அது...

ஆவேசத்துடன் வீட்டிற்கு வந்த நான் என்னசெய்வதென தெரியாமல் அந்த சாமியாரை வாயினுள்ளேயே திட்டி தீர்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வாசலில் இருந்து யாரோ என்னை அழைப்பது போல இருந்தது. நானும் வெளியே எழுந்து போனேன். கடவுள் என் பின்னால் வந்தார்.

அங்கே அந்த மக்கள் கூட்டத்தின் இடையில் இருந்து அந்த சாமியார் வந்தார். கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

"என்ன தம்பி... நான் சொன்னதைக் கேட்காமல் நீங்கள் மரம் வளர்த்ததும், விவசாயம் செய்ததும் இல்லாமல் இந்த மக்களையும் விவசாயம் செய்ய தூண்டி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேனே...", என்றார் ஏளனமாக.

"ஆமா... இப்ப அதுக்கு என்ன???", என்றேன் அலட்சியமாக.

"இந்த மக்கள் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லையோ???", என்றார் அவர்.

வந்ததே எனக்கு ஆத்திரம்... "யோவ்... நானா இவங்கள கொல்லப்பாக்குறேன்??? கண்ணு முன்னாடி ஒரு உயிர் போனப்ப காப்பாத்துங்கன்னு கால்ல விழுகாத கொறையா கெஞ்சுனேன்... அப்ப அந்த உயிர காப்பாத்த துப்பில்ல... இப்ப என்ன குத்தம் சொல்ல வந்துட்டியா???", என்றேன்.

"நான் இந்த மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து காப்பாற்றியிருக்கிறேன்... நீர் இவர்களை விவசாயம் செய்ய சொல்லி கொல்லப்பார்த்துள்ளீர்... இதில் என்னை குற்றம் சொல்கிறீரா???", என்றார்.

"விவசாயம் பண்ண விடாம தடுத்து காப்பாத்துனியா??? ஊரையே கடன்காரங்களா ஆக்கி வச்சுருக்கய்யா நீ...", என்றேன்.

"சும்மா நிறுத்துங்க தம்பி... எதுக்கெடுத்தாலும் எங்க சாமிய கொற சொல்லிக்கிட்டு இருக்கீங்க... அவரு இல்லைன்னா நாங்க என்னைக்கோ போய் சேந்துருப்போம்...", என்றார் ஒருவர்.

"இன்னொரு தடவ எங்க சாமிய பத்தி தப்பா பேசுனா... அடிச்சு இந்த ஊர விட்டு வெரட்டீருவோம்...", என்றார் இன்னொருவர்.

"யோவ்... சாமியாரே... பரவால்லயா... சுதந்திர போராட்டத்துக்கு இந்த மக்கள ஈடுபடுத்த மகாத்மா ரொம்ப கஷ்டப்பட்டாரு... ஆனா நீ ரொம்ப ஈஸியா மாத்தீட்ட...", என்றேன் கைதட்டலுடன்.

அந்த சாமியார் திருத்திருவென விழித்தார்.

"சாமி... சாமின்னு சொல்றீங்களே... அந்த சாமிக்கு எப்டி கை ஒடஞ்சுச்சுன்னு கேளுங்க...", என்றேன்.

"உன்னை காப்பாற்றுகையில் பேய் அடித்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டனர் என்று நீர் அன்று நீ தானே தம்பி கூறினாய்... இன்று என்ன சந்தேகம் அதில்...", என்றார் பதட்டத்துடன்.

"நான் ராத்திரி அந்த பேய் கிட்ட மாட்டுனது... உங்களுக்கு அடி பட்டது எதுவுமே இந்த ஊர் ஜனங்களுக்கு தெரியாது சாமியாரே...", என்றேன் ஏளன சிரிப்புடன்.

அதற்கேற்ப அவர் சுற்றிப்பார்க்க மக்களும் குழப்பத்துடன் அவரை பார்த்தனர்.

நான் சிரித்துக்கொண்டே, "ஆமா அன்னைக்கி ராத்திரி நீங்க தேடுனது கெடச்சுச்சா???", என்றேன்.

"நான் எதையும் தேடவில்லையே... நான் எதை தேடினேன்...", என்று பதறினார் சாமியார்.

"எல்லாம் எனக்கு தெரியும் சாமி...", என்றேன் திமிராக.

"தம்பி... உயிர குடுத்து உங்கள காப்பாதீருக்காரு நீங்க என்னன்னா அவர கொற சொல்லுறீங்க... அப்டி என்ன தெரியும் உங்களுக்கு???", என்றார் கூட்டத்தில் ஒருவர்.

"உங்க சாமியார் கழுத்துல இருக்க ருத்திராட்ச மாலைல ஒரு ருத்திராட்சம் கொறையுறது உங்களுக்கு தெரியுமா??? எனக்கு தெரியும்...", என்று கூறி என் பையில் இருந்த ருத்திராட்சத்தை எடுத்து காட்டினேன்.

ஆங்கே ஒரு அமைதி நிலவியது. அனைவர் முகத்திலும் ஈ ஆடியது. அந்த சாமியார் முகத்தில் வியர்வை அருவுயாக ஓடியது.

இதுவே என் முதல் வெற்றி என்று தோன்றியது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top