5 # வெற்றி



பகலென்று பாராமல், இரவென்று பாராமல்,

மெய்வருத்தி நின்றாயே!

சுடும் வெயிலிலும், கடும் குளிரிலும்,

அசையாமல் நின்றாயே!

காளை காக்க, தர்மம் நிலைக்க,

இளஞ்சிங்கமே சீறிப்பாய்ந்தாயே!

தடைகள் பல உடைத்து,

புது சரித்திரம் படைத்தாயே!

வீரமும், ஈரமும், கலாச்சாரமும்,

உன்னில் ஓடும் குருதியிலே!

கண்டங்கள் அனைத்தும் உன் குரலால்,

மெய் சிலிர்க்க வைத்தாயே!

கைக்கோர்த்து ஒன்றிணைந்தால்,

என்றும் வெற்றி உனதே!

தமிழா இவ்வெற்றியும் உன்னாலே!

தமிழன் என்று சொல்லடா,

தலை நிமிர்ந்து நில்லடா!


p.s : written at the time of jallikattu protest....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top