37 தூயவனின் விருப்பம்
37 தூயவனின் விருப்பம்
"நான் உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று கூறிய பவித்ராவை பார்த்து நேசமாய் புன்னகைத்தான் தூயவன்.
"உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றாள் பவித்ரா சங்கடத்துடன்.
"இப்போதைக்கு எனக்கு எதுவும் வேணாம். எனக்கு வேண்டியது கிடைச்சிடுச்சு" என்று பளிரென சிரித்தான்.
வெண்மதியும் குணமதியும் வருவதை அவர்கள் பார்த்தார்கள். அவர்களை பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா.
"மாம், பவித்ரா உண்மையிலேயே என்னை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கா" என்றான் தூயவன் சிரித்தபடி.
"அப்படியா?" என்று பவித்ராவின் தோளைத் தொட்டார் குணமதி.
ஆம் என்று சங்கடத்துடன் தலையசைத்தாள் பவித்ரா.
"அவங்க தான் ஏற்கனவே எல்லாரும் முன்னாடியும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்களே!" என்றாள் வெண்மதி.
"அவ அப்ப சொன்னது உண்மை இல்லயாம் கா. சஞ்சனாவோட வாயை அடைக்க தான் அப்படி சொன்னாளாம்" என்றான் கிண்டலாக.
"நெஜமாவா? அதை நீங்க முழு மனசோட சொல்லலயா?"
"இல்லக்கா... ஆமாம் கா... இல்ல... நான் அப்படி சொல்லல..." உளறினாள் பவித்ரா.
"அக்கா, ப்ளீஸ், அவளை கன்ஃபியூஸ் பண்ணாதீங்க. இப்ப தான் ரொம்ப கஷ்டப்பட்டு நான் அவளை ஒத்துக்க வச்சிருக்கேன். நீங்க குழப்பினீங்கன்னா அவ முடியாதுன்னு சொல்லிட போறா" என்று சிரித்தான் தூயவன்.
அவன் சிரிப்பதை மூவரும் வியப்போடு பார்த்தார்கள்.
"நம்ம தூயாவுக்கு அவனோட எனர்ஜி திரும்ப வந்துடுச்சு போல இருக்கே" என்றார் குணமதி.
"முழுசா இன்னும் திரும்பி வரல" என்றான் பவித்ராவை பார்த்தபடி.
"அது முழுசா திரும்பி வரணும்னா நாங்க என்ன செய்யணும்?"
"கல்யாணம்"
மூவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
"பவித்ராவை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"
அவன் பேயோ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்ற பவித்ராவை குணமதியும் வெண்மதியும் ஏறிட்டார்கள்.
"தூயா, நீ நெஜமாத்தான் சொல்றியா?" என்றார் குணமதி.
"இது விளையாடுற விஷயமா? எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றான் சீரியஸாக.
"சரி தூயா, நாங்க உன் கல்யாணத்தை ஏற்பாடு பண்றோம்" என்றாள் வெண்மதி.
"அக்கா எங்க கல்யாணம்னா, எனக்கும் பவித்ராவுக்கும் நடக்கிற கல்யாணத்தை பத்தி மட்டும் நான் பேசல. உங்களுக்கும் சந்தோஷுக்கும் நடக்கிற கல்யாணத்தையும் சேர்த்து தான் சொல்றேன்"
அவர்களது முகம் பொலிவிழந்தது.
"என்ன ஆச்சு? எதுக்காக திடீர்னு உங்க முகமெல்லாம் மாறுது?"
அவர்கள் அமைதியாக இருந்தார்கள்
"ஓ... மாம் சந்தோஷை வீட்டை விட்டு போக சொன்னாங்களே அதை நினைச்சு கவலைப்படுறீங்களா? தான் நீங்க அதை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. இதுக்கு நிச்சயம் ஒரு சொல்யூஷனோட சந்தோஷ் திரும்பி வருவார். ஏன்னு தெரியுமா?"
ஒன்றும் கூறாமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் வெண்மதி.
"இன்னும் பத்து நாள்ல அவரு பிரான்ஸுக்கு போகணும். அவரு உங்களையும் அவர் கூட கூட்டிக்கிட்டு போக ரெடியா இருக்காரு. அதுக்காக அவர் ஏதாவது நிச்சயம் செய்வார்"
"அவர் ஏற்கனவே செஞ்சிட்டாரு, தூயா" என்றாள் வெண்மதி மெல்லிய குரலில்.
