21 தேவதை
21 தேவதை
தூயவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட குணமதி, பவித்ராவை நோக்கி சென்று, அவளை அணைத்துக் கொண்டார்.
"தேங்க்யூ சோ மச், பவித்ரா. என் வாழ்க்கையோட விடியல் உன் மூலமா கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்று உணர்ச்சிவசப்பட்டு பவித்ராவை சங்கடத்திற்கு ஆளாக்கினார்.
அவள் நெற்றியில் முத்தமிட்டு,
"எங்க வாழ்க்கையில வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றார்.
பவித்ரா சங்கடத்தில் நெளிய, தூயவனும் வெண்மதியும் புன்னகையோடு நின்றார்கள்.
"மாம், எனக்கு பசிக்குது. எனக்கு ஏதாவது குடுங்க" என்றான் தூயவன்.
"வா போகலாம்" என்று அவர்கள் உணவு மேசையை நோக்கி நடந்தார்கள்.
"நேத்து உனக்கு பசிச்சப்போ, நீ யாரை பா சாப்பாடு கேட்ட?" என்றாள் அவர்களை பின்தொடர்ந்த வெண்மதி, கிண்டலாய்.
அவளுக்கு பதில் அளிக்காமல் புன்னகையுடன் நடந்தான் தூயவன்.
இதற்கிடையில்...
மாதேஷ் கோபத்தில் வெந்து கொண்டு இருந்தார். சஞ்சனாவோ விடாமல் அழுது கொண்டிருந்தாள்.
"இப்போ எதுக்காக அழற? இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம். வெண்மதி உன் மேல கடுமையான கோவத்துல இருக்கா. அதனால தான், கொஞ்சம் கூட தயங்காம, மூஞ்சில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லிட்டா"
"என்னை தூயவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்க மாட்டேன்னு இவர் எப்படி சத்தியம் பண்ணலாம்?" என்று அங்கு நின்றிருந்த சந்தோஷை சுட்டிக்காட்டி பைத்தியம் போல் கத்தினாள் சஞ்சனா.
"நீ அப்படி செஞ்சிருக்க கூடாது சந்தோஷ்"
"ஏன் செஞ்சிருக்க கூடாது? என்னோட கல்யாணத்தை பத்தி பேசி முடிவெடுக்க தானே நம்ம அங்க போனோம்? நம்ம ஒன்னும் தூயவனுக்கும் சஞ்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு அங்க போகலையே...! நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. தூயவனுக்கு சஞ்சனாவை சுத்தமா பிடிக்கல. வெண்மதிக்கும் அவங்க கல்யாணம் நடக்கிறதுல விருப்பம் இல்ல. குணமதி ஆன்ட்டிக்கும் அப்படித்தான். அப்படி இருக்கும் போது, எதுக்காக நீங்க இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க? தூயவன் ஒன்னும் தன் வாழ்க்கையில நடக்கிறத எல்லாம் அப்படியே ஏத்துக்குறவன் கிடையாது. நான் வெண்மதியை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணிக்கலனாலும் அவன் நிச்சயம் சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்"
"நீ வெண்மதியை கல்யாணம் பண்ணிக்க விரும்பலயா?"
"ரொம்ப விரும்பறேன்... நிச்சயமா நான் அவளை கல்யாணம் பண்ணிக்க தான் போறேன்"
"ஆனா, அவ உனக்கு எந்த மதிப்பும் கொடுக்கலையே"
"அது என்னோட பிரச்சனை. நீங்க அதைப் பத்தி கவலைப்படாதீங்க"
"அவ என்னை பழி வாங்குறா" என்றாள் சஞ்சனா.
மாதேஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் அவளை ஏறிட்டார்கள்.
"அவ எதுக்கு உன்னை பழி வாங்கணும்?"
"நான் அவளை தீரஜ்ஜை கல்யாணம் பண்ணிக்க வச்சேன். அதனால தான் என்னை அவ பழி வாங்குறா"
"நீ தீரஜ்ஜை கல்யாணம் பண்ணி வச்சதுக்காக அவ அதை செய்யல. அவ என்னை காதலிக்கிறாள்னு தெரிஞ்ச பிறகும் நீ அதை செஞ்ச. நீ அவளோட மனசை உடைச்ச. ஒரு குடிகாரனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கையை சீரழிச்ச..."
"அதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன், அண்ணா"
"உன் வருத்தத்தை தூக்கி குப்பையில் போடு. அது எதையும் மாத்த போறதில்ல"
"அவங்க விடோ இல்லன்னு நீயும் தூயவனும் சொன்னிங்களே, அப்படி இருக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"அவளோட உணர்ச்சிகளுக்கு மரியாதை இல்லயா? கல்யாணத்துக்கு பிறகு அவ எவ்வளவு கொடுமையை உணர்ந்து இருப்பான்னு நீ நினைச்சு பார்த்தியா?"
"எல்லாத்தையும் சரிகட்ட நான் தயாரா இருக்கேன். அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கவும் நான் தயாரா இருக்கேன். தயவு செஞ்சி அவங்களுக்கு புரிய வை"
"என்னை எப்படி அவளுக்கு புரிய வைக்கிறதுன்னே எனக்கு தெரியல. அப்படி இருக்கும் போது உன்னை பத்தி எப்படி நான் அவளுக்கு புரிய வைப்பேன்? உனக்கு மட்டும் நான் சப்போர்ட் பண்ணேன்னா, அவ என் மூஞ்சை திரும்பி கூட பாக்க மாட்டா"
"நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்? அப்படின்னா நீ எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டியா?"
"உனக்கு நான் சப்போர்ட் பண்ணேன்னா, நான் வெண்மதியோட நம்பிக்கையை முழுசா இழப்பேன். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறோம்னு தெரிஞ்சு, வேணும்முன்னே நீ எங்களை பிரிச்ச... என்ன பொண்ணு நீ...!"
தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் சஞ்சனா.
"சந்தோஷ் அதைப்பத்தி பேசி இனிமே எந்த பிரயோஜனமும் இல்ல. இப்போ என்ன செய்யறதுன்னு மட்டும் யோசி" என்றார் மாதேஷ்.
"இதுல நம்ம செய்யறதுக்கு ஒன்னும் இல்ல. அவ மனசை மாத்திக்க சொல்லுங்க" என்றான் சந்தோஷ் எளிமையாய்.
"நீ எதுவும் செய்யப் போறது இல்லயா?"
"நிச்சயம் செய்யத்தான் போறேன். முழு முயற்சி செஞ்சி வென்மதியை கல்யாணம் பண்ணிக்குவேன்" என கூறிவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.
இயலாமையுடன் சஞ்சனாவை பார்த்தார் மாதேஷ்
"டாட், இதுக்கெல்லாம் அந்த பவித்ரா தான் காரணம். அவளை தூயவனோட வாழ்க்கையில இருந்து எப்படி துறத்துறதுன்னு நாம் யோசிக்கணும். அதுக்கப்புறம் எல்லாமே சரியாயிடும்"
தலையசைத்தார் மாதேஷ்.
மாயவன் இல்லம்
தூயவன் வந்து உணவு மேசையில் அமர்ந்தான். ஒரு தட்டில் சோறு போட்டு அதை அவனிடம் நீட்டிய குணமதி எதையோ யோசித்து,
"நான் உனக்கு ஊட்டி விடட்டுமா?" என்றார்.
அவன் சரி என்று தலையசைக்க, அவன் பக்கத்தில் அமர்ந்து அவனுக்கு ஊட்டி விட துவங்கினார்.
*அவர்களைப் பார்த்தாயா?* என்பது போல் வெண்மதி சைகை செய்ய, பவித்ரா புன்னகை புரிந்தாள்.
அப்பொழுது தூயவனின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அந்த அழைப்பை அவன் தவிர்த்தான்.
"அது யாரோட கால் தூயா?"
"என்னோட ஃப்ரெண்ட் மார்ட்டின்"
"ஒ..."
"உங்களுக்கு அவனை தெரியாது. நாங்க ரெண்டு பேரும் எம்பிஏ ஒண்ணா படிச்சோம்"
"ஒ... ஏன் அவன்கிட்ட பேசல?"
"ஒரு புது பிசினஸை லண்டன்ல ஆரம்பிக்கிறதை பத்தி அவன் என்கிட்ட டிஸ்கஸ் பண்ண நினைக்கிறான். எனக்கு அதுக்கு டைம் இல்லன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். ஆனாலும் என்னை தொடர்ந்து நச்சரிசிக்கிட்டே இருக்கான்"
"அவனுக்கு சொல்லி புரிய வை"
"ஏற்கனவே சொல்லிட்டேன். அவன் ஒரு தன்னலவாதி... அவன் நெனச்சது நடக்கிற வரைக்கும் விடமாட்டான்"
"ஒ..."
