71 தாக்குதல்

71 தாக்குதல்

நர்மதா ஒருத்தியைத் தவிர ஸ்ரீராமும் மிதிலாவும்  எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஸ்ரீராம் கேட்டுக்கொண்டபடி யாரிடமும் ஒன்றும் கூறாமல் அமைதி காத்தாள் நர்மதா.

"அக்கா, ராமுவும் மிதிலாவும் எங்க போனாங்க?" என்றான் லட்சுமன்.

"அவங்க சென்னையில தான் இருக்காங்க" என்றாள் நர்மதா.

"அவங்க எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமா?" என்றார் புஷ்பா.

"தெரியும். ராமு என்கிட்ட சொல்லிட்டு தான் போனான்"

"அதானே பார்த்தேன்... ராமுவாவது, உன்கிட்ட சொல்லாமல் போறதாவது..." என்றார் புஷ்பா கிண்டலாக.

"அவரு மிதிலாவை எங்க கூட்டிக்கிட்டு போனாரு?" என்றாள் ஊர்மிளா.

"கவலைப்படாத ஊர்மிளா, மிதிலா, ராமு கூட தானே இருக்கா... அவ பத்திரமா இருப்பா"

"அவளுடைய சேஃப்டியை பத்தி நான் கவலைப் படல, பாட்டி. ஆனா அவ என்கிட்ட ஒண்ணுமே சொல்லாம போயிட்டா" என்றாள் சோகமாக.

"ஏன்னா, அவங்களுக்கே அதை பத்தி தெரியாது" என்றாள் நர்மதா.

"என்னது...??? அது எப்படி நடந்தது?"

"ராமுவோட பிளான் அவங்களுக்கு தெரியாது"

"ஆனா, எதுக்காக அவரு திடீர்னு பிளான் பண்ணாரு?"

"ஏன்னா, இன்னைக்கு ராமுடைய பர்த்டே"

"ஓஹோ..."

"ஆனா, ராமு எப்பவுமே தன்னுடைய பர்த் டேவை கொண்டாட விருப்பம் காட்ட மாட்டானே..." என்றார் புஷ்பா.

"ஆமாம், இது தான் ஃபர்ஸ்ட் டைம்... அவன் தன்னுடைய பர்த் டேவை கொண்டாடுறது..."

"அது மிதிலாவால தான்... " என்றார் பாட்டி.

"நீங்க சொல்றது சரி பாட்டி. மிதிலா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும்னு ராமு நினைக்கிறானே, அதுவே ரொம்ப பெரிய விஷயம்..." என்றாள் நர்மதா.

"ஆமாம் கா. நான் கூட ராமுவுடைய நேசரை நெனச்சு, மிதிலாவுடைய ஃப்யூச்சர் பத்தி ரொம்ப கவலைப்பட்டேன்... நல்ல காலம் அவன் மாறிட்டான்"

"அவங்க எப்போ திரும்பி வருவாங்க?" என்றாள் ஊர்மிளா.

"அதைப் பத்தி ராமு எதுவும் சொல்லல" என்றாள் நர்மதா.

பண்ணை வீடு

இதமான தாம்பத்தியத்திற்கு பிறகு, சுகமான தூக்கம் அவர்களை தழுவ,  ஒருவரை ஒருவர் தழுவியபடி இருவரும் உறங்கிப் போனார்கள். இதற்கு முன்பு கூட, ஒரே போர்வைக்குள் அவர்கள் அப்படி உறங்கியவர்கள் தான். ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானது. *பிரைவேட் ஏரியாவை* தொட்டு விடுவானோ என்ற பயம் மிதிலாவின் மனதில் இல்லை... அவர்களைப் பொறுத்தவரை அது முடிந்து போன கதை. இன்று போல் அவள் என்றும் நிம்மதியாய் உணர்ந்ததே இல்லை. அந்த நிம்மதி தான் அவர்களுடைய இயல்பான தூக்கத்திற்கு காரணம்.