"என்ன செஞ்சாரு?"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் இங்க வந்தாரு. அவங்க வீட்ல சண்டை போட்டுக்கிட்டு வந்துட்டாருன்னு நினைக்கிறேன்"
"நெஜமாவா? அதைப்பத்தி அவர் உங்ககிட்ட எதுவும் சொல்லலயா?"
"அவர் அதைப்பத்தி எதுவும் சொல்லல. ஆனா வேற ஒரு விஷயம் சொன்னாரு"
"என்ன அது?"
"தன் பேர்ல இருந்த எல்லா ஷேர்சையும் அவர் உன் பேர்ல மாத்திட்டாரு"
"என்ன்னனது? ஏன் கா?"
"அவங்க அப்பா நம்ம கம்பெனியோட சிஇஓவா ஆக நினைக்கிறாராம். அதனால அவர் பேர்ல இருந்த எல்லா ஷேர்சையும் தன் பேர்ல மாத்த சொன்னாராம். ஆனா சந்தோஷ் உன் பேர்ல மாத்திட்டாரு"
"இப்படி செய்யணும்னு என்னக்கா அவசியம்?"
"இல்ல, தூயா. இங்க ஏற்பட்ட அவமானத்துக்கு மாதேஷ் அங்கிள் நம்ம மேல ரொம்ப கோவமா இருப்பாரு. நம்மளை பழி தீர்க்க அவர் என்ன வேணாலும் செய்வார். அவரை பத்தி உனக்கு தெரியாதா?"
"அக்கா, உங்க ரெண்டு பேரோட ஷேரையும் நீங்க என் பேர்ல மாத்தி கொடுத்தாலும், நம்ம அப்பா மட்டும் அவர் ஷேர்சை மாதேஷ் அங்கிள் பேருக்கு மாத்திட்டா, நம்மளால ஒண்ணுமே செய்ய முடியாது. அப்பா நிச்சயம் அப்படி செய்வாரு. ஏன்னா, அவர் தான் நம்மள பத்தி என்னைக்குமே கவலைப்பட்டதில்லயே"
"சந்தோஷ் அதைப்பத்தியும் சொன்னாரு. நம்ம கம்பெனியில இருக்கிற சின்ன ஷேர் ஹோல்டர் கிட்ட இருந்து ஷேர்சை வாங்கி நம்ம மெஜாரிட்டியை வச்சிக்க முடியும்னு சொல்றாரு"
அவர்கள் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த குணமதியை பார்த்தான் சந்தோஷ்.
"இன்னும் கூட சந்தோஷ் ஒரு அப்பா பிள்ளைன்னு நினைக்கிறீர்களா? தான் அப்படி இல்லைன்னு அவர் ஏற்கனவே ப்ரூஃப் பண்ணிட்டாரே..." என்றான்
"நீ அவன் ப்ரூஃப் பண்ணிட்டான்னு நினைக்கிறியா?"
"நிச்சயமா. சாதாரணமாவே நான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். அதுவும் அது அக்கா சம்பந்தப்பட்ட விஷயமா இருக்கிற பட்சத்தில் நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருப்பேன்னு உங்களுக்கு தெரியாதா மாம்?"
"உனக்கு அவன் மேல நம்பிக்கை இருந்தா, நானும் அவனை நம்புவேன்"
"அக்கா, சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லுங்க"
அதை கேட்ட வெண்மதி மகிழ்ச்சியோடு தலையசைத்தாள்.
"உன் விஷயத்துக்கு வா" என்றார் குணமதி.
"என்ன?"
"நீ உண்மையிலேயே கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவுல இருக்கியா?" என்றார் சந்தேகத்தோடு.
"ஏன், மாம்? என் வார்த்தையில உங்களுக்கு நம்பிக்கை இல்லயா?"
குணமதி புன்னகைத்தார்
"மாம், என்னோட பவரை ரொம்ப குறைச்சி எடை போடாதீங்க. சந்தோஷ் என்கூட இருக்காரு. நம்ம கல்யாணத்துக்கு தயாரா இருக்கோம்னு தெரிஞ்சா, தனியாவே எல்லா வேலையும் செஞ்சிடுவாரு. அவரும் என்னை மாதிரியே கல்யாணத்துல ரொம்ப ஆர்வமா இருக்காரு"
குணமதி வாய்விட்டு சிரிக்க, வெண்மதி வெட்கப்பட்டு கன்னம் சிவந்தாள். ஆனால் பவித்ராவுக்கோ மயிர் கூச்செறிந்தது. என்னைப் போலவே அவரும் ஆர்வமாய் இருக்கிறார், என்ற அவனது வார்த்தை அவளுக்கு வியப்பை தந்தது. அவளை மணந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கிறானா தூயவன்?
