7 # வரி வரி காதல்
ஒற்றை ரோஜா அவள் சூட,
ஒற்றை நெஞ்சம் துடிதுடிக்க,
வீழ்ந்தேன் அவள் விழியில்.
கள்ளமில்லா மனம் கண்டே,
தமிழ் துணை நான் கொண்டே,
வடித்தேன் அழகிய சிலை ஒன்றே.
ஒரு மலர் சுமக்கும் மங்கை,
கண்டு மயங்கிய மாயவன்,
என் செய்வேன் அவள் கரம் கோர்க்க.
கரம் கோர்த்து, நிறம் சேர்த்து,
விழி ஈர்த்து, நிறை பார்த்து,
கலை புகுவோம் காதலிலே.
கொஞ்சி மகிழ்ந்து,
முற்றும் ரசித்து,
மீண்டும் வாழ்வோம் இவ்வுலகினிலே.
உலகம் நீத்து,
கவிதை மாய்த்து,
புனரமைப்போம் பூமியையே.
வலி நீக்கி,
வழி புணைந்து,
வெல்வோம் சிரம் கோர்த்தே.
வழி கண்டு,
விதி வென்று,
புது கவின் செறிவோம் கோர்வையிலே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top