25 என் வாழ்க்கை, என் விருப்பம்

25 என் வாழ்க்கை என் விருப்பம்

சந்தோஷ் கொடுத்த திருப்தியுடன் வீட்டிற்கு வந்தான் தூயவன். வரவேற்புரையில் யாரும் இல்லாததை கண்டான். ஆனால் அவனுக்கு பிடித்த பாதம் அல்வாவின் வாசம் அவன் மூக்கை துளைத்தது. குளித்துவிட்டு வருவதற்காக விறுவிறுவென தன் அறைக்குச் சென்றான். வெளியே சென்று வீடு திரும்பிய பின் குளிக்காமல் சாப்பிடுவது அவனுக்கு பிடிக்காது.

குணமதியும் வெண்மதியும் ஒரு கிண்ணம் நிறைய பாதாம் அல்வாவை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு வந்தார்கள். குளித்து முடித்து வெளியே வந்த அவன் தன் அம்மாவும் அக்காவும் தன் அறையில் இருப்பதை பார்த்து புன்னகை புரிந்தான். அவர்களும் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள் தன் அறையில் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த பாதாம் அல்வாவை பார்த்து வாவ் நீங்க அதை இங்கு எடுத்துக்கிட்டு வந்துட்டீங்களா என்றான்

ஆமாம். ஆனா பாதாம் அல்வாவை பற்றி உனக்கு எப்படி தெரிஞ்சது என்றாள் வெண்மதி

பாதாம் அல்வாவில் இருந்து வர்ற நல்ல வாசனை நீங்க என்கிட்ட இருந்து மறைக்க முடியாது கா

அது சரி...

ஒரு தேக்கரண்டி பாதாம் அல்வாவை எடுத்து தன் வாய்க்குள் அடைத்தான் தூயவன்.

ம்ம்ம்ம்... வாவ் மாம் நீங்க இந்த அல்வாவிலே ஏகப்பட்ட அன்பை கலந்து செஞ்சு இருக்கீங்க போல இருக்கு வேற லெவல்ல இருக்கு என்றபடி மீன் அடுத்த கரண்டி அல்வாவை தன் வாய்க்குள் திணித்தான்

அப்படியா நிஜமாவா சொல்ற? அன்பு உனக்கு தெரியுதா

என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா சரி இருங்க என்று தன் கைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தான். வெண்மதி ஏதோ கேட்க முடியல அவளை தன் கையை காட்டி தடுத்து நிறுத்தினான். அவனது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஹலோ...

ஹலோ மிஸ்டர் பன்வாரிலால் நான் தூயவன் பேசுறேன்

வெண்மதியும் குணமதியும் குழப்பத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் ஏனென்றால் பன்வாரிலால் ஒரு நகைக்கடையின் முதலாளி. தூயவன் குடும்பம் அவரிடம் தான் நகைகளை வாங்குவது வழக்கம்

நீங்க தான் பேசுறீங்கன்னு எனக்கு தெரியாதா சார். சொல்லுங்க சார்

எனக்கு லேட்டஸ்ட் டிசைன் வளையல் செட் வேணும்

ஓ தாராளமா என் பையன் கிட்ட குடுத்து விடுறேன் உங்களுக்கு வேண்டியத செலக்ட் பண்ணிக்கோங்க

தேங்க்யூ அழைப்பை துண்டித்த தூயவன், தன்னை கேள்வியோடு பார்த்துக் கொண்டு நின்ற வெண்மதியையும் குணமதியையும் பார்த்தான்.

தூயா எதுக்கு இவ்வளவு அவசரமா பன்வாரிலாலை வலையல் கொண்டு வர சொல்லி கேட்ட

நான் உங்க பாதாம் அல்வாவை சாப்பிட்டு பத்து வருஷம் ஆச்சு. இவ்வளவு நாளா நான் அதை ரொம்பவே மிஸ் பண்ணி இருக்கேன் முக்கியமா சொல்லியே ஆகணும் இந்த பத்து வருஷத்துல நீங்க சமையல்ல ரொம்ப தேறிட்டிங்க. செம இம்ப்ரூவ்மெண்ட் போங்க...

