70 அந்த ஒருத்தி...
70 அந்த ஒருத்தி...
ஸ்ரீராமை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மிதிலா.
"நீங்களா என்னை..."
"ஆமாம் நான் தான் உன்னை கடத்திக்கிட்டு வந்தேன்."
"ஆனா ஏன்?"
"இன்னைக்கு ஃபுல்லா நீ என் கூட தான் இருக்கப் போற... நீயும் நானும் மட்டும் "
"நீங்க ரொம்ப விசித்திரமான ஆளு தெரியுமா...?" என்றாள் பெருமூச்சுவிட்டு.
"தெரியும். எனக்கு தெரிந்த விஷயத்தை பத்தி பேசி டைமை வேஸ்ட் பண்ணாம போய் குளிச்சிட்டு வா. பிரேக்ஃபாஸ்ட் ரெடியா இருக்கு"
"நீங்க சமைச்சிங்களா?" என்றாள் நம்ப முடியாமல்.
"சான்சே இல்ல... சமைக்கிறவங்க ஒரு ரகம்னா, சாப்பிடுறவங்க இன்னொரு ரகம்... அதுல நான் இரண்டாவது ரகம். பிரேக்ஃபாஸ்ட்டை நான் ஆர்டர் பண்ணி வர வச்சேன்" என்றான் ஸ்ரீராம் சிரித்தபடி.
"அப்படின்னா லன்ச்க்கு என்ன செய்றதா உத்தேசம்?"
"உனக்கு பிடிச்சதை வர வச்சிக்கலாம்"
"தேவையில்லை. நான் சமைக்கிறேன்"
"நெஜமா தான் சொல்றியா?"
"ஆமாம்"
"சரி. அப்படின்னா என்ன என்ன வேணும்னு லிஸ்ட் எழுதிக் கொடு. நான் செக்யூரிட்டிகிட்ட கொடுத்து வாங்கிக்கிட்டு வர சொல்றேன்"
"வெஜ்ஜா நான்வெஜ்ஜா?"
"நான்வெஜ் வேண்டாம்" என்றான் ஸ்ரீராம்.
"ஏன்? " என்றாள் மிதிலா
"எல்லா டைமும் கிச்சனிலேயே போயிடும். சிம்பிளா சமைச்சா போதும்"
சரி என்று தலையசைத்துவிட்டு எழுதத் துவங்கினாள் மிதிலா.
"எல்லாம் சரி... இது என்ன இடம்?" என்றாள் மிதிலா.
"நம்முடைய ஃபார்ம் ஹவுஸ்"
"ஓஹோ"
தேவையான பொருட்களை எழுதி ஸ்ரீராமிடம் கொடுத்துவிட்டு குளிக்கலாம் என்று நினைத்த மிதிலா, யோசனையுடன் நின்றாள்.
"குளிச்சிட்டு நான் என்ன டிரஸ் போட்டுக்குறது?"
அவளுக்கு தெரியாமல் தான் கொண்டு வந்திருந்த பேக்கை பார்க்கச் சொல்லி தன் கண்களை திருப்பினான் ஸ்ரீராம்.
"பக்கா பிளான் போல தெரியுது...!" என்றாள் அதை பார்த்த மிதிலா.
"ஆமாம்" என்று சிரித்தான் ஸ்ரீராம்.
அந்த பையிலிருந்த தனது உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்ற மிதிலா, வெகு சொற்ப நேரத்தில் குளியலை முடித்துக்கொண்டு வந்தாள்.
அவர்கள் இருவரும் காலை உணவை முடித்தார்கள். மிதிலா எழுதிக் கொடுத்த பொருள்களுடன் திரும்பிவந்தார் செக்யூரிட்டி. அதை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு சென்றாள் மிதிலா.
"நமக்கு நிறைய டைம் இருக்கு. நீ அப்புறமா சமைக்கலாம்" என்றான் ஸ்ரீராம்.
"கொஞ்சம் பிரீ-குக்கிங் பிரிபரேஷன்ஸ் செய்ய வேண்டியிருக்கு" என்றாள் மிதிலா.
"என்ன செய்யணும்?"
தண்ணீரை கொதிக்க வைத்து அதை சிறிய ஹாட் பாக்ஸில் ஊற்றி, பச்சை பட்டாணியை அதில் போட்டு மூடினாள் மிதிலா.
"பச்சை பட்டாணி ஒரு ஃபுல் நைட் ஊறணும். அதை நம்ம செய்யாததால, இந்த சுடுதண்ணியில அது இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஊறிடும்."
"ஓஹோ... பட்டாணியை ஊற வச்சு தான் சமைக்கணுமா?" என்றான் ஸ்ரீராம் யோசனையுடன்.
