19 நேரடி நிராகரிப்பு

19 நேரடி நிராகரிப்பு

"நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பல" என்றாள் வெண்மதி உறுதியாக.

அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள், சந்தோஷ் ஒருவனைத் தவிர. அவன் அமைதியாய் அவளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான், அவள் முடிவு அதுவாகத்தான் இருக்கும் என்பதை ஏற்கனவே ஊகித்து விட்டவனை போல.

"ஏன் மதி?" என்றார் மாதேஷ்.

"ஏன்னா என்ன அர்த்தம்? கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்ல. நான் தூயாவுக்கு உதவியா ஆஃபீசுக்கு வரணும்னு அவன் ரொம்ப நளா கேட்டுகிட்டு இருக்கான். நானும் ஆஃபீஸுக்கு  போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்." முகத்தில் எந்த சலனமும் இன்றி கூறினாள். அது தூயவனின் முகத்தில் புன்னகையை மலரச் செய்தது

"மதி நீ என்ன செய்ற? உன்னை மருமகளாக்கிக்க மாது தயாரா இருக்கான்... நீ ஒரு விதவைன்னு கூட அவன் கவலைப்படல..."

"அவங்க/அவ விதவை இல்ல" தூயவனும் சந்தோஷும் ஒரே குரலில் கூறினார்கள்.

அந்த இடம் நிசப்தம் ஆகிப்போனது. தூயவனும், சந்தோஷும் ஒருவரை ஒருவர் பேச்சிழந்து பார்த்துக் கொண்டார்கள்.

"நீங்க என்ன சொல்றீங்க?" என்றார் மாயவன்.

பவித்ரா தன்னிடம் கூறியதை அப்படியே அவரிடம் ஒப்பித்தான் தூயவன். அதை சந்தோஷ் ஆமோதித்தான்.

"தூயவன் சொல்றது சரி. வெண்மதி விதவை இல்ல" என்றான்.

வெண்மதியின் முகத்தில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. ஆனால் குணமதி குழம்பிப் போனார். அவர் அந்த விதத்தில் இதை யோசிக்கவே இல்லை.

"சரி, அவ விதவை இல்ல (என்று அவள் பக்கம் திரும்பிய மாயவன்) அப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை? இந்த சம்பந்தத்தை நான் தவற விட விரும்பல, மதி"

"எக்ஸ்கியூஸ் மீ டாட்... என்னை அடக்கி வைக்கணும்னு நினைக்கிறதை முதல்ல நிறுத்துங்க. நீங்க செஞ்சதெல்லாம் போதும். போன தடவை, மாதேஷ் அங்கிள் தீரஜ் சம்மந்தத்தை கொண்டு வந்த போதும் இதையே தான் செஞ்சீங்க. அப்போ நீங்க சொன்னதை கேட்டு நான் கீழ்படிஞ்சி நடந்தேன். ஆனா இந்த தடவை அது நடக்காது. இது என்னோட வாழ்க்கை. எனக்கு என்ன வேணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பல. அவ்வளவு தான்" என்று அவள் அமைதியாக தான் கூறினாள். ஆனால் அவளது வார்த்தைகளில் கணம் இருந்தது.

"மதி..." என்று மாயவன் ஏதோ கூற நினைக்க,

"தயவு செஞ்சு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க, டாட். எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் அதை என்னால மாத்திக்க முடியாது" என்று தன் அறையை நோக்கி நடந்தாள்.

சஞ்சனா மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளானாள். அதை கவனிக்க தவறவில்லை சந்தோஷ்.

வெண்மதியை தடுத்து நிறுத்தச் சொல்லி சந்தோஷுக்கு ஜாடை காட்டினார் மாதேஷ். ஆனால் அவன் அதை மதிக்கவில்லை.

"மதி, சந்தோஷ் உன்னை காதலிக்கிறான். அது உனக்கும் தெரியும்" என்று கூறி அனைவரையும் வாய் அடக்கச் செய்தார் மாதேஷ்.

பின்னால் திரும்பி பார்க்காமல் அதே இடத்தில் நின்றாள் வெண்மதி.

"எனக்கு வேற ஒரு விஷயமும் தெரியும். உனக்கும் அவனை பிடிச்சிருந்துது..."