"மதி, தூயா அவனாவே களத்தில் குதிக்கிறதுக்கு முன்னாடி, நம்ம கல்யாண வேலையை ஆரம்பிச்சிடணும்னு நினைக்கிறேன்" என்று சிரித்தார் குணமதி.
வெண்மதி ஆம் என்று புன்னகையோடு தலையசைத்தாள்.
"நான் ஐயர் கிட்ட பேசி, தேதி குறிச்சி வாங்குகிறேன்" என்றார் குணமதி.
"மாம், இன்னும் பத்து நாள்ல சந்தோஷ் ஃபிரான்ஸ் போயாகணும். அதை மறந்துடாதீங்க. அதுக்கு தகுந்த மாதிரி தேதியை குறிங்க"
"தூயா, சந்தோஷ் ஃபிரான்ஸ் போறத்துக்கு தகுந்த மாதிரி தேதியை குறிக்க சொல்றியா? இல்ல, அது உனக்கு ஒரு சாக்கா?" என்றார் கிண்டலாய் குணமதி.
"என்னோட ட்ரீட்மென்ட்டுக்காக நான் அமெரிக்கா போக வேண்டாமா? நீங்க என்னை எப்படி தனியா கூட்டிகிட்டு போவீங்க? எங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா, பவித்ரா உங்க பொறுப்புல பாதியை ஏத்துக்குவால? அதுக்காகத்தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்"
"சரிங்க சார், நான் உங்க கல்யாண வேலையை மட்டும் இல்ல. நீங்க அமெரிக்கா போறதுக்கான வேலையையும் சேர்த்து செஞ்சுடறேன்" என்றார் குனமதி.
ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் பவித்ரா. அவர்கள் திருமண தேதியை குறிப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருமணத்தில் அவள் தான் மணப்பெண்.
குணமதி அங்கிருந்து செல்ல, வெண்மதியும் அவரை பின்தொடர்ந்தாள். பவித்ராவும் அவர்களோடு சென்றுவிடலாம் என்று எண்ணிய போது, அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் தூயவன்.
"ஏன் டிஸ்டர்ப்டா இருக்க? உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லயா?"
"இல்ல... இல்ல, இல்ல... இருக்கு..."
"ஏன் இவ்வளவு கன்ஃபியூஸ்டா இருக்க. நீ சந்தோஷமா இருக்கியா இல்லயான்னு உனக்கே தெரியலயா?" என்றான் கண்களை சுருக்கி.
"நான் சந்தோஷமா தான் இருக்கேன். ஆனா எல்லாம் இவ்வளவு சீக்கிரமாக நடக்கும்னு நான் எதிர்பார்க்கல"
"எதை சொல்ற?"
"நம்ம கல்யாணத்தை தான்"
"சந்தோஷ் இன்னும் பத்து நாள்ல ஃபிரான்ஸ்க்கு போகணும். அங்க போனதுக்கு பிறகு ப்ராஜெக்ட்டுக்காக அவர் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டா, ரெண்டு வருஷத்துக்கு இந்தியாவுக்கு வர முடியாது. அப்படி அவர் போய்ட்டா, அக்கா அவருக்காக ரெண்டு வருஷம் காத்திருக்கணும். அது பரவாயில்லயா?"
அவள் இல்லை எனறு தலையசைத்தாள்.
"நம்மளும் காத்திருக்கணும். எங்க அக்காவுக்கு தம்பியா இருந்துகிட்டு, அவங்களுக்கு கல்யாணம் ஆகாம நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு கல்யாணம் ஆகலன்னா நான் அமெரிக்காவுக்கு எப்படி ட்ரீட்மென்ட்டுக்கு போக முடியும்? எனக்கு அன்பும் ஆதரவும் எப்படி கிடைக்கும்?" என்றான் சோகமாக.
அப்பொழுது தான், இன்னும் அவன் அவளது கையைப் பற்றிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். மெல்ல தன் கையை அவனிடம் இருந்து விடுவிக்க முயன்றாள். அவளைப் பார்த்து நெற்றியை சுருக்கிய அவன்,
"நீ போகனுமா?" என்றான்.
அவள் ஆம் என்று தலையசைத்தாள்.
"என்ன செய்யப் போற?"
"ஒன்னும் இல்ல" என்றபடி தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றாள்.
லேசாய் அவளை பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தான். சங்கடத்தில் நெளிந்த படி அமர்ந்திருந்தாள் பவித்ரா. அது தான் முதல் முறை, அவள் அவனுக்கு அவ்வளவு அருகில் அமர்ந்திருப்பது!
