பாகம் 7

கடவுளே ...வேற ஒருத்திக்கு சொந்தமான ஒருவனை இப்படி தவறாக எண்ணி விட்டேனே என்ற குற்ற உணர்ச்சியில் அவள் ஆழ்ந்து இருக்க..

அத்தை யார் இவங்க.. என வினவினாள்...சுஜி..

என் பிஏ.. இவளத்தான் பாலாக்கு கட்டி வைக்கலாம்னு நினைச்சேன்.. அவளும் வேணானு சொல்லிட்டா..நீயும் வேணானு சொல்லிட்ட..அதான் எனக்கு டென்சன்..

' இப்படி அவசரப்பட்டுடியே மகதி.. ' என தன்னையே திட்டிக் கொண்டாள்..

" அத்தை என்ன பேசறிங்க பாலா மாமா.. எனக்கு அண்ணா மாறி " சுஜி..

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க.. பாலா தன் அன்னையை முறைத்துக் கொண்டு இருந்தான்..

' டேய் எதுக்கடா என்ன இப்படி பார்க்கற.. பயமா இருக்குல.. என்று சிரித்துக் கொண்டு இந்திரா சொல்ல..

அம்மா எத்தனை தடவை உங்க கிட்ட சொல்லிருக்கேன்.. என் மனசுக்கு பிடிச்ச பொண்ண பார்த்த உடனே சொல்றேனு.. இப்படி கண்டவுங்க கிட்ட கெஞ்சிட்டு இருக்காதிங்க.. என்று சொல்லி முடித்த பின் தான் தன் வார்த்தையின் அர்த்தம் உணர .. அதற்குள் மகதியும் சுஜியும் கோவித்துக் கொண்டு சென்று விட்டனர்..

" ஏய் இப்படி தான் பேசுவியாடா.. நான் உன்ன அந்த மாறி தான் வளர்திருக்கேனாடா.."

சாரிம்மா.. எனக்கு அம்முவ பார்க்கறப்ப கோவம் கோவமா வருது..
என்னோட வார்த்தைய மதிக்கக் கூட மாட்டிங்கறானு ஆத்திரத்துல பேசிட்டேன்மா..நான் வேனா உங்க பிஏ கிட்ட சாரி கேக்கவா..

நீ இப்ப போனா அவ சாமி ஆடுனாலும் ஆடுவா.. அவகிட்ட நானே பேசிக்கிறேன்..என்றார்..

சரிம்மா நான் ரோகித்த டாக்டர் கிட்ட பேசிட்டு வர சொன்னேன்.. அவன ஆளக் கானாம்.. நான் போய் பார்த்துட்டு வரேன்..

ம்ம்ம்்

பெரிய இவன் சாருக்கு பார்த்தவுடனே
பிடிக்கனுமா.. சரியான திமிறு பிடிச்சவன்.. இவன பார்த்துட்டு..ச்சி .. உனக்கே அசிங்கமா தெரியில்ல.. நீ மட்டும் இனி அவன பார்த்த நானே உன்ன தூக்குல போட்டுறுவேன்..அதும் இந்த கிரேட் மகதிய போய் கண்டவனு சொல்லிட்டான்..எல்லாம் பணக்காரனு திமிறு..
ச்சேச்ச.. அவர் அந்த அம்மாக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்காறு.. அவர் ரொம்ப நல்லவரு..

த்துதூப்...நீயே உன் மூஞ்சில துப்பிக்க.. வெக்கமே இல்ல..இதுல வேற நாளைக்கு புது பாஸ் வேற..ஒரு வேளை நாளைக்கு இவனே வருவானோ..ச்சேச்ச டாக்டருக்கு படிச்சிட்டு இங்க வந்து என்ன பண்ணுவாரு..அப்படி வந்தாலும் நல்லாத்தான் இருக்கும்..

வேண்டாம் மகதி அவுங்கெலாம் பெரிய இடம்.. நமக்கு ஒத்து வராது..
ஏன் ஒத்து வராது.. அதான் அவுங்க அம்மா ஓகே சொல்லிட்டாங்கல்ல..

ஆனா சாருக்கு பார்த்தவுடனே பிடிக்கனுமே..அய்யோ மகதி நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கற என்ற மனசாட்சியின் புலம்பலைக் கேட்ட பின் வெளி உலகத்திற்கு வந்தாள்..

அடுத்த நாள் ஆபிஸே பரபரப்புடன் இருந்தது .. புதிய பாஸின் வருகைக்காக.. மகதியும் மேனேஜரும் வாயிலில் பூங்கொத்துடன் காத்திருக்க..

ஒய்யாரமாய் ஆடி காரில் வந்து இறங்கினார் புது பாஸ்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top