39 தூயவனின் கேள்வி
39 தூயவனின் கேள்வி
"நல்ல கிராண்டான வெட்டிங் ஹாலா புக் பண்ணுங்க" என்றான் தூயவன்.
குணமதியும் வெண்மதியும் அவனை ஆச்சரியமாய் பார்த்துவிட்டு, பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"கல்யாண வேலையில நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆயிக்காதீங்க. ஒரு நல்ல வெட்டிங் அசெம்பிளரை பார்த்து ஃபிக்ஸ் பண்ணிடுங்க. அவங்ககிட்ட அந்த பொறுப்பை கொடுத்துட்டா கல்யாண வேலையை அவங்க பார்த்துப்பாங்க. கல்யாணம் நிச்சயமா கிராண்டா இருக்கணும்" என்றான்.
"சரி" என்றான் சந்தோஷ்.
தனது மேனேஜர் பாரிக்கு ஃபோன் செய்தான் தூயவன்.
"ஹாய், பாரி"
"எப்படி இருக்கீங்க சார்?"
"எனக்கு என்ன ஆச்சு? நான் நல்லா தான் இருக்கேன்" என்று அவன் கூற, அவன் குரலில் இருந்த குதூகலத்தை உணர்ந்தான் பாரி.
"உங்க குரலை இப்படி கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, சார்"
"நான் இன்னொரு விஷயம் சொன்னா நீ இன்னும் சந்தோஷமாயிடுவ"
"என்ன விஷயம் சார்?"
"என் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு"
"கல்யாணமா?" என்றான் பாரி நம்ப முடியாமல்.
"ஆமாம், என்னோட கல்யாணமும், சந்தோஷோட கல்யாணமும் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. நீ தான் எங்க கல்யாணத்துக்கு தேவையான எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸையும் செய்யப் போற"
"சந்தோஷமா செய்வேன், சார்" என்றான் திக்கு முக்காடி
"ஒரு நல்ல மேரேஜ் அசெம்பிளரை ஃபிக்ஸ் பண்ணு. கல்யாண பொண்ணுங்களோட புடவையும் கல்யாணமும் நல்ல கிராண்டா இருக்கணும்"
"சரிங்க சார்"
"அக்காவும் பவித்ராவும் வெளியில வந்து சாரி எடுக்க மாட்டாங்க. அதனால நல்ல சாரி டீலரை வீட்டுக்கு அனுப்பி வச்சிடு"
"செஞ்சிடுறேன் சார்"
"வீட்டுக்கு வந்து, தேவையான செக்ல என்னிடம் கையெழுத்து வாங்கிக்கோ. பணம் பத்தாம எந்த வேலையும் நிக்க கூடாது. புரிஞ்சுதா?"
"புரிஞ்சுது, சார்"
புன்னகையோடு அழைப்பை துண்டித்த தூயவன், அனைவரும் அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தான். தூயவனுக்கு என்ன ஆனது? அவன் இருக்கும் நிலைக்கு நேர் மாறாக அல்லவா அவன் நடந்து கொண்டிருக்கிறான்...? அவன் இருக்கும் நிலையில், அவன் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டான் என்று எண்ணினார்கள் அவர்கள். ஆனால் அவனோ, கல்யாணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறான். இதற்கு காரணம் பவித்ரா வா? அவள் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டது தான் அவனது மகிழ்ச்சிக்கு காரணமா? பவித்ரா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டதால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று அவர்களுக்கு தெரியும் தான். ஆனாலும் அவன் இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்பான் என்பது அவர்கள் எதிர்பாராதது.
மீண்டும் யாருக்கோ ஃபோன் செய்தான் தூயவன். அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஃபோன் செய்தது யாருக்கு என்பது, அவன் பேச துவங்கியவுடன் அனைவருக்கும் புரிந்து போனது.
"தூயா, என்னை மன்னிச்சிடு, தூயா" என்று அவனிடம் மன்றாடினார் மாயவன்.
