விவசாயி...
காலை விடிந்தது. எழுந்து பார்க்கையில் கடவுள் இல்லை. சரி பக்கத்தில் எங்காவது சென்றிருப்பார் என்று எண்ணி நானும் வேலையை பார்த்தேன். ஏற்கனவே இங்கே நடப்பதை என் டைரியில் எழுதிக்கொண்டிருந்தேன்.
பகல் 2 மணி ஆனது...
இன்னும் அவர் வரவில்லை. 'காலைல இருந்து ஆளயே காணாம்... ஒருவேல இவங்கள திருத்த முடியாதுன்னு முடிவு பண்ணி சொல்லாம கொள்ளாம ஓடீட்டாரோ???', என்று எண்ணினேன்.
ஊரில் யாரிடம் கேட்டாலும் தெரியாது என்ற பதிலே வந்தது. ஒரு சிலர் கொலை வெறியுடன் பார்த்தனர். அதை பார்க்கையில் இவர்கள் அவரை கொன்றேவிட்டனரோ என்ற சந்தேகம் கூட வந்தது.
நானும் ஊரில் உள்ள மூலைகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டேன். எங்கே போனார் என்று தெரியவில்லை.
மாலை 5 மணி ஆனது. இருட்டத்தொடங்கியது. யாரோ ஒருவர் வாசலில் வந்து நிற்பது போல தெரிந்தது. வெளியே வந்து பார்த்தேன்.
அழுக்கேறிய துண்டு தோளில். வெள்ளை நிற வேட்டி என்று அவரே சொன்னலொழிய அந்த நிறமே தெரிந்திராத ஒரு வேட்டி. கால் காய் எல்லாம் சேறும் சகத்தியுமாக பார்க்கவே கண்றாவியாக நின்றார்.
யாராக இருக்கும்??? என்று யோசிக்கையில், "நான் தான்... என்ன அடையாளம் தெரியவில்லையா???", என்று கேட்டார்.
அப்போது தான் புரிந்தது. வந்தவர் கடவுள் என்று. "என்ன இப்டி இருக்கீங்க??? என்ன ஆச்சு??? காலைல இருந்து எங்க இருந்தீங்க???", என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினேன்.
"நேற்று முழுவதும் நீ சொன்னதை யோசித்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. நன்றே செய்... அதையும் இன்றே செய்... என்று உங்கள் உலகத்தில் நான் படைத்த யாரோ கூறியது நினைவிற்கு வந்தது. நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டியது தானே...", என்றார்.
'என்னடா இது... பூமிக்கு வந்தா கடவுள் கூட தத்துவம் பேசுவாரா???', என்று நினைத்துக்கொண்டு, "சரி அப்டி என்ன தான் தோனுச்சு???", என்றேன்.
"நாம் ஏன் விவசாயம் செய்து இதை தொடங்கி வைக்கக்கூடாது என்று தோன்றியது... அதனால் அதிகாலை கிளம்பி நிலத்தை உழுதுவிட்டு வந்தேன்", என்றார்.
'கடவுளே மனசுல பட்டது சரின்னா அத ஒடனே செய்யணும்னு நெனைக்கிறாரு... ஆனா அவரு படச்ச இந்த ஜனங்க கடவுள் கிட்ட பூ போட்டு பாக்குறது, குறி கேக்குறது, ஜாதகம் பாக்குறதுன்னு அவங்கள அவங்களே ஏமாத்திக்கிட்டு திரியுறங்களே...', என்று நினைத்துக்கொண்டேன்.
"பரவால்ல... நீங்க சொல்றதும் சரி தான். நாளைக்கி இருந்து நானும் வரேன். கொரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவி தானே ஆகணும்... இங்க வந்ததுக்கு நாம தான் விவசாயம் பண்ணனும்", என்றேன்.
"அப்பறம் இன்னொரு விஷயம்... இனிமே இப்டி சொல்லாம கொள்ளாம எங்கயும் போகாதீங்க... ஏதாச்சும் பண்ணனும்னு தோணுச்சுன்னா என்ட சொல்லுங்க... என்னால முடிஞ்ச உதவிய செய்றேன்...", என்றேன்.
அவரும் சிரித்துக்கொண்டே, "சரி...", என்றார். இருவரும் சாப்பிட்டு தூங்கினோம்.
ஏதோ ஒரு மன நிறைவு எனக்கு. அது மறுநாள் விவசாயம் செய்யப்போகிறோம் என்ற மகிழ்ச்சியே என்னவோ. அவருக்கும் நிம்மதி ஏற்பட்டிருக்கும் என்பதும் எனக்கு தெரியும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top