43 நாடகம் முடிந்தது
43 நாடகம் முடிந்தது
விக்ரமின் கூறிய பார்வையை கண்ட வைஷாலி வெடவெடத்து போனாள்.
"ரொம்ப நல்லா மோனோ ஆக்ட்டிங் பண்ற" என்று அபாயகரமான சிரிப்பை உதிர்த்தான்.
வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள் வைஷாலி.
"என்கிட்ட சொல்லிருந்தா, இந்த சீன் தத்துரூபமா வர, நான் உனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேனே... "
அவன் பேசியது, தன் காதில் விழவே இல்லை என்பது போல் எதையோ யோசித்தபடி நகம் கடித்தாள் வைஷாலி.
"நான் உண்மையாவே உன்னை கட்டி பிடிச்சிருப்பேன்... முத்தம் கொடுத்திருப்பேன் இல்ல..." அவளை நோக்கி நகர துவங்கினான் விக்ரம்.
வைஷாலி அங்கிருந்து ஓட எண்ணிய போது, அவர்கள்அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தன் சிரிப்பை வைசாலி கட்டுப்படுத்திக் கொள்ள, 'எங்கு சென்று விடப் போகிறாய்?' என்பது போல் அவளைப் பார்த்து புன்னகைத்தான் விக்ரம்.
"வைஷு..."
வந்திருந்தது சாவித்திரி தான். வைஷாலி கதவை திறக்க, அவர் ஒரு பழத்தட்டுடன் உள்ளே நுழைந்தார்.
"இது உனக்கு தான் வைஷு. நீ வெறும் வயித்தோட இருக்கக் கூடாது"
*நான் வெறும் வயிரா தான் இருக்கேன்* என்று முனுமுனுத்தாள் வைஷாலி.
"வா, வந்து இதை சாப்பிடு"
அவள் கையைப் பிடித்து கட்டில் மீது அமர வைத்து, ஒரு ஆப்பிள் பழத்தை வெட்ட துவங்கினார் சாவித்திரி. முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு விக்ரமை பார்த்தாள் வைஷாலி. அவனோ, கிண்டலாய் சிரித்துக் கொண்டு நின்றான்.
"சின்னா, நீயும் எங்க கூட வந்து உட்காரு" என்றார் சாவித்திரி.
சிறிது கூட இடைவெளி கொடுக்காமல், வைஷாலியின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டான் விக்ரம், வைஷாலியின் விழிகளை விரியச் செய்து.
"நான் இவ்வளவு சீக்கிரம் பாட்டியா ஆவேன்னு நினைச்சு கூட பாக்கல" என்ற சாவித்திரி ஒரு துண்டு ஆப்பிளை வைஷாலியின் வாயில் திணித்தார் சந்தோஷமாக.
"நல்ல காலம், உங்களுக்கு ஃபஸ்ட் நைட் நடந்த விஷயத்தை வைஷாலி எங்க கிட்ட சொல்லிட்டா. இல்லன்னா அடுத்த தேதியை முடிவு பண்ற வரைக்கும் நீங்க தனியா தான் இருந்திருக்கணும்" என்று சாவித்திரி கூற,
வைஷாலியை பார்த்து வில்லங்கமாய் உருவம் உயர்த்தினான் விக்ரம். அவள் தன் கண்களை இறுக்கமாய் மூடி கொண்டாள். அவள் ஆடிய நாடகத்தை புரிந்துகொண்டு உதடு கடித்து சிரித்தான் விக்ரம்.
"நீங்க சொல்றது எனக்கு புரியலையே மாம்..." என்றான் வேண்டுமென்றே.
"ஏதோ ஒரு காரணத்துக்காக, ஃபஸ்ட் நைட் நின்னு போயிட்டா, அதை வேற ஒரு நாள் தான் நடத்துவாங்க. அதுவரைக்கும் பொண்ணு மாப்பிள்ளை தனியா தான் இருக்கணும்"
"ஓஹோ..."
"ஆமாம், அதை அடுத்த மாசம் ஃபிக்ஸ் பண்ணலாமுன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அது முடிஞ்சு போச்சுன்னு வைசாலி சொன்னதால, அதுக்கு அவசியம் இல்லாம போச்சு"
"அப்படியா வைஷு? நீ அவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிட்டியா?" என்றான் நல்ல பிள்ளை போல.
சாவித்திரியை பார்த்து சங்கடத்துடன் சிரித்தாள் வைஷாலி.
"உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு" அவர்களது அறையை விட்டு வெளியேறினார் சாவித்திரி.
கதவை சாத்தி தாளிட்டு விட்டு, கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் விக்ரம்.
"அப்படின்னா நமக்கு ஃபஸ்ட் நைட் நடந்துடுச்சா?" அவனது குரல் உறுதியாய் ஒலித்தாலும் அதில் நையாண்டி தெரிந்தது.
தனது பதற்றத்தை தவிர்க்க, இன்னொரு ஆப்பிள் துண்டை தன் வாயில் திணித்துக் கொண்டாள் வைஷாலி.
