42 முதலிரவு
42 முதலிரவு
அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு கிளம்ப தயாரானார்கள்.
"குணா..." என்று மாயவன் அழைக்க, நின்றார் குணமதி. அவருடன் அனைவரும் நின்றார்கள்.
"நம்ம குடும்பத்துக்குள்ள வர எனக்கு அனுமதி குடுக்க மாட்டியா?" என்றார் கெஞ்சலாக.
"நம்ம குடும்பமா? எப்போ இது உங்க குடும்பமா இருந்தது? நம்ம குடும்பம் அப்படிங்கற உணர்வு உங்களுக்கு எப்போதாவது இருந்திருக்கா?" என்றார் கூரிய பார்வையோடு.
"நான் செஞ்ச எல்லா தப்புகாகவும் என்னை மன்னிச்சி, எல்லாத்தையும் சரிகட்ட எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் குடு, குணா"
"எப்படி சரி கட்டுவீங்க? உங்களோட அலட்சியத்தால நீங்க இழந்ததை எல்லாம் அவ்வளவு சுலபமா எங்களுக்கு திரும்ப குடுத்துட முடியும்னு நினைக்கிறீங்களா?"
"நான் செஞ்சதெல்லாம் தப்பு தான்னு எனக்கு தெரியும். சத்தியமா அந்த தப்பை எல்லாம் நான் திரும்ப செய்யவே மாட்டேன். என்னோட பழைய மரியாதையை உங்ககிட்ட நான் திரும்ப பெற முடியாதுன்னு எனக்கு தெரியும். நான் அதை எதிர்பார்க்கவும் இல்ல. எனக்கு வேண்டியது எல்லாம், உன் நிழல்ல இருக்க ஒரு இடம். தயவு செஞ்சி இல்லன்னு மட்டும் சொல்லிடாத"
நீண்ட மூச்சை இழுத்து விட்ட குணமதி,
"நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன். எனக்கு இனிமே நீங்க வேண்டாம். என் பிள்ளைங்க உங்களை ஏத்துக்க தயாரா இருந்தா, எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல. என்னை பொறுத்த வரைக்கும், உங்களோட இருப்பு, எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போறதில்ல. நீங்கள் என் கூட இருக்கிறது கூட எனக்கு பிடிக்கல" என்றார். அவரது குரல் உயர்ந்து இல்லையே தவிர, அவர் பேசியது தெள்ளத் தெளிவாகவும் தயக்கம் இன்றியும் இருந்தது.
அவரது வார்த்தைகள் புதுமண தம்பதியினரை திகைக்க செய்தது. தூயவன் கூட தன் அம்மாவிடம் இருந்து அப்படி ஒரு உறுதியான நிலைப்பாட்டை எதிர்பார்க்கவில்லை.
!நான் வீட்டுக்கு போய் சில ஏற்பாடு எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. நான் கிளம்புறேன்" என்று, அந்த பிரச்சனையை தன் பிள்ளைகளிடம் விட்டு நடந்தார் குணமதி.
மாயவன் தூயவனையும் வென்மதியையும் பரிதாபமாய் பார்த்தார்.
"தூயா..."
"அக்கா, அவரை வீட்டுக்கு வர சொல்லுங்க" என்று கூறிவிட்டு, பவித்ராவின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து நடந்தான் தூயவன்.
அவர்களை பார்த்துக் கொண்டு நின்றிருந்த குழந்தைசாமியை பார்த்த வெண்மதி,
"குழந்தை அண்ணா, அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க" என்று கூறியபடி அங்கிருந்து நடந்தாள். அவளை பின்தொடர்ந்து சென்றான் சந்தோஷ்.
"ஐயா, உங்க பை எங்க இருக்குன்னு சொன்னா நான் கொண்டு வரேன்" என்றார் குழந்தைசாமி.
"வேண்டாம்" என்று கூறியபடி அவர்களை பின்தொடர்ந்து சென்றார் மாயவன். தன் வீட்டில் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று அவருக்கு புரிந்து போனது. அவருடைய மக்கள் அவரை தங்கள் வாழ்வின் பகுதியாக ஏற்றுக் கொள்ள சித்தமாய் இல்லை. அவர்கள் மீது தவறும் இல்லை. இப்போதைக்கு அவர்கள் அவரை வீட்டிற்கு வர அனுமதித்திருக்கிறார்கள். அதுவே போதுமானது. தான் செய்த பழைய தவறுகளில் இருந்து மீண்டு வர, அவர் நிறைய சிரமப்பட வேண்டி இருக்கிறது. அதை செய்ய அவர் தயாரானார்.