அவரை நோக்கி கோபமாய் திரும்பிய அவள்,

"பிடிச்சிருந்தா? உங்களுக்கு யார் சொன்னது? அது பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?" என்ற கேள்வி கணைகளை தொடுத்தபடி அவரை நோக்கி நகர்ந்தாள்.

பேச்சிழந்து போனார் மாதேஷ். அவரால் எப்படி சஞ்சனாவின் பெயரை கூற முடியும்? அப்படி கூறினால், சந்தோஷையும் வெண்மதியையும் பிரிக்க வேண்டும் என்ற அவளது கீழ்த்தரமான செயல் வெளியே வந்து விடுமே!

"எனக்கு யாரும் சொல்லல. நீயும் சந்தோஷும் எவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்னு எனக்கு தெரியும்"

"ஓ அப்படியா? அப்படின்னா எதுக்காக என்னோட கல்யாணத்தை அவசர அவசரமா அவர் ஊர்ல இல்லாத போது ஏற்பாடு பண்ணீங்க? என்னோட ஃப்ரெண்ட் இந்தியாவுக்கு திரும்பி வர்ற வரைக்கும் நீங்க காத்திருக்கல? அவர் உங்க பிள்ளை தானே? அவர்கிட்ட ஏன் இதை பத்தி நீங்க சொல்லல?"

அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் மாதேஷ்.

"மதி, பெரியவங்ககிட்ட நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது" என்று அவரது உதவிக்கு வந்தார் மாயவன், வழக்கம் போல.

"நான் எப்படி நடந்துக்கணும்னு நீங்க எனக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல, டாட். நீங்க உங்க ஃபிரண்டு பின்னால எந்த காரணமும் இல்லாம சுத்திகிட்டு இருந்த போதே, நாகரீகம்னா என்னன்னு மாம் எனக்கு நல்லாவே சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்க" அவளது குரலில் கோபம் லேசாய் வெளிப்பட ஆரம்பித்தது.

வார்த்தைகள் வராமல் திணறினார் மாயவன்.

"நானும் தூயாவும் எந்த ஸ்கூல்ல படிச்சோம்னு உங்களுக்கு தெரியுமா? எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட் என்னன்னு உங்களுக்கு தெரியுமா? நான் என்ன விரும்பி சாப்பிடுவேன்னாவது உங்களுக்கு தெரியுமா? பெரியவங்க நம்மகிட்ட எவ்வளவு அக்கறை காட்றாங்க அப்படிங்குறதை வச்சுத்தான் நமக்கு அவங்க மேல மரியாதை ஏற்படும். அப்படி பாக்க போனா, உங்களுக்கு மரியாதை கொடுக்கறதுக்கு என்கிட்ட ஒரே ஒரு காரணம் கூட இல்ல" என்று மாதேஷை பார்த்து கூறிவிட்டு பின் மாயவனை பார்த்தாள்.

"நீ பிரச்சனையை ரொம்ப சிக்கலாக்குற"

"ஏற்கனவே எல்லாம் சிக்கலா தான் இருக்கு, டாட். உங்க ஒருத்தரை தவிர இங்க இருக்கிற எல்லாருக்கும் அது தெரியும். உங்க ஃபிரண்டை நல்லவர்னு காட்ட, என்னை கொண்டு போய் நெருப்புல தள்ளாதீங்க"

"நீ சந்தோஷை விரும்பலன்னு சொல்லுவியா?" என்றார் மாதேஷ்.

"உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல, அங்கிள்.  இது எனக்கும் சந்தோஷுக்கும் நடுவுல இருக்கிற விஷயம். அவர் என்னை கேள்வி கேட்டா, நான் அவருக்கு பதில் சொல்லிக்குவேன்" என்று சந்தோஷை பார்த்தாள் வெண்மதி.

"சந்தோஷ், ஏன் அமைதியா இருக்க? நீ அவளை எதுவும் கேட்கப் போறதில்லையா?"

மேலும் அமைதி காத்தான் சந்தோஷ். வெண்மதி புன்னகை புரிந்தாள்.

"அவர் என்னைக் கேள்வி கேட்க மாட்டார். ஏன்னா, காரணம் என்னன்னு அவருக்கு நல்லாவே தெரியும். நான் ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு அவருக்கு தெரியும்"

சந்தோஷ் பெருமூச்சு விட்டான்.

"உங்களுக்கு உங்க பிள்ளையை பத்தி தெரியாத ஒரு விஷயம் எனக்கு தெரியும்" என்றாள் வெண்மதி.

