80 இறுதி பகுதி
80 இறுதி பகுதி
தங்கள் தேனிலவை முடித்து கொண்டு, மேலும் இரண்டு மூன்று டீல்களையும் கைப்பற்றிக்கொண்டு, ஒரு வாரத்திற்கு பிறகு இந்தியா திரும்பினார்கள் ஸ்ரீராமும், மிதிலாவும். அவர்கள் பூவனம் வந்த போது, அவர்களது குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவில் நடந்த ஃபேஷன் ஷோவை யூடியூபில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் மிதிலாவும் இணைந்து கொண்டாள்.
"உங்க ட்ரிப் எப்படி இருந்தது?" என்றான் தினேஷ்.
"நம்ம கம்பெனிக்கு மொத்தம் அஞ்சு புது டீல் கிடைச்சிருக்கு" என்றாள் மிதிலா சந்தோஷமாக.
"வாவ்... செம" என்றான் பரத்.
"அப்படின்னா, வரப்போற நாள்ல நம்ம ரொம்ப பிஸியா இருக்க போறோம்னு சொல்லு..." என்றான் லட்சுமணன் சோகமாக.
ஆமாம் என்று கிண்டலாய் தலையசைத்தாள் மிதிலா.
"ராமு, நீயும் மிதிலாவும் அசத்திட்டீங்க" என்றாள் நர்மதா.
"இந்த டிரஸ்ல நீ கார்ஜியஸா இருக்க, மித்து" என்றாள் ஊர்மிளா.
"நிஜமா தான்... உங்களுடைய ஷோ செம்ம ஆஸம். நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஜ்ல *ராம்ப் வாக்* பண்ணும் போது, ஸ்டேஜ் அப்படியே சூடேறி போயிடுச்சு..." என்று சிலாகித்தான் லட்சுமணன்.
"எங்களுடைய பேர் எப்படி இருந்தது லட்சுமணன்?" என்றான் ஸ்ரீராம்.
"கலக்கல்" என்றான் லட்சுமணன்.
"ஓ அப்படியா...? நான் மிதிலாவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னப்போ நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான் தன் கைகளை தன் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு எகத்தாளமாய் ஸ்ரீராம்.
முகத்தை கோணலாகி கொண்டு தன் தலையை சொறிந்தான் லட்சுமண். மற்றவர்கள் சிரிக்க,
"நீங்க யாரும் சிரிக்க வேண்டாம்... நீங்க யாரும் கூட என்னை சப்போர்ட் பண்ணவே இல்ல... அதை மறந்துடாதீங்க" என்றான் ஸ்ரீராம்.
"ஏன் ராமு இவ்வளவு ஹீட்டா இருக்க?"
"இந்தப் பொண்ணு, என்னை ஹனிமூனை என்ஜாய் பண்ணவே விடல தெரியுமா?" என்றான் மிதிலாவை நோக்கி கை நீட்டி.
அதைக் கேட்ட மிதிலா திடுக்கிட்டாள்.
"எப்போ பார்த்தாலும், நம்ம எப்போ இந்தியாவுக்கு திரும்பி போக போறோம்ன்னு கேட்டு, கேட்டு, என்னை தொலைச்சி எடுத்துட்டா... எங்க ஹனிமூனையும் ஸ்பாயில் பண்ணிட்டா" என்று மிதிலாவை காலை வாரினான் ஸ்ரீராம்.
"அவங்களுக்கு எங்க மேல பிரியும் ரொம்ப ஜாஸ்தி. உன்னை மாதிரி இல்ல. அதனால தான் ஹனிமூன்ல கூட எங்களை நெனச்சிருக்காங்க. நான் சொல்றது சரி தானே மிதிலா?" என்றாள் நர்மதா.
ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.
"அப்படின்னா உனக்கு என் மேல பிரியம் இல்லையா?" என்றான் ஸ்ரீராம் அதிர்ச்சியுடன்.
"ஏன்..???? எனக்கு பிரியம் இருக்கா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா?" என்றாள் மிதிலா தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு.
தெரியாது என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"அப்படியா....? ரொம்ப சந்தோஷம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து தங்கள் அறையை நோக்கி நடந்தாள் மிதிலா.
