பாகம் 50
டேய் லூசு என்னடா உனக்கு ஆழ்ந்த யோசனை.. இங்கப் பாரு பால் பாயாசம்.. எங்க அத்தை செஞ்சது .. உனக்கும் வேணுமா .. செமையா இருக்கு என்று புகழ்ந்தபடியே கிருஷின் அருகே வந்து அமர்ந்தாள் சுஜி..
அவளின் வருகையால் சுயநினைவு அடைந்தவன் " என்ன திடீர்னு " என்றான் வேண்டாவெறுப்பாக.
அவன் தலையில் கொட்டிவிட்டு " இன்னைக்கு உங்க அண்ணிக்கு பொறந்த நாளாம்.. அதான் இங்க நமக்கு விருந்து " என்றாள்
" பரவாலியே உங்க அத்தைக்கு இதுக்கெலாம் நேரம் இருக்கா..எப்பவும் யாருக்கு என்ன கெடுதல் பண்லாம்னுல நினைப்பாங்க "
என்றான் எரிச்சலாக..
டேய் நீ ரொம்ப பண்றடா.. அதான் அவுங்க சுயநினைவு இல்லாம பண்றாங்கனு தெரிஞ்சும் நீ வில்லனாட்ட அதையே பேசற.. உன்னை எனக்கு பிடிக்கலடா..
என்று பொய்யான கோபத்துடன் சொன்னாள்..
நான் உனக்கு வில்லனா.. அதெப்படி வந்த ஒரு நாள்ளயே உன்னை நல்லா பிரைன்வாஸ் பண்ணிட்டாங்க.. கொலை பண்ணத் தெரிஞ்சவங்களுக்கு இதெலாம் சாதாரணம் இல்ல..
கிருஷ் ஏன்டா இந்த மாறி பேசற.. அவுங்கள நானும் தப்பாதாண்டா நினைச்சேன்..ஆனா அவுங்க குழந்தை மாறிடா.. பாசத்துக்காக ஏங்குறாங்க..அது உனக்கு புரியலையா.. நீ அவுங்கள ஏத்துக்கிட்டா மத்தவங்கள அவங்க எதும் பண்ண மாட்டாங்கடா.. ப்ளீஷ் என்றாள் பொறுமையாக அவனுக்குப் புரியும்படி
கிருஷ் யோசிக்கத் துவங்கினான்..
அந்த நேரத்தில் ஜானகி சுஜியை கைஜாடையால் அழைத்தார்..சுஜி எழுந்து அவர் அருகில் சென்று என்னவென்று கேட்டாள்..
அவர் இன்னும் அமைதியாக இருக்கவும், " என்னவா இருந்தாலும் பரவாலை சொல்லுங்க அத்தை " என்றாள்
அவர் மெல்லிய குரலில் " அவன கூட்டிட்டு போய்டுமா.. அவன சமாதனப் படுத்த என்னால முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு சுத்தமா போயிடுச்சுமா " என்றார்..
அவர் பேசும்போது காது நீல நிறமாக மாறுவதைக் கண்டாள்..
அத்தை என்னாச்சு உங்களுக்கு .. வாங்க ஹாஷ்பிடலுக்கு போலாம் என்று கூறுமுன்பே " நான் நல்லாதான் இருக்கேன் " என்று கூறி எழுந்து சென்று விட்டார்..
சுஜிக்கு ஏதோ தவறெனப் பட்டது..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
அங்கே பாலாவின் வயிறு எரிந்து கொண்டு இருந்தது..
தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ஜூனுடன் பேசிக் கொண்டிருப்பது போல நடித்துக் கொண்டிருந்தான்..
மகதியோ இவனைக் கண்டுகொள்ளாமல் மாலதியை உபசரித்துக் கொண்டிருந்தாள்..