"சமையலில் உங்களுக்கு இந்த அளவுக்கான அடிப்படை விஷயம் கூட தெரியாதா?" என்று சிரித்தாள் மிதிலா.
"எனக்கு எப்படி தெரியும்?"
"ஆமாம்... உங்களுக்கு எப்படி தெரியும்... உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வெறும் ஃபேபிரிக்ஸ் மட்டும் தானே...!"
"என்ன சமைக்கப் போறே?"
"வெஜ் பிரியாணி, கோபி சிக்ஸ்டி பைவ்"
"தட்ஸ் குட்"
காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக்கி சுடுதண்ணீரில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, மைதா, சோள மாவு, மிளகாய் பொடி எல்லாம் சேர்ந்த கலவையில் அந்த காலிஃப்ளவரை பிரட்டி வைத்தாள் மிதிலா.
"இது என்ன மாவு?" என்றான் மைதா மாவை காட்டி ஸ்ரீராம்
"ஆல் பர்பஸ் ஃப்ளோர்"
"அப்படின்னா இதை நம்ம எதுக்கு வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாமா?"
தனது உதட்டை மடித்து எதையோ யோசித்தவள்,
"ஆமாம்... எதுக்கு வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்... ஹஸ்பன்ட் முகத்திலயும் பூசலாம்" என்று அதை எடுத்து ஸ்ரீராமின் முகத்தில் பூசி விட்டாள் மிதிலா.
"வாட் த ஹெல்" என்றான் அதை சிறிதும் எதிர்பார்க்காத ஸ்ரீராம்.
அவன் முகத்தைப் பார்த்து வாய்விட்டு சிரித்தாள் மிதிலா.
"மிதிலாவை சமாளிக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல... புரிஞ்சுதா உங்களுக்கு?" என்றாள், இல்லாத தனது காலரை உயர்த்தி.
"ஆமா ஆமா... உன்னை கல்யாணம் பண்ணிக்க நான் என்னெல்லாம் செஞ்சேன்னு எனக்கு தானே தெரியும்" என்றான் அந்த மாவை துடைத்தபடி.
"நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணதால தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நீங்க நினைக்கிறீங்களா?" என்றாள் மிதிலா பொருள் பொதிந்த புன்னகையுடன்.
மாவை துடைத்துக் கொண்டிருந்த அவனது கரங்கள் அப்படியே நின்றது. அவளைப் பார்த்து, "இல்லையா?" என்பது போல தலையசைத்தான் ஸ்ரீராம்.
தன் புருவத்தை உயர்த்தி இல்லை என்று தலை அசைத்தாள் மிதிலா.
"அப்படின்னா வேற என்ன காரணம்?"
"கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்"
"உங்க அம்மாவுக்காகவா?"
இல்லை என்று தலையசைத்தாள்.
"உங்க அக்காவுக்காக...?"
மறுபடியும் இல்லை என்று தலையசைத்தாள்.
"வேற எதுக்கு? நீயே சொல்லிடேன்"
"ஏன்னா, எனக்கு உங்களைப் பிடிக்கும்" என்று உண்மையைச் சொன்னாள் மிதிலா.
ஸ்ரீராமின் கண்கள் பாப்கான் பொறிவது போல் பெரிதானது.
"என்னை உனக்கு பிடிக்குமா?" என்றான் நம்பமுடியாமல்.
ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.
"என்னால இதை நம்ப முடியல. உனக்கு என் மேல கடுமையான வெறுப்புன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்" என்றான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.
"நான் எப்பவும் உங்களை வெறுத்தது இல்ல... நீங்க என்கிட்ட சண்டை போடும் போது கூட..."
"நெஜமாவா?"
"ஆமாம்... நீங்க தலைக்கனம் பிடிச்சவர் தான்... இருந்தாலும் உங்ககிட்ட இருந்த மத்த நல்ல விஷயங்கள் எனக்கு பிடிக்கும்"
வாய்விட்டு சிரித்த ஸ்ரீராம்,
"அப்புறம்?" என்றான்.
"நீங்க என்னை ப்ரபோஸ் பண்ணப்போ எனக்கு ரொம்ப நெர்வஸா இருந்தது. ஆனா, நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல."
"நான் என்ன செய்யுறது, எனக்கு வேற சாய்ஸ் இல்ல..."
"உண்மை தான். நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணலன்னா, நான் நிச்சயம் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்க மாட்டேன்"
"நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் தெரியுமா உனக்கு?" என்றான் மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
ஆனால் அவனே எதிர்பாராத வண்ணம்,
"நானும் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்" என்றாள் மிதிலா, அவனது இதழ்களுக்கு புன்னகையை தந்து.
அவளது நெற்றியில் சந்தோஷமாய் இதழ் பதித்தான் ஸ்ரீராம்.
