பாகம் 8

கிருஷ் ஆபிஸ்க்கு வந்து ஒரு வாரம் ஆனது..ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஆபிஸே தலை கீழானது..

இந்திரா மேமோட ஆபிஸா இது என்ற அளவுக்கு அங்கே வேலை செய்பவரின் நடத்தையும் உடையும் மாறிப் போனது..அங்கே இருப்பவர்க்கும் இந்த மாற்றம் தான் பிடித்து இருந்தது மகதியைத் தவிர..

மகதிக்கு கிருஷைப் பார்த்தால் வெறுப்பு தான் வந்தது.. அதுவும் அவன் பெண்களிடம் பழகும் விதம் அவன் மோசமானவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது..

இருக்காதா பின்ன .. தன்னை பிஏ என்று சொல்லி கையை நீட்டுவதற்கே யோசித்த மகதியை ' ஹலோ டார்லிங் என்று சொல்லிக் கட்டிப் பிடித்தால் வெறுப்பு வராமல் வேற என்ன வரும்..அதிலிருந்து மகதி அவனிடம் இருந்து 5 அடி தள்ளியே நிற்பாள்..

கிருஷிடம் உள்ள உயர்ந்த குணம் என்னவென்றால் தன்னிடம் விலகி இருப்பவரை தொல்லை செய்ய மாட்டான்.. அந்த வகையில் மகதி தப்பித்தாள்..ஆனால் எவ்வளவு நாள் தான் தப்பிப்பாள் என்பது தெரியவில்லை..

எதற்கெடுத்தாலும் சண்டை போடும் மகதி இவன் முன்னே வாயைத் திறக்கவும் தயங்கினாள்..

பேசாமல் இந்த வேலையை விட்டு விடலாம் என்று எண்ணினாலும் இந்திரா மேம் காகவும் ஊருக்குச் சென்றால் தந்தை தனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்ற பயத்திலும் பொறுமையுடன் இருந்தாள்

ஆனால் அந்த பொறுமையை கிருஷின் மோசமான நடவடிக்கை தகர்த்தெறிந்தது..

தன்னுடன் சிரித்து பேசும் பெண்களுக்கு மட்டும் இன்கிரிமென்ட் கொடுத்தான்..மேனேஜர் கூட இதைக் கண்டுக்கவில்லை..இந்திரா பார்த்து பார்த்து உருவாக்கிய கம்பெனி இப்படி தரங்கெட்டு போவதை மகதி விரும்பவில்லை..

ஏதாவது செய்தாகனும் என்ற முடிவெடுத்தாள்..இந்திராவிற்கு தெரிவித்தால் அவரது உடல் நிலை மோசமாகி விடும் என்ற எண்ணத்தால்
பாலாவிடம் சொல்லி ஒரு நல்ல தீர்வைக் காணலாம் என எண்ணினாள்..

பிற்காலத்தில் இதுவே தன் வாழ்வை புறட்டிப் போடும் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..

என்ன தான் அவள் ஆபிஸ் மேட்டருக்காகச் சென்றாலும் பாலாவிற்காக சிறிது ஒப்பனைகளும் செய்து கொண்டாள்..

கீதாவிடம் பேசி பாலாவின் அப்பாய்மென்டையும் பெற்று விட்டாள்..

' கடவுளே அன்றைக்கு மாறி என்னை பே ன்னு நிக்க வைக்காம..நா சொல்ல வந்தத முழுசா சொல்ல வெச்சிடு.. அவர்கிட்ட பேசறப்ப கண்ணுப் பார்த்து மட்டும் பார்த்திடாதே.. என தனக்குத் தானே அறிவுரை கூறிக் கொண்டே கேண்டினில் கீதாவுடன் வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தாள்..

சிறிது நேரத்தில் பாலாவும் ரோகித்துடன் வந்து விட தான் சொல்ல வந்ததை தரையைப் பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தாள்..

நீங்க தான் கிருஷ் சார வரவெச்சிங்க.. அதனால நீங்க தான் இத சால்வ் பண்ணனும் - மகதி..

ஓகே இனி இத நா பார்த்துக்கிறேன்..
ஆனா நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் அப்படி தரைல என்ன தான் இருக்குனு அங்கயே பார்க்கிற..

அப்படிலாம் ஒன்னுமில்ல.. என பாலாவைப் பார்த்து சொன்னாள்..

என்னம்மா இந்த மீட்டிங் இவ்ளோ டல்லடிக்குது.. வா கீது நாம அந்த டேபிள போய் உக்கார்ந்து பேசிட்டு வருவோம்..என ரோகித் கீதாவைப் பார்த்து சொல்ல..

அன்று மகதி கொடுத்த மிட்டாய்கள் ஹேன்ட் பேகில் இருக்க அதை எடுத்து மேலே வைத்து இதை சாப்பிடு என கண்ணாலே சைகை காட்ட ரோகித் தப்பித்தோம் பிழைத்தோம் என அவ்விடத்தை விட்டு ஓடி விட்டான்..
கீதாவும் அவனை துறத்திக் கொண்டே செல்ல.மகதி தான் பாலாவுடன் தனியாக அமர்ந்திருப்பதை எண்ணி மனதில் புலம்பிக் கொண்டு இருந்தாள்..

"மகதி "

"ஆங்"

" ஐ யம் சாரி மகதி "

"எதுக்கு"
" எல்லாத்துக்கும் .. முதல்ல உனக்கு லிப்ட் கொடுக்காததுக்கு.. அப்றோம் ஹாஸ்பிடல இன்சல்ட் பண்ணதுக்கு.. இத எல்லாத்த விட தப்பான ஒருத்தருக்கு வேல கொடுத்து உங்கள கஷ்ட படுத்தினதுக்கு.."

" சார் நா அதெல்லாம் பெருசாவே எடுத்துக்கல..இஇஇஇஇஇ "..

அப்பறம் கடைசியா ஒரு சாரி..என்று அவளைப் பார்த்து ஒரு கள்ள புன்னகை வீசினான்..

இதுவரை கன்ரோலாக இருந்த மகதி இனி இப்படி இருக்க முடியாது என்பதை உணர்ந்து வேகமாக எழுந்து.. " சார் சாரி டைம் ஆச்சு..பாய் " என சொல்லி விட்டு வெளியே வந்து விட்டாள்..

அவள் வந்த வேகத்தில் ஒருவரை இடித்து விட்டாள்..சார் சாரி என்று சொல்லும் போதுதான் யாரென்று பார்த்தாள்..

யாரைப்பற்றி இவ்வளவு நேரம் புகழ்ந்து பேசிக் கொண்டு இருந்தாளோ அதே கிருஷ் தான் ..

மகதியைப் பார்த்து கிருஷ்ணனைப் போல் நின்று புன்னகைத்துக் கொண்டு இருந்தான்..

A/N :

Vallarai mittai
Ithu vote pannavm comments pannvm marakm silent viewers kaga.. Adichaka kudathu.. Ellarm onnu than eduthukanm..

Pls share ur votes and comments friends ..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top