"ஏன் இவ்வளவு அன்கம்ஃபர்டபுலா இருக்க?"
இல்லை என்று தலைகசைத்தாள்.
"உனக்கு என்னை பிடிக்கலன்னு ஏன் எனக்கு தோணுது?"
திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் பவித்ரா.
"முன்னாடியெல்லாம் என்கிட்ட ரொம்ப கேஷுவலா இருந்த. ஆனா இப்போ, என்னை பார்க்க கூட மாட்டேங்குற... ஏன் ஏதாவது பிரச்சனையா?"
"அப்போ நான் உங்ககிட்ட கேஷுவலா இருந்தேன். ஏன்னா, நமக்குள்ள அப்ப எந்த உறவும் இல்ல. ஆனா இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது. அதுவும் எல்லாம் ரொம்ப வேகமா நடக்குது..."
"பதட்டமா இருக்கா?"
"ம்ம்ம்..."
"இப்பவே இவ்வளவு பதட்டப்பட்டா, கல்யாணத்துக்கு அப்புறம் என்னை எப்படி சமாளிக்க போற?"
சட்டென்று பவித்ரா ஆர்வமானாள்.
"நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க. செய்ய வேண்டியதை எல்லாம் நான் கரெக்டா டைமுக்கு செஞ்சிடுவேன்"
"அப்படியா? என்ன செய்வ?"
"நீங்க எழுந்ததுக்கு பிறகு நீங்க ஃபிரெஷ் ஆகுறதுக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஏழு மணிக்கு காபி கொடுப்பேன். ஒன்பது மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் கொடுத்துடுவேன்..."
"ஆங்... ஒரு மணிக்கு லஞ்ச். அஞ்சு மணிக்கு டீ. எட்டு மணிக்கு டின்னர்..."
"கரெக்ட்..."
தன் விழிகளை சுழற்றினான் தூயவன்.
"பவித்ரா, இதையெல்லாம் எனக்கு வேலைக்காரங்க கூட செய்வாங்க. ஒரு வைஃபா நீ எனக்கு என்ன செய்வேன்னு கேட்டேன்"
"உங்களை அமெரிக்கா கூட்டிகிட்டு போவேன். உங்க டிரீட்மென்ட் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க கியூர் ஆக இருபது சதவீதம் சான்ஸ் இருக்கிறதா டாக்டர் சொல்லி இருக்காரு. நீங்க மட்டும் நம்பிக்கையோடு இருந்தா, அதுவே உங்களை குணப்படுத்திடும். ஒரு வைஃபா உங்களுக்கு வேண்டிய சப்போர்ட்டை நான் தருவேன். நீங்க என்னை நம்பலாம்"
"நான் உன்னை நம்புறேன்"
தூயவன் மறைமுக அர்த்தத்தோடு பேசினாலும், அதை பவித்ரா புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால், தூயவனின் தற்போதைய நிலைமை அவளை எதையும் சிந்திக்க விடவில்லை. அவனது சிகிச்சைக்கு அப்பாற்பட்டு அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. அவள் மனதில் அதைத் தவிர வேறு எண்ணமே இல்லை. அது தூயவனுக்கு புரிந்தது.
"பவித்ரா நீ எனக்கு சப்போர்ட்டிவா இருப்பேன்னு சொன்ன இல்ல? அப்படின்னா உன்கிட்ட இருந்து எனக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் தானே?"
"ஆமாம் அதுல என்ன சந்தேகம்?"
"அன்புன்னா என்னன்னு தெரியுமா?"
பவித்ரா திகைத்தாள். இதில் தெரியாமல் இருப்பதற்கு என்ன இருக்கிறது? அவன் எந்த அர்த்தத்தில் அதை கேட்கிறான்?
"அன்புன்னா நீ தான் பவித்ரா" என்றான் புன்னகையோடு.
மீண்டும் திகைப்படைந்த பவித்ரா, தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்" என்றான் என்று வழக்கம் போலவே.
புன்னகைத்தபடி பெருமூச்சு விட்டாள் பவித்ரா. அவன் என்ன கூற போகிறான் என்று அவளுக்கு தெரியுமே...!
"ஆனா, இப்ப சொல்ல மாட்டீங்க... அப்படித்தானே?" என்றாள்.
"இல்ல... இப்பவே சொல்லணும்" என்றான்.
அவனை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. அப்படி அவன் என்ன கூற போகிறான் என்று. அவன் கூறிய போது அவளுக்கு வியர்த்துப் போனது.
"ஐ லவ் யூ, பவித்ரா..." என்றான் தூயவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top