மாதேஷும் சஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு தெரியாத அப்படிப்பட்ட விஷயம் என்ன?

"என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அவர் என்னை பார்க்க கோவிலுக்கு வந்திருந்தார். அவரோட காதலை என்கிட்ட சொன்னார். நான் அவரோட காதலை ஏத்துக்கலன்னு, எரியிற கற்பூரத்தை தன் கையில வச்சு, கடவுளுக்கு முன்னாடி என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அவர் சத்தியம் செஞ்சார்"

அனைவரும் சந்தோஷை அதிர்ச்சியோடு பார்த்தார்கள். அவன் தன் உள்ளங்கையில் இருந்த தழும்பை பார்த்துவிட்டு கையை மூடினான்.

தூயவனின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. வெண்மதியும் சந்தோஷை விரும்புகிறாளா? அதனால் தான் தனது திருமணத்தைப் பற்றி வெளியில் கூறாமல், விதவை என்னும் போர்வையில் ஒளிந்து கொண்டு வாழ்கிறாளா?

"என்னை மன்னிச்சிடுங்க சந்தோஷ். உங்களை காயப்படுத்தணும்னு நான் இதையெல்லாம் சொல்லல. நம்ம ரெண்டு பேரும் சேர்றதுக்கு வாய்ப்பே இல்ல. ஏன்னா, இந்த கல்யாணம் எங்க கொண்டு போய் நிறுத்தும்னு எனக்கு தெரியும். எது மாதேஷ் அங்கிளை இந்த சம்பந்தத்தை கொண்டு வர வச்சதுன்னும் எனக்கு தெரியும். நமக்கு கல்யாணமானா, உங்க அப்பா, என் தம்பியை உங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி என்னை கட்டாய படுத்துவர். அப்படி நடக்க நான் விடமாட்டேன்" என்று வெளிப்படையாய் பேசி, மாதேஷையும் சஞ்சனாவையும் நிலைகுலையச் செய்தாள் வெண்மதி.

அவள் அதற்காகத்தான் மறுக்கிறாள் என்பதை தூயவனும் ஏற்கனவே ஊகித்திருந்தான்.

"நான் என் தம்பியை ரொம்ப நேசிக்கிறேன். என்னை அவன் அம்மா மாதிரி மதிக்கிறான். அவனோட செயல், பயமில்லாத தன்மை, அவன் முடிவெடுக்கிற விதம், எல்லாத்தையும் நான் ரசிக்கிறேன். அவனோட பாதையில ஒரு தடையை உருவாக்க நான் விரும்பல. அஃப்கோர்ஸ் அதை யாராலயும் செய்யவும் முடியாது. அவன் நிம்மதியா இருக்கணும். நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவனால நிம்மதியா இருக்க முடியாது. உங்க அப்பாவும் தங்கச்சியும் அவனை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க" என்றாள் சிறிதும் தயக்கமின்றி.

மாதேஷும் சஞ்சனாவும் சங்கடத்தில் நெளிந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்படி ஒரு நேரடியான அதிரடியை அவளிடம் இருந்து யாருமே எதிர்பார்க்கவில்லை.

சோபாவை விட்டு எழுந்து நின்ற சந்தோஷ்,

"இது தான் உன்னோட பிரச்சனைனா, நான் உனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புறேன், மதி. நானோ, எங்க குடும்பத்துல இருந்து வேற யாருமோ, தூயவனுக்கும் சஞ்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு உங்ககிட்ட கேட்க மாட்டோம்" அவளுக்கு வாக்கு கொடுத்து தன் அப்பாவையும் தங்கையையும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கினான் சந்தோஷ்.

"உனக்கு வேண்டிய நேரத்தை நீ எடுத்துக்கலாம். காத்திருக்கிறது ஒன்னும் எனக்கு புதுசில்ல. நான் காத்திருப்பேன்... உனக்காக... எப்பவும் போலவே...!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் சந்தோஷ், தன் தந்தைக்காகவும் தங்கைக்காகவும் காத்திருக்காமல்.

அதன் பிறகு வெண்மதியும் அங்கு இருக்கவில்லை. தன் அறைக்கு சென்றாள்.