தூக்கத்தில் இருந்து மெல்ல கண்விழித்த ஸ்ரீராம், சற்று நேரத்திற்கு முன் நடந்தவற்றை எண்ணிப் பார்த்து புன்னகை புரிந்தான். ஜன்னல் வழியாக வெளியே பார்த்த பொழுது இருட்டி விட்டது புரிந்தது. மிதிலாவின் கரங்கள் அவனை சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அவளது வலைகரத்தின் வளையத்தில் இருந்து வெளிவரும் எண்ணம் அவனுக்கு சிறிதும் இல்லை. அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டுவிட்டு, தூக்கத்தை தொடரும் எண்ணத்துடன் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டான். ஆனால் மிதிலாவின் அருகாமை அவனை தூங்க விடவில்லை. அதே நேரம், அவளது தூக்கத்தை தொந்தரவு செய்யவும் அவனுக்கு மனம் வரவில்லை. கட்டிலைவிட்டு இறங்கலாம் என்ற எண்ணத்துடன் அவன் சற்று அசைந்த போது, அவனை சுற்றி இருந்த பிடி இறுகியது. உண்மையிலேயே மிதிலா உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாளா என்ற சந்தேகத்துடன் அவன் அவளை பார்த்தான். ஆனால் உண்மையிலேயே அவள் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். மறுபடியும் அவன் அங்கிருந்து விலகுவது போல் பாசாங்கு செய்ய, இந்த முறை அவன் தோள்களை கெட்டியாய் பற்றிக் கொண்டு, அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் மிதிலா. லேசாய் அவள் தலையை வருடிக்கொடுத்து,

"மிதிலா, சாப்பிட்டுட்டு தூங்கு..." என்றான் மெல்லிய குரலில்.

திடுக்கிட்டு எழுந்தாள் மிதிலா.

"ஆஃபிசுக்கு லேட் ஆயிடுச்சா?" இங்கும் அங்கும் பார்த்தபடி கேட்டாள் மிதிலா.

"நம்ம ஃபார்ம் ஹவுஸ்ல  இருக்கோம். மறந்துட்டியா?" என்று சிரித்தான் ஸ்ரீராம்.

தன் உதட்டைக் கடித்தபடி ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.

"உனக்கு பசிக்கலையா?"

"டைம் என்ன ஆச்சு?"

" மணி 8"

"எனக்கு பசிக்கல"

"உனக்கு என்ன வேணும்னு சொன்னா நான் ஆடர் பண்ணிடறேன்"

"ஏதாவது ஆடர் பண்ணுங்க"

தனது கைபேசியை எடுத்து, ஃப்ரைட் ரைஸ், பெப்பர் சிக்கன், கிராப் லாலிபாப் ஆர்டர் செய்தான் ஸ்ரீராம். தனது கைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு, மீண்டும் மிதிலாவை அணைத்துக் கொண்டான்.

"நம்ம எப்போ வீட்டுக்கு போவோம்?" என்றாள் மிதிலா.

"ஏன்? உனக்கு போரடிக்குதா?"

"என்னமோ வீட்ல நான் வேற யாரு கூடயோ இருக்கப் போற மாதிரி கேக்குறீங்க..."

"என்ன்னனனது..." என்றான் அதிர்ச்சியாக.

"பின்ன என்ன? வீட்லயும் நான் உங்க கூட தானே இருக்கப் போறேன்?"

"நான் ஃபார்ம் ஹவுஸைப் பத்தி கேட்டேன்"

இல்லை என்று தலை அசைத்த மிதிலா,

"எனக்கு போர் அடிக்கல" என்றாள்.

"நிஜமாவா?"

"நீங்க என்கூட இருக்கும் போது எனக்கு எப்படி போரடிக்கும்?"

"நீ மிதிலா தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு..." என்று சிரித்தான் ஸ்ரீராம்.

"மிஸஸ் மிதிலா ஸ்ரீராம்..." என்றபடி கண்களை மூடிக்கொண்டாள் மிதிலா.

"உன்னை, இன்னும் இரண்டு நாளைக்கு தொடுறது இல்லன்னு எனக்கு நானே ஒரு சபதம் எடுத்திருக்கேன்"

தன் தலையை உயர்த்தி அவனை விசித்திரமாய் பார்த்தாள் மிதிலா.

"எனக்கு எதுக்காக ரெண்டு நாள் லீவு கொடுக்கறீங்க?"