இதற்கிடையில்...
திருமண மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தான் சின்னசாமி. சஞ்சனா மாதேஷுடன் வருவதை பார்த்தான் அவன். அவர்கள் பேசுவது அவன் காதில் விழவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் ஏதோ சீரியஸாக பேசுவதை உணர்ந்தான். அவர்களது காரை பின்தொடர்ந்து சென்றான்.
கோபமே வடிவாய் அமர்ந்திருந்த சஞ்சனாவை பார்த்த மாதேஷ்,
"சஞ்சு, ரிலாக்ஸ்" என்றார்.
"எப்படி என்னால ரிலாக்ஸா இருக்க முடியும்? அவன் நம்ம எல்லாரையும் முட்டாளாக்கிட்டான். அவனோட ட்ராமாவை நம்ப வச்சுட்டான். அந்த லோ கிளாஸ் பொண்ணு கூட அவன் சந்தோஷமா சுத்துறதை நான் எப்படி பார்க்க முடியும்? அவன் என்னுடையவனா இருக்க வேண்டியவன். நம்ம மட்டும் அவனோட நாடகத்தை புரிஞ்சிகிட்டிருந்தா, இந்நேரம் நான் அவனை கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம். அந்த பொண்ணுக்கு, மதுரை சேர்ந்த கிழவன் தான் லாய்க்கு. தூயவன் இல்ல. அவனை என்கிட்ட இருந்து பரிச்சிட்டா அவ..."
"அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனிமே செய்யறதுக்கு ஒன்னும் இல்ல. மாயவன் உன்னைத் தான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சான். ஆனா, நீ தான் அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட. இப்போ அதைப்பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல"
"அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது. என்னை ஏமாத்தி துரோகம் பண்ணதுக்கு பிறகு அவங்க சந்தோஷமா இருக்கக் கூடாது. என்னை தவிர்க்கறதுக்காக இவ்வளவு கீழ்த்தரமான ஒரு நாடகத்தை தூயவன் நடத்தி இருக்கக் கூடாது. தான் செஞ்சதுக்கான பலனை அவன் அனுபவிச்சு தான் ஆகணும்"
"உன்னால அதை செய்ய முடியும்னு எனக்கு தோணல. ஏன்னா, இந்த தடவை நமக்கு மாயவனோட உதவி கிடைக்காது"
"இதுக்கு முன்னாடி அவர் நம்ம கூட இருந்து மட்டும் என்ன செஞ்சாரு? ஒண்ணுமே இல்ல... அவர் மூலமா நான் அவங்க வீட்டுக்குள்ள போனேன். அவ்வளவு தான். அவரை மாதிரி ஒரு உதவகரையை நான் பார்த்ததே இல்ல. அவர் நம்ம பக்கமே இருந்தா கூட தூயவனுக்கு எதிரா வாயை திறக்கவே இல்ல. அதனால, இந்த தடவை அவர் எனக்கு தேவையில்ல"
"நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். தூயவனுக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சு. இதுக்கு முன்னாடியே அவன் உன்னை அவமானப்படுத்த தயங்குனதில்ல. அப்படின்னா, இப்போ அவன் எப்படி நடந்துக்குவான்னு புரிஞ்சுக்கோ"
"ம்ம்ம்..."
அவர்களை பின் தொடர்ந்து வந்த சின்னசாமி, அவர்களது வீட்டை தெரிந்து கொண்ட பிறகு மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பினான்.
......
பவித்ராவுடன் உள்ளே நுழையப்போன தூயவனை தடுத்தார் குணமதி.
"இங்கேயே நில்லு. ஆரத்தி எடுத்த பிறகு தான் உள்ளே வரணும்"
"ஏம்மா, இதெல்லாம் இன்னும் முடியலயா? கல்யாண மண்டபத்துல தான், அதை செய், இதை செய்யின்னு படுத்தி வச்சீங்க. இங்க வந்ததுக்கு பிறகுமா? இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் பார்த்தாலே எரிச்சலா இருக்கு" என்றான் தூயவன்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல, தூயா. உனக்கு இதெல்லாம் பிடிக்கலன்னா நான் இங்கேயே நிறுத்திக்கிறேன்" என்றார் குணமதி.