தூயவனும் குணமதியும் வித்தியாசமான கட்டத்தில் நின்றார்கள். சந்தோஷும் வெண்மதியும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருந்தது அவர்களுக்கு தெரியாது. வெண்மதியும் சந்தோஷை விரும்பி இருக்கக்கூடும் என்ற உறுதியான சந்தேகம் அவர்களுக்கு தோன்றியது. அப்படி என்றால் எதற்காக அவள் தீரஜ் உடனான தன் திருமணத்தை நிறுத்த முயலவில்லை? சந்தோஷ் இந்தியாவில் இல்லாவிட்டால் என்ன? எதற்காக அவள் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்?

நிலைமையை சமாளிக்க முயன்றார் மாதேஷ்.

"வெண்மதியை எது இப்படி எல்லாம் யோசிக்க வச்சதுன்னு எனக்கு தெரியல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன இருந்தாலும் அவ குழந்தை... அவ மனசை மாத்திக்கிட்டா, எனக்கு சொல்லி அனுப்பு"  என்று கூறிவிட்டு அங்கிருந்து நடந்தார் மாதேஷ் சஞ்சனா அவரை பின்தொடர்ந்தாள்.

தூயவன் அங்கிருந்து செல்ல நினைத்து, நின்று மாயவனை பார்த்தான்.

"எக்காரணத்துக்காகவும் யாரும் அக்காவை ஃபோர்ஸ் பண்றதை நான் விரும்பல. இந்த விஷயத்துல அவங்க எடுக்குற எந்த முடிவுக்கும் நான் அவங்களுக்கு துணையா இருப்பேன்" என்றான்.

"சந்தோஷ் ரொம்ப நல்ல பையன்" என்றார் மாயவன்.

தூயவன் அவருக்கு பதில் கூறும் முன்,

"ஆனா அவன் மாதேஷோட பிள்ளை" என்றார் குணமதி.

"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் குணா?"

"நான் எந்த அர்த்தத்துல சொன்னேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்"

"நீ எதுக்காக மாதேஷை இவ்வளவு வெறுக்கிற?"

"நான் அவரை மட்டும் இல்ல, உங்களையும் சேர்த்து வெறுக்கிறேன்" என்று கூறிவிட்டு அந்த இடம் விட்டு சென்றார் குணமதி.

அங்கு தனியாய் விடப்பட்ட மாயவனை பற்றி கவலைப்படாமல் தன் அக்காவின் அறையை நோக்கி சென்றான் தூயவன். குணமதி தன் கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த தூயவன், அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தான். அவனை திரும்பி பார்க்கவில்லை குணமதி.

"அக்கா..."

தலையை உயர்த்திய அவனை பார்த்து புன்னகைத்தாள்.

"நீங்க சந்தோஷை விரும்புறீங்களா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

"டு பி ஃபிராங்க்... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன்... ரொம்ப நாளுக்கு முன்னாடி...! ஆனா இப்போ இல்ல. சந்தோஷ் அவரோட அப்பா மாதிரி கிடையாது. என்னோட கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கு பிறகு கூட அவர் தன்னுடைய மனசை மாத்திக்கல. அவர் கண்ல நான் வலியை பார்த்தேன். தீரஜ் இறந்ததுக்கு பிறகு தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவர் கேட்டார்"

"ஆனா நீங்க தான் அவரை உங்களை மீட் பண்ணவே விடலையே?"

"எனக்கு அவர் மெசேஜ் அனுப்புறதை நிறுத்தவே இல்ல. ஆனா நான் அதை ரெஸ்பான்ஸ் பண்ணல"

"நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்பினா அதைப்பத்தி ஏன் என்கிட்ட சொல்லல?"

"என்னோட கல்யாணம் அவருக்கு தெரிஞ்சு தான் நடக்குதுன்னு நான் நினைச்சேன்"

"அவருக்கு தெரியாதா?"

"தெரியாது. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தப்பா புரிஞ்சுகிட்டோம். எனக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கிறதா அவரும், அவருக்கு தெரிஞ்சு எல்லாம் நடக்கிறதா நானும் நினைச்சுக்கிட்டோம். அவர் என்கிட்ட காட்டினதெல்லாம் வெறும் ஃபிரண்ட்ஷிப் மட்டும் தான்னு நான் நெனச்சேன்"

"அவர் இப்பவும் உங்களை நேசிக்கிறான்னு நினைக்கிறேன்"

"அதனால?"

"நீங்க ஏன் அவரை கல்யாணம் பண்ணிக்க கூடாது?"

