33 பவித்ராவின் அழுகை

33 பவித்ராவின் அழுகை

அறுவை சிகிச்சை முடிந்து 4 மணி நேரம் கழித்து தன் சுயநினைவு பெற்றான் தூயவன். அவனை சந்திக்க அவனது குடும்பத்தாரை அனுமதித்தார் மருத்துவர். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே வந்தார்கள். குணமதியும் வெண்மதியும் அழாமல் இருக்க தங்களை பண்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அது பவித்ராவால் முடியவில்லை. அவளது கண்கள் கட்டுக்கடங்காமல் பொழிந்து கொண்டே இருந்தது.

"ப்ளீஸ் அழாதே" என்றான் தூயவன் முயற்சிகளுக்கிடையில்.

"பவித்ரா ப்ளீஸ் அவரை கஷ்டப்பட்டு பேச வைக்காதீங்க" என்றான் சந்தோஷ்.

பவித்ரா தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"தூயா, உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லா இருக்க" என்றார் குணமதி.

மெல்ல தன் கண்களை இமைத்த தூயவன்,

"எப்ப வீட்டுக்கு போவோம்?" என்றான் மெல்லிய குரலில்.

"உனக்கு முதுகெலும்புல அடிபட்டு இருக்கு. ஸ்டீல் பிளேட் வச்சிருக்காங்க. நீ ஒரு வாரமாவது ஹாஸ்பிடல்ல தான் இருக்கணும்"

ஏமாற்றத்துடன் கண்களை மூடினான் தூயவன்.

"அவர் கூட யாராவது ஒருத்தர் தான் இருக்க முடியும்" என்றார் ஒரு செவிலி.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் டாக்டர்கிட்ட இதைப்பத்தி பேசறேன்" என்றான் சந்தோஷ்.

அந்த செவிலி சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

"நீங்க ஒன்னும் ஒரி பண்ணிக்காதீங்க. நான் டாக்டர்கிட்ட பேசுறேன்" என்றான் சந்தோஷ்.

"தூயாவுக்கு ஒரு ரூம் அரேஞ்ச் பண்ண சொல்லுங்க" என்றாள் வெண்மதி.

"சரி, நான் சொல்றேன். ஆனா இப்போ நம்ம எல்லாரும் வெளியில போகணும். ஏன்னா ஐசியூல நம்ம ரொம்ப நேரம் இருக்க பர்மிஷன் கிடையாது" என்றான் சந்தோஷ்.

அவர்கள் சரி என்று வெளியேறினார்கள். பவித்ரா மற்றும் குற்ற உணர்ச்சியோடு தூயவனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். வெளியே வந்த அவள் மீண்டும் அழத் துவங்கினாள்.

"பவித்ரா நீங்க அழறதால ஒன்னும் மாறிட போறது இல்ல. நடந்து முடிஞ்ச விஷயத்தை நம்மால மாத்த முடியாது. அடுத்தது என்ன செய்யணும்னு மட்டும் யோசிங்க" என்றான் சந்தோஷ்.

"நான் எப்போ அவர் வாழ்க்கையில வந்தேனோ, அதுல இருந்தே அவர் பிரச்சனைகளைத் தான் பேஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு" என்றபடி தேம்பினாள் பவித்ரா.   

"பவித்ரா, ப்ளீஸ் ரிலாக்ஸா இருங்க. நீங்க தூயவனை ஃபீல் பண்ண வைக்க போறீங்களா?"

"பவித்ராவோட இடத்துல யார் இருந்தாலும் இப்படித்தானே யோசிப்பாங்க?" என்றாள் வெண்மதி.

"நம்ம அதை செய்யக்கூடாது. ஏன்னா தூயவனுக்கு நம்ம ஸ்ட்ரெஸ் கொடுக்கக் கூடாது. அவருக்கு மன நிம்மதி வேணும். நீங்க மூணு பேரும் அவருக்கு ரொம்ப பிரியமானவங்க. உங்களால தானே அதை செய்ய முடியும்? நீங்களே அவரை புரிஞ்சுக்கலைன்னா, யார் புரிஞ்சிக்குவா?"

