52 அம்மாவின் விருப்பம்
52 அம்மாவின் விருப்பம்
சாவித்திரி கூறியதைக் கேட்டு திகைத்து நின்ற விக்ரம்,
"ஆனா ஏன் மாம்?" என்றான்.
"நான் வைஷாலி கூட இருக்கேன். அவளை நல்லா பார்த்துக்கணும்"
"அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அவளை நான் நல்லா பாத்துக்குறேன்"
"நீ பாத்துக்க மாட்டேன்னு நான் சொல்லல. உண்மைய சொல்லப் போனா, நீ பார்த்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன்"
"டாட் என்ன செய்றாரு?"
"அவர் தூங்கிட்டாரு"
"அவருக்கு அம்பது வயசுக்கு மேல ஆயிடுச்சு. அதனால நிம்மதியா தூங்கிட்டாரு..." என்று முணுமுணுத்தான் விக்ரம்.
"நீ இப்போ ஏதாவது சொன்னியா?"
"இல்லையே..."
"சரி, நீ கிளம்பு"
"உங்ககிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் பேசணும்" என்றான் சீரியஸாக.
"எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்"
"நான் சொல்றதை கேளுங்க"
"நான் சொல்றதை நீ கேளு. வைஷாலி ரொம்ப வீக்கா இருக்கா..."
"ஒருவேளை அவ வீக்கா இல்லன்னா?"
"ஆனா, அவ வீக்கா தான் இருக்கா"
"அவ வீக்கா இல்லம்மா"
"உனக்கு பொம்பளைங்க பிரச்சனையை பத்தி ஒன்னும் புரியாது"
"நான் பொம்பளைங்க பிரச்சனையை பத்தி பேசல. உங்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கேன்"
அவனை சமதள பார்வை பார்த்தார் சாவித்திரி. அவர் கையைப் பற்றி கட்டிலின் மீது அமர வைத்தான் விக்ரம். அவர்களுக்கு அருகில் வைஷாலியும் அமர்ந்து கொண்டாள்.
"மாம், பாட்டி செஞ்சது எல்லாமே உண்மை. உங்களுக்கே தெரியும், என்னையும் வைஷாலியையும் பிரிக்க அவங்க எப்படி எல்லாம் முயற்சி செஞ்சாங்கன்னு..."
"எனக்கு தெரியும், சின்னா. என் பேர குழந்தைக்கு அவங்க செஞ்சதை என்னால தாங்கிக்கவே முடியல."
"உங்க பேர பிள்ளைக்கு ஒன்னும் ஆகல, மாம்"
"என்ன சொல்ற நீ? நமக்கு டாக்டர் ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க. அது பொய்னு சொல்றியா?"
"ஆமாம். அந்த ரிப்போர்ட் பொய் தான்"
"என்ன சொல்ற நீ?" என்றார் புரியாமல்.
"ஐ அம் சாரி, மாம். நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன். நான் அதை செஞ்சு தான் ஆக வேண்டி இருந்தது. எனக்கு வேற வழி இருக்கல."
"பொய் சொன்னியா? என்ன பொய்?"
"வைஷாலி பிரக்னண்டா இருக்கான்னு சொன்னது பொய்"
அதிர்ச்சியுடன் அவர் வைஷாலியை ஏறிட்டார்.
"வைஷாலி பிரக்னண்ட் ஆகவே இல்ல"
"என்ன்னனது?"
ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.
"அப்படின்னா, எதுக்காக நீ பொய் சொன்ன?"
"பாட்டி வைஷாலியை நம்ம வீட்ல இருந்து துரத்தி அடிக்க பிளான் பண்ண விஷயம் எனக்கு தெரிஞ்சது. எனக்கு பிறக்கப் போற வாரிசையும் அழிக்க அவங்க திட்டம் போட்டாங்க. அவங்களை கையும் கதவுமா பிடிக்கத் தான் பொய் சொன்னேன்"
"ஆனா, காமினி..."
