கலாட்டா 23
மெல்லிய மழைச்சாரல் மண்ணைத்தொட , நாணத்தால் மண் தன் வாசத்தை குபீரென வீச, அனைத்தையும் அமைதியாக ஜென்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.
வீசியது தென்றல் தானா? என கேட்கும் அளவிற்கு ஆழ்ந்த யோசனையில் முழுகியிருந்தாள்.
என்ன காரணம்? எல்லாம் நம் சிவா ஞாபகம்!!
கனவிலும் காணாத கனா போல வந்தான், நினைத்து பார்க்க இயலாத அன்பை தந்தான், இன்பத்திலும் துன்பத்திலும் சரிநிகர் என்றான், இருண்ட வாழ்வு வசந்தமானது.
என் மனமே பொறாமை கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியை தந்தான்,கிழவியாகி கட்டையில் எரியும் வரை உன்னை கண்ணுக்குள் வைத்து தாங்குவேன் என்றான், இவை யாவும் அவன் செய்வான், ஆனால் நான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என பார்வதியின் மனம் மடைஉடைந்த ஆற்று வெள்ளம் போல எண்ணங்களால் கொப்பளித்தது.
பழகிய காலம் குறைவே என்றாலும் மனமெங்குமம் அவன் வாசம்!! யோசனையில் ஆழ்ந்தாள் பாரு.
அங்கே சிவாவும் அவனின் அம்மா சரசும் இதற்கு தீர்வு காண வழிகளை ஆராய்ந்த வண்ணம் இருந்தனர்.
சரசின் பால்ய தோழி சங்கரியின் ஞாபகம் அவளுக்கு வர, தன் பழைய டைரியில் அவளின் தொலைப்பேசி எண்ணை தேடினாள்.
சரசும் சங்கரியும் அமுதும் தமிழும் போல, சுபாவத்திலும் பழகும் விதத்திலும்,சுற்றாறுக்கு நல்லது செய்வதிலும். கால ஓட்டத்தினால் இருவரும் அவரவரர் வாழ்வை நோக்கி ஓடினர்.
ஆனாலும் தன்மீதான சங்கரின் அன்பு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் என்பதில் சரசுக்கு எள் அளவும் ஐய்யமில்லை.
மனநல மருத்துவராக சென்னையில் பணி புரியும் சங்கரியை தொலைப்பேசியில் அழைத்தாள் சரசு.
இருபது வருட கதைகளை பேசி முடித்தப்பின் தன் வருங்கால மருமகளின் "ஆன்ரோபோபியா" பிரச்சனையை எடுத்துக் கூறினாள் சரசு.
அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த சங்கரி, பார்வதியுடன் தன்னை நேரில் வந்து பார்க்கும்படி சரசை அழைத்தாள்.
அதற்கு தானும் பார்வதியை நேரில் அழைத்து வருவதாக வாக்களித்தாள் சரசு.
பார்வதியின் வீட்டிற்கு சென்று, டசன் கணக்கில் பொய் சொல்லி தன்னுடன் அழைத்து செல்ல அனுமதி வாங்கினாள் சரசு.
"அத்தை, நான் சரிபட்டு வரமாட்டேன், நீங்க நல்ல பெண்ணா பார்த்து சிவாவிற்கு கல்யாணம் பண்ணுங்க, நானே என்னோட குறைய வீட்ல சொல்லிடறேன்." சாரை சாரையாக கண்ணில் இருந்து கொட்டிய நீரை துடைத்துக்கொண்டே கூறினாள் பார்வதி.
"பலார் " என பார்வதியின் கண்ணத்தில் ஒரு அரை விட்டாள் சரசு.
"என்ன ரொம்ப பேசுர, நிறுத்திடுவியா கல்யாணத்த நீ? சிவாக்கு மட்டுமா உன்னை பிடிச்சிருந்தது? அவன விட நூறு மடங்கு எனக்கு உன்ன பிடிச்சிருந்தது, எனக்கு கிடைச்ச மகளா தான் நான் உன்னை பார்த்தேன், டக்குனு எதும் வேண்டாம் என்றபடி பேசுற, என் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருந்திருந்தா நான் பாத்துக்க மாட்டேனா? " படபடவென்று பேசி முடித்தாள் சரசு.
புதுவிதமான அன்பு, அன்னையால் மட்டுமே கிடைக்கும் என இத்தனை நாளாக நம்பியிருந்த அன்பு, இப்போது சரசிடம் இருந்து வெளிப்பட்டதை உணர்ந்தாள் பார்வதி.
இப்பாருலகில் இப்படியும் அன்பு காட்டும் உள்ளங்கள் இன்னும் இருக்கிறதை என்ற பூரிப்பில் இருந்து அவள் மீற சற்று நேரம் பிடித்தது.
சங்கரியை பார்க்க போகும் விசயத்தை சிவாவிடம் கூறி, அவனையும் அழைத்தாள் சரசு.
மூவரும் சென்னை செல்ல காரில் ஏறினர்.
கப்பென அடைத்த ஜென்னல், சிறு ஊட்டியாக காரை மாற்றிய குளிர்சாதனப்பெட்டி, கேட்க கேட்க தெகிட்டாத இசை ஞானியின் பாட்டு இவை யாவும் பார்வதிக்கு புதியதே!!
இவை மட்டும் தானா?? என்ற உங்கள் கேள்வி எனக்கு மட்டும் இல்ல பார்வதிக்கே கேட்டுவிட்டது.