"மிதிலா... மிதிலா நில்லு..." என்று பின்னால் இருந்து அழைத்தான் ஸ்ரீராம்.
அவள் நிற்கவில்லை.
"போச்சு போ... நீ மிதிலாகிட்ட மாட்டிக்கிட்ட. அவ உன் மேல கோவமா இருக்கா." என்று விழுந்து விழுந்து சிரித்தான் லட்சுமன்.
"அடங்கு டா... அவளை எப்படி சமாதானப்படுத்தணும்னு எனக்கு தெரியும்" என்றான் பெருமையாக.
"நெஜமாவா?"
"நான் வேணா பெட்டு கட்றேன். எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் நடக்காத மாதிரி, அவ டின்னருக்கு என் கூட வருவா பாரு"
"பெட்டா?"
"பெட்டு..."
"என்ன பெட்டு?" என்றார் புஷ்பா.
"நான் ஜெயிச்சா, மிதிலா என் கூட இருக்கும் போது யாரும் அவளை கூப்பிடவே கூடாது..."
பெண்கள் நமுட்டு சிரிப்பை உதிர்க்க,
"டன்" என்றான் தினேஷ்.
"இந்த பெட்டை பத்தி நீ மிதிலாகிட்ட எதுவும் சொல்லக் கூடாது" என்றான் லட்சுமணன்.
"சொல்ல மாட்டேன்... "
"அக்கா, உங்க எல்லாருக்கும் மிதிலா கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கா. அதை எல்லாருக்கும் கொடுங்க" என்று கூறி விட்டு தன் அறையை நோக்கி நடந்தான் ஸ்ரீராம்.
அவன் செல்வதையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் நர்மதா.
"என்ன அவனை அப்படி பார்க்கிற?" என்றார் புஷ்பா.
"நம்ம ராமுகிட்ட எவ்வளவு மாற்றம் இல்ல?" என்றாள் நர்மதா சிறு புன்னகையுடன்.
"கொஞ்ச நஞ்ச மாற்றமில்ல... அவன் நம்ம எல்லாரையும் கிண்டல் எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டான்" என்று சிரித்தார் பாட்டி
"எல்லாம் எங்க மித்துவால தான்" என்று வழக்கம் போல் பீற்றிகொண்டான் லட்சுமணன்.
"நான் தான் சொன்னேனே மிதிலா புரிதல் இருக்கிற ஒரு பொண்ணு. தன்னுடைய வாழ்க்கையை எப்படி சீரமைக்கணும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்" என்றார் புஷ்பா.
"அதுல மிதிலாவுடைய பங்கு மட்டுமில்ல. ராமு அண்ணனோட பங்கும் இருக்கு. தன் மனைவி நல்லவளா இருக்கிறதால மட்டும் ஆம்பளைங்க மாறிட மாட்டாங்க. தன்னை மாத்திக்க வேண்டியது எவ்வளவு முக்கியம்னு அவங்க நினைக்கணும்... அப்போ தான் அவங்ககிட்ட மாற்றம் ஏற்படும்... இதை நான் சொல்லல. மிதிலா சொன்னது..." என்று சிரித்தாள் ஊர்மிளா.
அவளும் மிதிலாவும் இதைப் பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறார்கள் என்பது மற்றவர்களுக்கு புரிந்தது. அவர்கள் தான் நெருங்கிய தோழிகள் ஆயிற்றே...!
"நீங்க இதைப் பத்தி ஏற்கனவே பேசிட்டீங்களா?" என்றான் லட்சுமணன்.
ஆமாம் என்று தலையசைத்தாள் ஊர்மிளா.
"அப்ப கூட ராமுவை விட்டுக்கொடுக்கல பார்த்தியா மிதிலா...! அது தான் மிதிலா" என்றான் லட்சுமணன்.
அதை அனைவரும் ஆமோதித்தார்கள்.
இதற்கிடையில்....
தங்களது உடமைகளை அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் மிதிலா. அங்கு வந்த ஸ்ரீராம் பின்னாலிருந்து அவளை அணைத்துக் கொண்டான்.
"நான் உங்க மேல கோவமா இருக்கேன்" என்றாள் மிதிலா.
"எனக்கு தெரியும்"
"இந்தியா வரணும்னு நான் உங்களைத் தொல்லை பண்ணேனா?"
