53 முதலிரவு

53 முதலிரவு

கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கை, தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டாள் மிதிலா.

"நான் ஏற்கனவே அதைப் பார்த்துட்டேன்" என்று சிரித்தாள் அருணா.

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, அதை கட்டிலின் மீது வைத்தாள் மிதிலா.

"யாரோ ரொம்ப ஆர்வமா காத்திருக்காங்க போல தெரியுது..." என்று கட்டிலில் விழுந்து உருண்டு உருண்டு சிரித்தாள் அருணா.

அவளைப் பட்டென்று ஒரு அடி போட்டு,

"வாயை மூடு" என்றாள் மிதிலா.

"நீ வேணா பாரு, ரூமுக்குள்ள போன உடனே உன் மேல பாய போறாரு. அதைத் தான், இந்த கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக் மூலமா சிம்பாலிக்கா சார் சொல்லி இருக்காரு..." என்றாள் கேலியாக.

"பொண்ணோட விருப்பம் இல்லாம யாரும் அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க"

"விருப்பம் இல்லாம, யாரும் கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்ல மாட்டாங்க... உன்னோட கதையை எங்கிட்ட அவுத்துவிடாதே"

"ஆனா, எனக்கு விருப்பம் இருக்குன்னு அவருக்கு தெரியாதே... அவர் என்னை கட்டாயப்படுத்தினதால தான் நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே அவர் நினைச்சிக்கிட்டு இருக்காரு..."

"இருக்கலாம்... கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா, மத்த எல்லாத்துக்குமே சரின்னு தானே அர்த்தம்?"

அவளுக்கு பதில் கூறாமல் கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா.

"பைத்தியக்காரத்தனமா இருக்காத... உனக்கும் அவரை பிடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொல்லிடு. அப்படியே நீ சொல்லலனாலும், அவர் உன்னை தொடணும் நினைச்சிட்டா, யார் அவரை தடுக்க முடியும்?"

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள் மிதிலா.

"பின்ன என்ன? தூரத்தில வெச்சு அழகு பார்க்கவா அவரு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறாரு? அவர் என்ன முனிவரா?"

"அவரு முனிவரா இருந்தா என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க போறாரு?" என்றாள் பெருமூச்சுவிட்டபடி.

"அதைத் தான் நானும் சொல்றேன். எதுவுமே செய்ய விருப்பம் இல்லைனா, அவர் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்? அதுவும், நீ அவர்கிட்ட சண்டையெல்லாம் வேற போட்டிருக்க... வாக்குவாதம் பண்ணியிருக்க... எல்லாத்தையும் சேத்து, மொத்தமா வச்சி செய்ய போறாரு... உன்னோட திமிரை எல்லாம் அவர்கிட்ட காட்டாம ஒழுங்கா இரு" என்று அவளை *வைத்து செய்தாள்* அருணா.

அவளுக்கு மிதிலா பதில் கூற முனைய, அவளை அழைத்தார் சாந்தா.

"சீக்கிரம் வா மிதிலா, நேரம் ஆகுது"

கட்டிலின் மீதிருந்து எழுந்து நின்றாள் மிதிலா.

"பரத் எதுக்கு வந்தார்னு உனக்கு தெரியுமா? " என்றாள் அருணா.

அவளைப் பார்த்து முறைத்தாள் மிதிலா.

"கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கை கொடுக்க மட்டுமில்ல... அவங்க அண்ணனுக்கு நலங்கு வைச்சது போக, மிச்சம் இருக்கும் சந்தனத்தை கொண்டு உனக்கு நலங்கு வைக்குறது தான் அவங்க குடும்ப வழக்கமாம். அதை கொடுக்க தான் வந்தாரு. போம்மா... உன் வீட்டுக்காரரை தொட்டு வந்த சந்தனத்தைப் பூசிக்கோ..." என்று சிரித்தாள் அருணா.

நலங்கு வைக்கும் போது, ஸ்ரீராமை பற்றி யோசிக்கவே கூடாது என்று நினைத்தாள் மிதிலா... ஆனால்...

பூவனம்

நேராக ஸ்ரீராமின் அறைக்கு வந்தான் பரத். யாருக்கோ ஃபோன் செய்ய முயன்று கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

"அண்ணா..."

என்ன? என்பது போல் தன் புருவத்தை உயர்த்தினான் ஸ்ரீராம்.

"ஐ அம் சாரி, ண்ணா... சத்தியமா நான் வேணுமுன்னு செய்யல..."

அதைக் கேட்டு கைபேசியை கைப்பற்றியிருந்த அவன் கரம், கீழே இறங்கியது.

"நீ எதை பத்தி பேசறே?" என்றான் தனது இட புருவத்தை உயர்த்தி.