"நம்ம முடிச்சிட்டோமா?"
அவளுக்கு புறை ஏறியது.
"அப்படின்னா, எனக்கு தெரியாம நீ நிறைய வேலையை செஞ்சு கிட்டு தான் இருக்க..."
தன் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள் வைஷாலி.
"நீ ஒண்ணுமே செய்யாம சும்மா இருந்தப்பவே எனக்கு சந்தேகம் வந்தது... உன்னால தான் அப்படி எல்லாம் சும்மா இருக்க முடியாதே..."
அவளை நோக்கி அவன் நடக்கத் துவங்க, வைஷாலியும் கட்டிலை விட்டு எழுந்து அவனை விட்டு விலகி நடக்க தொடங்கினாள். விக்ரமின் நடையின் வேகம் கூடியது... அதுபோலவே வைஷாலியின் வேகமும்...
ஓடிச் சென்று கட்டிலின் மறுபக்கத்தில் நின்று கொண்ட வைஷாலி, கட்டிலின் மீது ஏறி, அவனுக்கு எதிர்பக்கம் குதித்து ஓட துவங்கினாள். அவள் கதவை திறக்கும் முன், அவளை சென்றடைந்து, பின்புறம் இருந்து அவள் இடையை வளைத்து பிடித்துக் கொண்டான் விக்ரம். அவனது பிடியிலிருந்து வெளிவர திமிரினாள் வைஷாலி. ஆனால் அது இயலவில்லை.
"என்னை உனக்கு பிடிக்காத மாதிரி நடிக்காத..." என்று அவள் காதில் விக்ரம் உரைத்த வார்த்தைகள், அவளின் திமிரலை முடிவுக்கு கொண்டு வந்தது.
தன் முகத்தை திருப்பி, அவனை நோக்கினாள்.
"நீயும் என்னை காதலிக்கிற... நான் உன்னை கிஸ் பண்ணும் போது நீ என்னை தடுக்கல. அப்பவே நான் அதை புரிஞ்சுகிட்டேன். உண்மை தானே?"
பதில் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் வைஷாலி. அவளை நோக்கி குனிந்து, லேசாய் இதழ் ஒற்றினான். அமைதியாய் தன் கண்களை மூடினாள் வைஷாலி. அவளை தன்னை நோக்கி திருப்பி,
"நீ என்னை காதலிக்கல?" என்றான்.
"நீங்க சொன்னது சரி... நானும் உங்களை காதலிக்கிறேன்" மெல்ல தன் கண்களை இமைத்தவாறு கூறினாள்.
அவள் இடையை சுற்றி வளைத்து, தூக்கிக்கொண்டு காற்றில் வட்டம் அடித்தான் விக்ரம் சந்தோஷமாக. கலகலவென சிரித்தாள் வைஷாலி. அவளை இருக்கமாய் அணைத்துக் கொண்டான்.
"ஏய் பொம்மி... "
"ம்ம்?"
" நீ ப்ரக்னண்டா இருக்கேன்னு, நம்ம சொன்ன பொய்யை ஏன் உண்மையாக்க கூடாது?"
வெட்க புன்னகை பூத்தாள் வைஷாலி.
"அம்மாமாமாடி.... உனக்கு வெட்கமில்லாமல் கூட பட தெரியுமா?" என்றான் இதழோர சிரிப்புடன்.
செல்ல சிணுங்கல் சிணுங்கினாள் வைஷாலி.
"நேரடியா விஷயத்துக்கு வந்துடறேன்... அவசரமா எனக்கு ஒரு பையனோ பொண்ணோ வேணும். என்ன சொல்ற?"
"அவ்வளவு என்ன அவசரம்?"
"நந்திக்கு உன் மூலமா ஒரு வாரிசை கொடுக்கலாம்னு தான்"
"அவங்களை அவ்வளவு சாதாரணமா நினைச்சிடாதீங்க" எச்சரித்தாள் வைஷாலி.
"அவங்களை யார் சாதாரணமா நினைச்சது? அவங்களை நிரந்தரமா நிறுத்த, ஏதாவது செஞ்சாகணும்"
"அது நம்மால் எப்படி முடியும்?"
"ஏதாவது யோசிக்கணும்"
அப்பொழுது அவர்களது அறையின் இன்டர்காம் அலறியது.
"எடுத்துப் பேசு. உன் மாமியாரா தான் இருக்கும்" என்று சிரித்தான்.
அழைப்பை ஏற்று பேசினாள் வைஷாலி. ஆம் அது சாவித்திரி தான்.
"வைஷு, டின்னர் சாப்பிட கீழே வாங்க"
"சரிங்க ஆன்ட்டி" அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.
"ஆன்ட்டியை ஏமாத்துறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு"
"அவங்களை யார் ஏமாத்த போறா?" என்றான் கிண்டலாக.
உதடு கடித்து சிரித்தாள் வைஷாலி.