சரி அதனால

நல்லா இருக்குன்னு சில வார்த்தைகள் சொல்றது அந்த பாதாம் அல்வாவுக்கு போதும்னு எனக்கு தோணல அதனால நான் உங்களுக்கு கிஃப்ட் கொடுத்து ஹானர் பண்ண நினைக்கிறேன்

ஏய் ஒரு நிமிஷம் இரு நான் இந்த அல்வாவை நான் பண்ணி இருக்கலாம் என்று உனக்கு ஏன் தோணல என்றால் வெண்மதி

அக்கா சும்மா காமெடி பண்ணாதீங்க நீங்க எப்படி பாதாம் அல்வா செய்வீங்கன்னு எனக்கு தெரியாதா என்று அவள் காலை வாரினான்.

அவன் தோழி ஒரு அடி போட்ட அவள்,

ரொம்ப பறக்காத இதை செஞ்சது அம்மா இல்ல என்றாள்.

தூயவன் குணமதியை பார்க்க அவர் ஆம் என்று சோகமாய் தலையசைத்தார். தூயவனின் மனதில் பொறி தட்டியது.

இதை நீங்க செய்யலன்னா வேற யார் செஞ்சது?

பவித்ரா... ஸ்வீட் எக்ஸ்பர்ட்டோட பொண்ணு...

தன் கையில் இருந்த அல்வாவையும் தனக்கு முன்னால் இருந்த பெண்களையும் பெயர் கூற முடியாத முகபாவத்துடன் ஏறிட்டான் தூயவன்

அவள் இவ்வளவு நல்லா சமைப்பாளா... டேமிட்... சிறிது சிறிதாய் முன்பை விட அதிகமாய் ரசித்து சாப்பிட்டான்

ஆமாம் ஏராளமான அன்பை கொட்டி செஞ்சா என்றாள் வெண்மதி

தூயவன் புன்னகைத்தான்

மதி உன்னோட ஐடியாவை அவன் கிட்ட சொல்லு என்றார் குணமதி

என்ன ஐடியா

நீ பவித்ராவை நினைச்சு எவ்வளவு கவலைப்படுகிறேன் என்று எனக்கு தெரியும் அதனால நான் ஒரு ஐடியாவை கண்டுபிடிச்சிருக்கேன்.

எதைப் பத்தி பேசுறீங்க

நீ பவித்ராவுக்கு வரப்போற புருஷனைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்க... அவர் அவங்க உன் கிட்ட பேசுறது அவனுக்கு பிடிக்கலைன்னா என்ன செய்வது

அதனால என்றான் யோசனையுடன்

நம்ம குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ஒருத்தருக்கு நம்ம அவங்களை கல்யாணம் பண்ணி கொடுக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்

நீங்க என்ன சொல்றீங்க

அவங்க நம்ம வீட்டு மருமகலாயிட்டா எப்பவும் நம்ம கூடவே இருப்பாங்க நீ என்ன சொல்ற

மருமகளா என்றான் மென்று விழுங்கியபடி

எனக்கு கூட இந்த ஐடியா பிடிச்சிருக்கு என்றார் குணமதி

உங்களுக்கு இந்த ஐடியா பிடிச்சிருக்கா என்றான் தூயவன்

நிச்சயமா பிடிச்சிருக்கு பவித்ரா ரொம்ப நல்ல பொண்ணு. அவதான் நம்ம ரெண்டு பேரையும் பேச வச்சா நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறா

தூயவனின் இதழ்கள் மெல்லிய புன்னகையோடு விரிவடைந்தது. தனக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணர்ந்தான் அவன். சிரித்தபடி அல்வாவை சாப்பிட துவங்கினான். அம்மாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.

"கோமதி மாதிரி ஒரு கோவக்காரிக்கு நம்ம பவித்ரா மாதிரி அமைதியான பொண்ணு தான் மருமகளா கிடைக்கணும்" என்றார் குணமதி. கோமதி அவரின் தங்கை. அவருக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள்.

