35 பெரு வெடிப்பு

35 பெரு வெடிப்பு

பவித்ராவின் பதிலை கேட்டு வாயடைத்து நின்றாள் சஞ்சனா.

"தூயவனுக்கு அன்பும் அக்கறையும் தேவைன்னு சொன்னீங்க. அது அவருக்கு சஞ்சனாகிட்ட இருந்து கிடைக்கும்னு இன்னமும் நீங்க நினைக்கிறீங்களா?" என்றான் சந்தோஷ்.

ஏமாற்றத்துடன் சஞ்சனாவை ஏறிட்டார் மாயவன். அவள் தூயவனை இப்படி அவமானப்படுத்துவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

"உனக்கு தெரியுமா சந்தோஷ், என்னோட குடும்பத்தை விட்டுட்டு அவளுக்கு சப்போர்ட்டா நின்னேன். என் வைஃபையும், மகனையும் விட அவளுடைய ஃபீலிங்ஸுக்கு மரியாதை கொடுத்தேன். ஆனா அவ தூயவை இவ்வளவு கேவலப்படுத்துவாள்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்ற அவரது குரலில் ஏமாற்றமும் கோபமும் ஒருங்கே கலந்திருந்தது.

"விடு மாயா, நம்ம தூயவனுக்கு நல்ல குடும்ப பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். சஞ்சனா மாடனான பொண்ணு. அவ ஊனமான உன் பையனுக்கு சேவை எல்லாம் செய்வான்னு நம்ம எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றார் மாதேஷ் வெகு சாதாரணமாய்.

"ஆமாம் அங்கிள், தூயவனுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா" என்றாள் சஞ்சனா.

"ஆமாம்... என் பையனுக்கு நான் நிச்சயம் ஒரு நல்ல பெண்ணை தேடி கண்டுபிடிப்பேன். ஆனா அது நிச்சயமா நீ இல்ல..." கோபத்தோடு கத்தினார் மாயவன்.

"அங்கிள், வார்த்தையை அளந்து பேசுங்க" என்றாள் பல்லை கடித்தவாறு.

"வாயை மூடு... இன்னும் ஒரு வார்த்தை பேசினாலும் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. உன்னால தான் இன்னைக்கு தூயவன் இந்த நிலைமையில இருக்கான். உன்னால தான் சின்னசாமி பவித்ராவை கடத்திக்கிட்டுப் போக சென்னைக்கு வந்தான். உன்னால தான் சின்னசாமி தூயாவை அட்டாக் பண்னான். ஆனா நீ உனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி என் பையனை கேவலப்படுத்திக்கிட்டு இருக்க. நீ ஒரு சுயநலவாதி. எந்த ஒரு நல்ல குடும்பத்துக்கும் பொருந்துற நல்ல பொண்ணா நீ இருக்கவே முடியாது. நீ ஒரு கேவலமான பிறவி" என்று அவர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அனைவரும் திகைத்துப் போனார்கள்.

தூயவனும் வெண்மதியும் கூட அதிர்ச்சி அடைந்தார்கள் தான். ஆனால் குணமதியோ அடியோடு ஆட்டம் கண்டார். அவர் கேட்டதெல்லாம் உண்மையாக இருக்கும் என்று அவரால் நம்ப முடியவில்லை. சின்னசாமியின் வருகை குறித்து மாயவனுக்கு முன்பே தெரியுமா?

"இதையெல்லாம் செஞ்சது நீ தானா? சின்ன சாமியை இங்க வர சொன்னது நீ தானா?" என்றாள் வெண்மதி சஞ்சனாவை பார்த்து அருவறுப்புடன்.

அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பாராத விதமாய் சஞ்சனாவின் உடல் அதிரும் வண்ணம் அவள் கன்னத்தில் பலமான அறை விழுந்தது.

"ச்சி... நீ எல்லாம் ஒரு பொண்ணா? என் குடும்பத்தோட விளையாடுற உரிமையை உனக்கு யாருடி கொடுத்தது?" என்றார் குணமதி.

"குணா..." என்று குரல் எழுப்பிய படி அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தார் மாதேஷ்.

"ஏய்... பின்னாடி போ" என்று அவரை நோக்கி தன் விரலை நீட்டினார் குணமதி.

