6 # அனிச்சம் பூவழகி


ஆளில்லா காட்டுக்குள்ளே,

அந்திசாயும் வேளையிலே,

ஒத்தையில போறவளே,

ஒற்றைப் பார்வை வீசடி.


காந்த கருவிழியே,

கருமேக மெய்யழகே,

உன் தோள் சாயவே,

உள்நெஞ்சம் ஏங்குதடி.


அம்புலி முகத்தவளே,

அனிச்சம் இதழழகே,

சரித்திரம் நாம் படைக்க,

சாகா வரம் வேண்டுமடி.


பூவொன்று நீ சூட,

பூவுலகமும் பூக்குதடி,

என் காதல் நீ அறிய,

என் சுவாசமும் தவிக்குதடி!    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top