ஓவியம்

கடவுளை என் உதவியாளர் என்று ஊர் மக்களிடம் கூறி என்னுடனேயே தங்கவைத்துக்கொண்டேன்.

"நீங்க கடவுள். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கும். இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த ஊருல 3 வருஷமா ஒரு பேய் அட்டகாசம் பண்ணுது. 7 மணிக்கி மேல யாரும் வெளிய போகக்கூடாது. விவசாயம் பண்ணக்கூடாது. மரம் வளக்கக்கூடாது. அந்த சாமியார எதிர்த்து பேசக்கூடாது. இப்டி இங்க பல ரூல்ஸ் இருக்கு. இப்ப நீங்களும் சாதாரண மனுஷன் தானே. நீங்களும் இதை மறக்காம ஞாபகம் வச்சுக்கோங்க மிஸ்டர்.கடவுளே", என்றேன்.

"சரி... இப்பொழுது உன் முதல் கட்ட நடவடிக்கை என்ன???", என்று கேட்டார் அவர்.

"அந்த பேச்சிமுத்து பேய பாத்ததா சொன்னான். அவன் சொல்ற அடையாளத்த வச்சு அந்த பேயோட உருவத்த வரையணும்", என்றேன்.

பேச்சிமுத்து வீட்டிற்கு சென்று அவன் சொல்லச் சொல்ல அந்த உருவத்தை வரைந்தேன். அதை அவனிடமும் காட்டி சரி பார்க்கச் சொன்னேன். அதை பார்க்கையில் அவன் கண்ணில் ஒரு பயம் தெரிந்ததை என்னால் உணர முடிந்தது.

அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். அதை பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டு என் மடிக்கணினியை எடுத்தேன்.

"என்ன சென்ற காரியமா ஜெயமா???", என்றார் கடவுள். "பாதி ஜெயம்", என்றேன். "அது என்ன பாதி ஜெயம்???", என்றார் குழப்பத்துடன். "இப்ப அவன் சொன்ன அடையாளத்த வச்சு ஒரு படம் வரஞ்சுருக்கேன். அத வச்சு பாக்குறப்ப 2பேர் மேல சந்தேகம் இருக்கு. கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுருவேன்", என்று கூறினேன்.

இனியும் இந்த ஊரில் உயிர்கள் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த நான் ஊரின் எல்லைப்பகுதியில் ஒரு மருத்துவமனை அமைக்க அரசாங்கத்திற்கு ஒரு மனு அனுப்பினேன்.

பொழுது சாய்ந்தது. "நீங்க உள்ள தூங்குங்க. நான் இன்னைக்கி வரமாட்டேன்", என்று கூறினேன். "7 மணிக்கு மேல் வெளியே இருக்கக்கூடாது என்று சொன்னாயே", என்றார் மிஸ்டர்.கடவுள்.

"ஆமா... இன்னைக்கி என்ன ஆனாலும் பரவாயில்ல அந்த பேய நான் பாக்கணும். நானே அத தேடி போகப்போறேன்", என்றேன்.

"அது ஆபத்து. நன்றாக யோசிக்கலாமே", என்றார் அவர். "யோசிச்சுட்டேன். இத விட்டா வேற வழி இல்ல", என்று கூறி நடந்தேன்.

"நீங்க சாதாரண மனுஷன் தான். அத மறந்துற வேணாம்", என்று அவரிடம் கூறிச்சென்றேன்.

'இன்னைக்கி நானா அந்த பேயான்னு பாத்துருறேன்' என்று மனதில் எண்ணிக்கொண்டு கையில் டார்ச் எடுத்துக்கொண்டு நடந்தேன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top