"இல்ல தூயா. இதுக்கு பின்னால கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பெரிய பிளான் இருக்கு. சந்தோஷ் வேணும்னா ரொம்ப நல்லவரா இருக்கலாம். ஒருவேளை, அவங்க ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்த சம்பந்தத்தோட வந்திருந்தா, நான் அவங்க ப்ரொபோசலை எடுத்துக்கிட்டு இருந்திருப்பேன். ஆனா இப்போ அப்படி செய்யறது சரியா வராது. அவங்க நினைச்சதை அடையிற வரைக்கும், அவங்க என்னை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. உன்னை சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணுவாங்க. பவித்ராவை எங்கேயாவது கொண்டு போய் விட சொல்லுவாங்க. உன்னால அதை செய்ய முடியுமா? பவித்ரா உன்னுடைய பொறுப்பு. அவங்க அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நீ காப்பாத்தணும். நம்மளால அவளை எங்கேயும் அனுப்ப முடியாது. என்ன ஆனாலும் அவ நம்ம கூட தான் இருக்கணும். ஏன்னா, அவளுக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்ல"

"நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் கா"

"உன்னால அது முடியும்னு எனக்கும் தெரியும். ஆனா எதுக்காக தேவையில்லாத டென்ஷனை ஏத்திக்கணும்?"

"நீங்க சந்தோஷமா இருப்பீங்கன்னா, டென்ஷன் ஏத்திக்கலாம் கா"

"நம்ம லைஃப்ல நம்ம கடந்து வந்த டென்ஷன் எல்லாம் போதும். ஏற்கனவே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நிறைய டென்ஷனை பார்த்தாச்சு"

"அக்கா..."

"நான் இந்த விஷயத்துல அவ்வளவு சுலபமா இறங்கிப் போகப் போறதில்ல. சந்தோஷ் என்ன செய்றார்னு பார்க்கலாம்" என்றாள்.

அவளை பொருள் பதிந்த பார்வை பார்த்தான் தூயவன். அவள் மனதில் இருப்பது என்ன என்பது அவனுக்கு புரிந்து விட்டது. அவள் சந்தோஷிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறாள்.

அப்பொழுது பவித்ரா அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. தூயவனும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"பவித்ரா என்ன ஆச்சு?" என்றான் தூயவன்.

வெண்மதிக்கு அருகில் அமர்ந்த அவள்,

"உங்களுக்கு சந்தோஷ் அண்ணனை பிடிச்சிருந்தா, நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்கங்க அக்கா" என்றாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த தூயவனை ஏறிட்டாள் வெண்மதி.

"நீங்க என்னை பத்தி சொன்னதை நான் கேட்டேன். நான் சொல்றத தயவு செய்து கேளுங்க. என்னை ஹாஸ்டலுக்கு அனுப்பிடுங்க. என் சுமையை இறக்கி வச்சிடுங்க கா. என்னை பத்தி நீங்க கவலைப்படுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

"அக்கா..." என்று பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் கூப்பிட்டான் தூயவன்.

பவித்ராவும் வெண்மதியும் அவனை பார்த்தார்கள்.

"அவ இந்த மாதிரி மறுபடியும் பேசினா நான் பொறுத்துக்க மாட்டேன்னு அவ கிட்ட சொல்லுங்க" என்றான் சீற்றத்தோடு.

சூழ்நிலை அபாயகரமாய் மாறுவதை உணர்ந்தாள் வெண்மதி.

"நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இது உங்க குடும்பம். நீங்க இதுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்... நான்..."

கட்டிலை விட்டு எழுந்து நின்ற அவன், பவித்ராவின் கையைப் பிடித்து அவளையும் எழுப்பினான்.

"நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குற பவித்ரா? ஆமாம், எனக்கு என் குடும்பம் முக்கியம் தான். என்னை பொறுத்த வரைக்கும், நீ வேற யாரோ இல்ல. நான் உன்னையும் என் குடும்பமா தான் நினைக்கிறேன். நமக்குள்ள ஏற்பட்டிருக்கிற பிணைப்பை யாராலும் முறிக்க முடியாது. நான் உன்னை விட்டு போக மாட்டேன். புரிஞ்சுதா?" என்று அவன் அந்த வீடு அதிரும்படி கத்த. அவனது கோபத்தை பார்த்து பவித்ரா பின்வாங்கினாள். வெண்மதியோ புன்னகை புரிந்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top