1 # காதல் இதுதானோ


உன் ஒற்றை நொடி பார்வையாலே,

என் உள்ளம் கவர்ந்து சென்றாயே!

செல்லும் தூரம் யாவும்,

உன் நினைவில் மயங்கி சென்றேனே!

காதல் இது தானா?


உன் இதழ் மலர்ந்த நொடிகளில்,

என் நெஞ்சம் குளிர்ந்து போனதே!

உன் துணையாக வாழும் கனவில்,

உன்னுடன் இணைந்து மலர்ந்தேனே,

காதல் இது தானே!


உன்னோடு ஒன்றாய் நின்றேன் நான்,

இதழோடு இதழ் சேர்த்தோம் நாம்,

புதியதோர் உயிர் தந்தோம் நாம்,

நமக்கென ஓர் உலகில் மகிழ்ந்தோம் நாம்,

காதல் இது தானோ!


அன்றும் இன்றும் என்னோடு நீ,

இன்பம் துன்பம் ஒன்றாய் கண்டோம் நாம்,

நீயின்றி என்சென்வேன் நான்,

வாழ்வின் அர்த்தம் இன்று புரிந்ததடா,

காதல் இது தானே!   

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top