முக்கிய காரணகத்தாவை வர்ணிக்காமல் விட இயலாதே, தன் பார்வையை சற்று அப்பக்கம் திருப்பினாள் பாரு.
பாடலுக்கு ஏற்றவாறு முனுமுனுத்த உதடும்,தலையை யசைத்து அவன் கொடுத்த பாவனையுமம், க்ளச்சையும் கியரையும் அவன் படுத்திய பாட்டை பார்த்து சிரித்தே விட்டாள் பார்வதி.
"ஓய்,ரொமான்டிக்ககா என்ன பாக்கரனு நினைச்சா என்ன சிரிப்பு உனக்கு? " கடுப்பில் கேட்டான் சிவா.
"என்னது ரொமான்டிக்காவா? நீங்க வண்டிய ஓட்டுர அழகுக்கு அது ஒன்னு தான் குரச்சல், உயிர கையில பிடிச்சிக்கிட்டு வரேன், சும்மா காமெடி பண்ணாம ஒழுங்கா வண்டிய ஓட்டிங்க" பாரு கொடுத்த மொக்கையில் காண்டானான் சிவா.
"ரொம்ப பேசாத, அவ்வளவு மோசமான டிரைவிங்னு நினைச்சயினா நீயே ட்ரைவ் பண்ணு" நக்கலாக சொன்ன சிவாவிடமம், சரி அப்போ நீங்க இந்தப்பக்கம் வாங்க என்றாள் பாரு.
அதிர்ச்சி குறையாமல் பாருவின் முகத்தை பார்த்த வண்ணமே இருந்தான் சிவா.
சட்டென சீட் மாறிட்டு டக்குனு வண்டிய கிளப்பினாள், சரசுவின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.
"ஹேய், சூப்பரா ட்ரைவ் பண்ணுற, சொல்லவே இல்லை உனக்கு ட்ரைவிங் தெரியும் டு" ஆச்சரியமாக கேட்டான் சிவா.
" வயல்ல அப்பா டிராக்டரே ஓட்டுவேன், ஆர்வம் இருக்கு அதான் கத்துக்கிட்டேன், நீங்க இதுவரை உனக்கு என்னலாம் ஆர்வம்னு கேட்டதே இல்ல, நானும் சொல்லல" என்றாள் பாரு.
"ஆமால நான் இதுவரை கேட்டதில்ல, தப்பு தான் இனி சரி பண்ணிக்கறேன், கல்யாணத்துகு முன்னாடியே உனக்கு பிடிச்சது, உன்னோட ஆசை எல்லாம் தெரிஞ்சிக்கறேன் செல்லு, என சிவா கேட்க வெட்கத்தில் பின் சீட்டை திரும்பி பார்த்தாள் பாரு, சரசு ஆல்ரெடி தூங்க ஆரம்பிச்சாச்சு எனவே இருவரின் மனம்விட்டுப் பேச துவங்கினர்.
காலை 7 மணி, கார் சங்கரியின் வீட்டை சென்றடைந்தது.
மூவரையும் அன்புடன் வரவேற்று ஒப்பனைகள் முடிந்தவுடன் கலந்தாய்வை பாருவிடம் இருந்து ஆரமித்தாள் சங்கரி.
பால்கனியிள் இருந்த இரண்டே நாற்காலியில் தாங்கள் மட்டும் அமர்ந்து மற்றவரை சற்று ஓய்வெடுக்க வேறு அறைக்கு அனுப்பினாள்.
முன்று மணி நேரப் பேச்சுக்கு பின் சிவாவை மட்டும் அழைத்தாள் அதன் பின் சரசு சென்றாள்.
பின் மூவரையும் அழைத்து விளக்கினார், "ஆண்டிரோபோபியா" ஒரு வியாதி அல்ல, வியாதிக்கே மருந்து மாத்திரைகள் தேவை, இது மனம் சம்மந்தப்பட்ட ஒரு வகை பயம் அவ்வளவு தான்.
இது தீரும் விரைவில் தீரும், சிவாவை பார்வதியின் மனம் ஏற்றுக்கொண்டது, அவனை நல்லவன் பாதுகாப்பானவன் என நம்புகிறது ஆனால் அவளின் உள்மனம் அதாவது ஆழ்மனம் நம்ப சற்று நேரம் எடுத்துக்கொள்ளும், அப்படி அவளின் உள்மனதிலும் நம்பிக்கை வந்துவிட்டால் பிரச்சனை முடிந்தது. சீக்கிரம் அவனை பார்வதியின் உள்மனம் ஏற்கும் பின் அவர்கள் இல்வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்வார்கள் என முடித்தார் மனநல ஆலோசகர் சங்கரி.
நிம்மதி பெருமூச்சி விட்டாள் சரசு. இந்த விசயத்தை பார்வதியின் வீட்டில் யாருக்கும் சொல்ல கூடாது என பார்வதியிடமே சத்தியம் வாங்கினாள்.
திருமண வேலைகள் தடல்புடலாக துவங்கின!!!!!
இருமணம் இணைந்த பின் அங்கு வேறு என்ன குறை இருக்க முடியும்!!!!
பாகம் 2 இல் சிவா பார்வதியின் கல்யாண வைபோத்தை பார்க்கலாம்.
**********பாகம் 1 முற்றும் **************
பாகம் 2 உங்களுக்காக விரைவில்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top