என்றார்.
அதைக் கேட்டு களுக் என்று சிரித்தாள் பவித்ரா.
"மாம், எனக்கு அம்மாவா இருந்துகிட்டு நீங்க என்னை இப்படி எல்லாம் கிண்டல் பண்ண கூடாது"
"கிண்டல் பண்ணணும்னு வந்துட்டா நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு தான். பொண்ணு, மருமக பொண்ணு ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது" என்றார் குணமதி.
"போதும் மாம் உங்க சமதர்மம்..."
குணமதி இடம் இருந்து தப்பித்தால் போதும் என்று சமையலறைக்கு சென்றாள் வெண்மதி. அவளை பின்தொடர்ந்து சென்ற பவித்ரா, பாயாசம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு, அதை உணவு மேசைக்கு கொண்டு வந்தாள். அதை சாப்பிட்ட சந்தோஷ்,
"ரொம்ப நல்லா இருக்கு" என்றான்.
"அவள் என் பொண்டாட்டியாச்சே" என்றான் அந்த பாயசத்தை சாப்பிட்ட தூயவன்.
"தூயா, அவளுக்கு பாயசம் செய்ய சொல்லிக் கொடுத்தது நீ இல்ல. அவங்க அப்பா. நீ என்னமோ நீ சொல்லி கொடுத்த மாதிரி அலட்டிக்கிறியே..."
"யார் சொல்லி கொடுத்தா என்ன? அவ என் பொண்டாட்டி தானே?" என்றான்.
"ஆமாம். அவ உன் பொண்டாட்டி தான். இப்போ என்ன அதுக்கு?" என்றார் வெண்மதி.
"அம்மா அவளைப் பார்க்கிற வரைக்கும் நான் பொய் சொல்லாம ரொம்ப ஹானஸ்டா இருந்தேன். இந்த பொண்ணு தான் என்னை பொய்யும் சொல்ல வச்சு, நடிக்கவும் வச்சா" என்றான்.
"நீங்க பொய் சொன்னதுக்கும் நடிச்சதுக்கும் நான் பொறுப்பில்ல" என்றாள் பவித்ரா.
"பின்ன வேற யாரு காரணம்?" உன்னோட பிடிவாதத்தால தான் நான் பொய் சொல்ல வேண்டியதா போச்சு"
"அம்மா, அவர் உங்ககிட்ட பொய் சொன்னதுக்காக நீங்க அவரை திட்டலயா?"
"எனக்கும் அவன் மேல கோவம் இருந்தது. என்கிட்ட பொய் சொன்னதுக்காகவும் என்னை ரொம்ப சங்கடத்தில் வச்சதுக்காகவும். ஆனால் சில சமயங்களில் உண்மையைவிட நல்ல பொய் எவ்வளவோ பரவாயில்ல"
"நல்ல பொய்யா? பொய் எப்படிமா நல்லதா இருக்க முடியும்?"
"ஏன் முடியாது? ஒரு பொய், உன்னை மாதிரி ஒரு நல்ல மருமகளை எனக்கு கூட்டிகிட்டு வந்து கொடுக்கும்னா, அந்த பொய் நல்ல பொய் தானே?"
வெட்கத்தோடு சிரித்தாள் பவித்ரா.
"பவித்ரா, நமக்கு கிடைச்ச மாதிரி ஒரு மாமியார் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க" என்றான் சந்தோஷ் ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.
"மாம், ஜாக்கிரதை, இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ஐஸ் வைக்க முயற்சி பண்றாங்க. தயவு செஞ்சு அதுல மயங்கிடாதீங்க" என்று சிரித்தான் தூயவன்.
"மச்சான், இது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல. நீங்க எங்களைப் பத்தி எங்க மாமியார் மனசுல சந்தேகத்தை தூவி விடுறீங்க"
அதைக் கேட்டு சிரித்தாள் பவித்ரா.
"ஏன் பவித்ரா சிரிக்கிறீங்க? இந்த விஷயத்துல நீங்க எனக்கு தானே சப்போர்ட் பண்ணணும்?" என்றான் சந்தோஷ்.
"அம்மா எதையுமே அவங்க தலையில ஏத்திக்க மாட்டாங்க. அது அவருக்கு நல்லா தெரியும். அதனால தான் அவர் நம்மளை கிண்டல் பண்றாரு" என்றாள் பவித்ரா.
"பரவாயில்லயே.. உன் புருஷனை நல்லா புரிஞ்சு வச்சிருக்கியே"
"நான் தான் ஏற்கனவே சொன்னேனே... அவள் என்னோட பொண்டாட்டி ஆச்சே...!" என்று மீண்டும் அலட்டினான் தூயவன்.
வெண்மதி ஏதோ சொல்ல நினைக்க அழைப்பு மணியின் ஓசை கேட்டது. குழந்தைசாமி ஓடிச் சென்று கதவை திறந்து, அங்கு நின்றிருந்த நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் பின்னால் திரும்பி அனைவரையும் பார்க்க, சங்கடமும் தயக்கமும் இல்லாமல் சஞ்சனா வீட்டிற்குள் நுழைவதை கண்டார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top