"உனக்கெல்லாம் வெக்கமே கிடையாதா? வயித்துக்கு சோறு தானே திங்குற? உன் பொண்ணால தான் என் பையன் வாழ்க்கையை இழுந்து படுத்த படுக்கையா கிடக்கிறான்"

ஆத்திரத்தோடு சஞ்சனாவை நோக்கி திரும்பிய அவர், மீண்டும் அவளை பலம் கொண்ட மட்டும் அறைந்தார்.

"உனக்கு எவ்வளவு தைரியம்...!"

"நீங்க கோவிலுக்கு போக போறத பத்தி மாயவன் அங்கிள் தான் என்கிட்ட சொன்னாரு" என்றாள் சஞ்சனா, அந்த பிரச்சனையில் இருந்து தான் தப்பித்தால் போதும் என்று, தன் கன்னத்தை பயத்தோடு பிடித்துக் கொண்டு.

குணமதியின் விழிகள் அதிர்ச்சியில் பெரிதாயின. கோபத்தில் பல்லை கடித்த படி அவர் மாயவனை வெறித்து பார்த்துக் கொண்டு சிறு நடை நடந்து அவரை நோக்கி முன்னேறினார். மாயவனுக்கு முன்னால் வந்து நின்ற அவர் அதிர்ச்சியோடு அவரை பார்த்தபடி

"சின்னசாமி பவித்ராவை கடத்த போற விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?" என்றார் நம்ப முடியாமல்.

ஒன்றும் கூறாமல் தலை குனிந்து, தன் குடும்பத்தை சேர்ந்த மூவரையும் நிலைகுலைய செய்தார் மாயவன். வெண்மதி கோபத்தில் கொதிக்க, 'என்ன அப்பா இவர்?' என்பது போல் தன் கண்களை சுருக்கினான் துயவன்.

"சொல்லுங்க... அவ சொன்னதெல்லாம் உண்மையா?" என்று அவரது தோள்களை பற்றி குலுக்கினார் குணமதி.

"அவர் எனக்கு சொல்லலைனா நீங்க கோவிலுக்கு போற விஷயம் எனக்கு எப்படி தெரியும்? ஆனா அவர் தூயவன் கோவிலுக்கு வர மாட்டாருன்னு சொன்னாரு. ஆனா நாங்க எதிர்பாராத விதமா தூயவனும் உங்க கூட கோவிலுக்கு வந்துட்டாரு. தூயவன் விஷயத்துல நாங்க ஜாக்கிரதையா தான் இருந்தோம். ஆனா அவரும் உங்க கூட கோவிலுக்கு வரப்போறதை அங்கிள் என்கிட்ட சொல்லாம விட்டுட்டாரு" என்றாள் சஞ்சனா.

அவரிடமிருந்து ஓரடி பின்னால் நகர்ந்தார் குணமதி. அவரது கையை பற்ற மாயவன் நினைத்தபோது அவரது கையை உதறினார் அவர்.

"என்னை தொடாதீங்க... இந்த நிமிஷத்துல இருந்து உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது"

"குணா நான் சொல்றதை கேளு"

"வாயை மூடுங்க... நீங்க மனுஷனே இல்ல  ( மாதேஷை சுட்டிக்காட்டி ) இந்த கேடு கெட்டவன் பேச்சைக் கேட்டு என் வாழ்க்கையை கெடுத்தீங்க, என் மகளோட வாழ்க்கையை கெடுத்தீங்க, இப்போ என் மகனையும் முடமாக்கிட்டிங்க. நீங்க உங்களை ஆம்பளைன்னு சொல்லிக்காதீங்க. நீங்க ஆம்பளையே கிடையாது..." என்று அவரது இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தார் குணமதி.

"கு...ணா..."

மாயவனைப் பிடித்து கோபத்மாய்த் தள்ளினார் குணமதி.

"என் முன்னாடி ஒரு நிமிஷம் நின்னாலும் உங்களை நான் கொன்னுடுவேன். வீட்டை விட்டு வெளியே போங்க. எப்பவும் என் முன்னாடி வந்துடாதீங்க. உங்க மூஞ்சைப் பார்க்க கூட நான் விரும்பல. இந்த நிமிஷத்தில் இருந்து என்னை நான் ஒரு விதவைன்னு நினைச்சுக்கிறேன். ஏன்னா, என்னை பொறுத்த வரைக்கும் நீங்க செத்துட்டீங்க. வெளியே போங்க..." தொண்டை கிழிய கத்தினார் அவர்.

