பாகம் 48
பாலா வீட்டை விட்டு வெளிய வந்தான் ..

மகதி நான் போய்ட்டு வரேன்..
நீங்க போகக் கூடாது..
ஏன்
ஏன்னா ஏன்.. அது அது உங்க ஊர்ல மழையாம்.. அத்தை உங்கள லேட்டா வர சொன்னாங்க..
" நிஜமா "என்று நம்பாத மாறி கேட்கவும்
' மரமண்டை.. ' " ஆமாம்.. வேணும்னா அத்தைகிட்ட கேளுங்க "
அவன் போனை எடுக்கவும்..' ஐயோ அவர போன் பேசாம பண்ணுடி '
" அதானே என்னையெல்லாம் எங்க நம்ப போறீங்க.. நல்லா செக் பண்ணுங்க" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள்..
"மகதி"
" பேசாதீங்க "
" மகதி "
' இப்படியே கண்டினுயூ பண்ணுடி .. நம்பற மாறி தான் தெரியுது ' " சரி சரி.. உள்ள போலாம் வாங்க " என்று உள்ளே செல்ல போனாள்..
" மகதி " அவன் உணர்ச்சியற்ற குரலில் கூறவும் " இப்ப என்ன போகனுமா?..போங்க.. டைம் ஆயிடப் போகுது " என்றாள் கோபமாக..
அவன் பேசாமல் அமைதியாக இருக்கவும் " ம் ம் சொல்லுங்க " என்றாள்..
" ஓய்..இங்கப் பாரு.. நீ இங்க இருனு சொன்னா இருக்கப் போறேன்.. அதுக்கு எதுக்கு இந்த பொய் கோபமெல்லாம் " என்று சிரித்துக் கொண்டே கூறினான்..
' மகதி இப்பவும் மொக்கை வாங்கிட்டியே.. இது என்னை மொகறக்கட்டையோ ஒரு எக்ஸ்பிரசனும் புரிய மாட்டிங்குது.. சரி சரி எப்பவும் போல சிரிச்சே சமாளிப்போம்.. ' என்று நினைத்துக் கொண்டு
" சாரி " என்றாள்..
" உன்னையெலாம் வாய் இல்லைனா நாய் கூட மதிக்காது .. உள்ள போ "
நீங்களும் வாங்க..
இல்லடா.. நான் நாளைக்கு மார்னிங்கே அங்க இருக்கனும் .. இன்னும் ஒன் மன்த் தான மேரேஜ்கு இருக்கு அப்போ பேசிக்கலாம்
அவன் அவ்வாறு சொல்லவும் மகதியின் முகம் வாடியது..
" சரி பார்த்துப் போங்க.. " என்றாள் சோகமாக
குட் கேர்ள் .. பாய் டா.. என்று கூறிவிட்டு காரில் பறந்தான்..
அர்ஜூன் மாலதிக்கு அறை ஒதுக்கி கொடுப்பதில் பிசியாக இருந்தான்..அதனால் மகதியைப் பற்றி எண்ணவில்லை..
மகதி மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள்..
" மகதி.. சாரி "
" எதுக்கு "
நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டேன்..அது மில்கிக் கிட்ட
நான் பர்ஸ்ட் இயர்லயே புரோபோஸ் பண்ணேன்..ஆனா அவன் ஒத்துக்கல.. அப்ரோம் அந்த விசயத்த நானும் மறந்துட்டேன். அவனும் மறந்துட்டான்..
ஆனா அவனுக்கு லவ் மேரேஜ்னு தெரிஞ்சதும் உம்மேல கொஞ்சம் பொறாமை பட்டுட்டேன். அதுனால கொஞ்சம் சைல்டிஸ்ஸா நடந்துட்டேன்..
பட் ஹானஷ்டா சொல்றேன் அவனுக்கு நீ தான் நல்ல ப்ப்பேர்.. "
" பரவாயில்ல.. விடுங்க..நான் எதும் நினைக்கவேயில்லை "
சரி வா.. கீழ போலாம்.. மணி பதினொன்றை ஆச்சு " மாலதி
இல்ல நீங்க போங்க.. நான் வரேன்..
ம்ம் குட் நைட்..
' அவர் வீட்டுக்கு போய்டாரானு தெரிலயே.. நாம கால் பண்ணாலும் எப்படியும் எடுக்கப் போறதில்லை.. எதுக்கும் பண்ணுவோம்.. தூங்குனாருனா என்னப் பண்றது.. வேண்டா மார்னிங்கே பண்ணிக்கலாம்.. ச்சே நாம தான் அவரையே நினைச்சிட்டே இருக்கோம்.. ஆனா அவரு ரெண்டு நிமிசத்துக்கு அப்ரோம் யாருனே தெரியாத மாறி நடந்துக்குறாரு.. ' என்று நினைத்துக் கொண்டே அவள் அறைக்குச் சென்றாள் ..
' இந்தக் கதவுகூட தொல்லை பண்ணுது.. ச்சே உள்ளயாராவது லாக் பண்ணீட்டாங்களா ' என்று எண்ணி வேகமாக கதவினைத் தள்ளினாள்..
அங்கே
" ஹேப்பி பர்த்டே மகதி " என்று சிரித்துக் கொண்டே கையில் கேக்குடன் நின்று கொண்டிருந்தான்..
மகதியால் இதனை நம்பமுடியவில்லை..

" மகதி போய் கேக் கட் பண்ணு " என்று அர்ஜூன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்..
மகதிக்கு பேச்சே வரவில்லை .. " ஓய் பர்த்டே பேபி.. உனக்காக என் வேலைபோனாக் கூட பரவாலைனு இங்க வந்திருக்கேன்.. நீ என்ன பேசாம நிக்குற " என்றான் பாலா பொய்க்கோவத்தோடு..
" உங்களை..... நான் எவ்ளோ பீல் பண்ணேன் தெரியுமா.. உங்களுக்கு என் பர்த்டே கூட தெரிலைனு " என்று நாலு அடி போட்டாள்..
" மகதி விடாத என்னால தான் அடிக்க முடியாது.. நீ என் சார்பா நல்லா நாலு அடி போடு .. அப்படியே உன் கிப்ட் என்னனும் கேளு " என்றான் அர்ஜுன்..
" இப்ப உங்களுக்கு தான் விழுகப் போகுது அத்தான்.. எனக்கு கிப்ட்லாம் வேணாம்.. அவரே எனக்கு கிப்ட் தான் ஏங்க " என்றாள் பாலாவைப் பார்த்து
💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑

Pls share ur votes and comments
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top