"நம்ம குடும்பத்தை உடைச்ச விஷயத்தை பத்தி பேசுறதுக்காக நான் உங்களுக்கு ஃபோன் பண்ணல. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு நெனச்சேன்"
"தூயா, நான் சொல்றதை கேளு"
"இப்போ நான் சொல்றதை நீங்க கேக்க போறீங்களா? இல்ல, ஃபோனை கட் பண்ணட்டுமா?"
"இல்ல, வேண்டாம்... சொல்லு கேட்கிறேன்"
"நான் சொல்ல போற விஷயம், உங்களுக்கு முக்கியமானதா இருக்குமா இல்லயான்னு எனக்கு தெரியல. ஏன்னா, உங்களோட எல்லா முக்கியமான விஷயமும், உங்க ஃபிரண்டை சார்ந்து தான் இவ்வளவு நாள் இருந்திருக்கு. அது என்னவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். நான் உங்ககிட்ட சொல்ல வந்ததை சொல்லிடுறேன். என்னோட கல்யாணமும் அக்காவோட கல்யாணமும் ஃபிக்ஸ் ஆகி இருக்கு"
அதைக் கேட்ட மாயவன் அதிர்ச்சி அடைந்தார் என்று கூறத் தேவையில்லை.
"அக்கா சந்தோஷை கல்யாணம் பண்ணிக்க போறாங்க"
"நீ?"
"நான் யாரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்ககிட்ட சொல்றது அவசியம்னு எனக்கு தோணல. நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க விரும்புனீங்களோ, அந்த பொண்ணை மாதிரி அவ நிச்சயமா இருக்க மாட்டா. என் கல்யாணத்துக்கு வர்றதும் வராம போறதும் முழுக்க முழுக்க உங்க விருப்பம். நான் இந்த கல்யாணத்துக்கு ஏன் உங்களை கூப்பிடுறேன்னா, இந்த முட்டாள் உலகம் தப்பு பண்ணவங்களை விட்டுட்டு, அந்த தப்பானவங்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதவங்களை தான் எப்பவுமே பிளேம் பண்ணும். அதுல ஒருத்தனா நான் இருக்க விரும்பல"
"நீ என்னை கல்யாணத்துக்கு கூப்பிடறது குணாவுக்கு தெரியுமா?"
"அவங்க இங்க தான் இருக்காங்க. நான் பேசுறதை கேட்டுகிட்டு தான் இருக்காங்க. நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். அவங்க இப்போ, முன்ன இருந்த மாதிரி வீக்கா இல்ல. ஏன்னா, இப்போ அவங்க வாழ்க்கையில இழக்குறதுக்கு எதுவுமே இல்ல"
மென்று விழுங்கினார் மாயவன்.
"கல்யாணம் நடக்க போற இடம் முடிவானதும் நான் உங்களுக்கு சொல்றேன்" என்று அழைப்பை துண்டித்த தூயவன், சிலை போல் நின்றிருந்த குணமதியை பார்த்து புன்னகைத்தான்.
"மாம், உங்க புருஷன் கிட்ட உங்களைப் பத்தி நான் ரொம்ப பெருமையா பேசியிருக்கேன். தயவு செஞ்சு அவரை நேர்ல பார்த்த உடனே தொபக்கடீர்னு விழுந்திடாதீங்க" என்று கிண்டல் அடித்தான்.
தன் கண்களை சுழற்றினார் குணமதி.
"அவர் கூட சேரணும்னு உங்களுக்கு விருப்பம் இருந்தாலும், கொஞ்ச நாளைக்காவது உங்க பிடிவாதத்தை விட்டு குடுக்காதீங்க"
"என்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க, தூயா?"
"இதுல நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? எல்லா பொம்பளைங்களும் அவங்க புருஷன்னு வந்துட்டா ரொம்ப வீக் தான். நான் சொல்றது சரி தானே, பவித்ரா?" என்றான் தன் சிரிப்பை அடக்கியவாறு.
திரு திருவென விழித்தபடி அவனை ஏறிட்டாள் பவித்ரா, என்ன கூறுவது என்று தெரியாமல்.