"நான் காரை விட்டு கீழே இறங்குனப்போ, நீங்க மிதிலாகிட்ட கொடுக்க சொன்ன கவர் கீழே விழுந்துடுச்சு. தெரியாம நான் அது மேல காலை வச்சிட்டேன்... அந்த கவர் கிழிஞ்சுடுச்சு..."

தன் கோரைப் பல்லை நாக்கால் தொட்டு, கண்களை சுருக்கினான் ஸ்ரீராம்.

"இல்லன்னா, நிச்சயமா அதுக்குள்ள இருந்த பொருளை நான் பார்த்தே இருக்க மாட்டேன்... என்னை நம்புங்க"

"சரி விடு" என்று அவனுக்கு தன் முகத்தைக் காட்டாமல் எதிர்ப்புறம் திரும்பிக் கொண்டான் ஸ்ரீராம்.

"அண்ணா... நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா..." என்று பல்லை இளித்தான் பரத்.

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவனை பார்த்தான் ஸ்ரீராம்.

"அந்த கிஸ் ப்ரூஃப் லிப்ஸ்டிக்கை எங்கண்ணா வாங்கினீங்க?"

ஸ்ரீராம் எதுவும் கூறுவதற்கு முன்,

"என்னது...? அவன் அதை வாங்கிட்டானா?" என்றான் அங்கு வந்த குகன் அதிர்ச்சியுடன்.

ஆமாம் என்று குகனைப் பார்த்து சிரித்தபடி தலையசைத்தான் பரத். ஸ்ரீராமோ, இவன் வேறு வந்து விட்டானா? என்பது போல் தன் கண்களை சுழற்றினான்.

"அப்படி போடு அருவாளை... பரவாயில்லையே... நான் சொன்னதை நீ மதிக்க மாட்டேன்னு நினைச்சேன்..."

"உனக்கும் அதை பத்தி தெரியுமா?" என்றான் பரத் ஆர்வமாக.

"நீ என்ன நெனச்ச? அதையெல்லாம் தேட, நம்ம சிடுமூஞ்சி பாஸுக்கு டைம் இருக்குன்னு நினைக்கிறாயா நீ?"

"உனக்கு இருக்கா?" என்றான் ஸ்ரீராம் தெனாவெட்டாக.

"ஏன் இல்ல? நான் என் ஃப்ரெண்டுகாக 24 மணி நேரத்தையும் அர்ப்பணிச்சவன்... பர்சனலாவும்... ப்ரொஃபஷனலாவும்..." என்று அவன் வாயை அடைத்தான் குகன்.

அதைக் கேட்டு சிரித்தான் பரத்.

"எங்க அந்த லிப்ஸ்டிக்?" என்றான் குகன்.

"மிதிலாகிட்ட கொடுத்தாச்சு" என்று பல்லைக் காட்டினான் பரத்.

"வாவ்... நீ ரொம்ப ஃபாஸ்ட்... அது சரி... அது எப்போ நடந்தது?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான். அண்ணன், என்னை தான் அதை மிதிலாகிட்ட கொடுக்க சொன்னாரு"

"நீ அதை ஒழுங்கா பேக் பண்ணலையா எஸ்ஆர்கே?" என்றான் கிண்டலாக குகன்.

அந்த *உறை கிழிந்த* கதையை கூறினார் பரத்.

"அதானே பார்த்தேன்... எஸ்ஆர்கேவாவது, அவனோட கிஃப்ட்டை வேற யாரைவது பார்க்க விடுறதாவது..."

ஆமாம் என்று தலையசைத்தான் பரத்.

"அதை மிதிலா பாத்துட்டீங்களா?"

"இல்ல... அதுக்கு முன்னாடி நான் அங்கிருந்து கிளம்பிட்டேன்"

"போ பரா... உனக்கு கொஞ்சம் கூட ஹியூமர் சென்ஸே இல்ல... மிதிலாவை கலாய்க்க எவ்வளவு நல்ல சான்ஸ் கிடைச்சி நீ மிஸ் பண்ணிட்ட"

"நாளன்னைக்கு அவங்க இங்க தானே வரப்போறாங்க..." என்று சிரித்தான் பரத்.

"வரட்டும்... அவங்க என்ன லிப்ஸ்டிக் போட்டிருக்காங்கன்னு செக் பண்ணிடலாம்" என்றான் குகன்.

"வாயை மூடிக்கிட்டு கிளம்புங்க டா" என்றான் ஸ்ரீராம்.

"இப்போதைக்கு நாங்க வாயை மூடிக்கிறோம். மிதிலா இங்க வந்ததுக்கு பிறகு அது நடக்காது."