திடுக்கிட்டு தன் தலையை உயர்த்திய தூயவன்,

"நீங்க இப்போ என்ன சொன்னீங்க?" என்றான். 

"விசுவுக்கோ, இல்ல ராமுவுக்கோ பவித்ராவை கல்யாணம் பண்ணி கொடுக்கலாமான்னு நாங்க பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம்."

"என்ன்ன்னனனது?" அதிர்ச்சியில் அறற்றினான்.

"ஆமாம்... அப்படின்னா அவங்க கல்யாணத்துக்கு பிறகு கூட நீ அவங்களை பாதுகாக்க முடியும் உன்னோட வார்த்தையையும் காப்பாற்ற முடியும் விசுவு ராமு உன்னை தடுத்து நிறுத்த துணிய மாட்டாங்க உண்மையை சொல்லப்போனால் உனக்காக அவங்களும் நம்ம பவித்ராவை நல்லா பாத்துக்குவாங்க"

அவர்களை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தூயவன்.

" இன்னைக்கு சாயங்காலம் நான் விசுவுக்கு போன் பண்ணி பவித்ராவை பற்றி சொல்லப் போறேன்

ஏன் கா

உனக்கு தெரியாதா? விசு எப்பவுமே அவனுக்கு ஒரு ஹோமிலியான பொண்ணு தான் ஒய்ஃபா வரணும்னு ஆசைப்பட்டானே...

உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு

ஏன்

அவன் போல்டா வாயை திறந்து பேசக்கூட மாட்டான். சித்தி பவித்ராவை திட்டினா, அவன் அவளுக்கு சப்போர்ட் கூட பண்ண மாட்டான் என்றான் எரிச்சலோடு

அப்படின்னா நிச்சயமா பவித்ராவுக்கு ராமு சூட்டாவான். நான் சொல்றது சரி தானே மாம்.

ஆமாம் அவன் கோமதி கிட்ட சண்டை போடுவான்

ஆனா அவன் ஒரு குரங்கு. அவன் வாய் ஓயாம  பேசியே பவித்ராவை டார்ச்சர் பண்ணுவான்.

பவித்ரா அவனை மேனேஜ் பண்ணிக்குவா என்றார் குணமதி 

நீங்க கொஞ்சம் ரெண்டு பெரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா

ஏன்

அவ்வளவு சீக்கிரம் அவளை யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நான் விரும்பல

ஏன்

அவளுக்குன்னு யாரும் இல்ல அதனால அவ நம்ம கூட கொஞ்ச நாள் இங்க இருக்கணும்னு நினைக்கிறேன் ஏன்னா இது தான் அவ குடும்பம்

ஓஓஓஓ

அப்ப சரி நம்ம அவகிட்ட உடனே கல்யாணத்தைப் பற்றி பேச வேண்டாம் என்றார் குணமதி

பவித்ரா என்னோட ரூம்ல என்கூட தானே இருக்க போறாங்க நான் அவங்களை பிரைன் வாஷ் பண்ணிடுவேன் என்றாள்  வெண்மதி

ஆமாம் அவளை மாதிரி ஒரு நல்ல பொண்ணு வேற ஒரு குடும்பத்திற்கு போக வேண்டாம். அவர் நம்ம குடும்பத்து மருமகள் ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷம்

எரிச்சல் அடைந்த தூயவன்

பவித்ரா எங்க என்றான்

அவங்க லேப்டாப்ல ஏதோ வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. அவங்க சொன்னது உண்மைதான் அவங்க கம்ப்யூட்டர்ல வேலை செய்ய ஆரம்பிச்சா எல்லாத்தையும் மறந்துடுறாங்க

வெண்மதியின் அறையை நோக்கி சென்றான் தூயவன். குணமதியும் வெண்மதியும் பொருளோடு புன்னகைத்துக் கொண்டார்கள்