"என்ன பவித்ரா எதுவுமே சொல்ல மாட்டேங்குற? நான் என்ன தப்பு செஞ்சாலும் அதை எல்லாம் மறந்துட்டு என்னை நீ ஏத்துக்க மாட்டியா?" என்றான் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு.
அவனுக்கு பவித்ரா பதில் கூறும் முன்,
"மாட்டேன்னு சொல்லு பவித்ரா" என்றார் குணமதி.
"ஏன், மாம்?"
"நீ பொம்பளைங்களை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவங்க எல்லாத்தையும் சுலபமா மன்னிச்சிடுவாங்க தான். ஆனா அதுக்குன்னு அவங்களுக்கு மதிப்பு இல்லன்னு அர்த்தமில்ல. அவங்க உறவையும் குடும்பத்தையும் மதிக்கிறாங்கன்னு அர்த்தம். அவங்களுக்கு அதோட மதிப்பு தெரிஞ்சிருக்குன்னு அர்த்தம். பல சந்தர்ப்பங்கள்ல அவங்க அமைதியா இருக்குறதுக்கு காரணம், தன்னோட குடும்பம் உடைஞ்சிட கூடாதுங்குற எண்ணம் தான். ஏன்னா, ஆம்பளைங்க எல்லாம் சுயநலவாதிங்க. அவங்க தன்னைப் பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க. பொறுப்புணர்ச்சியோ, கடமை உணர்ச்சியோ எதுவும் கிடையாது. சில குடும்பங்கள்ல தன் குழந்தைங்க எப்படி வளர்ந்து ஆளானாங்கன்னே சில அப்பாங்களுக்கு தெரியாம இருக்கு. ஆனா பொம்பளைங்க அப்படி இல்ல. அவங்களுக்கு குடும்பம் தான் முக்கியம். அதுலயும் குழந்தைங்கன்னு வந்துட்டா, அவங்க தன்னோட கவுரவத்தை பத்தி கூட கவலைப்படுறதில்ல. தன்னோட சந்தோஷத்தை கூட குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பாங்க"
"சந்தோஷ்..." என்றான் தூயவன்.
"சொல்லுங்க"
"நம்ம எப்படி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு உங்களுக்கு புரிஞ்சுதா?"
"நல்லாவே"
"நம்ம இதையெல்லாம் மனசுல வச்சுக்கணும். ஏன்னா, நமக்கு வரப்போற பொண்டாட்டிங்க எங்க அம்மா மாதிரி இருக்க மாட்டாங்க. ஏன்னா, அவங்களே இப்ப மாறி போய்ட்டாங்க"
"என் சுயமரியாதையை பத்தி நான் யோசிக்க ஆரம்பிச்சா அதுல என்ன தப்பு இருக்கு?"
"நான் எப்போ தப்புன்னு சொன்னேன்? நீங்க இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு"
"சரி தூயவன், எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்புறேன்" என்று வெண்மதியை பார்த்தபடி புன்னகையோடு கூறினான் சந்தோஷ்.
"ஓகே, போயிட்டு வாங்க"
"பை மதி, பை ஆன்ட்டி" என்று அங்கிருந்து கிளம்பினான் சந்தோஷ்.
அவனை வழி அனுப்ப அவனோடு சென்றாள் வெண்மதி.
"பவித்ரா, எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. எனக்கு பசிக்குது" என்றான் தூயவன்.
அவள் அங்கிருந்து செல்ல, தன் கையை குணமதியை நோக்கி நீட்டினான். அதை புன்னகையோடு பிடித்தார் குணமதி.
"உக்காருங்க, மாம்"
அவன் அருகில் அமர்ந்தார்.
"நான் உங்களை கிண்டல் பண்றேன்னு என் மேல கோவமா இருக்கீங்களா? நான் சும்மா விளையாடினேன்"
"எனக்கு தெரியும். உன்னை விட என்னை கிண்டல் பண்ற உரிமை வேற யாருக்கு இருக்கு?"
