பேயும் நானும்...

மணி 6.50 இருக்கும். மாலை முழுவதும் கோவிலில் பொழுதை போக்கிய நான், இந்த 10 நிமிடத்தை போக்குவதற்குள் உயிரே போவது போல் இருந்ததை உணர்ந்தேன்.

7 மணி. சொல்லி வைத்தது போல அனைவரும் கதவை பூட்டிக்கொண்டனர். அன்று பௌர்ணமி. ஆதலால் பூரண சந்திரன் பிரகாசமாக இருந்தான். அந்த வெளிச்சத்தில் நான் நடக்க ஆரம்பித்தேன்.

பேச்சிமுத்து சொன்னது போல அதே உணர்வு. பயமில்லை ஆனால் யாரோ என்னை பின்தொடரும் உணர்வு. யாராக இருந்தாலும் இன்னும் சிறிது தூரம் வரட்டும். ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்று 'கவனிக்கலாம்' என்று எண்ணி நடந்துகொண்டே இருந்தேன்.

ஒரு இடத்தில் நின்றேன். திரும்பிப்பார்த்தேன். அங்கே 7அடி உயரம், தலை முடியை விரித்துப்போட்ட வண்ணம் ஒரு உருவம் நின்றது. நிலா வெளிச்சம் இருந்தது ஆனாலும் அந்த முகத்தை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. கண்கள் மட்டும் நன்றாக தெரிந்தன. ஏதோ ஒரு வெறி அந்தக் கண்களில்.

"நீ வருவன்னு எதிர்பாத்தேன். பரவால்ல. என்ன ஏமாத்தாம வந்துட்ட", என்று கூறிக்கொண்டே டார்ச் லைட்டை அடித்தேன். அந்த உருவம் ஒரு கல்லை எரிந்து டார்ச்சை உடைத்தது. நான் உடைந்த டார்ச்சுடன் அந்த உருவத்தை நோக்கி ஓடினேன். அதுவும் என்னை நோக்கி ஓடி வந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தோம். பலமான அடி இருவருக்கும். ஒரு கட்டத்தில் அந்த உருவம் என் கழுத்தை நெறிக்க நானும் அந்த உருவத்தின் கழுத்தை எட்டிப்பிடித்தேன்.

என்னதான் இருந்தாலும் அந்த உருவம் என்னை விட உயரம் அல்லவா... என்னால் அதன் பிடியை தாக்குப்பிடிக்க முடியவில்லை. கையில் இருந்த டார்ச் லைட்டால் அந்த உருவத்தின் கையில் ஓங்கி அடித்தேன்.

அது என்னை தூக்கி எறிந்துவிட்டு ஓடியது. தூக்கி எறியப்பட்ட நான், அங்கேயே மயக்கமானேன். காலையில் கண் விழிக்கையில் வீட்டில் இருந்தேன். பக்கத்தில் கடவுள் இருந்தார்.

எழுந்ததும், "உங்கள யாரு என்ன காப்பாத்த சொன்னா???", என்றேன் கோபமாக. "நான் உன்னை காப்பாற்றவில்லை. இந்த ஊரில் இருக்கும் அந்த சாமியார் தான் உன்னை இங்கே கொண்டுவந்து விட்டார்", என்றார் அவர்.

"எத்தன மணிக்கு என்ன இங்க கொண்டுவந்தாரு அந்த சாமியார்???", என்று கேட்டேன்.

"ஒரு 2.30 மணி இருக்கும்", என்றார் அவர்.

அப்போது ஏதோ நினைத்தவனாய் என் பையை தொட்டுப்பார்த்தேன் பதட்டத்துடன். நல்லவேளை 'அது' பத்திரமாக இருக்கிறது. இப்பொழுது தான் எனக்கு உயிரே வந்தது. இனி அடுத்த கட்ட வேலையை பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு காயங்களுக்கு மருந்திட்டுக்கொண்டேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top