பவித்ரா அமைதியானாள்.

"பவித்ரா, அட்லீஸ்ட் தூயவன் முன்னாடியாவது அழாம இருங்க" என்றான் சந்தோஷ்.

"அவ அழ மாட்டா... தூயாவை அவ ஃபீல் பண்ண விடமாட்டா" என்றார் குணமதி.

"ஆன்ட்டி நீங்க இவங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போங்க. அவங்க ஃபிரஷ் ஆயிட்டு வரட்டும்" என்றான் சந்தோஷ்.

"இல்ல, நாங்க இங்க தான் இருப்போம்" என்றாள் வெண்மதி.

"நான் இருக்க வேண்டாம்னு சொல்லல. ஆனா போயிட்டு தேவையான திங்ஸ் எடுத்துக்கிட்டு வரணும் இல்ல?" என்றான் சந்தோஷ்.

"ஆமாம் நம்ம எதையுமே கொண்டு வரலையே" என்றார் குணமதி.

"நீங்க போயிட்டு வர்ற வரைக்கும் நான் இங்க இருக்கேன்" என்றான் சந்தோஷ்.

"வா பவித்ரா போகலாம்" என்று அவளையும் தன்னுடன் இழுத்துச் சென்றார் குணமதி.

அவர்கள் மருத்துவமனையை விட்டு சென்ற பிறகு, அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே நுழைந்தான் சந்தோஷ். தூயவனின் பக்கத்தில் வந்து அமர்ந்து,

"தூயவன்..." என்றான்.

மெல்ல தன் கண்களை திறந்தான் தூயவன்.

"இப்போ எப்படி இருக்கு?" என்றான்.

"நான் நல்லா இருக்கேன்"

"நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும். அதை நீங்க எப்படி எடுத்துக்க போறீங்கன்னு எனக்கு தெரியல. ஆனாலும் நான் அதை உங்ககிட்ட மறைக்க விரும்பல"

"என்ன விஷயம்?"

"பவித்ரா கோவிலுக்குப் போக போற விஷயத்தை சின்னசாமிக்கு சொன்னது சஞ்சனா தான்"

கோபத்தில் விழி விரித்த தூயவன் பல்லை கடித்தான்.

"அவளோட பிளான் எனக்கு தெரிஞ்ச உடனேயே நான் கமிஷனருக்கு ஃபோன் பண்ணி, சின்னசாமியை தடுத்து நிறுத்த வேண்டிய ஏற்பாட்டை செஞ்சுட்டேன்"

தூயவனின் முகம் சாந்தமடைந்தது.

"ஐ அம் சாரி தூயவன். யாருக்கும் தெரியாம நான் பவித்ராவை காப்பாத்திட முடியும்னு நெனச்சேன். சஞ்சனாவோட ஃபோனை அவளுக்கு தெரியாம எடுத்து வச்சுக்கிட்டேன். அதனால அவ சின்னசாமிக்கு மெசேஜ் கொடுக்க முடியாதுன்னு நினைச்சேன். ஆனா சின்னசாமி சரியான நேரத்துக்குக் கோவிலுக்கு வந்துட்டான். அது எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியல. என்னால தான் இப்போ நீங்க இந்த நிலைமையில இருக்கீங்க. ஐ அம் ரியலி சாரி"

"நீங்க என்கிட்ட சாரி கேட்க வேண்டாம். நீங்க பவித்ராவை திரும்ப கொண்டு வந்துட்டீங்க. அப்படின்னா நீங்க உண்மையிலேயே நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறீங்க. உங்க தங்கச்சியை விட என்னை முக்கியமா நினைக்கிறீங்க. அது எனக்கு போதும்"

மெல்ல கண்களை இமைத்தான் சந்தோஷ்.

"இதைப்பத்தி அக்காகிட்ட எதுவும் சொல்லாதீங்க"

"ஆனா அவளுக்கு உண்மை தெரிஞ்சா, அவ என் மேல ரொம்ப கோபப்படுவா"

"நம்ம இதை அவங்ககிட்ட மறைக்கப்போறதில்ல. நிச்சயம் சொல்லத்தான் போறோம். ஆனா அத இப்ப செய்ய வேண்டாம்னு நினைக்கிறேன். சரியான நேரம் வரும்போது சொல்லலாம்"

பெருமூச்சு விட்டான் சந்தோஷ்.