"நடந்ததுக்கெல்லாம் ரொம்ப சாரி, மாம்"
"உன் மேல எந்த தப்பும் இல்லாம நீ எதுக்கு சாரி கேக்குற?"
"ம்ம்... நீங்க சந்தோஷமா இருக்கிங்க தானே?"
"நிச்சயமா... நீ கல்யாணம் பண்ணிக்குறதுல இவ்வளவு ஆர்வமா இருக்கிறத பார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு"
"எனக்கு ஏன் சந்தோஷமா இருக்காது? நான் விரும்பின பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்க போறேனே..."
"நீ பவித்ராவை அந்த அளவுக்கா காதலிக்கிற?"
ஆம் என்று தலையசைத்தான் தூயவன்.
"நல்ல காலம் பவித்ரா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா...! பாரி கிட்ட சொல்லி உன்னோட ட்ரீட்மென்ட்க்கு யுஎஸ் போறதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சிடு"
"அதை அப்புறமா செய்யலாம்"
"அப்புறமா? ஏன்?"
"முதல்ல அக்காவையும் சந்தோஷையும் ஃபிரான்ஸுக்கு அனுப்பலாம்"
"ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியாதா?"
"தனி ஆளா எவ்வளவு வேலை தான் செய்வான் பாரி?"
பெருமூச்சு விட்டார் குணமதி.
"சந்தோஷ் ஃபிரான்ஸ்க்கு போக வேண்டியது ரொம்ப முக்கியம். டைமுக்கு அவர் அங்க இருக்கணும். அவங்களை அனுப்பிட்டு அடுத்த வாரம் நம்ம போகலாம்"
சரி என்றார் குணமதி. அப்பொழுது காப்பியுடன் வந்தாள் பவித்ரா.
"நான் டின்னர் சமைக்கப் போறேன்" என்றார் குணமதி.
"நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன், மா"
"எனக்கு ஹெல்ப் பண்ண குழந்தைசாமி இருக்காரு. நீ தூயாவை ரொம்ப தனிமையை உணர விடாத"
தலை குனிந்தபடி தலையசைத்தாள் பவித்ரா. அங்கிருந்து சென்றார் குனணமதி.
"பாத்தியா, அம்மா என்ன சொன்னாங்கன்னு? நீ எப்பவும் என்னை தனிமையை ஃபீல் பண்ண வைக்கிற"
"எங்க ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு மாப்பிள்ளை பார்த்துக்கவே மாட்டாங்க..." என்றாள் மெல்லிய குரலில்
"இது உங்க ஊர் இல்ல. சென்னை... உனக்கு முன்னாடி இருக்கிறவன் தூயவன்...!"
"அதனால என்ன மாறிடும்? அம்மா எப்பவும் அம்மாவா தானே இருப்பாங்க?"
"அம்மா அம்மாவ தான் இருப்பாங்க. அதே மாதிரி, வைஃபும் வைஃபா தான் இருப்பா"
தூயவன் மெல்ல அவஸ்தையோடு அசைவதை கண்டாள் பவித்ரா.
"உங்களுக்கு என்ன செய்து? நீங்க கம்ஃபர்டபுளா இல்லயா?"
"முதுகு வலிக்குது"
"நான் உங்களுக்கு தைலம் தேச்சி விடட்டுமா?"
அதைக் கேட்டு திகைத்தான் தூயவன்.
"உண்மையிலேயே நீ எனக்கு தைலம் தேச்சு விட போறியா?"
"நீங்க தானே வலிக்குதுன்னு சொன்னீங்க?" என்றாள் தயக்கத்துடன்.
"தைலம் அங்கு இருக்கு" என்றான்.
அவனுக்கு பின்னால் இருந்த தலையணைகளை எடுத்துவிட்டு, அவனை மெல்ல திரும்பி படுக்கச் செய்தாள். தான் அணிந்திருந்த சட்டையை புன்னகையோடு லேசாக ஏற்றிவிட்டு கொண்டான் தூயவன்.