"மேல மேல உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான்... இந்த இரண்டு நாள் உனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்"

"மறுபடி என்னை ரெடி பண்ணிக்கவா?" என்றாள் கிண்டலாக.

ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.

"சோ ஸ்வீட்"

"ஆனா, என்னுடைய சபதத்தை என்னால காப்பாத்த முடியுமான்னு எனக்கு இப்போ சந்தேகமா இருக்கு"

"ஏன்? "

"நீ இப்படி என்கிட்ட நெருக்கமா இருந்தா நான் எப்படி என் சபதத்தை காப்பாத்த முடியும்?"

"உங்களை யாரு சபதம் போட சொன்னது?"

தன் புருவத்தை உயர்த்தி உதடுகளை அழுத்தினான் ஸ்ரீராம்.

"இது நம்ம ரெண்டு பேரும் சம்பந்தப்பட்ட விஷயம். நீங்க மட்டும் தனியா எப்படி முடிவு எடுத்தீங்க?"

"இது பாயிண்ட்..."

"அதனால நீங்க என்னை தடுக்க முடியாது" மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

"நான் இந்த சபதத்தை செஞ்சிருக்கக் கூடாது" என்றான் ஸ்ரீராம்.

கண்களை மூடியபடியே சிரித்தாள் மிதிலா.

"மிதிலா..." என்றழைத்தான் ரகசியமாக.

"ம்ம்ம்?"

"நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா?"

தெரியாது என்று தலையசைத்தாள்.

"நீ ரொம்ப அழகு... உள்ளேயும்... வெளியேயும்..." என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அழகாய் புன்னகைத்தாள் மிதிலா.

"நீங்க என்னுடைய எல்லா பர்த்டே பிளானையும் ஸ்பாயில் பண்ணிட்டீங்க. நான் ரொம்ப பெரிய பிளான் வச்சிருந்தேன் தெரியுமா?" என்றாள் மிதிலா சோகமாக.

"அப்படியா என்ன பிளான்?"

"நான், லக்கி, குகா, பரா நாலு பேரும் சேர்ந்து உங்க பர்த்டேவை கிராண்டா கொண்டாடலாம்னு இருந்தோம். உங்களால வெறும் பாயசம் மட்டும் தான் என்னால  செய்ய முடிஞ்சது"

"நல்ல காலம், நான் எஸ்கேப் ஆயிட்டேன்" என்று சிரித்தான் ஸ்ரீராம்.

அதைக் கேட்டு வாயை பிளந்தாள் மிதிலா.

"ஏன், உங்களுக்கு பார்ட்டியெல்லாம் பிடிக்காதா?"

"நீங்களும்... உங்க பார்ட்டியும்... நான் மட்டும் உங்க பார்ட்டிக்கு வந்திருந்தா, என் லைஃபோட பெஸ்ட் நாளை மிஸ் பண்ணி இருப்பேன். உங்க பார்ட்டி இவ்வளவு ஸ்பெஷலா இருந்திருக்குமா?" என்று கண்ணடித்தான்.

கண்களை மூடி இதமாய் வெட்கப்பட்டு சிரித்தாள் மிதிலா.

"நம்ம இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்னு நினைக்கிறேன்"

"ஏன்? "

"நீ வெட்கப் படுறதை பார்க்க"

மீண்டும் வெட்கப்பட்டாள் மிதிலா. கட்டிலில் படுத்துக் கொண்டு அவளை தன் நெஞ்சில் இழுத்து சாய்த்துக் கொண்டான் ஸ்ரீராம்.

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா ஸ்ரீ?"

"தாராளமா"

"எனக்கு நல்லா தெரியும், ஆரம்பத்துல உங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்காதுன்னு. உங்களுடைய வெறுப்பை நான் நல்லாவே உணர்ந்திருக்கேன். அப்படி இருக்கும் போது எப்படி திடீர்னு என்னை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சது?"

புன்னகையுடன் அவளை பார்த்தான் ஸ்ரீராம்.