"பண்ணல?"
"ஒரு தடவை தானே கேட்டேன்?"
"இருக்கலாம்... ஆனா அது என் காதில் எதிரொலிச்சிக்கிட்டே இருந்தது" என்று அவள் காதில் முத்தமிட்டான்.
"நீங்க ஏன் இப்படி மாறி போயிட்டீங்க? உங்களுடைய கெத்தே போச்சு..." என்றாள் முகத்தை சுளுக் என்று வைத்துக் கொண்டு.
அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் ஸ்ரீராம்.
"என் கெத்து நாசமா போகட்டும்... அது என்கிட்ட இருந்த வரைக்கும், ஒரு ராங்கி பொண்ணு என்னை திரும்பி கூட பாக்காம சுத்தல்ல விட்டு படுத்தி வச்சா... இப்போ பாரு, எப்ப வேணும்னாலும் அவளை கட்டி பிடிச்சுக்கிறேன்... முத்தம் கொடுக்கிறேன்..."
"நம்மளோட ஹனிமூன் பத்தி எல்லாம் ஏன் மத்தவங்க முன்னாடி பேசுறீங்க? கொஞ்சம் கூட ஒளிவு மறைவே இல்லையா?"
"எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தை ஏன் ஒளிச்சு வைக்கணும்?" என்று கிண்டலாய் சிரித்தான் ஸ்ரீராம்.
"என்னை விடுங்க..." அவனைப் பிடித்து தள்ளி விட்டு அங்கிருந்து சென்றாள் மிதிலா.
அவளை பிடிக்க முயன்ற ஸ்ரீராம் கட்டிலின் காலில் இடித்துக் கொண்டான்.
"ஆ..." என்று தன் காலைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான்.
அவன் கத்தலை கேட்டு நின்ற மிதிலா, அவனை நோக்கி ஓடிவந்தாள்.
"என்ன ஆச்சி, ஸ்ரீ? ரொம்ப வலிக்குதா?" என்று அவன் காலை தேய்த்து விட்டாள்.
கட்டிலில் எழுந்து அமர்ந்த ஸ்ரீராம் இல்லை என்று தலையசைத்தான்.
"ஆனா, இந்த இடம் சிவந்து போச்சு" என்றாள்.
"நீ தொட்ட உடனே என் வலி பறந்து போச்சு" என்றான்.
"இருங்க" அலமாரியிலிருந்து மருந்தை எடுத்து வந்து அவன் காலில் தடவினாள் மிதிலா.
"வலிக்குதா?"
"நீ என்கூட இருந்தா எனக்கு எதுவுமே வலிக்காது"
"ஐ அம் சாரி... என்னால தான் உங்களுக்கு அடிபட்டிச்சி"
"பரவாயில்லை விடு"
"தேனொழுக பேசாம உண்மையை சொல்லுங்க. உண்மையிலேயே உங்களுக்கு வலிக்கலையா?"
"லேசா" என்று சிரித்தான்.
"ஐ அம் சாரி" என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
"குளிச்சிட்டு வா சாப்பிட போலாம்" என்றான்.
இருவரும் குளித்துவிட்டு தரைதளம் வந்தார்கள். மிதிலாவின் தோளை சுற்றி வளைத்துக் கொண்ட ஸ்ரீராம்,
"நீ வாங்கிகிட்டு வந்த கிஃப்ட் எல்லாத்தையும் அவங்களை எடுத்துக்க சொல்லிட்டேன்"
"அவங்களுக்கு பிடிச்சிருந்ததா?" என்றாள் ஆர்வமாக.
"பிடிச்சிருந்தது"
அனைவரது பார்வையும் அவர்கள் மீது தான் இருந்தது என்று கூறத் தேவையில்லை. அவர்களை பார்த்து சிரித்தபடி தன் புருவத்தை உயர்த்தினான் ஸ்ரீராம்.
"மித்து, நீ ராமுகிட்ட பேசிட்டியா?" என்றான் ஏமாற்றத்துடன் லக்ஷ்மன்.
"ஆமா, ஏன்???" என்றாள் குழப்பத்துடன்.
"அடக் கடவுளே...!" என்றாள் நர்மதா.
"என்ன ஆச்சு கா?"