"ம்ம்ம்..."
"இடைப்பட்ட காலத்துல உன் லைஃப்ல என்ன நடந்ததுன்னு எனக்கு எதுவுமே தெரியாது" என்றார் குணமதி.
ஆம் என்று தலையசைத்த தூயவன், அவரிடம் அனைத்தையும் கூற துவங்கி, அவன் மனதில் இருந்த அனைத்தையும் அவரிடம் கொட்டி தீர்த்தான்.
எந்த அளவிற்கு இவற்றையெல்லாம் தன் அம்மாவிடம் அவன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான் என்று பவித்ரா புரிந்து கொண்டாள். தூயவன் சாப்பிட்டு முடித்த பிறகும் பேசிக் கொண்டே இருந்தான். வாயை பிளந்தபடி அவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாள் வெண்மதி.
"பவித்ரா..."
"ம்ம்ம்?"
"இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்தா, இவங்க பத்து வருஷமா பேசாம இருந்தாங்கன்னு யாராவது நம்புவாங்கன்னு நினைக்கிறீங்க?" என்றாள் கிண்டலாய்.
உதடு மடித்து தன் சிரிப்பை அடக்கினாள் பவித்ரா.
"மாம், தயவு செஞ்சி அக்காவுக்கும் ஊட்டி விட்டுடுங்க. இல்லன்னா அவங்களோட கண்ணு நம்ம ரெண்டு பேரையும் மறுபடி பிரிச்சிடும்" என்று சிரித்தான் தூயவன்.
"என்னது...? என்ன சொன்ன? என்னோட கண்ணு உங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடுமா?"
"அதுல என்ன சந்தேகம்? நீங்க எப்பவுமே எங்களை பார்த்து பொறாமைப்படுவீங்க தானே?"
"பாருங்க மாம், இவன் என்னை எப்படி கிண்டல் பண்றான்னு..."
"என்ன பண்றது, மதி? சில சமயங்கள்ல உண்மை கசக்க தானே செய்யும்?" என்று சிரித்தார் குணமதி
"ஓ, அப்படியா? அப்படின்னா நிச்சயமா நான் உங்க ரெண்டு பேர் மேலயும் கண்ணு வைக்க போறேன்"
"ஒன்னும் பிரச்சனை இல்ல... எங்களுக்குள்ள சண்டை வந்தாலும், மறுபடி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க எங்களுக்கு ஒரு ஆள் இருக்கு" என்று சிரித்தபடி பவித்ராவை பார்த்தார் குணமதி.
"கரெக்டா சொன்னீங்க" என்று அவருடன் ஹைஃபை தட்டிக் கொண்டான் தூயவன்.
அப்போது தரைதளம் வந்த மாயவன், தூயவனும் குணமதியும் ஹைஃபை தட்டிக் கொண்டு சிரிப்பதை பார்த்து திகைத்து நின்றார். அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அங்கு என்ன நடக்கிறது என்று அவருக்கு புரியவில்லை. எப்படி அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? அப்படி என்ன அதிசயம் நிகழ்ந்தது?
"இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துகிட்டு இப்படித்தான் என்னை கிண்டல் பண்ணுவாங்க" என்றாள் வெண்மதி.
மென்மையாய் புன்னகைத்தாள் பவித்ரா.
"வாங்க பவித்ரா, நம்ம ரூமுக்கு போகலாம். இவங்க ரெண்டு பேரும் பழைய கதை எல்லாம் பேசி முடிக்கிற வரைக்கும் அவங்க ரூமுக்கு போக மாட்டாங்க. எனக்கு தூக்கம் வருது" என்றாள் வெண்மதி.
பவித்ரா எழுந்து நின்றாள்.
"பவித்ரா, நீயும் போறியா? எங்க கதையெல்லாம் கேட்கணும்னு உனக்கு விருப்பம் இல்லயா?" என்றான் தூயவன் வேண்டுமென்றே.
வெண்மதியை பார்த்த பவித்ரா, மீண்டும் அமர்ந்து கொண்டாள். பெருமூச்சு விட்ட வெண்மதி,
"சோபாவுலயாவது வந்து உட்கார்ந்து பேசுங்க" என்றாள்.
"ஆமாம், அப்போ தான், அவ சோபாவுல படுத்து தூங்க முடியும்" என்றார் குணமதி.
