பொழுதுபோகவில்லையே...

'இங்க இருந்த மரம் எல்லாம் சாதாரான மரம் தான். இந்த மரத்தை வெட்டி வித்தாலும் ஒன்னும் பெரிய அளவுல பணம் கிடைக்காது. அப்பறம் ஏன் அத வெட்டுறாங்க???', என்று யோசித்துக்கொண்டிருந்தேன் அந்த டெஸ்ட் ரிப்போர்டை வைத்துக்கொண்டு.

'அந்த வயல பயன்படுத்தி 3 வருஷம் ஆச்சு. ஆனா அங்க இருந்த மண்ணு ஈரமா இருந்துச்சே. மணல் திருட்டு நடந்துருந்தாலும் இந்த மாதிரி ஈரமா இருக்காதே. அந்த மணல் டெஸ்ட் ரிப்போர்ட் வந்தா தான் தெரியும்', என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

அந்த ஓவியத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது கடவுள் வந்தார். "என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்???", என்று கேட்டார்.

"அன்னைக்கி வரஞ்ச படத்த தான் பாக்குறேன்", என்று கூறி அவரிடமும் காட்டினேன். "இந்த உருவத்தை எங்கோ பார்த்தது போல் உள்ளதே", என்றார் அவர். "பாத்துருப்பீங்க", என்றேன் சிரித்துக்கொண்டே.

"சரி வா கிளம்புவோம்", என்றார். "எங்க???", என்றேன். "வா சொல்கிறேன்", என்று அழைத்தார். நானும் வெளியே சென்றேன் அவருடன்.

எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டின் வெளியே ஒரு மாட்டு வண்டியில் ஏகப்பட்ட மரக்கன்றுகள் இருந்தன.

"என்ன இதெல்லாம்???", என்றேன். "நான் என்பாட்டிற்கு மேலே என் வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை இங்கே வரவைத்து என்னை எந்த சக்தியையும் பயன்படித்தக் கூடாது என்று கூறிவிட்டாய். எனக்கு பொழுதுபோகவில்லை. அதனால் தான் இந்த மரக்கன்றுகளை வாங்கி வந்தேன்", என்றார்.

'வந்து 1வாரம் கூட ஆகல. கடவுளுக்கே பொழுதுபோகலையாம். ஆனா இந்த ஜனங்க 3 வருஷமா சும்மாவே இருந்துருக்கங்க. என்ன கொடுமடா இது', என்று எண்ணிக்கொண்டு, "சரி இத வச்சு எப்டி பொழுத போக்கப்போறீங்க???", என்றேன்.

"இந்த மரக்கன்றுகளை நேற்று பார்த்த இடங்களில் நட்டு, தினமும் நானே தண்ணீர் ஊற்றி, வளர்க்கப்போகிறேன். உனக்கு விருப்பமானால் நீயும் என்னுடன் சேர்ந்துகொள்ளலாம்", என்றார்.

'கடவுளே விவசாயம் செய்ய தயாரா இருக்காரு, நம்ம நாட்டுல இருக்கவங்க விவசாய நெலத்த அழிச்சு அதுல வீடு கட்டுறாங்க. நல்ல நாடுடா', என்று நினைத்துக்கொண்டு, "ம்ம்... சரி... நானும் வரேன். இந்த வீட்டுக்குள்ளயே இருந்து சலிச்சுப்போச்சு", என்று கூறி கிளம்பினேன்.

இருவரும் ஊர் எல்லைக்கு சென்றோம். அங்கே இருந்த வெட்டப்பட்ட மரங்களை தோண்டி எடுத்தோம். பின் வாங்கிவந்த மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம்.

அப்பொழுது தூரத்தில் ஒருவர் பதட்டத்துடன் நடந்து வருவதை பார்த்தோம். நாங்கள் இருவரும் அந்த காவல் தெய்வத்தின் பின்னால் ஒழிந்துகொண்டோம். வந்தவர் அந்த ஊர் கோவில் பூசாரி. அவர் பேசுவதை கேட்டோம்.

"ஆண்டவனே... நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா??? எத்தன நாள் உனக்கு பூஜை பண்ணீருக்கேன். உனக்கு நான் என்ன கொற வச்சேன். ஏன் என்ன இப்டி வறுமைல வச்சுருக்க??? இப்ப சொல்றேன் கேளு... இனிமே நான் உனக்கு பூஜை பண்ண மாட்டேன். இது சத்தியம்...", என்று சூளுரைத்து சென்றார்.

"பார்த்தாயா... இவனை நானா எனக்கு பூஜை செய்யச்சொன்னேன்??? வேலையை செய்யாமல் எளிமையான தொழில் என்று பூஜை செய்வதை குலத்தொழிலாக தேர்ந்தெடுத்துக்கொண்டது இவன் தவறா??? அல்லது என் தவறா???

தொழில் கற்காமல் இவனை யார் மந்திரங்கள் கற்கச்சொன்னது??? வேறு தொழில் கற்றிருந்தால் வறுமை இவனை நெருங்கியிருக்குமா??? நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை ராஜினாமா செய்வது போல சொல்லிவிட்டுப் போகிறானே... சோம்பேறி...", என்று நொந்துகொண்டார்.

"சரி வாங்க நம்ம வேலைய பாப்போம். இவங்க ஒழுங்கா படிச்சுருந்தா இப்ப நீங்க மரம் நடுற நெலமையே வந்திருக்காது. இன்னும் சொல்லனும்னா இங்க ஒரு 5 மாடி கட்டடம் இருந்துருக்கும்", என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

"அது என்னவோ உண்மை தான்", என்றார் புன்னகையுடன். பேசிக்கொண்டே நட்டு முடித்தோம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top