தூயவனை பார்த்த பவித்ரா மடிக்கணினியை கட்டிலின் மீது வைத்துவிட்டு எழுந்து நின்றாள்

இது லேப்டாப் தான் ஆனால் அதை உன்னோட மடியில நீ வைக்கக்கூடாது என்றான் தூயவன் பவித்ரா சரி என்று தலையசைத்தாள் உட்காரு என்று அவன் கூறியவுடன் மீண்டும் கச்சேரி மீது அமர்ந்தால் நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று அவள் அருகில் அமர்ந்தான்

காலேஜ்ல நான் பண்ண ப்ராஜெக்ட் ஞாபகப்படுத்தி பார்த்துக்கிட்டு இருக்கேன்

நல்ல விஷயம்தான் ஆனால் அதை அக்கா தூங்கும் போது செய் இப்போ அவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணு

இல்ல அக்கா தூங்குனதுக்கு பிறகு நான் வேலை லைட்டை போட்டுக்கிட்டு வேலை செஞ்சா அவங்களுக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆகும் அதனால்தான் நான் இப்போ வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் அதோட மட்டும் இல்லாம அக்கா சொன்னாங்க அவங்களும் அம்மாவும் உங்ககிட்ட எது முக்கியமா பேசணுமாம் அதனால நான் இங்கேயே இருந்துட்டேன்

எதையோ யோசித்த தூயவன் அப்படின்னா ஒரு வேலை செய் என்றால் என்ன உன்னோட பேச எல்லாம் எடுத்துக்கோ

எதுக்கு

சொல்றதை செய்யேன்

அந்த அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த அவ்வளவு பையை பார்த்தாள் பவித்ரா அண்ணன் அங்கே சென்று அந்த பையன் தன் கையில் எடுத்துக் கொண்டான் தூயவன்

வா போகலாம் என்று அவளது மடிக்கணினியை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

என்னை எங்க கூட்டிகிட்டு போறீங்க கெஸ்ட் ரூமுக்கு என்று நடந்தான்

பவித்ராவின் பையுடன் அவன் வருவதை பார்த்த குணமதியும் வெண்மதியும் தங்கள் சிரிப்பை அடக்கி கொண்டார்கள்.

தூயா பவித்ரா ஓட பேக்கை எங்க எடுத்துக்கிட்டு போற

அவ பேகை மட்டும் இல்ல அவளையும் கெஸ்ட் ரூமுக்கு கூட்டிக்கிட்டு போறேன் ஆனா எதுக்காக அவளுக்கும் கொஞ்சம் பிரைவேசி வேணும் ஓஹோ வா என்கூட என்று நடந்தான் தூயவன்

அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு தூயவனை பின்தொடர்ந்து சென்றாள் பவித்ரா

நான் அவளை பிரைன் வாஷ் பண்ணுவேன்னு சொன்னேன்ல, அதுக்காகத்தான் அவங்களை என் ரூம்ல இருந்து கூட்டிகிட்டு போறான் என்று சிரித்தாள் வெண்மதி

பவித்ராவை விருந்தினர் அறைக்கு அழைத்து வந்த தூயவன் இங்க உனக்கு வேண்டியதை நீ செய்யலாம் என்றான் 

அக்கா கூட இருப்பதற்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல

ஆனா அவங்களுக்கு இருக்கலாம் அவனை புரியாமல் பார்த்தால் பவித்ரா.

சந்தோஷ் அக்கா கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்காரு அப்படியா என்று புன்னகைத்தால் பவித்ரா ஆமாம் நீ அங்க இருந்தா அவர்கிட்ட அக்கா வேலை சரியா பேச முடியாது என்று சமாளித்தான் தூயவன்

அவன் கூறியதை ஏற்றுக்கொண்டாள் பவித்ரா

இங்க நீ கம்ஃபிடபிலா இருக்கலாம். ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ண தயங்காத இந்த டேபிள்ல லேப்டாப் வச்சு யூஸ் பண்ணு

அவள் சரி என்று தலையசைத்தாள்

எங்க கம்பெனிக்கு ஒரு புது சைட்டை ஓப்பன் பண்ணலாம் என்று இருக்கேன் அதுக்கு நீ ஹெல்ப் பண்றியா