"அக்காவை பத்தி நீங்க கவலைப்படாதீங்க அவங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்க உண்மையிலேயே அக்காவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா, நான் சொல்றதை மட்டும் செய்யுங்க" என்று அவனை மிரட்டினான் தூயவன்.

களுக்கென்று சிரித்த சந்தோஷ்,

"அதுக்காக தானே நான் இவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருக்கேன்...!" என்றான்.

"எங்க அக்கா உங்க விக்கட்டை ஏற்கனவே எடுத்துட்டாங்க போல இருக்கு!" என்று புன்னகைத்தான்.

"ரொம்ப நாளைக்கு முன்னாடியே..." என்று சிரித்த சந்தோஷ்,

"நான் அவங்க மூணு பேரையும் வீட்டுக்கு அனுப்பி இருக்கேன். அவங்க குளிச்சு முடிச்சுட்டு வர்ற வரைக்கும் நான் வெளியில வெயிட் பண்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க"

சரி என்று தலையசைத்தான் தூயவன்.

நிம்மதியுடன் அவசர சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்தான் சந்தோஷ். தூயவன் குடும்ப பெண்கள் வந்த பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

.......

மாதேஷ் இல்லம்

சின்னசாமியின் அழைப்புக்காக காத்திருந்தாள் சஞ்சனா. வீட்டுக்கு வந்த சந்தோஷ், அவள்  பொறுமையின்றி இருப்பதைக் கண்டான்.

"எங்க போயிருந்த சந்தோஷ்?" என்றார் மாதேஷ்.

"நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன்"

"ஹாஸ்பிடல்லயா? என்ன ஆச்சு உனக்கு?"

"எனக்கு எதுவும் ஆகல"

"பின்ன?"

"பவித்ராவை சின்னசாமி கடத்திக்கிட்டு போயிட்டான். அவனை தூயவன் தடுத்து நிறுத்த நினைச்சப்போ, அவனை கார்ல அடிச்சு தூக்கிட்டு அங்கிருந்து போயிட்டான் சின்னசாமி"

"என்ன்னனது? தூயவனுக்கு என்ன ஆச்சு?" என்றாள் சஞ்சனா பதற்றத்துடன்.

"தூயவன் நடக்கிற தன்மையை இழந்துட்டாரு. அவரோட உடம்பு, இடுப்புக்கு கீழே வேலை செய்யல"

அதிர்ச்சியோடு நின்றாள் சஞ்சனா.

"நீ என்ன சொல்ற? பவித்ரா கோவிலுக்கு வரப்போற விஷயம் சின்னசாமிக்கு எப்படி தெரியும்? அவன் எப்படி கோவிலுக்கு சரியான நேரத்துக்கு வந்தான்?" என்றார் மாதேஷ்.

மென்று விழுங்கினாள் சஞ்சனா. அவளை பார்த்த சந்தோஷ்,

"அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு" என்றான் கோபமாய்.

"நீ என்ன சொல்றண்ணா?" என்று தடுமாறினாள் சஞ்சனா.

"சின்னசாமியை கோவிலுக்கு சரியான நேரத்துக்கு வர சொல்லி சொன்னது நீதான்ற உண்மையை அவர்கிட்ட சொல்ல சொல்றேன்"

அவளை அதிர்ச்சியோடு ஏறிட்ட மாதேஷ்,

"என்ன சொல்ற சந்தோஷ்?" என்றார்.

தன்னிடம் இருந்த கைபேசியை எடுத்து அதை அவரிடம் கொடுத்தான் சந்தோஷ்.

"இப்படித்தான் சின்னசாமிக்கு உங்க பொண்ணு மெசேஜ் அனுப்புனா"

"தூயவன் கோவிலுக்கு வர மாட்டாருன்னு நினைச்சு தான் நான் அப்படி செஞ்சேன். சின்னசாமி பவித்ராவை கொண்டு போறதுக்கு மட்டும் தான் நான் திட்டம் போட்டு கொடுத்தேன்"

அடுத்த நொடி அழுத்தமான அறை அவள் கன்னத்தில் இறங்கியது.