"வேற என்ன செய்ய சொல்றீங்க? எனக்கு தான் அவனோட மொத்த கதையும் ஏற்கனவே தெரியுமே"
பவித்ராவின் கரத்தைப் பற்றி சோபாவிற்கு இழுத்துச் சென்றாள் வெண்மதி. பவித்ரா சோபாவில் அமர்ந்து கொள்ள, சோபாவில் வசதியாய் சாய்ந்து கொண்டாள் வெண்மதி.
தூயவனும் குணமதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள். நம்ப முடியாத முகபாவத்துடன் நின்றிருந்த மாயவனை பார்த்த குணமதி, உள்ளூர புன்னகைத்துக் கொண்டார்.
"குழந்தைசாமி..." என்று குணமதி அழைக்க, சமையலறையில் இருந்து ஓடி வந்தார் குழந்தைசாமி.
"அவருக்கு சாப்பாடு போடுங்க" என்றார்.
"சரிங்கம்மா'
தூயவனுடன் சோபாவில் அமர்ந்து கொண்டார் குணமதி. அவர்களை பார்த்துக் கொண்டே உணவு மேசையை நோக்கி சென்றார் மாயவன். தூயவன் தன்னிடம் பேசாத போதே, குணமதி அவரை மதித்ததில்லை. அப்படி இருக்கும் போது, இப்பொழுது தூயவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் என்றால், இதன் பிறகு குணமதியை அவர் எப்படி சமாளிப்பது? நம்பிக்கையை மொத்தமாய் இழந்தார் மாயவன். அவர்கள் பேசுவதை உணவு மேசையில் இருந்து அவரால் கேட்க முடிந்தது. தனது கடந்த கால அனுபவங்களை எல்லாம் தன் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டிருந்தான் தூயவன். அது சாதாரணமாய் இருக்கவில்லை. தூயவனின் குரலில் ஆர்வமும், விருப்பமும் ததும்பி வழிந்தது. அவன் பழைய கோபத்தை எல்லாம் மறக்கும் அளவிற்கு அப்படி என்ன தான் நடந்து தொலைத்தது?
சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அறைக்கு சென்றார் மாயவன். குணமதி தற்போது வருவதாய் தெரியவில்லை. உட்கார்ந்த படியே தூங்கி வழிய துவங்கினாள் வெண்மதி.
"அக்கா, நீங்க உங்க ரூமுக்கு போங்க" என்றான் தூயவன்.
வெண்மதி பவித்ராவை பார்க்க,
"நீங்க போங்க அக்கா. நான் அப்புறமா வரேன்" என்றாள்.
"குட் நைட்" என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள் வெண்மதி.
அம்மாவும் பிள்ளையும் பேசுவதை பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா. இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிக்க பாசம் கொண்டுள்ளார்கள். அதை புரிந்து கொள்ள, இவ்வளவு நாளாய் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. வெண்மதி கூறியது உண்மை தான். இவர்கள் இப்படி பேசுவதை பார்த்தால், இவ்வளவு வருடமாக அவர்கள் பேசாமல் இருந்தார்கள் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
நேரம் செல்ல செல்ல பவித்ராவிற்கும் உறக்கம் வந்து சோபாவில் சரிந்தாள்.
தூயவனும் குணமதியும் அவளைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். அவளை எழுப்ப குணமதி நினைத்த போது, அவரை தடுத்தான் தூயவன்.
"அவளை எழுப்பாதிங்க மாம். தூங்கட்டும் விடுங்க"
"ஆனா, நம்ம எப்படி அவளை இங்க தனியா விட்டுட்டு போறது?"
"நீங்க போங்க. நான் அவ கூட இருக்கேன்"
"நீயா?" என்று புருவம் உயர்த்தினார் அவர்.
"நான் இந்த சோபாவுல படுத்துக்கிறேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு தன் அறைக்கு சென்றார் குணமதி. பவித்ராவிற்கு எதிரில் இருந்த சோபாவில் படித்துக் கொண்டான் தூயவன். போர்வையோடு திரும்பி வந்த குணமதி, அவர்கள் இருவரையும் போர்வையால் போர்த்தி விட்டார்.
தூயவனின் தலை கோதி,
"குட் நைட்" என்றார்.
அவர் கையைப் பற்றி முத்தமிட்டு,
"குட் நைட் மாம்" என்றான் தூயவன்.
நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த பவித்ராவை பார்த்த குணமதி,
"இவ ஒரு தேவதை" என்றார்.
ஒன்றும் கூறாமல் புன்னகை புரிந்தான் தூயவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top