"தயவு செஞ்சு அதை செய்ங்க"
"சரி, பவித்ரா நீ வழக்கம் போல கெஸ்ட் ரூமுக்கு போ. தூயா, நீ உன்னோட ரூமுக்கு போ" என்றார்.
"என்ன்னனது?" என்று அதிர்ந்தான் தூயவன்.
"பின்ன என்ன? பவித்ராவை உன்னோட ரூமுக்கு அனுப்புறது கூட ஒரு சடங்கு தான். அதையெல்லாம் செய்யாம அப்படியே அனுப்பிட முடியாது. உனக்கு தான் அதெல்லாம் பிடிக்கலயே... பார்த்தாலே வெறுப்பாகுறியே... அப்புறம் எதுக்கு அதெல்லாம் செய்யணும்?" என்றார் நக்கலாக.
"இப்போ நான் என்ன செய்யணும்?" என்றான் தூயவன்.
"உடனே எப்படி பல்டி அடிச்சிட்டான் பாத்தியா?" என்றார் குணமதி சிரித்தபடி.
சந்தோஷும் வெண்மதியும் வாய்விட்டு சிரிக்க, தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு தலை குனிந்து கொண்டாள் பவித்ரா.
ஆலம் கரைத்து புதுமண தம்பதிகள் வரவேற்கப்பட்டார்கள். மணமக்களுக்கு பால் பழம் கொடுக்கும் சம்பிரதாயம் செய்யப்பட்டது. சந்தோஷ் தூயவனுடன் அவன் அறையிலும், பவித்ரா வெண்மதியின் அறையிலும் இருக்க வைக்கப்பட்டார்கள்.
இரவு
தூயவனின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பவித்ரா, காட்டிலில் அமர்ந்து அவனுக்காக காத்திருந்தாள். உள்ளே நுழைந்த தூயவன், வெண்பட்டு புடவையுடன் மெல்லிய நகைகள் அணிந்த பவித்ரா, அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமைதியாய் அமர்ந்திருப்பதை கண்டான். அவள் அருகில் வந்து அமர்ந்து, தன் தோளால் அவளது தோளை லேசாய் தள்ளினான். அவள் அவனைப் பார்க்காமல், தன் கையில் இருந்த வயல்களை நிரடியபடி அமர்ந்திருந்தாள்.
"யாரோ என் மேல கோவமா இருக்கிற மாதிரி தெரியுது...?"
முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அவனை ஏறிட்டாள் பவித்ரா.
"பவித்ரா, நான் படுத்த படுக்கையாவே இருக்கணும்னு நீ எதிர்பார்ப்பான்னு எனக்கு தெரியாது" என்றான் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு.
அதைக் கேட்டு முகத்தை சுளுக்கினாள்.
"பவித்ரா, நான் எனக்கு உடம்பு நல்லா இருக்கிறதை பார்த்து நீ சந்தோஷம் தானே படணும்? அதை விட்டுட்டு, உன்கிட்ட உண்மையை மறைச்சதுக்காக கோவமா இருக்கியே..."
"நீங்க அப்படி இருந்தீங்கன்னு எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா? நீங்க அப்படி இருந்ததுக்கு நான் தான் காரணம்னு நினைச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது"
"நீ நினைச்சது தப்பு ஒன்னும் இல்ல. நான் அப்படி இருந்ததுக்கு நீ தான் காரணம். உன்கிட்ட இருந்து கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கத் தான் அப்படி ஒரு நாடகத்தை நடத்த வேண்டியதா போச்சு"
"போங்க, நான் எவ்வளவு அழுதேன்னு உங்களுக்கு தெரியாது"
"நானும் தான் உனக்காக அழுதேன். அது உனக்கு தெரியுமா?"
தன் கண்களை மெல்ல இமைத்த பவித்ரா,
"ஏன்?" என்றாள்.
"எனக்கு உன்னை எந்த அளவுக்கு பிடிச்சிருந்ததுன்னு நீ புரிஞ்சுக்கவே இல்ல"
"இந்த வழியில தான் உங்க ஃபீலிங்ஸ்ஸை எனக்கு புரிய வைப்பீங்களா?"
"இதுவும் ஒரு வழி"
மீண்டும் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டாள்.