"அதுக்காகத் தான் அவசரமா ஒரு வாரிசை கொடுன்னு கேட்கிறேன்"
"ஆன்ட்டி வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. வாங்க போகலாம்"
இருவரும் தரைதளம் வந்தார்கள். நந்தினி ஏற்கனவே அங்கு அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார். எப்பொழுதும் போலவே சாதாரணமாய் நடந்து சென்ற வைஷாலியை,
"வைஷு, வேகமா நடக்காத... மெதுவா நட... என் பையன் பயப்பட போறான்" என்றான் விக்ரம்.
தனது எரிச்சலை வெளி காட்டிக் கொள்ளாமல் இருக்க நந்தினி பட்ட பாட்டை சுலபமாகவே புரிந்து கொள்ள முடிந்தது வைஷாலியால்.
"ஆமாம் வைஷு... நீ ஜாக்கிரதையா இருக்கணும்" என்றார் சாவித்திரி.
"கங்கிராஜுலேஷன்ஸ், சின்னா" என்று வாழ்த்தினார் விமலாதித்தன்.
"தேங்க்ஸ் டாட் " தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான் விக்ரம்.
அவனுக்கு பரிமாற வைஷாலி முனைந்த போது,
"நீ உட்கார்ந்து சாப்பிடு வைஷு. நான் பரிமாறுறேன்." என்றார் சாவித்திரி.
"பரவாயில்ல ஆன்ட்டி"
"மாம், நீங்களும் எங்க கூட உட்காருங்க. வேணுங்கறத நம்மளே எடுத்து சாப்பிட்டுக்கலாம். நான் சொல்றது சரிதானே பாட்டி?"
"ம்ம்ம் " என்றார் நந்தினி.
"ஆமாம் ஆன்ட்டி, நீங்களும் எங்க கூட சாப்பிடுங்க"
சாவித்திரியை அமர வைத்து விட்டு தானும் அமர்ந்து கொண்டாள் வைஷாலி.
"வைஷு, நீ இனிமே குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடக் கூடாது. நீ ரெண்டு பேருக்காக சாப்பிடுற. அதை மறந்துடாத"
'என்னை காப்பாற்றுங்களேன்' என்று கெஞ்சலாக விக்கிரமை பார்த்தாள் வைஷாலி.
"மாம், அவ இப்ப தான் ஆப்பிள் சாப்பிட்டா. ரொம்ப ஸ்டஃப் பண்ணா, வாமிட் பண்ணிட போறா..." என்றான்.
"ஆமாம்மா... எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடு" என்றார் சாவித்திரி.
நிம்மதி பெருமூச்சு விட்ட வைஷாலி, விக்ரமுக்கு கண்களால் நன்றி கூறினாள்.
"தூங்குறதுக்கு முன்னாடி பால் சாப்பிட மறந்துடாத"
சரி என்று தலையசைத்தாள் வைஷாலி.
"நீங்க கவலைப் படாதீங்க மாம். அது என்னோட பொறுப்பு" என்றான் விக்ரம்.
"அவனோட குழந்தை இந்த பூமிக்கு வரதுக்கு முன்னாடியே, நம்ம சின்னா ரொம்ப பொறுப்புள்ள அப்பாவா மாறிட்டான்" என்றார் விமலாதித்தன்.
"அஃப் கோர்ஸ்... நான் உங்களை மாதிரி இல்ல டாட்" என்றான் கிண்டலாக.
அதிர்ச்சியில் விமலாதித்தன் விழி விரித்தார். அவரது கண்கள் அணிச்சயாய் அவரது அம்மாவின் பக்கம் திரும்பியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு விக்ரமைப் பார்த்தார் நந்தினி. சிரித்து விடாமல் இருக்க போராடினார் சாவித்திரி.
அவசரமாய் சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார் நந்தினி. இந்த கேலி கிண்டலுக்கு முன்னால் நிற்க அவருக்கு விருப்பமில்லை. அதற்கு மேலாக, அனைவரும் வைஷாலியை கொண்டாடுவதை அவரால் சகிக்க முடியவில்லை.
இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்கு செல்லும்போது, வைசாலிக்கு கொடுக்கச் சொல்லி ஒரு தம்ளர் பாலை விக்ரமிடம் நீட்டினார் சாவித்திரி. அடக்க ஒடுக்கமாய் அதை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டான் விக்ரம். தங்கள் அறைக்குள் நுழைந்தவுடன் அந்த பால் தம்ளரை மேஜை மீது வைத்துவிட்டு, வைஷாலியை இழுத்து அணைத்து அதிர்ச்சி அளித்தான். அவனை பிடித்து தள்ள அவள் முயன்ற போது, மேலும் இறுக்கமாய் பற்றி கொண்டு,
"நீ என் கையில இருந்து வெளியில வரவும் முடியாது, ஓடவும் முடியாது" என்றான் மயக்கும் குரலில், தன் இதழ்களால் அவள் காது மடலை வருடியவாறு.
கண்களை மூடி, அவன் தோள்களை இறுக பற்றிய வைஷாலியை, உணர்வு வெள்ளம் பொங்க இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் விக்ரம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top