கலாட்டா 13

பார்வதியின் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தான் ஆனந்த், அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றாலும் ரிங் கொடுத்தே டார்ச்சர் செய்தான், அவனின் எண்ணை ப்ளாக் செய்தாலும் வேறு நம்பரில் இருந்து அழைப்பது,  பார்வதிக்கு இவனின் தொல்லை மெல்லவும் முடியாமல் முழுக்கவும் முடியாத நிலை என்பது போல இருந்தது, வீட்டில் இதனை கூறினால் தேவை இல்லாத பிரச்சனை எழும் என்பதால் சற்று பொறுமையுடன் நடக்க வேண்டுமென தீர்மானித்தாள்.

காலைப்பொழுதில் சேவல் கூவுகிறதோ இல்லையோ, ஆனந்தின் அழைப்பு பார்வதியின் நித்திரையை கலைத்துவிடும்.

எப்போதும் எடுக்காத போனை இன்று எடுத்து பேசினாள், "ஹோலோ.." என்ற பார்வதியின் குரலுக்கு மறுமுனையில் இருக்கும் ஆனந்திற்கு பேச வார்த்தை வரவில்லை, "ஏய் பார்வதி, நீ எப்படியும் ஒருநாள்  என் போன் கால் எடுப்பனு தெரியும் அதான் தினமும் உனக்கு ட்ரை பண்ணேன்" என்றவனின் வார்த்தையை சற்றும் மதிக்காமல், "எதுக்கு என்னை டார்ச்சர் கொடுக்குற?  உனக்கு என்ன வேண்டும்? சீக்கிரம் சொல்லி முடி எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள்.

"எப்படி உன்கிட்ட சொல்வது என தெரியாமல் தான் உனக்கு நிச்சயம் பேசியிருக்காங்கனு தெரிஞ்சதும் இங்க ஓடி வந்துட்டேன், நீ அன்னைக்கு கோயிலில் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் உண்மை, நான் உன்னை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டேன், சத்தியமா எனக்கு நிறம் முக்கியமில்லை, உனக்கே தெரியும் கேலிக்காக தான் உன்னை கருப்பினு கூப்பிடுவேன், மத்தப்படி நான் எப்போதாவது உன் மனசு நோகும்படி நிறத்தை காரணம் காட்டி பேசியிக்கேனா???, அன்று அம்மா பேச்சை எதிர்த்து பேச முடியல,  உனக்கு உண்மையில் இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கா என்று தெரிந்துக்கொள்ள தான் வந்த அன்னைக்கே உன் வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்த்துக்கள் சொல்லி உன் மனநிலையை தெரிந்துக்கொள்ள நினைத்தேன், நீ தான் என்ன பேசவிடாம ஒரு அர விட்ட, இப்போ கூட எனக்கு உன்ன தான் பிடித்திருக்கு பார்வதி" என ஆனந்த் பேசிக்கொண்டே இருக்க, "வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட் ஆனந்த்,  என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு, இனி இப்படி லூசுத்தனமா பேசுரதுக்கு எல்லாம்  எனக்கு போன் பண்ணாத, நான் அன்னைக்கு சொன்னது தான், உனக்கு எனக்கும் எந்த உறவும் இல்லை, நட்புக்கூட இல்லை, தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாத, இனிமே என் நம்பருக்கு ட்ரை கூட பண்ணாத அதான் நீ எனக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்" என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

ஆனந்த் தான் தலைவலி பிடித்தவன் என்றால் அவன் போன் அதற்கு மேல் தலைவலியாக இருக்கிறதே, இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தவளாய் சமையலறை நோக்கி நடந்தவள், சூடாக ஒரு காப்பி போட்டாள், எங்க காலையிலேயே வீட்டில் யாரையும் காணம்? என வீட்டை சுற்றிப் பார்த்தவளுக்கு  "உறவினர் வீட்டு வளைகாப்பு சடங்கிற்கு காலையிலேயே நானும் அப்பாவும் கிளம்பிடுவோம், பவித்ரா காலேஜ் போயிட்டு பரிட்சை முடிந்ததும் மதியம் வந்திடுவா, நீ அவளுக்கு துணையாக இங்கேயே இரும்மா" என்று நேற்றே பரிமளம் சொன்ன விசயம் சற்றுத் தாமதமாக தான் பார்வதியின் நினைவிற்கு வந்தது.

"ஓ எல்லாம் கிளம்பிட்டாங்க போலயே"  என யோசித்துக்கொண்டே காபியை பருகினாள்.

