4 # நட்பு
அறியா வயது அறியா சுழல்,
எதைத் தேடி வந்தேன் நானோ,
அறியாமல் விட்டு சென்றேனோ!
அறியாமல் செய்த தவறு தானோ,
உனை ஆசிரியரிடம் முறையிட்டது தானோ,
சிறு பூச்சி எனை வருடியதுனாலோ!
விட்டு சென்றேன் துலை தூரம்,
நாட்கள் மாறியது பல மாதம்,
கண்டேன் உனை மீண்டும் அந்த வருடம்!
மீண்டும் படித்தோம் ஒன்றாய்,
பழகினோம் இருவரும் நட்பாய்,
இம்முறை நீ விட்டு சென்றாய்!
காலங்கள் மாறியது, நாட்கள் நகர்ந்தது,
இருவரையும் முகப்புத்தகம் இணைத்தது,
இனியாவது நட்புடன் பயணிப்போம் இனிதாய்!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top