"வாயை மூடு... ஏற்கனவே நம்ம அப்பா அவங்க குடும்பத்தை உடச்சி வாயில போட்டுக்கிட்டாரு. இப்போ நீயும் உன் பங்குக்கு உன்னோட கைத்திறனை காட்டி அவனை முடமாக்கிட்ட.  கொஞ்சமாவது பின்விளைவுகளை பத்தி நீ யோசிச்சி பார்த்தியா? இந்த உண்மை மட்டும் தூயவனுக்கு தெரிஞ்சா அவன் என்ன செய்வான்? நம்ம எப்படி ஃபேஸ் பண்றது? பிளடி செல்ஃபிஷ்...!"

"தூயவன் கோவிலுக்கு வர மாட்டாருன்னு மாயவன் அங்கிள் தான் சொன்னாரு"

அதைக் கேட்டு திகில் அடைந்து போனான் சந்தோஷ்.

"இதைப் பத்தி மாயவன் அங்கிளுக்கு தெரியுமா?" என்றான் அதிர்ச்சியோடு

அமைதியாய் நின்றாள் சஞ்சனா

"திருந்தாத ஜென்மங்க..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் சந்தோஷ்.

.......

பெண்கள் மூவரும் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல தயாரானார்கள். அப்பொழுது அங்கு வந்த மாயவன்,

"குணா நீங்கள் எல்லாரும் எங்க போறீங்க?" என்றார்.

"தூயவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கு"

"ஹாஸ்பிடல்லையா? எதுக்காக?"

நடந்தவற்றை அவரிடம் கூறினார் குணமதி. மாயவனின் மூலாதாரமே ஆட்டம் கண்டது. தூயவனின் அந்த நிலைமைக்கு தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. சஞ்சனாவை போலவே அவரும் மென்று விழுங்கினார்.

"டாக்...டர் என்ன சொன்...னாரு?" என்று தடுமாற்றத்துடன் கேட்டார்.

"அவன் குணமாக வெறும் இருபது சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறதா டாக்டர் சொல்றாரு"

"டாக்டர் வேற ஒரு விஷயத்தையும் சொன்னாரு. ஆனா அதை உங்களால புரிஞ்சிக்க முடியாது" என்றாள் வெண்மதி.

"என்ன சொன்னாரு?"

"அவனுக்கு அன்பும் அக்கறையும் வேணும்னு சொன்னாரு" என்றாள் தெனாவட்டாக.

"எனக்கு அவன் மேல பிரியம் இல்லன்னு சொல்றியா?"

"மாம், நமக்கு லேட் ஆகுது. வாங்க போகலாம்" என்று கூறினாள் வெண்மதி, அவரிடம் பேசி நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லாமல்.

பையை எடுத்துக்கொண்டு நடந்தார் குணமதி.

அடுத்த இரண்டு நாட்களும் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டான் தூயவன். அதன் பிறகு அவன் டீலக்ஸ் ரூமுக்கு மாற்றப்பட்டான். தன்னிச்சையாய் உட்காரவே அவன் தடுமாறினான். தேவைப்படும்போது அவன் உட்கார வெண்மதியோ அல்லது குணமதியோ தான் உதவினார்கள். அவனது அந்த நிலையை கண்ட பவித்ராவின் இதயத்தில் ரத்தம் கசிந்தது. தூயவனின் அந்த நிலையை அவளால் சகிக்கவே முடியவில்லை. தூயவன் தன் முகத்தில் அந்த வலியை காட்டாவிட்டாலும்...! அவள் தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது தூயவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

தூயவனுக்குத் திரவ உணவை கொண்டு வர வீட்டிற்குச் சென்றார் குணமதி. வெண்மதி சந்தோஷுடன் கேன்டினுக்குச் சென்றாள். அவர்களுடன் செல்ல மறுத்து விட்டாள் பவித்ரா, தூயவனை தனியாக விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

"பவித்ரா..." என்று அவளை அழைத்தான் தூயவன்.

திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் பவித்ரா. தன்னிடம் வருமாறு அவளுக்கு சைகைச் செய்தான். அவனை நோக்கி ஓடிச் சென்றாள் பவித்ரா.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றாள்.

ஆம் என்று தலையசைத்தான்.

"என்ன வேணும் சொல்லுங்க" என்றாள்.

"நான் சொல்றத நிச்சயம் செய்வியா?"

"நிச்சயம் செய்யறேன்"

"நீ அழறதை பார்க்க எனக்கு பிடிக்கல. நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் விரும்புறேன். அதனால அழறதை நிறுத்து" என்றான் மெல்லிய புன்னகையோடு.

அவ்வளவு நேரம் தன் அழுகையை கட்டுப்படுத்தி வைத்திருந்த பவித்ரா, வெடித்து அழுதபடி அவன் காலில் விழுந்து கதறினாள்.

"பவித்ரா ப்ளீஸ் அழாதே"

"என்னை மன்னிச்சிடுங்க"

"இங்க வா"

அவனிடம் செல்லாமல் அழுது கொண்டே இருந்தாள் பவித்ரா.

"எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும்" என்றான்.

அழுவதை நிறுத்திவிட்டு தண்ணீர் ஜக்கை நோக்கி ஓடிச் சென்ற அவள், தண்ணீரை ஒரு தம்ளரில்  ஊற்றி அதை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். தூயவனால் தனிச்சையாய் அமர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அவள் அந்த தம்ளரை பக்கத்தில் வைத்துவிட்டு, அவன் படுத்திருந்த கட்டிலை பொத்தானை பயன்படுத்தி உயர்த்தினாள். பிறகு அவனிடம் தண்ணீரைக் கொடுக்க அவள் கரத்தைப் பற்றி அவளை கட்டிலில் அமர வைத்தான் தூயவன். அவன் கொடுத்த தண்ணீரை அவளை பருக வைக்க முயன்றான் அவன். அவனை திகைப்போடு ஏறிட்டாள் பவித்ரா.

"குடி"

வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"என் பேச்சைக் கேட்க மாட்டியா?"

அவனிடமிருந்து அந்த தம்ளரை பெற்று ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

"இதுக்கு அப்புறம் நீ அழக்கூடாது. அது என்னோட ஆர்டர். ஒருவேளை நீ அழுதா, இதுக்கு அப்புறம் நீ என் முன்னாடி வரக்கூடாது. புரிஞ்சுதா?" என்றான்

தன் அழுகையை அவள் கட்டுப்படுத்தியதால் அவளது உதடுகள் துடித்தன. அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

"எனக்கு ஒன்னும் இல்ல. புரிஞ்சுதா?"

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"உனக்கு கர்மாவுல நம்பிக்கை இருக்கா?"

இருக்கிறது என்று தலையசைத்தாள்.

"நடக்கிறது எல்லாம் கர்மாவின் விளைவுன்னு நினைச்சுக்கோ. எனக்கு ஆக்சிடென்ட் ஆகணும்ங்குறது என்னோட கர்மா. நீ என் கூட இருந்தாலும் இல்லாம போனாலும் அது நடந்து தான் இருக்கும். அதனால தேவையில்லாம வருத்தப்படுறதை நிறுத்து. என்னை வருத்தப்பட வைக்காத, ப்ளீஸ்"

முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு சரி என்று தலையசைத்தாள் பவித்ரா.

"எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ண முடியுமா?"

"என்ன வேணாலும் செய்றேன்"

"கொஞ்சம் சிரியேன்...!"

அவள் செயற்க்கையாய் சிரிக்க,

பளீர் என்று சிரித்தான் தூயவன்.

"பவித்ரா…" என்றான்.

"ம்ம்ம்?"

"உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்"

"ஆனா இப்ப சொல்ல மாட்டீங்க. அப்படித்தானே?" என்று அவள் கேட்க, வாய்விட்டு சிரித்தான் தூயவன்.

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அவள் அங்கிருந்து செல்ல, புன்னகைத்தபடி கட்டிலில் சாய்ந்தான் தூயவன்.

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top