"குணா நான் சொல்றதை கேளு..."

"நீங்க சம்பந்தப்பட்ட எதையும் நான் யோசிக்கக்கூட விரும்பல. நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைங்களை அடைய நீங்க தகுதி இல்லாதவர். யாருமே இல்லாம தனியா விடப்படும் போது தான் உங்களுடைய மதிப்பு என்னன்னு உங்களுக்கு தெரியும். ( சஞ்சனாவை சுட்டிக்காட்டி ) இந்த கேடுகெட்ட நாயால என் மகனை நீங்க முடமாக்கிட்டிங்க..."

"ஆன்ட்டி, நீங்க உங்க லிமிட்டை கிராஸ் பண்றீங்க..."

"வாயை மூடுடி நாயே. லிமிட்டை பத்தி நீ பேசுறியா? உன்னோட லிமிட் என்னன்னு நீ தெரிஞ்சுக்கோ... மனசாட்சி இல்லாத பன்னி. சின்னசாமி பவித்ராவை ஒரு கிழ நாய்க்கு கல்யாணம் பண்ணி வைப்பான்னு தெரிஞ்சும் அவளை அவன் கூட அனுப்ப துணிஞ்ச... என் மகனை படுத்த படுக்கையாகிட்ட... இவ்வளவையும் செஞ்சிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிற தைரியம் உனக்கு எப்படி வந்தது? உன்னை மாதிரி கீழ்த்தரமான ஒரு சாக்கடை புழுவை என் வாழ்க்கையில நான் பார்த்ததில்ல"

"நான் தூயவனை காதலிச்சேன்..."

"தூ... ( காரி உமிழ்ந்தார்) அந்த புனிதமான வார்த்தையை உன் நாறிப்போன வாயால சொல்லாத. நீ அவனை காதலிச்ச... இன்னைக்கு அவன் ஊனமானதும் உன்னோட காதல் ஊர் மேய போச்சா? பணத்துக்காக உடம்பை விக்கிற விபச்சாரி கூட உன்னை விட எவ்வளவோ மேல்"

அவரது ரௌத்திரத்தை கண்ட அனைவரும் ஆடிப் போனார்கள்.

"கு...ணா..." என்று ஏதோ சொல்ல முயன்றார் மாதேஷ்.

"நீ ஏதாவது பேசினா உனக்கு மரியாதை கெட்டுப் போயிடும். உன்னால தான் எங்க குடும்பத்தோட நிம்மதியும் சந்தோஷமும் பறிபோச்சு. எங்க குடும்பத்துல நடந்த எல்லா கெடுதிக்கும் நீ தான் காரணம். கொஞ்சநஞ்சம் இருக்கிற மரியாதையும் கெட்டுப் போறதுக்கு முன்னாடி, உன்னோட கேடுகெட்ட மகளை கூட்டிகிட்டு இங்கிருந்து போயிடு. இல்லனா நான் எதை எடுத்து உன்னை அடிப்பேன்னு எனக்கே தெரியாது" சீறினார் அவர்.

"இதுக்கான விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்" என்றார் மாதேஷ்.

"உன்னால முடிஞ்சதை புடுங்கு... இவனையும் ( மாயவன்) உன்னோட கூட்டிக்கிட்டு போ... என்ன கிழிக்கணும்மோ கிழிங்க" காளியை போன்ற சிவந்த கண்களுடன் நின்றார் குணமதி.

கொதிப்புடன் அங்கிருந்து நடந்தார் மாதேஷ். பயத்துடன்அவரை பின்தொடர்ந்து சென்றாள் சஞ்சனா. பரிதாபமாய் குணமதியை பார்த்தபடி நின்றார் மாயவன்.