"அவங்க பாட்டியோட கிரைம் பார்ட்னர். அவங்க பேத்தி, நம்ம வீட்டு மருமகளா வரணும்னு அவங்க விருப்பப்பட்டாங்க"
"அது எனக்கு தெரியும். ஆனா உன்னோட கல்யாணத்துக்கு பிறகு அவங்க மனசை மாத்திக்கிட்டாங்கன்னு நெனச்சேன்"
"அது நம்மளை நம்ப வைக்க அவங்க நடத்தின நாடகம். ஆனா நான் அவங்களை நம்பல. ஏன்னா, அவங்களை பத்தி எனக்கு நல்லா தெரியும். நமக்கு முன்னாடி, மனசு மாறின மாதிரி காட்டிக்கிட்டு, எனக்கு காமினியோட பேத்தியை கல்யாணம் பண்ணி வைக்க எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. வைஷாலியோட வீட்டை எரிச்சதும் பாட்டி தான். அவளை கொல்ல அவங்க முயற்சி செய்றாங்கன்னு தெரிஞ்சதுக்கு பிறகு நான் எப்படி சும்மா இருக்க முடியும்? அதனால தான் அவங்க மேல ஒரு கண் வச்சேன். அவங்க போன் கால்சை ட்ராக் பண்ணினேன். காமினியை என் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தேன். நான் சொல்றதை செய்யலன்னா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்னு சொன்னேன். அவங்க ஹாஸ்பிடல் ரிபுடேஷனை காப்பாத்திக்க, நான் சொன்னதுக்கெல்லாம் அவங்க சம்மதிச்சாங்க."
கண் இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தார் சாவித்திரி.
"எங்களை மன்னிச்சிடுங்க மாம். உங்களை டென்ஷன் பண்ணிட்டேன்"
சந்தோஷமாய் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார் சாவித்திரி.
"நீங்க எனக்கு எவ்வளவு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது. வைஷாலியை நெனச்சு நான் எவ்வளவு கவலைப்பட்டேன் தெரியுமா? என் மருமகளை காப்பாத்த முடியலையேன்னு குற்ற உணர்ச்சியில் தவிச்சேன். நல்லவேளை அவளுக்கு ஒன்னும் ஆகல."
"ஐ அம் சாரி மாம்"
"இப்போ உன் பொண்டாட்டி கூட இருக்கணும்னு தானே இந்த உண்மையை என்கிட்ட சொன்னே?" என்று அவன் தோளில் ஒரு அடி போட்டார்.
"அதுக்காக மட்டும் இல்ல மாம். உங்ககிட்ட உண்மையை சொல்லிட சொல்லி, ஆரம்பத்தில் இருந்தே வைஷாலி சொல்லிக்கிட்டே இருந்தா"
"என்கிட்ட உண்மையை சொல்லணும்னு நீ நினைக்கலையா?"
"உண்மையை சொல்லனும்ன, நான் நினைக்கவே இல்ல. ஏன்னா உங்களுக்கு நடிக்கவே வராதுன்னு எனக்கு தெரியும். நீங்க சொதப்பிட்டா, மாட்டிக்குவோமேன்னு பயந்து தான் உங்ககிட்ட சொல்ல தோணல"
"எனக்கு நடிக்க வராதா? எனக்கு பிடிச்சவங்க கிட்டயும், எனக்கு உண்மையா இருக்கிறவங்க கிட்டையும் நான் நடிக்க மாட்டேன். அதுக்காக எனக்கு நடிக்க வராதுன்னு அர்த்தம் இல்ல. எங்க காலேஜ் டிராமாவில் நான் ப்ரைஸ் வின் பண்ணி இருக்கேன் தெரியுமா?"
"அப்படியா?" என்றான் ஆச்சரியமாக விக்ரம்.