"உன்னை நார்மல் ஆக்க, நான் ஏதாவது செய்யணும் போல இருக்கே..." என்று தீவிரமாய் யோசிப்பது போல் பாசாங்கு செய்த அவன்,
"ஆமாம்ல நான் எப்படி அதை மறந்தேன்?" என்றான்.
"என்ன?" என்பது போல் பவித்ரா அவனை ஏறிட,
"நீ என் மேல கோவமா இருந்தா நான் என்ன செய்வேன்னு உனக்கு தெரியாதா?" என்றான்.
கட்டிலை விட்டு கீழே இறங்கிய பவித்ரா, பின்னோக்கி நகர்ந்தாள். அவள் அங்கிருந்து ஓடிவிடலாம் என்று நினைத்தபோது, கட்டிலை விட்டு இறங்கி அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
"அவ்வளவு என்ன கோபம் உனக்கு?" என்று பின்னால் இருந்தபடியே அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"என்னங்க, என்னை விடுங்க"
"என்னது? இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு டிராமா நடத்துனது உன்னை விடுறதுக்கா? வாய்ப்பே இல்ல"
"இந்த ஹிப் செயின் கீறுது" என்றாள்.
சட்டென்று அவளை விட்டு விலகி, கட்டிலில் அமர்ந்து அவள் இடுப்பில் அணிந்திருந்த அந்த மெல்லி ஒட்டியானத்தை அவிழ்த்தான். அது ஆழமாய் அவள் இடுப்பில் அழுந்தி விட்டிருந்தது.
"வலிக்குதா?"
"லேசா"
"ஐ அம் சாரி"
"பரவால்ல..."
அந்த காயத்தை அவன் மெல்ல வருடி கொடுக்க, சங்கடத்தோடு பின்னால் நகர்ந்தாள் பவித்ரா. அவளை தலை நிமிர்ந்து பார்த்தான் தூயவன். அவனது கை, இன்னும் காற்றில் அப்படியே நின்றிருந்தது. அவளது பதற்றம் கண்கூடாய் தெரிந்தது.
"இப்போ நான் என்ன செய்யணும் பவித்ரா?" என்றான் தூயவன்.
பவித்ராவுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
"நம்ம ஃபர்ஸ்ட் நைட்டை கேன்சல் பண்ணிடலாமா?" என்றான்.
ஒன்றும் கூறாமள் நின்றால் பவித்ரா.
"சரி, போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா" என்றான்.
தன் இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குச் சென்ற பவித்ரா சில நிமிடங்களில் உடையை மாற்றிக்கொண்டு வந்தாள். கட்டிலில் படுத்திருந்த தூயவன், அவளை பார்த்து புன்னகை புரிந்தான். தன் பட்டு புடவையையும் நகைகளையும் மேசையின் மீது வைத்துவிட்டு வந்து கட்டிலின் மீது அமர்ந்தாள்.
"நான் லைட்டை ஆஃப் பண்ணிடவா?" என்றாள்.
ஒரு இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு மற்ற விளக்குகளை அணைத்தாள் பவித்ரா. அவள் கட்டிலில் படுத்தது தான் தாமதம், அவளை தன்னை நோக்கி இழுத்து, தன் காலை அவள் தொடையின் மீது போட்டுக்கொண்டு அவளை அணைத்துக் கொண்டான் இனியவன்.
"நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றதுக்காக தான் வெயிட் பண்ணேன். ஏன்னா நீ போட்டிருந்த நகை எல்லாம் உன்னை ஹர்ட் பண்ண வேண்டாம்னு நினச்சேன்" என்றான் ரகசியமாய்.
அவள் இமைகளை படபடப்பது அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
"இந்த டிம் லைட்டில் நீ ரொம்ப ஹாட்டா இருக்க" என்றான்.
அவளுக்கு உதறல் எடுத்தது.
"உனக்கு பயமா இருக்கா?" என்றான்.
மெல்ல தன் கண்ணிமைத்தாள்
"இந்த நேரத்துல பயப்படுறது சகஜம் தான். இது நம்ம ஃபர்ஸ்ட் நைட் ஆச்சே... இன்னும் ரெண்டு மூணு நாள்ல உனக்கு பழகிடும்" என்றான்.
இரண்டு மூன்று நாட்களில் பழகுவதா? பவித்ராவுக்கு புரியவில்லை, அவன் அவளை சமாதானப்படுத்துகிறானா, அல்லது பயமுறுத்துகிறானா என்று! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தூயவன் நிச்சயம் பின்வாங்க போவதில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top