தைலத்தை அவன் முதுகில் மென்மையாய் தடவி மசாஜ் செய்து விட்டாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு,
"இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு? பரவாயில்லயா?" என்றாள்.
"இப்படி நீ எனக்கு தைலம் தேச்சி விடுறதா இருந்தா, வாழ்நாள் முழுக்க நான் படுத்த படுக்கையா இருக்க தயாராக இருக்கேன்"
"தயவு செஞ்சு அப்படி எல்லாம் சொல்லாதீங்க"
"அப்படின்னா நீ சொல்லு"
"என்ன சொல்லணும்?"
"நான் நல்லா இருந்தாலும், எனக்கு இப்படி தைலம் தேச்சி விடுறேன்னு சொல்லு"
"இது ஒரு சாதாரண விஷயம். அதுக்காக எதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் யூஸ் பண்றீங்க?"
"அப்படின்னா நீ எனக்கு தைலம் தேச்சு விடுவ தானே?"
"ம்ம்ம்..."
"உனக்கு ஒன்னு தெரியுமா?"
"என்ன?"
"உன் கை ரொம்ப சாஃப்டா இருக்கு"
சங்கடத்தோடு தன் பல்லை கடித்து புருவத்தை உயர்த்தினாள்.
திரும்பிப் படுக்க முயன்ற தூயவன்,
"ஆஆஆஆ..." என்றான்.
"பாத்து பாத்து" என்றாள் பதட்டத்தோடு.
சரி என்று குறுநகை புரிந்த
தூயவன், அவள் கையைப் பிடித்து,
"நீ ரொம்ப ஸ்வீட்" என்றான்.
தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க அவள் முயன்ற போது,
"உங்க ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணும் மாப்பிள்ளையும் கிஸ் பண்ணிக்க மாட்டாங்களா?" என்றான் ஊடுருவும் பார்வையோடு.
அவனுக்கு பதில் கூறாமல் தலை தாழ்த்தினாள்.
"பவித்ரா..."
மெல்ல தலையை உயர்த்தி அவள் அவனைப் பார்க்க,
"நான் தப்பு செஞ்சா என்னை மன்னிக்க மாட்டியா?" என்றான்.
மெல்ல தன் கண்ணிமைத்தாள் பவித்ரா.
"இல்ல, அம்மா மாதிரி மன்னிக்கவே கூடாதுன்னு பிடிவாதமா இருப்பியா?"
"என்ன தப்பு?"
"நான் உன்னை ஏமாத்தினா நீ என்னை மன்னிக்க மாட்டியா?"
"ஏன் ஏமாத்துவிங்க?"
"எனக்கு வேண்டியதை அடைய..."
"உங்களுக்கு வேண்டியதை அடைய என்னை ஏமாத்துவிங்களா?"
"அது எல்லாத்தையும் விட முக்கியமானதா இருந்தா, அதை அடைய நான் உன்னை ஏமாத்துவேன்"
தன்னை சமாளித்துக்கொண்ட அவள்,
"என்னை யாராவது ஏமாத்துனா எனக்கு பிடிக்காது..." என்றாள்.
"என்ன செய்வ?"
"என்னை ஏமாத்துறவங்க கிட்ட நான் பேச மாட்டேன்..."
"அப்படின்னா என்கிட்ட பேச மாட்டியா?"
மாட்டேன் என்றாள் முகத்தை கோபமாய் வைத்துக்கொண்டு.
"என்னை உக்கார வை..."
தன் முகத்தை அவனுக்கு எதிர்ப்புறம் திருப்பிக்கொண்டாள்.
"ப்ளீஸ்..."
அதே முகபாவத்துடன் அவனை அமரச்செய்தாள்.
"நீ என்கிட்ட பேசலன்னா நான் என்ன செய்வேன்னு உனக்கு தெரியுமா?"
"என்ன?" என்றாள் அவனை பசர்க்காமல்.
"இதை தான் செய்வேன்"
அவளை தன்னை நோக்கி இழுத்து அவள் இதழை தன் இதழ்களால் பற்றிக்கொண்டான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top