"என்கிட்ட பொய் சொன்னதுக்கு பனிஷ்மென்ட்டா, இன்னைக்கு எங்க ரூம்ல போய் தூங்கு"
"மாம்..." என்று அலறினான் விக்ரம்.
வாய்விட்டு சிரித்தார் சாவித்திரி.
"நீ இங்க தூங்கணும்னா ஒரு கண்டிஷன்... எனக்கு அர்ஜெண்டா பேர பிள்ளையை பெத்து கொடுக்கணும்..."
அதைக் கேட்ட விக்ரம் சோகமானான். அதைப் பார்த்த மாமியாரும் மருமகளும் குழம்பினார்கள்.
"நீங்க இவ்வளவு கஷ்டமான வேலை எல்லாம் எனக்கு கொடுத்தா, சின்ன பையன் நான் என்ன செய்வேன்? நீங்க என்னை இவ்வளவு கட்டாயப்படுத்துறதால நீங்க சொல்றதை நான் செய்றேன்..." என்றான் பொய் சோகத்தை முகத்தில் காட்டி.
அதைக் கேட்ட இருவரும் திகைத்து போனார்கள்.
"திருட்டுப் பயலே... உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா?" என்று அவனை மீண்டும் ஒரு அடி போட்டார்.
"மாம், தயவு செஞ்சு இந்த பொய்யை காப்பாத்துங்க. இல்லன்னா, டாட் பாட்டியை மன்னிச்சிடுவாரு"
"அது எப்படி மன்னிப்பாரு? வைஷாலி பிரகனண்ட்டா இல்லாம இருக்கலாம்... ஆனா, அவங்க குழந்தையை கொல்லப் பார்த்தது உண்மை தானே? அதை எப்படி மன்னிக்க முடியும்?"
ஆம் என்று தலையசைத்த விக்ரம்,
"டாடியை பாத்துக்கங்க" என்றான்.
"அதை நீ என்கிட்ட விடு. அவரை எப்படி கண்ட்ரோல்ல வைக்கணும்னு எனக்கு தெரியும்"
"அப்படின்னா, அதை ஏன் நீங்க இவ்வளவு நாளா செய்யல?"
"நான் அவரையும், அவரோட அம்மாவையும் மதிச்சேன். ஆனா, அவங்க இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவாங்கன்னு நான் கனவுலயும் நினைக்கல. எது எப்படி வேணா இருக்கட்டுமே...என்னோட பேர குழந்தையை கொல்ல அவங்க எப்படி நினைக்கலாம்? ஒருவேளை, வைஷாலி உண்மையிலேயே பிரக்னண்டா இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? அப்படி என்ன அவங்களுக்கு வெட்டி கவுரவம்? அவங்கள என்னால மன்னிக்கவே முடியாது. அவங்களோட செயலுக்கு அவங்க பதில் சொல்லி தான் ஆகணும்" என்றார் சீற்றத்துடன்.
நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்ரம்.
"சரி, நான் போறேன்"
"டாட் கேட்டா என்ன சொல்வீங்க?"
"நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்"
அங்கிருந்து கதவை நோக்கி நடந்தவர், அவர்களை நோக்கி திரும்பி,
"ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்று கண்ணடித்து விட்டு சென்றார்.
விக்ரமும், வைஷாலியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
தன் அறைக்கு வந்து படுத்துக்கொண்ட சாவித்திரி, விக்ரம் கூறியதை எண்ணிப் பார்த்தார். அவன் கூறுவது சரி தான். வைஷாலிக்கு ஒன்றும் நேரவில்லை என்று தெரிந்தால், நந்தினி செய்த செயல் அனைத்தையும் மறந்து நிச்சயம் விமலாதித்தன் நந்தினியை மன்னித்துவிடுவார். உண்மையிலேயே இந்த விஷயத்தில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள எண்ணினார் சாவித்திரி.
தூக்கத்தில் பிரண்டு படுத்தார் விமலன். வேண்டுமென்றே தேம்புவது போல் பசங்கு செய்தார் சாவித்திரி.
