பாகம் 9
ஹேய் பேபி இங்க என்ன பண்ற..,,என்றான் ஆச்சர்யமாக,
' ஒரு வேளை நான் பேசுனது கேட்டுருக்குமோ..பரவால சமாளி " என நினைத்துக் கொண்டவள் மகதி '
"சார் என் பிரண்ட் கீதாவா பார்க்க வந்தேன்.. நீங்க.. எதுக்கு வந்தீங்க.. என்றாள் ஆழம் பார்க்கும் விதமாக..
ஓ.. நானா.. என் கேர்ள் பிரண்ட் ஒருத்தி பிரக்னன்ட இருக்கா..அவளோட ரிப்போர்ட வாங்க வந்தேன்.. என்றான் குறும்பாக..
' அடச்சீ இவங்கிட்ட போய் இவ்ளோ நேரம் பேசினோம் பாரு ' என்று தன்னையே அருவறுப்பாக எண்ணிக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..
' நான் கேர்ள் பிரண்டுனு தான சொன்னேன்.. என்னமோ அதற்கு நான் தான் காரணங்கிற மாறி அந்த ஓட்டம் ஓடுற.. கிரேசி கேர்ள் ' என நினைத்துக் கொண்டு அவன் வேலையை பார்க்கச் சென்றான் கிருஷ்..
அடுத்த நாள்.....ஞாயிறு என்பதால் மகதி, அனு மற்றும் கீதா மூவரும் சென்னையை அலசி ஆராய்ந்து தங்களுக்குத் தேவையான உடமைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர்..
ஹலோ கேர்ள்ஸ் இங்கயும் என்னை ஃபாலோ பண்ணி வந்திட்டிங்களா.. உங்க தொல்லை தாங்கலப்பா.. எதுக்கு தான் ஆண்டவன் என்னை இவ்ளோ அழகா படைச்சானோ.. என்று சளித்துக் கொண்டான் ரோகித்..
"அத நாங்க சொல்லனும் . .. ஒரு நாள் கூட உன் தொல்லை இல்லாம்மா இருக்கலாம்னா வி்ட்றியா " என தலையில் அடித்துக் கொண்டாள் கீதா..
அவள் விளையாட்டாக சொன்னாலும் அவன் முகம் வாடிப் போனது..
" ஏன் கீதா நான் உனக்கு தொல்லையா.." என பாவமாக கீதாவின் கையைப் பிடித்துக் கேட்டான்....ரோகித்..
" ஏய் என்ன பண்ற.. கைய விடு.. யாராவது பார்த்திடப் போறாங்க.." என அவனின் கையை எடுக்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள்..அவன் அசைவதாக தெரியவில்லை..
அதுவரை ரோகித் வந்தால் பாலாவும் வந்திருப்பாரோ என சுற்றும் முற்றிலும் தேடிக் கொண்டு இருந்த மகதி.. இப்போது தான் இவர்களின் நிலையைப் பார்த்தாள்..
" ஏன்டி அங்க என்னமோ இன்னைக்கு ரோகித்த பார்க்க முடியாதேனு அந்த ஃபீல் பண்ணிட்டு ...இங்க ஓவரேக்ட் பண்ணிட்டு இருக்க.." என கீதாவின் குட்டை எதார்த்தமாக வெளிப்படுத்த..
மகதியினைப் பார்வையாலே எரித்து விடுவது போல் முறைத்தனர் அனுவும் கீதாவும்..ஆனால் அதன் காரணம்தான் மகதிக்குப் புரியவில்லை .
" ஏன் செல்லம் உண்மையாவே என்னை மிஸ் பண்ணியா " என்றான் ஏக்கம் கலந்த குரலில் ரோகித்..
" ஒரு கன்டிராவியும் இல்லை "என வெக்கப் பட்டுக் கொண்டே தன் கையை விடுவித்துக் கொண்டு ஓடி விட்டாள்..கீதா..
ரோகித்தும் அவள் பின்னே செல்ல எத்தனிக்க அதற்குள் பாலா வந்து தடுத்து விட்டான்..
" டேய் விடுடா .. அவ போறா.. "
" எப்படி இருந்தாலும் நாளைக்கு ஹாஸ்பிடல் தான வருவா.. அங்க பார்த்துக்க.. இப்ப ஃப்ரீயா விடு "- பாலா..
" ச்சீ போடா "
" சரி சரி ரொம்ப ஃபீல் பண்ணாத எங்க எல்லாத்துக்கும் ட்ரீட் வை.. என்ன மகதி நான் சொல்வது சரி தான.." என்றான் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் மகதியிடம்..
' அவன் என்னமோ என்னப் பார்த்து சொன்னான்.. ஆனா என்ன சொன்னானு காதுல விழுகலியே.. இப்ப என்ன சொல்வது என்பது தெரியாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்..
" உனக்கெதுக்கடா ட்ரீட் வெக்கனும்.. ஒரு வருசமா உன்கிட்ட எப்படி கெஞ்சிருப்பேன் என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி.. நீ பண்ணியாடா.. ஆனா நான் கேக்காமலே எனக்கு உதவி பண்ணிருக்காங்க பாரு நான் விசம்னு நினைச்ச இந்த குல தெய்வம் இவங்களுக்கு வைக்கிறேன்டா ட்ரீட்டு..என்றான் ரோகித்..
" அடுத்தவுங்க முன்னாடி இன்சல்ட் பண்ணினு வெச்சுக்க உன் உசிரு உடம்பில் தங்காது பார்த்துக்க.." என ரோகித்திற்கு மட்டும் கேட்கும் படியாக அவன் காதில் சிரித்துக் கொண்டே சொன்னான் பாலா..
" என்னடா இவங்கெலாம் உனக்கு அடுத்தவுங்களா.. " என சத்தமாக சொல்லி விட பாலாதான் செய்வதறியாமல் திகைத்தான்..
" சரிங்க சார் நாங்க வரோம் " என சிறு புன்னகையை உதிர்த்து விட்டு நகர்ந்தாள் அனுவின் கையைப் பிடித்துக் கொண்டு..
" ஹலோ மிஸ். குல தெய்வம்.. நெக்ஸ்ட் சன்டே என் பர்த் டே பார்டி இருக்கு.. நீங்களும் உங்க பிரண்டும் கண்டிப்பாக வரணும் " என்றான் ரோகித்..
ம்ம் சரி என்று சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டாள்..
வாசலில் இவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள் கீதா..
" ஏன்டி அறிவிற்காடி உனக்கு.. நான் அவர் பர்த் டே அன்னைக்கு புரபோஸ் பண்ணலாம்னு நினைச்சேன் ..அதுக்குள்ள உன்ன யாரு சொல்ல சொன்னது.." என செல்லமாக கோவித்துக் கொண்டாள் கீதா..
ஏற்கனவே பாலா தன்னை அடுத்தவ என்று சொன்னதைத் தாங்கிக் கொள்ளாமல் இருந்தவள் இப்போது தான் கீதா விசயத்தில் தான் செய்த தவற்றை உணர்ந்தாள்..
" ஏய் எதாவது வாயத் தொறந்து பேசு டீ " என உலுக்கிய அனுவிடம் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு அழுது தீர்த்தாள்..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top