"நான் சமைக்கப் போறேன்" என்றாள் மிதிலா.
"இப்போ பிரீ-குக்கிங் பிரிபரேஷன் மட்டும் தான் செய்யப் போறேன்னு சொன்னே... அப்புறம் எதுக்கு, இப்பவே சமைக்க ஆரம்பிக்கிற?"
"ஜஸ்ட் வெயிட்"
பரபரவென பாயசம் செய்து அதை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அதை ஸ்ரீராமை நோக்கி நீட்டியபடி,
"ஹாப்பி பர்த்டே" என்றாள்.
அதைக் கேட்ட ஸ்ரீராம் திகைப்படைந்தான்.
"இன்னைக்கு என்னோட பர்த்டேன்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றான் நம்ப முடியாமல்.
"நான் மிதிலா... உங்களைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும்... இதுக்காகத் தான் நீங்க என்னை கடத்திக்கிட்டு வந்தீங்கன்னும் எனக்கு தெரியும்..."
"ஃபென்டாஸ்டிக்..."
ஒரு தேக்கரண்டி நிறைய பாயசத்தை அவனுக்கு ஊட்டி விட்டாள் மிதிலா.
"பாயசம் சூப்பரா இருக்கு"
"தேங்க்ஸ்... நான் சீக்கிரம் சமைச்சு முடிச்சுடுறேன்"
"ஓகே. கோ அஹெட்"
சமையல் அறையை விட்டு செல்லாமல் அங்கேயே பாயசத்தை சாப்பிட்டு முடித்தான் ஸ்ரீராம். ஒரு மணி நேரத்தில் சமையலை முடித்தாள் மிதிலா.
"முடிஞ்சது"
ஒரு காலிபிளவர் சிக்ஸ்ட்டி ஃபைவ்வை எடுத்து வாயில் போட்டு சுவைத்தான் ஸ்ரீராம்.
"நீ ரொம்ப நல்லா சமைக்கிற மிதிலா" என்றான்.
"அம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்க"
"நீ இவ்வளவு நல்லா சமைப்பேன்னு எனக்கு தெரியாது. இவ்வளவு நாளா நான் உன்னோட கைப் பக்குவத்தை மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்"
"கவலைப்படாதீங்க. என்னோட கான்ட்ராக்ட் பீரியட் முடிஞ்ச பிறகு, நான் தினமும் சமைப்பேன்..."
தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமுக்கு அதைக் கேட்டு புரையேறியது. அதிர்ச்சியுடன் மிதிலாவை பார்த்தான் அவன்.
"அப்படின்னா என்ன அர்த்தம்?" என்றான்.
"அப்படின்னா, நான் வேலையை ரிசைன் பண்ணிடுவேன்னு அர்த்தம்"
"நெஜமா தான் சொல்றியா?" என்றான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.
"ஆமாம்... வேலை செஞ்சு தான் ஆகணும்னு அதுக்கு பிறகு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது..." என்றாள் தெனாவட்டாக.
"நான் கட்டாய படுத்தினா என்ன செய்வ?"
"கட்டாயப்படுத்துவீங்களா?"
ஆமாம் என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"அப்படியெல்லாம் செய்யாதீங்க ஸ்ரீ... என்னை பத்தி உங்களுக்கு தெரியாது" என்றாள் தனது ஆள்காட்டி விரலை அவனை நோக்கி நீட்டி.
தன் முகத்தை பின்னால் இழுத்தான் ஸ்ரீராம்.
"சாப்பிடலாம் வாங்க"
இஞ்சி தின்றவனை போல் முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக சாப்பிட்டான் ஸ்ரீராம்.
"பிரியாணி எப்படி இருக்கு?" என்றாள் மிதிலா.
"சுத்தமா நல்லா இல்ல" என்றான் சீரியஸாக.
"நல்லாவே இல்லனாலும் நான் வேலையை ரிசைன் பண்ண தான் செய்வேன்" என்றாள் மிதிலா.
"மிதிலா, என்னை கோபப்படுத்தாதே... சொல்றதை கேளு. இல்லன்னா..."
"இல்லன்னா...?" என்றாள் தன் கைகளை கட்டிக்கொண்டு சாகவாசமாக.
"ப்ளீஸ், ரிசைன் பண்ணாதே..." என்றான் கெஞ்சலாக.
பெருமூச்சுவிட்ட மிதிலா,
"நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்..." என்றாள்.
"ஆனா ஏன்?"
"ஜஸ்ட் ஃபார் ஃபன்"
"அன்பிலீவபிள்..."