"சாவித்திரி..." என்று தூக்கம் கலையாத குரலில் அழைத்தார் விமலாதித்தன்.
எழுந்து அமர்ந்து கொண்டார் சாவித்திரி.
"என்னாச்சு சாவித்திரி?"
"எனக்கு வாழவே பிடிக்கல"
"ஏன் இப்படி சொல்ற?"
"ஏன்னா கேக்குறீங்க? நான் பெத்த பிள்ளையை, நெனச்ச போது பார்க்க கூட முடியாத அளவுக்கு தூரத்துல என்கிட்ட இருந்து பிரிச்சி கொண்டு போய் வச்சீங்க. பத்து வருஷம் என் பிள்ளையை பிரிஞ்சி தவிச்சேன்"
அதை செய்தது தன் அம்மா தான் என்ற உறுத்தலுடன் தலை குனிந்து கொண்டார் விமலாதித்தன்.
"இந்த குடும்பத்துல எந்த முடிவையும் எடுக்கிற உரிமையை நீங்க எப்பவுமே எனக்கு கொடுத்ததில்ல. நான் அதை எல்லாம் பத்தி கவலைப்படல. ஆனா இப்போ, நான் என்னோட பேர குழந்தையை இழந்திருக்கேன். என்னை, பெத்த அம்மாவைப் போல நினைக்கிற என்னோட மருமக, நம்மால தான் இன்னிக்கு கஷ்டப்படுறா. அவளைக் காப்பாத்த நம்ம தவறிட்டோம். இன்னும் என்னை உடைச்சு போட என்னெல்லாம் காத்திருக்கோ தெரியல..." என்று தலையில் அடித்துக் கொண்டார்.
"சாவித்திரி ப்ளீஸ்... இதுக்கு அப்புறம் எந்த தப்பும் நடக்காது... நான் நடக்க விட மாட்டேன். என்னை நம்பு"
"இல்ல. நீங்க நிச்சயம் நடக்க விடுவீங்க..."
"உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?"
"எப்படி உங்களை நம்புறது? உங்களைப் பத்திஎனக்கு தெரியாதா? எப்படியும், கொஞ்சம் நாள்ல, உங்க அம்மா நம்ம பிள்ளைக்கு செஞ்ச கொடுமையெல்லாம் நீங்க மன்னிக்க தான் போறீங்க."
"என்னை பத்தி நீ இப்படித்தான் நினைச்சுகிட்டு இருக்கியா? நீயே என்னை நம்பலன்னா, சின்னாவும் வைஷாலியும் எப்படி நம்புவாங்க? எங்க அம்மா சொன்ன பேச்சைக் கேட்டு நான் நடந்தது உண்மை தான். ஆனா அதுக்காக என்னோட பிள்ளையை நான் விட்டுக் கொடுத்துடுவேனா? அவனோட உணர்வுகள் எனக்கு முக்கியம் இல்லையா? அவனோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்னு, நான் எவ்வளவு தூரம் குற்ற உணர்ச்சியில சாகிறேன்னு உனக்கு தெரியல. இதையெல்லாம் எப்படி சரி கட்டறதுன்னு தெரியாம கிடந்து தவிக்கிறேன்" என்ற விமலாதித்தனை ஆச்சரியமாய் பார்த்தார் சாவித்திரி. ஏனென்றால், தன் அம்மா செய்த தவறை அவர் எப்பொழுதும் ஒப்புக்கொண்டதே இல்லை.
"உண்மையிலேயே நீங்க நம்ம சின்னாவை அவ்வளவு தூரம் நேசிக்கிறீங்களா?"