"ஹானஸ்ட்லி, காதலிக்கணும் என்கிற எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்ததில்ல. கல்யாணத்தை பத்தி கேட்கவே வேண்டாம்... அது ஒரு பெரிய கமிட்மெண்ட். நீ தான் எல்லாத்தையும் உடைச்சி என் மனசுக்குள்ள புகுந்துட்ட. அது எக்ஸாக்டா எப்ப நடந்ததுன்னு எனக்கும் சரியா தெரியல. ஆனா, நீ  டீலை பிடிக்க தனக்கு ஹெல்ப் பன்னேன்னு வேலாயுதம் சொன்னப்போ, நான் நொறுங்கிப் போயிட்டேன். அவர் என்கிட்ட பேசற வரைக்கும், எப்படியாவது அந்த டீலை பிடிச்சே ஆகணும்னு நான் நினைச்சேன். ஆனா அதுக்கு பிறகு, அந்த டீல் என்னை பொருத்தவரை ஒன்னும் இல்லாத விஷயமா போச்சு. நீ மட்டும் தான் என் மனசுல இருந்த. நீ எனக்கு உண்மையானவளா இருக்கணும் அப்படிங்கற அந்த ஒரு எண்ணம் தான் என் மனசுல இருந்தது. அந்த டீலை நம்ம ஜெயிச்சதா அனவுன்ஸ் பண்ணப்போ, உன்னை இறுக்கமா கட்டிப் பிடிச்சிக்கணும்னு எனக்கு தோணுச்சு. போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது. அன்னைக்கு தான் நான் புரிஞ்சுகிட்டேன், என்னுடைய வாழ்க்கையில, உன்னுடைய இடம் எப்படிப்பட்டதுன்னு..."

தன் முகத்தை உயர்த்தி அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள் மிதிலா.

"அவ்வளவு தானா?" என்றான்.

"நான் கண்டினியு பண்ணா, நீங்க உங்க சபதத்தை உடைக்க வேண்டியிருக்கும்..." என்று அவன் கன்னத்தில் வட்டங்கள் வரைந்தாள் மிதிலா.

பெருமூச்சுவிட்டான் ஸ்ரீராம்.

"சபதம் போடுறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல? நான் உங்களை தடுத்திருப்பேனே" என்று சிரித்தாள் மிதிலா.

"ரெண்டு நாளைக்கு நான் எங்கேயாவது ஓடிப் போய்டலாம்னு நினைக்கிறேன்"

"தேவையில்ல... நீங்க உங்க சபதத்தை கைவிட்டா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல"

"ஆனா எனக்கு இருக்கு... உனக்கு லீவு கொடுக்க மட்டும் இல்ல... சொன்ன சொல்லை மீறும் பழக்கம் எனக்கு இல்ல"

அவன் உதட்டில் அழுத்தமாய் தன் இதழ் பதித்தாள் மிதிலா.

அப்பொழுது ஸ்ரீராமின் கைபேசி சிணுங்கியது. அந்த அழைப்பு பண்ணை வீட்டின் காவலாளியிடம் இருந்து வந்தது.

"சொல்லுங்க "

"சார், நீங்க ஆர்டர் பண்ணியிருந்த சாப்பாடு வந்திருக்கு"

"இதோ வரேன்"

அழைப்பைத் துண்டித்து விட்டு, கட்டிலை விட்டு கீழே இறங்கினான் ஸ்ரீராம். ஜன்னலுக்கு அருகில் போடப்பட்டிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த தனது மணி பரிசை எடுக்கச் சென்றான். பர்ஸில் இருந்து வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டான்.

அதே நேரம், அருகில் இருந்த ஜன்னல்  கண்ணாடி உடைந்து நொறுங்கியது. ஜன்னலின் மேற்புறம் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் இருந்தது. அவன் தன்னை சுதாகரித்துக் கொள்ளும் முன், மீண்டும் ஒரு தோட்டா பாய்ந்து வந்து ஜன்னலை தாக்கியது.  கட்டிலின் மீது பாய்ந்து, மிதிலாவுடன் கீழே உருண்டு விழுந்தான் ஸ்ரீராம். பயத்தில் ஸ்ரீராமை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் மிதிலா... அந்த அறையின் அனைத்து ஜன்னல் கண்ணாடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக உடைந்து கொண்டிருந்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top