"என்னால வேலையை ரிசைன் பண்ண முடியாது. நம்ம கல்யாணத்துக்காக அப்பா நிறைய பணம் கடன் வாங்கியிருக்கிறார். அவர் அந்த கடனை கொடுக்குற வரைக்கும் நான் வேலை செஞ்சு தான் ஆகணும்" என்றாள் மிதிலா.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவளைப் பார்க்காமல், தனது தட்டை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஸ்ரீராம்.
"பிரியாணி ரொம்ப சூப்பர் " என்று கூறி விட்டு கை கழுவ சென்றான் ஸ்ரீராம்.
அந்த பண்ணை வீட்டை அவளுக்கு சுற்றிக் காட்டினான் ஸ்ரீராம். சென்னையை விட்டு வெகு தொலைவில் இருந்த அந்த வீடு மிக அமைதியாகவும், காற்றோட்டமாகவும் இருந்தது. சிறிது நேரம் சுற்றி திரிந்து விட்டு வீட்டுக்குள் வந்தார்கள் இருவரும்.
ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள் மிதிலா. தனது கைப்பேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். சேனலை மாற்ற போன மிதிலாவின் கைகள் அப்படியே நின்றது... அவர்கள் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டு விட்ட அந்த இசையை ஸ்ரீராம் தனது கைபேசியில் ஒலிக்கச் செய்த போது... தனது நண்பனுடன் சவால் விட்டு, தனது கல்லூரியின் ஆண்டுவிழாவில் ஸ்ரீராம் ஆடிய அதே இசை... நர்மதாவின் திருமண நாளுக்கு லாவண்யாவுடன் மிதிலா மேடையில் ஆடிய அதே இசை...
அதைக் கேட்டு ஸ்ரீராமை பார்த்து புன்னகைத்தாள் மிதிலா. ஆனால் அவள் சிறிதும் எதிர்பாராத வண்ணம், தன் கரத்தை அவளை நோக்கி நீட்டி, தன்னுடன் ஆட வருமாறு அவளை அழைத்தான் ஸ்ரீராம். பெயர் தெரியாத பதற்றம் அவள் இதயத்தை ஆட்கொண்டது. ஒருவேளை ஸ்ரீராமின் குறுவாள் போன்ற பார்வை அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மெல்ல தன் கையை அவனிடம் அவள் கொடுக்க, அவளைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான் ஸ்ரீராம்.
அந்த இசைக்கு ஏற்ற நடனத்தை அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அது ஆரம்பித்த விதம் நடனம் போன்று தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில், அது வேறு ஏதோ போல் மாறிப்போனது.
அது வெறும் நடனம் அல்ல... காதல் கவிதை... மனதில் காதலை வைத்துக் கொண்டு அவர்கள் மூடி வைத்திருந்த உணர்வு... தாம்பத்தியத்தின் முதல் படி... தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கட்டத்திற்கு அவர்கள் தங்கள் மனதை தயார்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என்று கூறலாம்... அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ள கிடைத்த சாக்கு... தூங்கிக்கொண்டிருந்த அவர்களது காதல் ஹார்மோன்கள் கள் குடித்த குரங்கைப் போல் மாறின. அவைகள் அவர்களது ரத்தத்தை சூடேற்றி கொதிக்க செய்தன.
தங்களுக்குள் இருந்த அனைத்து தயக்கங்களையும் தீர்த்துக் கொண்டபின், இருவரும் மூச்சு வாங்க கட்டிலில் விழுந்தனர், ஒருவரை ஒருவர் ஏக்கம் நிறைந்த பார்வை பார்த்தபடி. தயக்கங்கள் தீர்ந்த பின் அங்கு தாமதிக்க ஏதுமில்லை. மிதிலாவை நோக்கி உருண்டு சென்ற ஸ்ரீராம், அவள் தோளில் தலை சாய்த்தான்.
அவனை அன்பாய் அணைத்துக் கொண்டாள் மிதிலா. அழகாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ஸ்ரீராம், அவர்களுக்கு இடையில் இருந்த அனைத்து இடைவெளியையும் அழித்து.
எந்த பெண்ணையும் தன்னிடம் நெருங்க விட்டதே இல்லை ஸ்ரீராம். ஆண்களுக்கும் கற்பு உண்டு என்று எண்ணி தனது கன்னித்தன்மையை கவசமாய் பாதுகாத்தவன் அவன்.
அதை தன்னுடன் வாழ்நாளெல்லாம் வாழப்போகும் அந்த ஒரு பெண்ணிடம் காணிக்கையாக்க வேண்டும் என்று எண்ணியவன். அவன் விரும்பிய படியே அந்த ஒருத்திக்கு அதை வாழ் நாள் பரிசாக அளித்தான். அந்த விலைமதிப்பற்ற பரிசை பெற தகுதியான மிதிலாவிடம் சந்தோஷமாய் தன்னை ஒப்புவித்தான் ஸ்ரீராம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top