"அவன் என்னோட பிள்ளை சாவித்திரி. அவன் மேல எனக்கு பாசம் இல்லாம போகுமா? நம்ம பிள்ளையோட பிள்ளையை இழந்திருக்கோம். இந்த நேரத்தில் கூட எங்க அம்மாவை நான் சப்போர்ட் பண்ணுவேன்னு நீ நினைக்கிறாயா? அவங்க செஞ்ச துரோகத்தை நான் எப்படி மன்னிக்கிறது? ஒருவேளை நான் அப்படி செஞ்சா, சின்னா முகத்துல என்னால விழிக்க முடியுமா?"
"அவங்களுக்கு உங்க மன்னிப்பு தேவையில்ல. அவங்களுக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. ராஜ உபசாரத்தோட அவங்க சௌகரியமா இருப்பாங்க"
அதைக் கேட்ட விமலாதித்தன் கொதித்துப் போனார்.
"அப்படியெல்லாம் அவங்களை நிம்மதியா இருக்க விட்டுட மாட்டேன்... என்னோட உயிருக்கு மேல நான் அவங்களை மதிச்சேன். அவங்க எனக்கு செஞ்சது பச்சை துரோகம். என் பேரப்பிள்ளையை கொல்ற அளவுக்கு அப்படி என்ன அவங்களுக்கு அந்தஸ்து வெறி? நம்ம பேரக் குழந்தையை கொல்ல நினைச்சதுக்காக அவங்க வருத்தப்பட்டே தீரணும்"
நிம்மதி பெருமூச்சு விட்டார் சாவித்திரி. எப்படியோ அவரிடம் கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்து முடித்தாகிவிட்டது.
இதற்கிடையில்...
சாவித்திரி தன் மீது கோபப்படாததை நினைத்து நிம்மதி அடைந்தான் விக்ரம்.
"ஆன்ட்டி கிட்ட விஷயத்தை சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் வைஷாலி.
"வேற வழி? நான் மட்டும் உண்மையை சொல்லலைன்னா, என்னை அப்பா கூட படுக்க விட்டிருப்பாங்க... நீ எனக்கு கொடுத்த வாக்கை மறந்துடாத..." என்று சிரித்தான் விக்ரம்.
அவன் தோளில் பட்டென்று ஒரு அடி போட்டாள் வைஷாலி.
"மாமியாரும், மருமகளும் ஒரே மாதிரி இருக்கீங்க... உங்க ரெண்டு பேர்கிட்டயும் அடி வாங்கி என்னோட தோள் வலிக்குது" என்று தன் தோளை தேய்த்து விட்டுக் கொண்டான்.
"எப்படித்தான் உங்க மூஞ்சியை இப்படி குழந்தை மாதிரி வச்சுகிறீர்களோ?"
"எனக்கு ஞாபகப்படுத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்"
"என்ன ஞாபகப்படுத்தினேன்?"
"குழந்தை... அம்மா அவசரமா வேணும்னு கேட்டாங்க இல்ல? மறந்துட்டியா?"
"என்ன ஒரு நடிப்பு...! என்னமோ அம்மாவுக்காக மட்டுமே பேசுற நல்ல பிள்ளை மாதிரி நடிக்காதீங்க..."
"உனக்கு தான் எல்லாம் தெரியுதே... அப்புறம் எதுக்கு கேள்வி கேக்குற?"
"அம்மாவோட ஆசையை நிறைவேத்த எனக்கு புரொடக்ஷன்ல கோ-ஆப்பரேட் பண்ண போறியா இல்லையா?"
"புரொடக்ஷனா? நீங்க என்ன கம்பெனியா நடத்துறீங்க?" என்று சிரித்தாள் வைஷாலி.
"கம்பெனி நடத்துறேனோ, இல்ல குடும்பம் நடத்துறேனோ... உன் மாமியார் விருப்பத்தை நிறைவேத்த போறியா இல்லையா?"
"போதும், பிளாக் மெயில் பன்றதை நிறுத்துங்க" என்று தன்னை போர்வையால் போர்த்திக்கொண்டு படுத்துக் கொண்டாள் வைஷாலி.
அதே போர்வையில் தானும் புகுந்து கொண்டான் விக்ரம், தன் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top