" ரவா லட்டு எங்கம்மா தான் செஞ்சது நல்லாருக்கும்.. சாப்பிடுங்க மாலு.. " என்றவள் பருவிடம் " அந்த தேங்காய் மிட்டாய எடு்த்துட்டு வரச் சொன்னேல்ல.. இந்த வீட்ல எல்லாத்தையும் நான் தான் செய்யனுமா.. விருந்தாளிய கவனிக்க கூட மாட்டீங்களா " என்று புலம்பிக் கொண்டே மாலதியின் தட்டில் பலகாரத்தை அள்ளிக் குவித்தாள்..
பருவோ ' பொறந்த நாள்னு உன்ன சும்மா விடறேன் ' என்று தனக்குள்ளே திட்டிக் கொண்டார்..
அர்ஜூன் வழக்கம் போல ஆசையாக அதைப் பார்த்துக்கொண்டே " மதிம்மா.. கேக் தான் தரல.. இந்த மிட்டாயாது " என்று கேட்கும் முன்னரே " தர முடியாது.. இங்கப் பாருங்க மாலு எப்படி ஒல்லியா இருக்காங்கனு.. அவுங்க தான் அதை சாப்பிடனும் " என்றாள் அக்கறையுடன்..
" மகதி போதும் " என்று மாலு சொன்னதையும் கேளாமல் உபசரித்துக் கொண்டிருந்தாள்
" அண்ணா என்னாச்சு.. நம்பள மனுசியாவே மதிக்கமாட்டீங்கறா.. மாலதிய இப்படிக் கொஞ்சறாளே.. என்னாலயே தாங்க முடியல.. நீங்க எப்படி பொறுமையா இருக்கிங்க.. " என்றான் அர்ஜு
" மகதியப் பத்தி நீ புரிஞ்சுக்கிட்டது அவ்ளோ தானா.. அவ எனக்காகத் தான் அப்படி நடந்துக்கிறா " என்றான் பாலா
இதை நான் நம்பனுமா..
நம்பிதான் ஆகனும்.. வேற வழியில்ல.. அவ பிறந்த நாளுக்கு அன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் தோட்டத்துல சந்தோசமா பேசிட்டுருக்கும் போது போட்டோ எடுத்து அதை பிரேம் பண்ணி கொண்டு வந்து கொடுத்தாங்கற ஒரு காரணத்துக்காக அவள எப்படி கவனிக்கறா பாரு..
இதுல பாதி உண்மை பாதி பொய் மாறி தெரியுதே என்றான் அர்ஜூன் தலையை சொரிந்தபடி..
என்ன பொய்யு என்றான் கோபமாக..
இல்லை அவங்கள உபசரிக்கிறதெலாம் ஓகே.. ஆனா உங்ககிட்ட பேச மாட்டீங்கறாளே அதான் எனக்குப் புரியல.. என்னப் பண்ணீங்க..
மகதியை ஒரு முறை முறைத்துவிட்டு, அவளுக்காக இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்ல எனக்கு இது வேணும்.. இதுக்கு மேலயும் வேணும் என்றான் பாலா
அந்த நேரத்தில் ரோகித்திடம் இருந்து போன் வந்தது.. உடனே பாலா சாப்பிட்டுக் கொண்டிருந்த மாலதியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று அவளை காரில் அமரவைத்தான்..
என்னங்க என மகதி அவனை அழைக்கவும் " இன்னையோட நமக்கு இருக்கிற எல்லாப் பிரச்சனையும் முடிய போகுது மகதி.. நான் திரும்பி வரப்ப தயாராஇரு கோவிலுக்குப் போலாம் " என்று சந்தோசமாகக் கூறிவிட்டு காரில் அமர்ந்தான்..
அர்ஜூனும் அவனுடன் சென்று விட்டான்..
இன்னும் கொஞ்ச நேரம் விட்டா பைத்தியம் புடிக்க வெச்சிருப்பாரு.. நல்லவேளை மாலதியாவது முன்னாடியே எல்லா உண்மையும் சொன்னாங்களே.. அவர் வந்து எங்கிட்ட சாரி கேக்கிற வரைக்கும் நான் பேசறதா இல்ல.. இந்த கிரேட் மகதியாருனு நான் காட்டுறேன் என்று தனக்குள் புலம்பிக் கொண்டே உள்ளே சென்றாள்..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top