"ஜாக்கிரதை குகா... அவங்க மிஸஸ் ஸ்ரீராம் ஆக போறாங்க" என்றான் பரத்.

"மிஸஸ் ஸ்ரீராமை யார் கிண்டல் செய்யப் போறது? நான், என்னோட ஃபிரண்ட் மிதிலாவைத் தான் கிண்டல் செய்யப் போறேன்..." என்றான் ஓரக்கண்ணால் ஸ்ரீராமை பார்த்தபடி குகன்.

அவர்கள் பேசுவதை நமுட்டு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவனது புன்னகைக்கு என்ன அர்த்தம்? அவர்கள் மிதிலாவை கிண்டல் செய்ய வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ? யாருக்கு தெரியும், மிதிலாவின் சங்கடத்தை ரசிக்க வேண்டுமென்று அவன் நினைக்கலாம்...

"நான் சொல்றது சரி தானே எஸ்ஆர்கே?"

"கெட் அவுட்..." என்றான் ஸ்ரீராம்.

அவர்கள் இருவரும் அங்கிருந்து சிரித்தபடி ஓடிப்போனார்கள்.

ஆனந்த குடில்

நலங்கு வைபவத்தை முடித்துக் கொண்டு தன் அறைக்கு வந்தாள் மிதிலா. அருணா தனது அறைக்குள் நுழைவதற்கு முன் கதவை சாத்தி தாளிட்டாள் மிதிலா. அவளுடைய கிண்டல் கேலியை கேட்டு போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு.

ஸ்ரீராமுக்கு நலங்கு வைத்தது போக மீதமிருந்த சந்தனம் மொத்தமும் அவள் மீது பூசியாகிவிட்டது. ஒவ்வொரு சடங்கிலும், மணமக்களுக்கு இடையில் நெருக்கத்தை ஏற்படுத்தும் பூவனத்தாரின் வழக்கம் மிதிலாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

முகத்தை அலம்ப, அவள் குளியலறைக்கு செல்ல எத்தனித்த போது, அவளது கைபேசி அலறியது. அந்த அலறல் ஸ்ரீராமனின் பெயரை தாங்கி வந்தது. அவன் லிப்ஸ்டிக்கை பற்றி கேட்பானோ என்று தயங்கியபடி அழைப்பை ஏற்றாள் மிதிலா.

"ஹலோ"

"நலங்கு முடிஞ்சிடுச்சா?" என்று அவன் கேட்ட போது அவன் குரலில், வழக்கத்திற்கு மாறாய் குழைவு தெரிந்தது.

"ம்ம்ம்"

"முகத்தை கழுவிட்டியா?" என்றான் அவளை சங்கடத்துக்கு உள்ளாகி.

"ம்ம்ம்" என்று பொய் உரைத்தாள்

"நெஜமாவா?"

"ஆங்..."

"ஆனா, எனக்கு என்னமோ நீ இன்னும் உன் முகத்தை கழுவலன்னு தோணுது..."

அமைதியாய் இருந்தாள் மிதிலா.

"நான் சொன்னது சரி தானே?"

"இல்ல" என்றாள் அவள் கன்னத்தில் இருந்த சந்தனத்தை தொட்டபடி.

"ஓகே... நீ ரெடியா?"

"எதுக்கு?"

"உனக்கு தெரியாதா?" என்றான் கிண்டலாக.

தன் வயிற்றில் ஏதோ சுழல்வது போலிருந்தது மிதிலாவுக்கு.

"நான்... வந்து..."

"கல்யாணத்துக்கு ரெடியான்னு கேட்டேன்"

நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மிதிலா.

"மிதிலா..."

"ம்ம்ம்?"

"தைரியமா இரு..." என்று அவன் கூறியது, அவளது ஈகோவை தொட்டுப் பார்த்தது.

"நான் தைரியமா தான் இருக்கேன்"

"உன் குரலில் நடுக்கம் தெரிஞ்சுது"

"நான் ஒன்னும் பயப்படல"

"குட்... அப்படியே இரு... இதைப் பத்தி நம்ம நிறைய டிஸ்கஸ் பண்ணலாம். ஆனா, கல்யாணத்தன்னைக்கு ராத்திரி நமக்கு டிஸ்கஸ் பண்ண டைம் இருக்காது... நம்ம பிஸியா இருப்போம்ல..."

மிதிலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தன.

"பை..." என்று சிரித்தபடி அழைப்பை துண்டித்தான் ஸ்ரீராம்.