"நாங்க எல்லாரும் பெட்டில் தோத்துட்டோம்" என்றாள் ஊர்மிளா.
"என்ன பெட்டு?"
"நீங்க உங்க ரூமுக்கு கோவமா போனீங்கி... அதனால, நீங்க ராமுகிட்ட பேச மாட்டீங்கன்னு நாங்க நினைச்சோம்" என்றாள் நர்மதா.
"அதனால?"
"உங்களை சமாதான படுத்திடுவேன்னு ராமு எங்ககிட்ட பெட்டு கட்டினான்."
"ஓ..."
"அவன் சொன்ன மாதிரியே செஞ்சுட்டான்" என்றான் சோகமாக லட்சுமணன்.
"அது சரி, என்ன பெட்?" என்றாள் மிதிலா.
"அக்கா, சொல்லாதீங்க கா" என்றான் ஸ்ரீராம் *வேண்டாம்* என்று தலையை அசைத்தபடி.
மிதிலாவுக்கு ஆர்வம் அதிகமானது.
"அக்கா சொல்லுங்க ப்ளீஸ்"
"வேண்டாம் கா" என்று பின்னால் நகர தொடங்கினான் ஸ்ரீராம்.
"ராமு, நீ மிதிலாவை பார்த்து பயப்படுறியா?" என்றார் புஷ்பா.
"அதானே...? அண்ணா, நீங்க தானே பாஸ்?" என்றான் பரத்.
"அட போடா... அவ பாஸுக்கு பாஸ்" என்றான் ஸ்ரீராம்.
"என்ன பெட்ன்னு சொல்லுங்க அக்கா" என்றாள் மிதிலா.
"ராமு ஜெயிச்சா..." என்று நிறுத்தி விட்டு, ஸ்ரீராமை பார்த்து சிரித்தாள் நர்மதா.
"சொல்லுங்க..." என்று பரபரத்தாள் மிதிலா.
"நீங்க அவன் கூட இருக்கும் போது நாங்க யாருமே உங்களை கூப்பிடக் கூடாதாம்"
அதைக் கேட்டு நம்ப முடியாமல் தன் வாயைத் பிளந்த மிதிலா, ஸ்ரீராமை பார்த்து முறைத்தாள்.
"ராமுவுக்கு அடி விழ போறது கன்ஃபார்ம்" என்று விழுந்து விழுந்து சிரித்தான் லக்ஷ்மன்.
"அவ என்னை அடிக்க மாட்டா" என்றான் ஸ்ரீராம்.
"யார் சொன்னது?" என்று மிதிலா கேட்க,
"அடிக்கணும்னா, யாருக்கும் தெரியாம தனியா வந்து அடி மா" அங்கிருந்து ஓட்டம் எடுத்தான் ஸ்ரீராம்.
அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள் மிதிலா. அவர்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு நின்ற நர்மதா, ஒருமுறை தனக்கும் ஸ்ரீராமுக்கும் இடையில் நடந்த உரையாடலை எண்ணி பார்த்தாள். மிதிலா அவனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிய போது,
*ஏன் கா மிதிலாவுக்கு நான் வேண்டாம்? அவ விரும்புற மாதிரி என்கிட்ட எதுவுமே இல்லையா?* என்று அவன் மனம் வருந்தினான் அல்லவா?
தன்னிடம் மாற்றம் நிகழ வேண்டும் என்ற விதை, அன்று தான் ஸ்ரீராமின் மனதில் விழுந்திருக்க வேண்டும். மிதிலாவின் அன்பை பெறுவதற்காகவும், தன் உறவுகளுடன் தான் இழந்துவிட்ட இனிமையான நாட்களை மீண்டும் பெறுவதற்காகவும், தனக்குள் இந்த மாற்றங்களை அவன் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
மிதிலா கூறியது உண்மை தான். ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதற்காக ஒரு ஆண் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. தன்னிடம் மாற்றம் ஏற்பட வேண்டியது, தங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமானது என்பதை அந்த ஆண் உணர்ந்தால் தான் அவன் தன்னை மாற்றிக் கொள்ள முடியும். ஸ்ரீராமும் அப்படித் தான்...!
தன் மனைவிக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும், தங்களை மாற்றிக் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம்...!!! 🙏🏻🙏🏻
முடிந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top