மீண்டும் அவளின் கைப்பேசி அலர, யாராக இருக்கும் என்றவாரே திரையை பார்க்க, கடலைப்பார்த்த மாலுமிப்போல மனதில் மகிழ்ச்சிப்போங்க அழைப்பை எடுத்தாள், "ஹோலோ, நான் தான் பேசுறேன்" என்றவனிடம், "உம் தெரியுதுங்க சொல்லுங்க" என்றாள். " நம்பர் சேவ் பண்ணிருக்க ஆனா போன் மட்டும் பண்ணமாட்டியா? " என்றவனின் கேள்விக்கு பதிலலிக்க முடியாமல் வெட்கத்தில் சினுங்க, "ஹோலோ லையின்ல இருக்கியா?? " என்றான் சிவா. " ம்ம்.. " என்றாள்.
" குட், இப்போ நான் உங்க ஊருக்கிட்ட தான் இருக்கேன், எங்க ஆபீஸ்ல வில்லேஜ் ஸ்கூல் டெவலப்மென்ட் ப்ரோகிராம்காக உங்க பக்கத்து ஊரு ஸ்கூலுக்கு தான் கூட்டிட்டு வந்திருக்காங்க, ஒரு மணிநேரம் தான் அங்க இருக்கனும் அப்புறம் நான் ப்ரீ தான்" என்றான் ஆவலாக, "அப்படியா" என்ற ஒற்றை வார்த்தையோடு முடிந்தவளின் மேல் கோபம் கொண்டவன், அவளை எதிர்பார்த்தாள் ஆகாது நாமே கேட்டுவிட வேண்டியது தான் என எண்ணி, "ஏங்க, உங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டிங்களாங்க?" என்றான்.

உன் பேச்சிலேயே விருப்பத்தை தெரிந்துக்கொண்டேன், ஆனால் கூப்பிட முடியாத சூழல் அல்லவா இருக்கிறதே, யாருமில்லா சமயம் எப்படி அழைப்பது என்று தயங்கியவளை இப்படி தர்ம சங்கடத்தில் மாட்டி விட்டாயே.. என தன் மனதிற்கு அவனை கோபித்தவாரே, மதியம் பவி வந்திடுவா அப்போ கூப்பிடலாம் என ப்ளேன் போட்டு , "ம்ம் எப்போ வருவீங்க? மதியம் சாப்பிட வாங்க" என்றாள்.

"சாப்பாடா, செம அன்னைக்கு செய்த மாதிரியே மீன்வறுவல் செய்து வச்சிடுங்க, செம டடேஸ்ட்ங்க " என அவன் உரிமையுடன்  கேட்க, "சரிங்க" என்றாள்.

சமயலறைக்குள் நுழைந்தவள் காலை உணக்கூட தான் உண்ணவில்லை என்பதனையும் மறந்து, மதிய சாப்பாட்டிற்கு தயார் செய்துக்கொண்டு இருந்நாள். சாதம், குழம்பு, பொரியல், தன்னவன் கேட்ட மீன் வறுவல் என அனைத்தையும் தயார் செய்து டையினிங் டேபுலில் வைத்து நேரத்தை பார்க்க மணி பதின்னொன்று, குளித்துவிட்டு வரலாம் என சென்றாள் பார்வதி.

குளித்துவிட்டு வீட்டிற்குள் எப்போதும் அணியும் சுடிதாருடன் வெளியே வந்தாள் பார்வதி, பவியின் எண்ணிற்கு அழைத்தாள். நம்பர் நாட் ரீச்சபுல்.

அடக்கடவுளே, இவளை நம்பி அவரை வேரு வரசொல்லியாச்சே என குழம்பியவளாய் அங்கும் இங்கும் நடந்தாள்.  தன் உடையின் மீது முதல் முறையாக அவளின் கவனம் திரும்பியது, "ரொம்ப பழைய துணியா இருக்கே, பேசாம புடவையை மாற்றிக்கொள்வோம் "  என ஒரு அறைக்குள் புகுந்து வேகமாக பீரோவை தேடினாள், பல ரிசக்சனுக்கு பிறகு ஒரு புடவை கையில் சிக்க அதனை உடுத்த முடிவெடுத்தாள்.

பார்வதியின் வீட்டையடைந்த சிவா, கதவை தட்டினான் யாரும் குரல் கொடுக்கவில்லை, ஆனால் பூட்டப்படாத கதவு தான் என்பதால் தானே திறந்து உள்ளே சென்றான்.

சுற்றிமுற்றிப் பார்த்தவன் யாருமே இல்லையே என யோசித்தவனாய், பார்வதி... என குரல் கொடுத்துக்கொண்டே முதல் அறையை திறக்க அங்கே பார்வதி தன் புடவையை கட்டிக்கொண்டிருந்தாள்.

"சாரிங்ககககக...."என்ற கதறல் சப்தத்தில் திருப்பிய பார்வதி சிவாவைப்பார்த்து திருதிருவென முழித்தாள்.

என்ன பேசுவது என தெரியாமல் இருவரும் விழிக்க, நான் சோபால உட்காரேன் என கூறிவிட்டு அங்கிருந்து ஒரே தாவாக சோபாவிற்கு தாவினான் சிவா.

எப்படி ரியாக்ஷன் கொடுப்பது என தெரியாமல் தன் தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே கீழே அமர்ந்தாள் பார்வதி, கதவை தாழ் போடாமல் விட்டது நம் குற்றம் தானே என தன்னையே வினாவியவள்,  ஒரு ஐந்து நிமிடத்திற்கு முன்னால் அவர்  வந்திருந்தால் என் நிலைமை என்ன  ஆகியிருக்கும்? நல்ல வேலை ! என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் பார்வதி.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top