"மதி, மரியாதையா அவரை இங்கிருந்து போயிட சொல்லு. இல்லன்னா ரொம்ப அசிங்கப்பட்டு போவாரு"

மாயவன் மென்று விழுங்கியபடி நடந்தார். வெண்மதியும் தூயவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அமைதியாய் இருக்கும்படி தன் கண்களை இமைத்தாள் வெண்மதி. இவ்வளவு கோபாவேசமான குணமதியை அவர்கள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. தன் குடும்பம் சிறிது விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் அவர் தனக்குள்ளே கட்டுப்பட்டு படுத்தி வைத்திருந்தார். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை இந்த இடத்தில் முடிந்து விட்டதாய் எண்ணினார் அவர்.

தூயவனிடம் வந்த குணமதி, அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு அழுதார்.

"தூயா..."

அவரது கரங்களை அழுத்தமாய் பற்றிய அவன்,

"மாம், ப்ளீஸ் அழாதீங்க" என்றான்.

"அவர் என்ன செஞ்சாருன்னு பார்த்தியா? அவர் என்னைக்குமே ஒரு நல்ல புருஷனா இருந்ததே இல்ல. ஆனா ஏதோ ஒரு நாள் அவர் அப்பாவுடைய கடமையை நிறைவேத்துவார்னு நினைச்சேன். ஆனா அவர் இன்னைக்கு செஞ்சிருக்குற விஷயம் மன்னிக்க முடியாதது. அவரை எப்பவும் நான் மன்னிக்கவே மாட்டேன். அப்படிப்பட்ட புருஷனே எனக்கு தேவையில்ல. எந்த பொம்பளையுமே அவரை மாதிரி முதுகெலும்பில்லாத ஒருத்தரோட வாழ விரும்ப மாட்டா... ஆனாலும் நான் வாழ்ந்தேன்... என் குழந்தைகளுக்காக! ஆனா இன்னைக்கு எல்லாத்தையும் அவர் உடச்சி தூள் தூளாக்கிட்டார்"

குணமதிக்காக வருத்தப்பட்ட படி நின்றான் சந்தோஷ். அவர் வன்முறையாக நடந்து கொண்டாலும் கூட அவர் மீது தவறு இருப்பதாய் அவன் நினைக்கவில்லை. எந்த ஒரு அம்மாவும் அவர் செய்தது போல் தான் செய்வார். அவர் தன் கோபத்தை இவ்வளவு நாளாக எந்த அளவிற்கு கட்டுபடுத்திக் கொண்டிருந்தார் என்று அவனுக்கு தெரியும். அவனது அப்பாவை அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது என்பதும் அவன் அறிந்தது தான்.

கட்டிலை விட்டு எழுந்து நின்ற அவர் சந்தோஷை பார்த்து,

"சந்தோஷ், தயவு செஞ்சு இங்க இருந்து போயிடு. மறுபடியும் வராத" என்றார், அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து.

வெண்மதியை பார்த்த அவர்,

"மதி, நமக்கு இந்த குடும்பம் வேண்டாம். அந்த குடும்பத்தை சேர்ந்த யாரையும் நம்ப நான் தயாரா இல்ல" என்றார்.

"மாம் ப்ளீஸ்..." தூயவன் ஏதோ கூற முயல,

"இல்ல தூயா, அவங்க அப்பா என்ன சொன்னாருன்னு நீ கேக்கலையா? 'விளைவுகள் ரொம்ப மோசமானதா இருக்கும்னு' சொன்னாரு. காதல் என்ற பேர்ல, மதி அந்த விளைவை சந்திக்கிறதை நான் விரும்பல. பிரச்சனையோட தீவிரத்தை அவ புரிஞ்சுகிட்டா, அவர் ஒரே ஒருத்தரை மட்டும் தான் இழப்பா. இல்லன்னா, அவ சந்தோஷம், நிம்மதி, வாழ்க்கை எல்லாத்தையும் இழக்க வேண்டி இருக்கும். என்னை மாதிரி அவளும் வாழ்க்கை முழுக்க அழுதுகிட்டே இருக்குறதை நான் விரும்பல"

கலங்கிய கண்களோடு தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற வெண்மதியை ஏறிட்டான் சந்தோஷ். ஒன்றும் கூறாமல் அந்த இடம் விட்டு அகன்றான்.