நிச்சயமா செய்றேன்

புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினான் தூயவன். குணமதியும் நிம்மதியும் ஏதோ தீவிரமாய் ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்

இதுவும் கூட நல்லதுக்கு தான் விசுவும் ராமுவும் இங்க வரும் போது, அவங்க கெஸ்ட் ரூம்ல தனியா இருந்தா, அவங்க கூட ஃப்ரீயா பேச முடியும். என்றாள் வெண்மதி ஆர்வமாக.

அக்கா ஃபோட்டோ தேவை இல்லாமல் பேசுவதை நிறுத்துறீங்களா?

என் தூய நாங்க உனக்கு ஹெல்ப் தானே பண்றோம்

ஒன்னும் தேவை இல்ல இந்த பிளானை எல்லாம் மூட்டை கட்டுங்க

இப்படி சொன்னா எப்படி பவித்ரா ஒரு நல்ல பையன் கூட செட்டில் ஆக வேண்டாமா

அவளுக்கு என்ன வேணும்னு அவளே முடிவு பண்ணட்டும்

ஆமாம் அவன் சொல்றதும் சரிதான் தனக்கு என்ன வேணும்னு பவித்ரா தான் முடிவு பண்ணணும் என்றார் குணமதி.

அப்பொழுது மாயவன் வீட்டிற்குள் வருவதை பார்த்தார்கள். தூயவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது தூயா என்று அவனை அழைத்தார் மாயவன்

சுருக் என்ற முகத்துடன் அவரை ஏறிட்டான் தூயவன்

இதை சொல்ல எனக்கு சங்கடமா தான் இருக்கு ஆனாலும் நான் சொல்லி தான் ஆகணும் நீ சஞ்சனாவை இந்த மாதிரி இன்சல்ட் பண்ணி இருக்க கூடாது

குணமதியும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று அவர்களுக்கு புரியவில்லை

அவளை யாரு ஆஃபீஸ்க்கு வர சொன்னது? நானா வர சொன்னேன்? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் என் பின்னாடி சுத்தி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்க அந்த பொண்ணு என்றான் எரிச்சலோடு

அவர் உன்னை காதலிக்கிறார்

மண்ணாங்கட்டி

நீ இப்படி எல்லாம் பேசாத துய்யா உண்மையான காதலை இந்த மாதிரி நீ அவமானப்படுத்தக்கூடாது

அப்படிப்பட்ட உண்மையான காதல் எனக்கு வேண்டாம்

ஏன் உனக்கு சஞ்சனாவை பிடிக்கல அவ கிட்ட என்ன தப்பு இருக்கு அவ எப்படி உன்னை பைத்தியக்காரத்தனமாக காதலிக்கிறான்னு நீ பாக்கலையா அதை விட ஒரு தூய்மையான அன்பை உனக்கு அன்பு உனக்கு கிடைக்கும் என்று நீ நினைக்கிறியா

அவ என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறா அப்படிங்கிறத்துக்காக மட்டும் அவளோட காதல் தூய்மையானதா இருக்க முடியாது. அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க.

அவ ஆபீசுக்கு வந்தாளா என்றார் குணமதி

ஆமாம் மாம். சந்தோஷால தான் நான் அவளை ஒன்னும் செய்யாமல் விட்டேன்

ஐயா தயவு செய்து எனக்காக சஞ்சனாவை பற்றி யோசிச்சு பாரு அவ நீ இல்லன்னா செத்துப் போய் விடுவா

செத்துடுவாளா நெஜமாவா என்றான் கிண்டலாய்

இது கிண்டல் பண்ற விஷயம் இல்ல நான் மாதேஷுக்கு பதில் சொல்லி ஆகணும்

ஆனா, நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இது என்னோட வாழ்க்கை. யாரும் இதைத்தான் நான் தேர்ந்தெடுக்கணும் என்னை கட்டாயப்படுத்த முடியாது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top