அருணா சொன்னது நடந்துவிடுமோ? அவர்களுக்கிடையில் இருக்கும் அனைத்து கணக்குகளையும் ஸ்ரீராம் கூட்டிக் கழித்து விடுவானோ...? பதட்டத்துடன் நகம் கடித்தாள் மிதிலா. அவள் ஸ்ரீராமிடம் காதல் வயப்பட்டிருக்கும் பொழுது, அவன் அவளருகில் வந்தால், அவள் எப்படி தன்னை கட்டுப் படுத்த முடியும்? உள்ளுக்குள் உதறல் எடுக்கும் பொழுது, எப்படி வெளியில் தன்னை தைரியசாலியாக காட்டிக் கொள்ள முடியும்? பார்க்கலாம்... தைரியமாக இரு மிதிலா... தன்னிலை இழந்துவிடாமல், எதிரில் இருக்கும் சவாலை எதிர் கொள்... ஜூனியருக்கு நீ யாரென்று காட்டு. தன் தலையை உயர்த்தி, *ஆமாம்* என்று தலையை அசைத்துக் கொண்டாள் மிதிலா.

......

இங்குமங்கும் பார்த்தபடி முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் மிதிலா. ஸ்ரீராம், அவளை நோக்கி வேகமாய் வருவதைப் பார்த்த அவள், பின்நோக்கி நகர முயல, அவளைத் தன்னை நோக்கி இழுத்து, வளைத்து கொண்டான் ஸ்ரீராம். அவன் பிடியிலிருந்து வெளிவர மிதிலா முயன்ற போது, அவனது பிடி மேலும் இறுகியது.

"நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? மிடில் கிளாஸ் ஆளுங்ககிட்ட இழக்குறதுக்கு எதுவுமே இல்லைன்னு சொன்ன... அதை இப்பவும் சொல்லுவியா மிஸ் ஆனந்... ( என்று நிறுத்தி ) மிஸஸ் ஸ்ரீராம்...? பாரு, என்னோட ரூம்ல, எனக்கு முன்னாடி, மிஸஸ் ஸ்ரீராம் அப்படிங்கிற கிரேட் டைட்டிலோட ஒண்ணுமே செய்ய முடியாம நிக்கிற பாத்தியா...? இன்னைக்கு, ஈடு இணையில்லாத ஒரு விஷயத்தை என்கிட்ட நீ இழக்கப் போற... நான் சொல்றது சரி தானே?" என்று விஷமப் புன்னகையுடன் கேட்க, பேயறைந்தது போலனாள் மிதிலா.

கீழே குனிந்தபடி அவனது பிடியிலிருந்து வெளிவர அவள் பிரயத்தனம் செய்தாள்.

"நான் பேசும் போது என்னை பாரு"

"எனக்கு விருப்பமில்லாத விஷயத்துக்காக நீங்க என்னை கட்டாயப்படுத்த முடியாது..."

அதைக் கேட்ட அவன் முகத்தில் அகங்கார புன்னகை மிளிர்ந்தது.

"அப்படியா? என்னால முடியாதா?"

மென்று விழுங்கினாள் மிதிலா.

"இன்னைக்கு நம்ம முதலிரவு... உன்னை மாதிரி எந்த பொண்ணும் பேசிக்கிட்டு இருக்கமாட்டா"

"உங்களை மாதிரியும் யாரும் நடந்துக்க மாட்டாங்க"

"நான் என்ன செய்யறது? எனக்கு வேற வழியில்லையே..."

அவளது இதழ்களை நோக்கி அவன் குனிய, இருக்கமாய் கண்ணை மூடிக்கொண்டாள் மிதிலா.

"இன்னும் கூட, என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறாயா?"

"நீங்க என்னுடைய உடம்பை தொடலாம்... ஆனா, என் மனசை தொட முடியாது"

"உன் மனசை பத்தி யார் கவலைப்பட்டது?" என்று அவளை கட்டிலில் தள்ளி, அவள் மீது பாய்ந்து, அவள் இதழ்களைப் பற்றினான்.

அவனை பிடித்து தள்ளி விட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து,

"என்னை விடுங்க..." என்று அலறிய மிதிலா, தான் ஆனந்த குடிலில், தனது கட்டிலில் அமர்ந்திருப்பதை கண்டாள்.

ஒன்றும் புரியாமல் இங்குமங்கும் பார்த்து, தன்னுடன் ஸ்ரீராம் இல்லை என்பதையும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டாள். அவள் கண்டது வெறும் கனவு... முகத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டாள். இப்பொழுது அவள் கண்டது கனவாக இருக்கலாம்... ஆனால், வெகு விரைவில் அது நிறைவேறத் தான் போகிறது. உண்மையிலேயே இதெல்லாம் நடக்கும் பொழுது அவள் என்ன செய்யப்போகிறாள்? நாளை இரவு அவள் இதை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top