"என்னை மன்னிச்சிடு, மதி. கோவத்துல என்னோட கட்டுப்பாட்டை நான் இழந்துட்டேன். அதனால தான் எல்லா சூழ்நிலையிலும் என்னை நான் அமைதிப்படுத்தி வச்சிருந்தேன். ஆனா உங்க அப்பா இவ்வளவு கீழ்தரமா போவாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

"ஃபீல் பண்ணாதீங்க, மாம்" என்றாள் வெண்மதி.

"நான் எனக்காக வருத்தப்படல. ஏன்னா, நான் எப்பவோ உங்க அப்பாகிட்ட இருந்து விலகி வர ஆரம்பிச்சிட்டேன். நீங்க நம்புவீங்களோ, மாட்டிங்களோ, அவருடைய பிரிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்காது... ஆனா என் பிள்ளைகளோட நிலைமை தான் என்னை அடியோடு அடிச்சி போட்டுடுச்சு"

தூயவனும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"அவர் ஏற்கனவே இந்த வீட்டை விட்டு போறேன்னு என்னை மிரட்டி பார்த்திருக்கிறார்"

"நெஜமாவா?" என்றான் தூயவன்.

"ஆமாம்"

"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?" என்றாள் வெண்மதி 

"அவரோட திங்ஸை எல்லாம் பேக் பண்ண நான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்"

அதைக் கேட்டு இருவரும் சிரித்தார்கள்.

"அவர் யாரை மிரட்டி பார்த்தாரு? குணமதியையா? அதனால தான் நான் அவரை இந்த வீட்டை விட்டு துரத்திட்டேன்... என்னோட வாழ்க்கையில இருந்தும் தான்...!" என்றார் கண்ணீர் மல்க.

அவரது துணிச்சலை பார்த்த தூயவனும் வெண்மதியும் வியந்தார்கள். ஆனாலும் அவரிடம் ஓர் சோகம் இழையோடியதை அவர்களால் உணர முடிந்தது.

"மாம், சீக்கிரமே எல்லாம் சரியாயிடும்" என்றான் தூயவன்.

அவனை பரிதாபமாய் பார்த்தார் குணமதி.

"நீங்க என்னை நம்பலையா?" என்றான்.

கண்ணீர் சிந்திய படி மெல்ல தலையசைத்தார்.

"மாம், உங்க மருமகளை மாதிரி இருக்க முயற்சி பண்ணுங்க. அவ சஞ்சனாவுக்கு எவ்வளவு தைரியமா பதில் சொன்னான்னு பாத்தீங்களா? அவ என்னை சிங்கம்னு சொன்னா" என்று சிரித்தான்.

குணமதியும் வெண்மதியும் கண்ணீருக்கிடையில் புன்னகை புரிந்தார்கள்.

"பவித்ரா ரொம்ப நல்ல பொண்ணு. நல்ல காலம் அவன் நம்ம கிட்ட திரும்பி வந்துட்டா"

"அவ நம்ம கிட்ட திரும்பி வந்ததுக்கு காரணம் சந்தோஷ்... அதை மறந்துடாதீங்க!" என்றான் தூயவன் வெண்மதியை பார்த்தவாறு.

"நீங்க இவ்வளவு கோவக்காரின்னு எனக்கு தெரியாது மாம்" என்றாள் வெண்மதி குணமதியின் தோள்களை சுற்றி வளைத்தவாறு.

"கோவப்பட வேண்டிய நேரத்துல கூட கோவப்படலன்னா, நம்மளை ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்பாங்க. நம்மளோட வாழ்க்கைக்கு மதிப்பு இருக்கு. ஆனா அந்த மதிப்பு எப்பவும் புருஷனை மட்டுமே சார்ந்தது இல்ல"

ஆம் என்று தலையசைத்தாள் வெண்மதி.

"உனக்கு என் மேல வருத்தம் இல்லையே?"

இல்லை என்று தலையசைத்த வெண்மதி,

"நீங்க என்ன செஞ்சாலும் எங்க நல்லதுக்காக தான் செய்வீங்கன்னு எனக்கு தெரியும். சந்தோஷுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு உண்மையிலேயே விருப்பம் இருந்தா, அவர் அதுக்கான வழியை தேடி கண்டுபிடிப்பார்" என்று புன்னகைத்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top